பிரசவம் சுகமாக இருந்தாலும், சிசேரியன் பிரசவமாக இருந்தாலும் அனஸ்தீசியா அதாவது மயக்க மருந்து கொடுப்பது உண்டு. பிரசவ நேரத்தில் மயக்க மருந்து எதற்காக பயன்படுத்தப்படுகிறது? அதன் செயல்பாடுகள், நன்மைகள் மற்றும் பக்கவிளைவுகள் ஏதேனும் உண்டா என்பதை தெரிந்துகொள்வோம்.

கர்ப்ப கால உணவு, கர்ப்ப கால உடற்பயிற்சி, கர்ப்ப கால வாழ்க்கை முறை என்று அனைத்தையும் மாற்றினாலும் சமயங்களில் சுகப்பிரசவம் இல்லாமல் சிசேரியன் சிகிச்சைக்கு உட்படுவதுண்டு. முதல் குழந்தை சிசேரியன் என்னும் நிலையில் அடுத்த குழந்தையை சுகப்பிரசவமாக்க என்ன செய்வது என்று கூட மருத்துவரிடம் ஆலோசனை செய்வதுண்டு.

பிரசவ நேரத்தில் போடப்படும் மயக்க ஊசி எதற்காக? இதனால் என்ன நன்மைகள், என்ன பக்கவிளைவுகள் உண்டாகும் என்பதை இங்கு பார்க்கலாம். அனஸ்தீசியா என்பது இரண்டு வகைகளில் கொடுக்கப்படுகிறது. சுகப்பிரசவம் மற்றும் சிசேரியன் இரண்டுக்குமே மயக்க மருந்து கொடுக்கப்படும் என்றாலும் இரண்டின் செயல்பாடும் வேறு வேறாக இருக்கும். அதை தான் இப்போது தெரிந்துகொள்ள போகிறோம்.

எபிடியூரல் மயக்க மருந்து (அனஸ்தீசியா)

எபிடியூரா என்பதை தெரிந்துகொள்வதற்கு முன்பு நமது முதுகுத்தண்டு குறித்து தெரிந்துகொள்ள வேண்டும். இது கழுத்து முதல் உட்காரும் வரை நீண்டு இருக்கும். இடுப்பு பகுதியிலும் கீழ் இருக்கும் பகுதியிலும் வளைவு இருக்கும். இதில் அதிக அளவு எலும்புகள் இருக்கும். இது வெர்ட்டிபிரா என்று அழைக்கப்படுகிறது. இதற்கு நடுவில் (ஸ்பைனல் கெனால்) ஒரு பாதை போன்று இருக்கும். இதை Fluid – Cerebrospinal Fluid என்று சொல்வார்கள். இது மூளையில் இருந்து உருவாகி ஸ்பைனல் வழியாக செல்லக்கூடியது. இந்த ஸ்பைனல் கெனாலில் ஒரு பை போன்று இருக்கும். இதில் ஆர்ட்ரியஸ், நாளங்கள்,நரம்புகள் இந்த ஃப்ளுய்டு உடன் பயணிக்கும். இதுதான் முதுகுத்தண்டு.

எபிடியூரல் மற்றும் ஸ்பைனல் இரண்டுக்கும் என்ன வித்தியாசம் என்பதையும் தெரிந்துகொள்வோம். எபிடியூரல் என்பது இரண்டு வகையாக சொல்வதுண்டு. எபி என்பது நெருக்கமாக இருக்க கூடியது. டியூரா என்பது ஸ்பைனல் கெனால் கவர் செய்ய கூடியது. நாம் டியூரா அருகில் இருக்கிறோம். ஆனால் உள்ளே போகவில்லை. அதனால் எபிடியூரல் அனஸ்தீசியா கொடுக்கும் போது முதுகு முழுவதும் பீட்டாடின் என்னும் திரவம் கொண்டு சுத்தம் செய்து பிறகு மயக்க மருந்தை கொடுப்பார்கள்.

மேலும் இதை பற்றி தெரிந்து கொள்ள: பிரசவத்திற்கு பிறகு முதுகு வலி உண்டாக காரணம் என்ன?

முதலில் ஒரு ஊசியை நுழைத்து பிறகு கைடு வயர் என்று சொல்லக்கூடிய மற்றொரு ஊசியை செலுத்தி ஊசியை வெளியே எடுப்பார்கள். இப்போது அந்த கைடு வயர் மட்டும் எபிடியூரல் உள்ளே இருக்கும். இதன் வழியாக மருந்து கொடுத்துகொண்டே இருப்பார்கள். இவை நேரடியாக உள்ளே செல்லாது. நாளங்களில் செல்லாது வெளியிலிருந்து உள்ளே செலுத்துவது உண்டு. பிரசவ வலி என்பது நமக்கு இடுப்பு மற்றும் வயிற்றுப்பகுதியில் தான் வலி இருக்கும். இயல்பாகவே முதுகுத்தண்டில் இந்த மருந்து கொடுக்கும் போது அது இடுப்பு மற்றும் கால் பகுதியில் மரத்துபோக கூடும். இதை உடனே கொடுக்காமல் அவ்வபோது சிறிது சிறிதாக மருந்து கொடுப்பார்கள்.

பிரசவ வலி தீவிரமாக இருக்கும் போது உங்கள் குழந்தையை வெளியே வர தொடங்கும் போது உங்களுக்கு இந்த மருந்து பயன்பாடு கொடுப்பதை தவிர்ப்பார்கள். அப்போது சுகப்பிரசவமாக கூடும். இப்படி தான் எபிடியூரல் வேலை செய்யும். இது சுகப்பிரசவத்துக்கு கொடுக்கும் எபிடியூரல் அனஸ்தீசியா. இதனால் குழந்தைக்கும் அம்மாவுக்கும் எந்த விதமான பக்கவிளைவுகள் இல்லை. இது வலி நிவாரணியாக இருக்கும். பிரசவம் முடிந்த பிறகு மீண்டும் ஒரு முறை மருந்து கொடுக்கும் போது சுகப்பிரசவத்துக்கு பிந்தைய தையல் போடுவதற்கு வலி குறைவாக தெரியும்.

ஸ்பைனல் மயக்க மருந்து (அனஸ்தீசியா)

இது முதுகெலும்புத்தண்டில் உள்ள ஸ்பைனல் கெனால் உள்ளேயே ஊசி கொண்டு மருந்து செலுத்தும் நிலை. இது பிரசவ நேரத்தில் சிசேரியன் செய்பவர்களுக்கு மட்டுமே இது கொடுக்கப்படும். இது விரைவாக செயல்படும்.

அனஸ்தீசியா

ஸ்பைனல் கெனால் உள்ளே மருந்து செலுத்தும் போது முதுகு சுத்தம் செய்து முதுகுத்தண்டு எலும்புக்கு நடுவில் ஊசி செலுத்தும் போது இடைவெளி பார்ப்பார்கள் ஊசி செலுத்தியவெளியிருக்கும் போது ஃப்ளூய்டு வெளியேறும் போது தான் கெனால் உள்ளே இருப்பதை பார்ப்பார்கள். அப்போது தான் மருந்து செலுத்துவார்கள். இது ஒரு முறை மட்டுமே செலுத்தினால் போதுமானது. நேரடியாக கெனால் உள்ளே மருந்து செலுத்துவதால் விரைவாக செயல்படும். மரத்துபோதல் இடுப்பு முதல் கால்வரை சீக்கிரம் ஆகும். இது மருந்தின் வீரியம் பொறுத்து இருக்கலாம்.

ஏற்கனவே சுகப்பிரசவத்துக்கு எபிட்யூரல் கொடுத்த நிலையில் சிசேரியன் பிரசவம் தான் என்பது முடிவானால் மீண்டும் ஸ்பனைல் அனஸ்தீசியா கொடுக்கப்படும். அப்போதுதான் அறுவை சிகிச்சை செய்ய முடியும். அதோடு அதிலிருந்து 45 நிமிடங்களுக்குள் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்துவிடும். அதோடு மயக்க மருந்து வீரியம் முழுவதும் குறைந்து உடலில் இயல்பு நிலை திரும்பும்.

மேலும் இதை பற்றி தெரிந்து கொள்ள: சிசேரியனுக்கு பிறகு உடற்பயிற்சிகள் என்ன செய்யலாம்?

அனஸ்தீசியா அதாவது மயக்க மருந்து செயல்படும் முறை

வலிநிவாரணி மருந்துகள் நரம்புகள் மற்றும் முதுகெலும்பு வடத்தை சுற்றியுள்ள முதுகெலும்பு திரவத்தில் செலுத்தப்படுகின்றன. இதை மயக்க மருந்து நிபுணர், முதுகுத்தண்டு மற்றும் முதுகுத்தண்டு திரவத்தை உள்ளடக்கிய துளையை ஊடுருவி செல்ல மிக நுண்ணிய ஊசியை பயன்படுத்துவார்கள்.

இதை செயல்படுத்தும் முறை மிகவும் எளிதானது. உங்கள் மயக்க மருந்து நிபுணரால் நீங்கள் படுக்கையில் ஓரத்தில் உட்காரும் படி அல்லது ஒருக்களித்து படுக்கும் படி கேட்கப்படுவீர்கள். முதலில் முதுகுப்பகுதி முழுவதும் அயோடின் கரைசலால் சுத்தம் செய்யப்படும். பிறகு முதுகில் ஒட்டும் பிளாஸ்டிக் பாதுகாப்பான ஒட்டுதல் (ஸ்டிக்கர்) ஒன்று வைக்கப்படும். முதலில் மேற்பூச்சு மயக்க மருந்து பயன்படுத்தப்படும். பிறகு மருந்துகள் ஒரு நுண்ணிய ஊசி மூலம் முதுகெலும்பு திரவத்தில் செலுத்தப்படும். இது உணர்ச்சியற்றதாக உங்களை மாற்றும்.உங்களால் சிறிது நேரம் நடக்க முடியாது.

அனஸ்தீசியா கொடுத்த பிறகு என்ன ஆகும்?

ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு அடிவயிற்றில் இருந்து கீழே வரை இருக்கும் வலியிலிருந்து நிவாரணம் அளிக்க உதவுகிறது. முதுகெலும்பு தடுப்பின் விளைவுகள் விரைவாக இருக்கும். அதே நேரம் விழிப்புடன் இருப்பார்கள். நடக்கும் அனைத்தையும் அப்பெண் அறிந்திருப்பார் அல்லது உணர்வார்.

முதுகெலும்புத்தண்டு மரத்துபோன உணர்ச்சியை அளித்தாலும் இடுப்புக்கு மேல் கைகள், தலை மற்றும் மேல் உடலை நீங்கள் நகர்த்த முடியும். உங்கள் கீழ் உடலில் உணர்வை உணர மாட்டீர்கள். ஏனெனில் மயக்க மருந்து கீழ் முதுகு வழியாக முதுகெலும்பை சுற்றியுள்ள சவ்வுக்கு கவனமாக செலுத்தப்படுகிறது. முதுகெலும்பு திரவத்தில் அவை எளிதில் பரவுவதால் இந்த விஷயத்தில் சிறிய அளவிலான மயக்க மருந்து தேவை. இது கருப்பை மற்றும் கீழ் உடலிலிருந்து மூளைக்கு செல்லும் வலி சமிக்ஞைகளை தடுப்பதன் மூலம் செயல்படுகிறது. இது உங்கள் சுருக்கங்களை (பிரசவ வலியை ) உணரவிடாமல் தடுக்கும். வயிறும் சுமார் 10 நிமிடங்களில் மரத்துப்போகும்.

எல்லோருக்கும் அனஸ்தீசியா தேவையா?

சுகப்பிரசவத்தில் வலி நிவாரணத்துக்காக அனைத்து பெண்களுக்கும் அனஸ்தீசியா மயக்கமருந்து வழங்கப்படுவதில்லை. சிலருக்கு பிரசவ வலி வேகமாக தீவிரமாக இருக்கும். மயக்க மருந்துக்கு முன்னரே அவர்களுக்கு பிரசவம் சுகமாகும். பிரசவத்துக்கு பிறகு பெண் உறுப்பில் தையல் போடும் போது மட்டுமே வலி தெரியாமல் இருக்க மயக்க மருந்து தேவை. சிலருக்கு பிரசவ வலி நீண்ட நேரம் இருக்கும். அவர்களுக்கு தாங்க முடியாத வலி இருக்கும். குழந்தையின் தலை வெளியே தெரியாது. அவர்களுக்கு பொது மருந்து எபிடியூரல் அனஸ்தீசியா தேவைப்படும்.

இரத்தப்போக்கு, இரத்தத்தொற்று, உள்ளூர் மயக்க மருந்துகளுக்கு முந்தைய ஒவ்வாமை அல்லது ஊசி நுழையும் கீழ் முதுகில் தோல் தொற்று போன்ற பிரச்சனைகளால் அசாதாரணமாக குறைந்த அளவு இரத்த அழுத்தம் இருந்தால் முதுகெலும்பில் ஊசி தவிர்க்கப்படுகிறது. சில குறிப்பிட்ட இரத்தத்தை மெலிக்கும் மருந்துகளை உட்கொள்ளும் பெண்களுக்கும் இந்த மயக்க மருந்து ஊசி போடப்படுவதில்லை.

சிசேரியன் பிரசவ அனஸ்தீசியா நன்மைகள் என்னென்ன?

சிசேரியன் என்பது முன்கூட்டியே முடிவு செய்து விட்டால் மயக்க மருந்து செயல்முறையின் போது ஒரு பொது மயக்க மருந்து (எபிடியூரல் அனஸ்தீசியா) தேவையை தவிர்க்கிறது. ஸ்பைனல் அனஸ்தீசியாவுக்கு பிறகு அறுவை சிகிச்சை அரங்கில் குழந்தை பிறப்பின் போது அப்பெண் விழிப்புணர்வோடு இருப்பார்கள். கிட்டத்தட்ட முழு வலி நிவாரணம் இருக்கும்.

குழந்தை பிறந்தவுடன் நீங்கள் உடனடியாக அவரை அருகில் வைத்து பாலூட்டலாம்.

முதுகில் ஒரு குழாய் ஒட்டிக்கொண்டிருக்கும் எபிட்யூரல் போலல்லலாமல் ஸ்பைனல் அனஸ்தீசியா முழுமையான வலி நிவாரணமாக செயல்படுகிறது.

பிரசவ வலி இடைவெளியை விட வேகமான மற்றும் ஐந்து முதல் பத்து நிமிடங்களுக்குள் உதைக்கும் நிலையில் விரைவான வலி நிவாரணத்தை இது அளிக்கும்.

சிறுநீர்ப்பையில் செருகப்பட்ட வடிகுழாயானது எபிட்யூரலுடன் ஒப்பிடும் போது குறுகிய காலத்துக்கு இருக்கும்.

மயக்க மருந்து

ஸ்பைனல் அனஸ்தீசியா பக்க விளைவுகள் ஏற்படுத்துமா?

முதுகெலும்பில் உள்ளே ஸ்பைனல் கெனாலில் மயக்க மருந்து செலுத்துவதால் உண்டாகும் பக்கவிளைவுகள் மருந்துகளை பொறுத்து அமையும். நீங்கள் போதுமான தசை வலிமையை பராமரிக்க முடியாமல் போகலாம். நீங்கள் மற்றவரின் உதவியுடன் சில மணி நேரங்கள் நகர முடியாது.

மருத்துவர்கள் பராமரிப்பாளர்கள் பெண்ணை படுக்கையில் இருக்க பரிந்துரைப்பார்கள்.

இலேசான சுவாசம் மற்றும் சுற்றோட்ட மன அழுத்தத்தை ஏற்படுத்தும். மயக்க மருந்தில் பயன்படுத்தப்படும் மருந்துகள் முதுகெலும்பு திரவத்துக்கு பயணிக்கும் போது அதிக முதுகெலும்பு தடுப்பு அல்லது அதிக நரம்பு தடுப்பு ஏற்படுத்தலாம்.

குட்டையான, பருமனான அல்லது பொதுவாக மயக்க மருந்துக்கு உணர்திறன் கொண்ட பெண்களில் இது மிகவும் பொதுவானது. மயக்க மருந்து இலேசான மூச்சுத்திணறல் மற்றும் உணர்வின்மை அல்லது தோள்கள், கைகள் மற்றும் தண்டு போன்ற மேல் உடலின் பலவீனத்தை உண்டாக்கலாம். இதை தொடர்ந்து வாந்தியுடன் அல்லது இல்லாமல் குமட்டல் உண்டாகிறது. முதலில் அதிக முதுகுத்தண்டு வலி பயத்தை உண்டாக்கலாம். ஆனால் அது உயிருக்கு ஆபத்தானது அல்ல.

இதயத்துடிப்பு மற்றும் இரத்த அழுத்தம் மற்றும் துணை ஆக்ஸிஜன் ஆகியவற்றை உறுதிப்படுத்தும் நரம்பு வழி மருந்துகளால் இது சிகிச்சையளிக்கப்படலாம். மயக்க மருந்த வழங்க முதுகுத்தண்டின் பாதுகாப்பு சவ்வு துளைக்கப்படுகிறது. இது சிலருக்கு முதுகெலும்பு திரவம் கசிவு உண்டகலாம். இது தலைவலியை உண்டாக்கும். தீவிரமாக இல்லை என்றாலும் தொல்லையாக இருக்கலாம்.

மேலும் இதை பற்றி தெரிந்து கொள்ள: பிரசவத்துக்குப் பிறகு மாதவிடாய் சுழற்சி எப்போது வரும்?

பெண்கள் பெரும்பாலும் நெற்றியை சுற்றி அல்லது கண்களுக்கு பின்னால் அல்லது தலையின் அடிப்பாகத்தில் முதுகுத்தண்டுவடம் வரை துடிக்கும் மற்றும் எபிசோடிக் வலியை விவரிக்கிறார்கள். அவர்களில் பெரும்பாலோர் சில மணி நேரங்களுக்குள் வலி நிவாரணம் அடைகிறார்கள். அவர்களில் 500 பெண்களில் 1 பெண் மட்டும் கடுமையான தலைவலியை புகாரளிக்கிறார்கள்.

முதுகுவலி கொழுப்பு, தசை மற்றும் தசைநார்கள் ஊசி துளையிடும் அடுக்குகள் காரணமாக ஏற்படும் அதிர்ச்சியின் விளைவாகவும் தெரிவிக்கப்படுகிறது. வலி பொதுவாக மந்தமான மற்றும் இலேசான வேதனையாக இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றன. எனினும் இவை சில வாரங்களில் தானாக சரியாகிவிடக்கூடும்.

Follow @ Google News : கூகுள் செய்திகள் பக்கத்தில் சென்னை மகளிர் மருத்துவமனை வலைப்பதிவுகள்!

சிசேரியன்- அனஸ்தீசியா அதிக வலி உண்டாக்குமா?

முதுகெலும்புத்தண்டை துளைத்து ஸ்பைனல் கெனால் வரை நேரடியாக செலுத்தும் ஊசி செயல்முறை விரைவானது வலியற்றது. ஆனால் மருந்துகளை முதலில் தளத்தில் செலுத்தும் போது கூச்ச உணர்வு உண்டாகலாம். உட்செலுத்தும் போது உங்கள் கால்களில் ஊசிகள் இருப்பதை உணர்ந்தால் மருத்துவரிடம் தெரிவிக்க வேண்டும். இது தற்காலிக நரம்பு சேதத்தின் வலியாக இருக்கலாம். ஊசியை மீண்டும் நிலைநிறுத்த வேண்டும். இது அரிதானது. சில மாதங்களில் தானாகவே சரி செய்யும். இந்த பாதிப்பை 1000 முதல் 2000 பெண்களில் ஒருவர் மட்டுமே பாதிக்கப்படுகின்றனர்.

உங்களுக்கு சிசேரியன் என்பதை கர்ப்பகாலத்தில் மருத்துவர் உறுதி செய்தால் (அனஸ்தீசியா) மயக்க மருந்து பற்றி அதிகம் கவலைப்பட வேண்டியதில்லை. உங்கள் உடல் ஆரோக்கியத்துக்கு ஏற்ப சரியான மருந்தை சரியான அளவில் மயக்கவியல் மருந்து நிபுணர் பரிந்துரைப்பார். எனினும் நீங்கள் தொடர்ந்து கவலை கொண்டால் உங்கள் மகப்பேறு நிபுணரிடம் ஆலோசியுங்கள்.

5/5 - (114 votes)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here