கருச்சிதைவு ஏன் மற்றும் காரணங்கள்

2124
Miscarriage

கருச்சிதைவு ஏன் உண்டாகிறது (Miscarriage) என்பதை அறிவோமா?

கர்ப்ப காலத்தில் கருச்சிதைவு (Miscarriage) என்பது 20 வாரங்களுக்கு முன்பு அதாவது ஐந்து மாதங்களுக்கு முன்பு நடைபெறும் ஒரு நிகழ்வு ஆகும். இது தன்னிச்சை இழப்பு என்று சொல்லப்படுகிறது. 

கருவுற்ற பிறகு கருச்சிதை என்பது 10 முதல் 20% கர்ப்பங்களில் உண்டாகிறது. ஆனால் இதன் எண்ணிக்கை அதிகமாக இருக்கலாம். ஏனெனில் கருவுற்ற தொடக்கத்திலேயே பல கருச்சிதைவுகள் உண்டாகிறது. 

 ஒரு பெண் கருவுறுதலை அறிவதற்கு முன்பு அந்த பெண் தான் கருவுற்றிருப்பதை  உணராமல் இருக்கும் காலம் என்று கூட இதை சொல்லலாம். அப்போதும் கருச்சிதைவு உண்டாகலாம். கருவை சுமப்பதில் ஏதேனும்  தவறு இருக்கலாம்.  இது அரிதாக இருந்தாலும் இதுவும் ஒரு காரணம். கரு வளராத காரணத்தாலும் கருச்சிதைவுகள் உண்டாக கூடும். 

கருச்சிதைவு என்பது கர்ப்பகாலத்தில் ஒரு அனுபவமாகவே இருந்தாலும் அது எளிதானது அல்ல. அது  ஆபத்தை அதிகரிக்க கூடியவை மருத்துவ பராமரிப்பு அவசியம் தேவை என்பதை உணர்த்தும் நேரம் என்பதை புரிந்துகொள்ள வேண்டும். 

கருச்சிதைவுக்கு ஏதேனும் அறிகுறிகள் உண்டா என்று கேட்கலாம் வெகு அரிதாக இந்த அறிகுறிகளை உற்று நோக்கினால் மட்டுமே கருச்சிதைவை அறிய முடியும். கர்ப்பத்தின் 12 வது வாரங்களுக்கு அதாவது மூன்று மாதங்களுக்கு முன்கூட்டியெ இவை பெருமளவு நிகழும் என்பதால் இந்த காலத்தில் அதிக கவனத்துடன் இருக்க வேண்டும். 

இதையும் தெரிந்து கொள்ள: கர்ப்பத்தின் போது ஃபோலிக் அமிலம்!

கருச்சிதைவின் அறிகுறிகளாக மருத்துவம் சொல்வது  இதுதான். கர்ப்பிணிகள் பெண் உறுப்பில் ரத்த போக்கு, அடிவயிற்றில் அல்லது கீழ் முதுகில் வலி இருக்கும். தசைப்பிடிப்பு உண்டாகும். அதே நேரம் பெண் உறுப்பில் ரத்த போக்கு உண்டானால் உடனே அதை கருச்சிதைவு என்றும் நினைக்க வேண்டாம். ஏனெனில் பெண் உறுப்பில் ரத்தப்போக்கு ஏற்படும் பெண்கள் வெற்றிகரமாக கர்ப்பத்தை பெற்று பிரசவத்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

கருச்சிதைவு ஏன் உண்டாகிறது என்பதை தெரிந்துகொள்வதும் கர்ப்பிணிகளுக்கு அவசியமே. 

அசாதாரண மரபணுக்கள் அல்லது குரோமோசோம்களால் கருச்சிதைவு உண்டாகலாம். 

கருவானது சரியான காலத்தில் வளர்ச்சியடையாததால் பெரும்பாலான கருச்சிதைவுகள் உண்டாகிறது. எனினும் பெரும்பாலும் கருச்சிதைவுகளில் சுமார் 50% வரையானது குரோமோசோம்களுடன் தொடர்பு கொண்டது. ஏனெனில் குரோமோசோம் பிரச்சனையில் கரு பிளவுபட்டு வளரும் போது தற்செயலாக உண்டாகும் பிழைகளும் கூட இதற்கு காரணமாகிறது. 

குரோமோசோம்களால் உண்டாகும் அசாதாரணங்களால் கருச்சிதைவு உண்டாக கூடும். கருமுட்டை வெளுத்து காணப்படுவது, கரு உருவாகாத போது கருமுட்டை உண்டாவது.  கருவின் இறப்பு இந்த நிலையில் கரு உண்டாகிறது. ஆனால் கர்ப்ப இழப்புக்கான அறிகுறிகள் ஏற்படுவதற்கு முன்பே வளர்வதை நிறுத்திவிடுகிறது. பொதுவாக கருவளர்ச்சி இல்லை. நஞ்சு கொடியுடன் அசாதாரணங்களான தொடர்பை கொண்டிருக்கிறது. 

கர்ப்பகாலத்தில் ரத்த போக்கு  உண்டு என்றாலும் அரிதாக சிலருக்கு மட்டுமே இருக்கும். எனினும் இதை சாதாரணமாக எடுத்துகொள்ள கூடாது. சில துளி இரத்த போக்கு வந்தாலே  மருத்துவரை அணுகினால்  கரு பாதிப்பு இருந்தாலோ கரு சேதமடைவதாக இருந்தாலோ காப்பாற்ற வாய்ப்புண்டு. 

சமயங்களில்  கருவை தாங்கும் வலுவுக்கு கர்ப்பப்பை இல்லை என்பதும் காரணமாகும். கருச்சிதைவு பெரும்பாலும் அறிகுறிகள் தெரியாது. அல்ட்ரா சவுண்ட் பரிசோதனை செய்தால் மட்டுமே தெரியும். 

கர்ப்பிணி பெண்ணின் உடல் நிலையும் கூட கருச்சிதைவுக்கு வழிவகுக்கும். கர்ப்பிணி பெண் கட்டுப்பாடற்ற நீரிழிவை கொண்டிருந்தால் கருவுற்ற தொடக்கம் முதல் நீரிழிவு நோயை  கொண்டிருந்தால், ஹார்மோன் பிரச்சனைகள், கர்ப்பத்துக்கு முன்பு தைராய்டு பிரச்சனை இருப்பவர்களுக்கும் கருச்சிதைவு உண்டாக அதிக வாய்ப்புண்டு. 

கருச்சிதைவை அபாயத்தை அதிகரிக்கும் காரணிகளும் உண்டு. இளவயது கர்ப்பத்தை காட்டிலும் 35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு கருச்சிதைவு உண்டாகும் அபாயம் அதிகம். 35 வயதில் சுமார் 20% அளவு கருச்சிதைவு உண்டாக கூடும். அதே போல் 40 வயதுக்கு பிறகு கர்ப்பம் தரிக்கும் பெண்களுக்கு 40% கருச்சிதைவு உண்டாக வாய்ப்புண்டு.  45  வயதுக்கு பிறகு  80% கருச்சிதைவு உண்டாக வாய்ப்புண்டு. 

கருச்சிதைவு  தொடர்ச்சியாக  இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட கருச்சிதைவுகள்  கொண்டிருக்கும் பெண்கள் கருத்தரிக்கும் போது கருச்சிதைவு உண்டாகும் அபாயம் இன்னும் அதிகமே. கர்ப்பபையில் பிரச்சனைகள், கர்ப்பப்பை அசாதாரணங்கள், பலவீனமான கர்ப்பப்பை வாய் திசுக்கள்  (பலவீனமான) கருச்சிதைவு அபாயத்தை அதிகரிக்க கூடும்.

Follow @ Google News : கூகுள் செய்திகள் பக்கத்தில் சென்னை மகளிர் மருத்துவமனை வலைப்பதிவுகள்! 

கர்ப்பிணி பெண் புகைப்பழக்கம், மதுப்பழக்கத்துக்கு ஆளாகி இருந்தால் அவர்களுக்கு கருச்சிதைவு உண்டாகும் ஆபத்து அதிகமுண்டு. இவையெல்லாம் தவிர  கர்ப்பிணி பெண் மிக பலவீனமாக இருப்பதும் எடை மிக குறைவாக இருப்பதும், அல்லது அதிக உடல் எடையை கொண்டிருப்பதும் கூட கருச்சிதைவு அபாயத்தை உண்டாக்கும்.  

இதையும் தெரிந்து கொள்ள: கர்ப்ப காலத்தில் தைராய்டு அறிகுறிகள்!

அதே நேரம் கர்ப்பகாலத்தில் எந்தவிதமான வேலையும் செய்ய கூடாது எப்போதும் ஓய்வாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். ஆனால் கர்ப்பகாலத்தில் ஜாகிங், சைக்கிள்  பயிற்சி செய்பவர்கள், கர்ப்ப காலத்தில் உடலுறவு கொள்வதால், தீங்கு விளைவிக்கும் ரசாயனங்கள் போன்றவற்றால் ஏதேனும் பாதிப்பு உண்டா என்பதை முன்கூட்டியே மருத்துவரிடம் ஆலோசனை செய்வது நல்லது.அதே போன்று அதிக பளு  தூக்கும் பணி அல்லது அதிக அளவு பணி செய்பவர்கள் கருச்சிதைவு குறித்து பயம் இருந்தால் மருத்துவரிடம் பேசுவது நல்லது.

5/5 - (266 votes)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here