கர்ப்ப காலத்தில் தடுப்பூசி போடுவது

ஒவ்வொரு பெண்ணும் தங்களுடைய கர்ப்ப காலத்தில் குறிப்பிட்ட சில நோய்கள் தாக்காமல் இருக்க தடுப்பூசிகள் போட வேண்டும். கர்ப்பகாலத்தில் தடுப்பூசி (pregnancy vaccination) போடப்பட்ட பிறகு பெண்கள் தங்கள் வயிற்றில் வளரும் குழந்தைகளுக்கு ஆன்டி பாடிகள் எனப்படும் தொற்று எதிர்ப்பு புரதங்களை அனுப்புகிறார்கள்.

தடுப்பூசிகள் குழந்தையை கடுமையான நோய்களிலிருந்து பாதுகாக்க செய்யும். நோய்களுக்கு சிகிச்சை அளிப்பது அல்லது குணப்படுத்துவது என மருந்துகளின் தேவையன்றி தடுப்பூசிகள் அவற்றை வரவிடாமல் தடுக்க செய்கிறது. இது நோய் எதிர்ப்பு மண்டலத்தின் திறனை அதிகரிப்பதன் மூலம் அவை செயல்படுகின்றன.

ஆன்டி பாடிகள் என்பது பிறந்த குழந்தைக்கு சில மாதங்கள் வரை சில நோய்த்தொற்றுகளுக்கு எதிரான பாதுகாப்பு சக்தியை வழங்கக்கூடியவை. குழந்தை பிறந்த பிறகு தடுப்பூசி போடுவதற்கு காலங்கள் உண்டு. அதே நேரம் அவர்கள் வளரும் போது அவர்களுக்கு அது பாதுகாப்பை அளிக்கும். கர்ப்பகாலம் முழுவதும் இந்த பாதுகாப்பு குழந்தைக்கு கெடுக்கிறது.

கர்ப்பிணி பெண்கள் கர்ப்ப காலத்தில் குழந்தையையும் தங்களையும் பாதுகாத்து கொள்ள தடுப்பூசி குறித்த விழிப்புணர்வை கொண்டிருக்க வேண்டும். அதே நேரம் கர்ப்ப காலத்துக்கும் முன்பும் கர்ப்பகாலத்திலும் அதற்கு பின்பும் கூட தடுப்பூசிகள் தேவைப்படலாம். செயலற்ற வைரஸ்களைக் கொண்ட தடுப்பூசிகளை கர்ப்ப காலத்தில் கொடுக்கலாம். நேரடி தாக்கம் கொண்ட வைரஸ்களை கொண்ட தடுப்பூசிகள் கர்ப்பிணி பெண்களுக்கு பரிந்துரைக்கப்படவில்லை.

இந்த பதிவில் கர்ப்பிணி பெண்களுக்கு தடுப்பூசி போடுவது கட்டாயமா அதற்கான காரணம் என்ன போன்றவற்றுக்கான தகவல்களை தெரிந்துகொள்ளலாம்.

கர்ப்பிணி பெண்களுக்கு ஏன் தடுப்பூசி அவசியம்?

கருவுற்ற பெண்கள் பலரும் தாங்கள் நோய்த்தடுப்பு மருந்துகளை எடுத்துகொண்ட ஆரோக்கியமானவர்கள். இதன் மூலம் குழந்தைக்கு நோய் தொற்று இல்லாமல் ஆரோக்கியமாக இருப்பார்கள் என்று சுயமாக சிந்திக்காமல் கருவுற்றதை உறுதி செய்ததும் மருத்துவரை அணுகி தடுப்பூசிகள் எப்போது தேவைப்படும்.

கர்ப்பகாலத்திலா அல்லது குழந்தை பிறந்த பிறகு வரை காத்திருக்க வேண்டுமா என்று கேட்கலாம். இன்று மருத்துவர்கள் திருமணத்துக்கு பிறகு குழந்தைப்பேறுக்கு தயாராகும் போதே மருத்துவரை அணுகி தடுப்பூசிகள் குறித்து தெரிந்து கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்துகிறார்கள்.

கர்ப்ப கால தடுப்பூசிகள் பாதுகாப்பானதா?

அனைத்து தடுப்பூசிகளும் FDA – இன் மேற்பார்வையின் கீழ் பாதுகாப்புக்காக சோதிக்கப்படுகின்றன. தடுப்பூசிகள், தூய்மை, ஆற்றல் மற்றும் அதன் பாதுகாப்பிற்காக சோதிக்கப்படுகின்றன. மேலும் FDA மற்றும் CDC ஒவ்வொரு தடுப்பூசியும் பயன்பாட்டில் இருக்கும் வரை அதன் பாதுகாப்பை கண்காணிக்க செய்வதால் இவை பாதுகாப்பானது.

சில கர்ப்பிணிகளுக்கு இன்ஃப்ளூயன்ஸா தடுப்பூசியில் உள்ள முட்டைகள் போன்ற பொருள்கள் ஒவ்வாமையை உண்டாக்கலாம். இது குறித்து அவர்கள் தங்கள் மருத்துவரிடம் ஆலோசனை செய்த பிறகே தடுப்பூசியை போட்டுகொள்ள வேண்டும்.

கர்ப்பகாலத்தில் தடுப்பூசிகள்

ஒவ்வொரு பெண்ணும் கர்ப்பமாக இருக்கும் போது என்ன மாதிரியான தடுப்பூசிகள் போட வேண்டும் என்ற கேள்விகள் இருக்கலாம். தொற்றுநோயால் பாதிக்கப்படக்கூடிய பெண்களுக்கு பொதுவாக இந்த தடுப்பூசிகள் முக்கியமானதாக சொல்லப்படுகிறது.

ஹெபடைடிஸ் பி:

இந்த நோய்க்கு அதிக ஆபத்து உள்ள கர்ப்பிணி பெண்கள் வைரஸ்க்கு எதிர்மறையை பரிசோதித்தவர்கள் இந்த தடுப்பூசியை பெறலாம். இதனால் குழந்தை வயிற்றில் வளரும் போதும், தாயையும் பாதுகாக்க இந்த தடுப்பூசி உதவுகிறது. தாய்க்கும் குழந்தைக்கும் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க இது தேவைப்படுகிறது. மூன்று முறை வழங்கப்படும் இந்த தடுப்பூசிகள் 2 மற்றும் 3 வது அளவுகளில் வழங்கப்படுகிறது. முதல் டோஸ் 1 மற்றும் 6 மாதங்களுக்கு பிறகு வழங்கப்படுகின்றன.

இன்ஃப்ளூயன்ஸா

இந்த தடுப்பூசி கர்ப்ப காலத்தில் தாய்க்கு கடுமையான நோயை உண்டாக்கலாம், எதிர்பாராமல் தாக்கலாம். காய்ச்சல் பருவத்தில் கர்ப்பமாக இருக்கும் அனைத்து பெண்களுக்கும் மூன்று மாதமும் இந்த தடுப்பூசி வழங்கப்பட வேண்டும். இது கருவுற்ற பெண்கள் அனைவருமே தங்களுக்கு பொருந்துமா என்பதை மருத்துவரிடம் கேட்டு பிறகு இந்த தடுப்பூசி போட்டு கொள்ளலாம்.

டெட்டனஸ் / டிப்திரியா

குழந்தைக்கு கக்குவான் இருமல் உண்டாவதை தடுக்க இந்த தடுப்பூசி உதவக்கூடும். இந்த நோய் தாக்கத்தால் பல குழந்தைகள் உயிரிழக்கும் வரையான அபாயம் உண்டாகிறது. ஆபத்தான நோய் என்று இதை சொல்லலாம். குழந்தை பிறந்த உடன் இந்த நோய் தாக்குதலிலிருந்து தப்பிக்க முன் கூட்டியே தடுப்பூசி போடுவது பாதுகாப்பானது. இதை மூன்றாம் ட்ரைமெஸ்டர் காலங்களில் அதாவது 27 வாரங்கள் முதல் 36 வாரங்களில் இதை போட்டு கொள்ள மருத்துவர்கள் வலியுறுத்துகிறார்கள்.

கர்ப்பகால தடுப்பூசி அட்டவணை

கர்ப்ப காலத்தில் இரண்டு தடுப்பூசிகளை சி.டி.சி பரிந்துரை செய்கிறது. பெண் கருவுறுதலுக்கு முன்பு தடுப்பூசி போடவில்லை என்றால் கர்ப்பத்தின் 27 முதல் 36 வாரங்களுக்கு இடையில் போட வேண்டும். இந்த Tdap தடுப்பூசி குழந்தைக்கும் முதல் சில மாதங்களில் பெர்டுசிஸிலிருந்து பாதுகாக்க உதவுகிறது.

கர்ப்ப காலத்தில் நான்காவது மாதத்துக்கு பிறகு இரண்டு முறை டெட்டனஸ் டோக்ஸாய்டு (டி. டி) வழங்கப்படுகிறது.

காய்ச்சல் தடுப்பூசியானது செயலற்ற வைரஸிலிருந்து தயாரிக்கப்படுகிறது. இது தாய் மற்றும் குழந்தை இருவருக்கும் பாதுகாப்பானது. இந்த ஊசியை கர்ப்பகாலத்தில் எப்போது வேண்டுமானாலும் கொடுக்கப்படலாம். பெரும்பாலும் குளிர் காலங்களில் அதாவது நவம்பர் முதல் மார்ச் வரை கர்ப்பமாக இருக்கும் பெண்களுக்கு இந்த தடுப்பூசி வழங்கப்படுகிறது.

கர்ப்பகாலத்தில் தவிர்க்க வேண்டிய தடுப்பூசிகள்

சில குறிப்பிட்ட தடுப்பூசிகளை கர்ப்பகாலத்தில் தவிர்க்க வேண்டும். இது கருச்சிதைவு, முன்கூட்டிய பிறப்பு, பிறப்பு குறைபாடுகள் போன்ற பிரச்சனையை உண்டாக்க கூடும்.

ஹெபடைடிஸ் ஏ இது நன்மைகளை காட்டிலும் அபாயங்களையும் வழங்க வாய்ப்புண்டு என்பதால் அதை வழங்க கூடும். இந்த வைரஸ் வெளிப்படுவதற்கு அதிக ஆபத்து உள்ள பெண்கள் தங்கள் மருத்துவருடன் இந்த அபாயம் குறித்து ஆலோசனை செய்ய வேண்டும்.

தட்டம்மை, சின்னம்மை, ரூபெல்லா தடுப்பூசி

இந்த நேரடி வைரஸ் கொண்ட தடுப்பூசிகளை போட்டு கொள்ளும் பெண்கள் கருவுறுதலுக்கு முன்பு இதை போட்டு கொள்ள வேண்டும். இந்த தடுப்பூசியை போட்டு கொண்ட பிறகு மருத்துவரின் அனுமதியோடு சில குறிப்பிட்ட இடைவெளிக்கு பிறகு கருத்தரிக்க வேண்டும். கர்ப்பகாலத்தில் ரூபெல்லாவிலிருந்து நோய் எதிர்ப்பு சக்தி இல்லை என்பது அறிந்தால் பிரசவத்துக்கு பிறகு தடுப்பூசி வழங்கப்படும்.

வெரிசெல்லா

சிக்கன் பாக்ஸ் வராமல் தடுக்க கூடிய இந்த தடுப்பூசி கர்ப்பத்துக்கு முன்பு கருவுறுவதற்கு திட்டமிடும் முன்பு போட வேண்டும்.

நிமாகோகல்

இந்த தடுப்பூசி குறித்து பாதுகாப்பு தெரியாததால் இது அதிக ஆபத்தில் இருக்கும் அல்லது நீண்ட கால நோயால் பாதிக்கப்பட்ட பெண்களை தவிர மற்ற பெண்கள் தவிர்க்கப்பட வேண்டும்.

ஓபிவி என்னும் ஓரல் போலியோ தடுப்பூசி (OPV) மற்றும் செயலற்ற போலியோ தடுப்பூசி (IPV) கர்ப்பிணி பெண்களுக்கு இந்த தடுப்பூசியின் நேரடி- வைரஸ் மற்றும் செயலற்ற வைரஸ் பதிப்பும் பரிந்துரைக்கப்படவில்லை.

HPV தடுப்பூசி மனித பாப்பிலோமா வைரஸை தடுக்க.

தடுப்பூசிகள் பக்கவிளைவுகளை உண்டாக்குமா?

எந்தவொரு மருந்தையும் போலவே தடுப்பூசிகளும் பக்கவிளைவுகளையும் உண்டாக்குபவை . ஆனால் இந்த பக்கவிளைவுகள் பொதுவானவை. மிக இலேசானவை. இது தானாக சரியாகிவிடக்கூடும். அதே நேரம் இந்த தடுப்பூசிகளால் காய்ச்சல் மற்றும் கக்குவான் இருமல் போன்றவற்றிலிருந்து இது பாதுகாக்க செய்யும். தடுப்பூசி போட்ட இடத்தில் வலி, சிவத்தல் அல்லது வீக்கம், தசை வலிகள், களைப்பு போன்றவற்றை கர்ப்பிணிகள் உணர்வார்கள்.

கர்ப்ப காலத்தில் டெட்டனஸ் தடுப்பூசி

கர்ப்பகாலத்தில் டெட்டனஸ் தடுப்பூசி அவசியமானது. இது தாயின் வயிற்றில் வளரும் குழந்தைக்கு டெட்டனஸ் தொற்று உண்டாவதை தடுக்க கர்ப்ப காலத்தில் (டெட்டனஸ் டோக்ஸாய்டு) அவசியமானது.

இந்த நோய் வந்தால் எந்த சிகிச்சையும் இல்லை.உயிருக்கு ஆபத்தை உண்டாக்க கூடியது. ஆனால் இந்த டெட்டனஸ் தடுப்பூசி எளிதில் இந்த நோய் வருவதை தடுக்க கூடியது. மண் மற்றும் தூசியில் பொதுவாக காணப்படும் டெட்டனஸ் பாக்டீரியாக்கள் திறந்த காயத்தின் மூலம் கர்ப்பிணியின் உடலில் நுழையும் போது நோயால் பாதிக்கப்படலாம்.

இந்த டெட்டனஸ் தடுப்பூசி போடுவதால் உடல் டெட்டனஸ் பாக்டீரியாவுக்கு எதிராக போராடும் ஆன் டி பாடிகளை உருவாக்குகிறது. மேலும் இது நோய் வராமல் தடுக்கவும் செய்கிறது. கர்ப்ப காலத்தில் தடுப்பூசி போடும் போது ஆண்டி பாடிகள் வயிற்றில் வளரும் குழந்தைக்கு அனுப்பப்படுகிறது. இதனால் குழந்தை பிறந்து முதல் டி. டி தடுப்பூசி பெறும் வரை இது பாதுகாப்பை அளிக்கும். குழந்தை பிறந்த ஆறு முதல் எட்டு வாரங்கள், டி.டி.பி தடுப்பூசியின் ஒரு பகுதியாக பாதுகாப்பாக உள்ளது.

கர்ப்பகாலத்தில் உங்கள் கர்ப்பம் எத்தனையாவது என்பது பொறுத்து இந்த டி.டிக்கள் மாறுபடலாம். ஏனெனில் கர்ப்பம் இரண்டாவதாக இருந்தால் நீங்கள் முன்னரே டி.டி பெற்றிருப்பீர்கள். முதல் முறை கருவுறும் போது முதல் குழந்தையை சுமக்கும் போது உங்கள் மருத்துவர் தடுப்பூசி அட்டவணையை அளித்திருப்பார்கள். இதனால் அடுத்த குழந்தை சுமக்கும் போது இரண்டாவது டி.டி பெறுவீர்கள். ஒவ்வொரு டோஸுக்கும் இடையில் குறைந்தபட்சம் நான்கு வாரங்கள் இந்த தடுப்பூசிகளை கொடுக்க வேண்டும். எந்த மாதத்தில் கொடுக்க வேண்டும் என்பதை மருத்துவர் தீர்மானிப்பார்.

Follow @ Google News : கூகுள் செய்திகள் பக்கத்தில் சென்னை மகளிர் மருத்துவமனை வலைப்பதிவுகள்!

தடுப்பூசி குறித்த வரலாறு அல்லது பதிவுகள் இல்லாத பெண்கள் தாங்கள் கருவுறும் போது கர்ப்ப காலத்தில் முதல் டோஸை சீக்கிரம் பெற வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் பரிந்துரைக்கிறது. பிறகு நான்கு வாரங்கள் கழித்து இரண்டாவது டோஸ் மற்றும் அதன் பிறகு ஆறு மாதங்கள் கழித்து மூன்றாவது டோஸ் கொடுக்க வேண்டும். கருவுற்றதை அறிந்த உடன் பிரசவக்காலத்துக்குள் மூன்று டோஸ் வரை இதை பெற்றுவிட வேண்டும்.

உங்கள் முதல் கர்ப்பத்திலிருந்து டி.டி தடுப்பூசி மருந்துகள் உங்கள் உடலில் இரண்டு டோஸ் தடுப்பூசி வைத்திருந்தால் மூன்று ஆண்டுகள் வரை உங்களை நோயிலிருந்து விலக்கி வைத்திருக்கும். அதுவே மூன்று டோஸ் வரை உடலில் இருந்தால் ஐந்து ஆண்டுகள் வரை உடலினுள் பாதுகாப்பு அளிக்கும். இந்த காலத்துக்குள் மீண்டும் கர்ப்பமாகிவிட்டால் அடுத்த கர்ப்பத்தின் போது ஒரு பூஸ்டர் மட்டுமே போதுமானதாக இருக்கும்.

முதல் கர்ப்பத்துக்கும் இரண்டாவது கர்ப்பத்துக்கும் இடையில் ஒரு பெரிய இடைவெளி இருந்தால் இரண்டாவது கர்ப்பகாலத்தில் இரண்டு தடுப்பூசி அளவுகளை தருவார்கள்.

தடுப்பூசி வலியை உண்டாக்குமா?

தடுப்பூசி இடம் செலுத்தப்பட்ட பிறகு அந்த இடத்தில் வலி இருக்கும். இது அதிக காயத்தை உண்டாக்காது. அதே நேரம் தடுப்பூசி போட்டு கொண்ட சில நாட்களில் அந்த இடத்தில் வலி உண்டாக கூடும். இந்த வலியை போக்க மற்றும் எந்த வீக்கத்தையும் குறைக்க, ஊசி போடப்பட்ட இடத்தில் ஐஸ் கட்டி ஒத்தடம் வைக்கலாம். வலியை போக்க எந்த வலி நிவாரணி மருந்தும் எடுத்துகொள்ள வேண்டாம். இது பாதுகாப்பானது அல்ல. வலி அதிகமாக இருந்தால் மருத்துவரின் ஆலோசனையோடு வலி மாத்திரை எடுத்துகொள்ளலாம்.

தடுப்பூசி குறித்த தகவல்களை மேலும் அறிந்துகொள்ள உங்கள் மருத்துவரை அணுகுங்கள். பாதுகாப்பான முறையில் சரியான இடைவெளியில் தடுப்பூசியை எடுத்துகொள்வதன் மூலம் குழந்தையின் ஆரோக்கியமும் பாதுகாக்கப்படும்.

கர்ப்ப கால கூடுதல் தகவல்கள்:

கர்ப்பிணி பெண்கள் சாப்பிடக்கூடாத உணவுகள்
கர்ப்பிணி பெண்கள் சாப்பிட வேண்டிய உணவுகள்
கர்ப்பிணி பெண்கள் தூங்கும் முறை
கர்ப்பிணி பெண்கள்களுக்கு தேவையான வைட்டமின்கள்
கர்ப்ப காலத்தில் ஏற்படும் உடல் சோர்வு நீங்க செய்ய வேண்டியவை

5/5 - (97 votes)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here