பெண்களின் யோனி வழியாக வெள்ளைப்படுதல் (white discharge) என்பது சாதாரண நிகழ்வு. எல்லா பெண்களுக்கும் பருவவயதை எட்டுவதற்கு முன்பிருந்தே இதை எதிர்கொள்கிறார்கள்.

இது சாதாரணமாக பெண் உறூப்பில் உண்டாக கூடிய நிகழ்வு என்றாலும் இதன் அசாதாரணம் குறித்தும் அறிந்துகொள்வது அவசியம்.

வெள்ளைப்படுதல் (Leucorrhea) என்பது நோயல்ல என்பதை முதலில் புரிந்துகொள்ள வேண்டும்.

பெண்ணின் இனப்பெருக்க உறுப்பை பாதுகாக்கிறது. கர்ப்பப்பை வாய் பெண் உறுப்பு உள்ளே உள்ள சுரப்பிகள் இறந்த திரவ செல்கள் மற்றும் பாக்டீரியாக்களை வெளியேற்றுகிறது. இதனால் பெண் உறுப்பு சுத்தமாகிறது. பெண் உறுப்பில் தொற்று பரவாமல் தடுக்கவும் உதவுகிறது.

பெண் உறுப்பு எப்போதும் ஈரப்பசையுடன் வழவழப்பாக இருக்க வேண்டும். அதற்காகத்தான் இந்த பிசுபிசுப்பான வெள்ளை திரவம் சுரக்க செய்கிறது. இது அரிப்பு இல்லாமல் இயல்பான அளவு சுரக்கும். கருப்பையின் வாய் அதன் உட்சுவர்க்ளைல் இருந்து சிறிதளவு சுரக்கும். இந்த வெள்ளைதிரவம் வெள்ளைப்படுதல் என்றழைக்கப்படுகிறது.

பெண் உறுப்பில் வெளிப்படும் இந்த வெள்ளைத்திரவமானது சாதாரணமானது. இது மாதவிடாய் சுழற்சிக்கு முன்பு அல்லது பின்பு வரக்கூடும். இது துர்நாற்றம் இல்லாமல் நிறமில்லாமல் வெளியேறக்கூடும்.

பெண்ணின் மாதவிடாய் சுழற்சி காலங்களில் அண்டவிடுப்பின் போது, தாய்ப்பால் கொடுக்கும் போது பாலியல் ரீதியாக தூண்டப்படும் போது இந்த வெளியேற்றம் இருக்கும். அதனால் இது குறித்து கவலை கொள்ள வேண்டியதில்லை.

எப்போது அசாதாரண வெள்ளைப்படுதல் ஏற்படுகிறது?

வெள்ளைப்படுதல் (Vaginal Discharge) வழக்கத்தை காட்டிலும் அதிகமாக இருந்தாலோ துர்நாற்றம் இருந்தாலோ நிறத்தில் வேறுபாடு இருந்தாலோ அது அசாதரணமானது.

அதே போன்று வெள்ளைப்படுதல் இருக்கும் போது பெண் உறுப்பு எரிச்சலை அடைந்தால் அது தொற்று பாதித்த அடையாளத்தை குறிக்கவும் செய்யும்.

இந்த அசாதாரண வெளியேற்றத்துக்கு என்ன காரணம்?

சாதாரண பாக்டீரியாக்களின் யோனியின் சமநிலையில் எந்த மாற்றமும் வாசனை, நிறம் அல்லது வெளியேற்றத்தை கொண்டிருக்காது.

ஆண்டிபயாடிக் அல்லது ஸ்டீராய்டு பயன்பாடு , வஜைனாவில் பாக்டீரியா தொற்று (Bacterial Vaginosis), கர்ப்பிணி பெண்களுக்கு, அதிக நபருடன் உறவு கொள்ளும் பாலியல் தொழிலாளர்களுக்கு பெண் உறுப்பில் தொற்று ஏற்பட வய்ப்புண்டு.

கர்ப்பப்பை வாய் புற்றுநோய், கொனேரியா, எஸ்.டி.டி என்னும் பாலியல் மூலம் பரவும் நோய்த்தொற்றுகள், நீரிழிவு நோய், அதிக வாசனை கொண்ட சோப்புகளை பயன்படுத்துவது.

இடுப்பு அழற்சி நோய், ஒட்டுண்ணி, பாதுகாப்பற்ற உடலுறவு, யோனி அழற்சி, பெண் உறுப்பை சுற்றி எரிச்சல், ஈஸ்ட் தொற்றுகள், நீரிழிவு நோய் இருந்தால், பிறப்பு கட்டுப்பாட்டு மாத்திரைகளை பயன்படுத்தும் போது என ஏதாவது ஒரு காரணத்தால் அசாதாரணமான வெள்ளைப்போக்கு (white discharge) உண்டாகலாம்.

இதையும் தெரிந்து கொள்ள: பெண்களுக்கு வெள்ளைப்படுதல் குணமாக டிப்ஸ்!

அசாதாரணமான வெள்ளைப்போக்கு என்ன செய்யும்?

இலேசான பிசுபிசுப்புத்தன்மை கொண்ட இந்த திரவம் பெண் உறுப்பில் பாக்டீரியா ஈஸ்ட் தொற்று போன்றவற்றால் பாதிக்கப்ப்பட்டால் அதன் அமிலத்தன்மை மற்றும் காரத்தன்மை இரண்டுமே பாதிப்புக்குள்ளாகும்.

வெள்ளைப்படுதல் அசாதாரணமாக இருக்கும் போது தொற்று இருந்து கவனிக்காமல் இருந்தால் அது அருகில் இருக்கும் சிறுநீர்ப்பாதையும் கருப்பை வாய் பகுதியையும் பாதிக்க வாய்ப்புண்டு.

அசாதாரணமாக வெள்ளைபடுதல் அறிகுறிகள்

Vaginal Discharge Symptoms

எப்படி அசாதாரணமாக வெள்ளைபடுதலை தெரிந்து கொள்வது. வெள்ளைபடுதல் இயல்பாக இல்லாமல் அசாதாரணமாக இருப்பதை சில அறிகுறிகள் கொண்டு கண்டறிந்துவிடலாம்.

 • அதிக துர்நாற்றத்துடன் கூடிய வெள்ளைப்படுதல்
 • வெள்ளைப்படுதல் உள்ளாடைகளில் கசிவது
 • நாப்கின் வைக்கும் அளவுக்கு வெள்ளைப்படுதல்
 • நிறமாற்றத்துடன் கூடிய வெள்ளைப்படுதல்
 • மஞ்சள் நிறத்தில் வெள்ளைப்படுதல்
 • சிவப்பு, பச்சை நிறங்களில் வெள்ளைப்படுதல்
 • வெள்ளைப்படுதல் திரவமாக இல்லாமல் கட்டியாக வெளியேறுதல்
 • எப்போதும் வெள்ளைப்படுதல்
 • பாலாடைக்கட்டி போன்று இருப்பது
 • கெட்டியாக சளிபோல் இருப்பது
 • பெண் உறுப்பில் கட்டி, புண்
 • பெண் உறுப்பில் எரிச்சல் இருந்து கொண்டே இருப்பது
 • இவை எல்லாமே வெள்ளைப்படுதல் அசாதாரணமான அறிகுறிகள் தான்.

இந்த அறிகுறிகள் எல்லாமே இருக்காது. சிலருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட அறிகுறிகள் இருக்கலாம். ஆனால் அறிகுறியின் ஆரம்ப கட்டத்திலேயே மருத்துவரை அணுகினால் சிகிச்சை பெறுவது எளிதாக இருக்கும். வெள்ளைப்படுதல் அலட்சியப்படுத்தும் போது அது மாதவிடாய் சுழற்சி மற்றும் கருப்பையில் சில குறைபாடுகள் உண்டாக்கிவிடும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் சென்னை மகளிர் மருத்துவமனை வலைப்பதிவுகள்!

வெள்ளைப்படுதல் எப்போது தீவிரமாகும்

வெள்ளைப்படுதல் இயல்பானது என்று பல பெண்கள் நினைக்கிறார்கள். ஆனால் வெள்ளைப்படுதல் பிரச்சனை அதிகரிக்கும் போது காய்ச்சல், அடி வயிற்றில் தாங்க முடியாத வலி, அதிக எடை இழப்பு, சோர்வு, அடிக்கடி சிறுநீர் கழிப்பது போன்றவையும் உண்டாகும்.

Vaginal Discharge Causes

சில பெண்கள் இந்த பாதிப்புக்கு ஆளாகும் போது அவர்கள் மேல் ஒரூவித துர்நாற்றம் அடிப்பதும் உண்டு. தாமதிக்காமல் மருத்துவரை அணுகுவதன் மூலம் சிகிச்சை அளிக்க உதவியாக இருக்கும்.

மருத்துவரிடம் செல்வதற்கு முன்பு எப்போது இருந்து வெள்ளைப்படுதல் அதிகரித்தது, என்ன நிறங்களில் வருகிறது, அரிப்பு, வலி போன்ற பிரச்சனைகள் குறித்தும் விவாதிக்க வேண்டும். இது என்ன காரணத்தினால் உங்களுக்கு வெள்ளைப்படுதல் உண்டானது என்பதை கண்டறிய உதவக்கூடும்.

வெள்ளைப்படுதல் (Vaginal Discharge) சிவப்பு, மஞ்சள், பச்சை போன்ற நிறங்களில் வருவதற்கான காரணங்கள் என்ன, பாக்டீரியா தொற்று என்றால் என்ன? வெள்ளைப்படுதலுக்கு வீட்டு வைத்தியம் உண்டா போன்ற இதுகுறித்த தகவல்களை தொடர்ந்து பார்க்கலாம். உங்களுக்கு இந்த பிரச்சனை இருந்தால் தயக்கமில்லாமல் மருத்துவரை அணுகுவது நல்லது.

4.9/5 - (310 votes)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here