குறைப்பிரசவம் என்றால் என்ன? அறிகுறிகள் எப்படி இருக்கும், ஏன் உண்டாகிறது? எப்படி தவிர்ப்பது?

2704
preterm birth

Contents | உள்ளடக்கம்

பிரசவம் என்பது ஒரு பெண் கர்ப்பகாலம் முழுமையும் முடிந்து குழந்தையின் முழுமையான வளர்ச்சிக்கு பிறகு வெளியேறும் நிலை. இது சுகப்பிரசவமாகவும் இருக்கலாம். சிசேரியன் முறையிலும் பிரசவிக்கலாம். இந்த முழுமையான பிரசவக்காலம் என்பது 38 வாரங்களிலிருந்து எப்போது வேண்டுமானாலும் நிகழலாம். இதற்கு முந்தைய வாரங்களில் உண்டாகும் பிரசவம் குறைப்பிரசவம் (Preterm Birth) என்று அழைக்கப்படுகிறது.

குறைப்பிரசவம் என்றால் என்ன?

சாதாரண கர்ப்பம் என்பது 40 வாரங்கள் வரை இருக்கலாம். குறைப்பிரசவம் என்பது குழந்தையின் வளர்ச்சி முழுமையடைவதற்கு முன்பே நிகழும் பிறப்பு ஆகும். இது 37 வது வாரத்தின் தொடக்கத்தில் நிகழ்கிறது அல்லது அதற்கு முன்பு நிகழ்கிறது. குழந்தை பிறக்கும் காலத்துக்கேற்ப அவர்கள் சிக்கல்கலை சந்திக்கலாம்.

குழந்தையின் இறுதி வாரங்களில் ஆரோக்கியமான எடை அதிகரிப்பு மற்றும் மூளை மற்றும் நுரையீரல் உள்ளிட்ட பல்வேறு முக்கிய உறுப்புகளின் முழு வளர்ச்சிக்கு முக்கியமானவை. அதனால் தான் முன்கூட்டிய பிரசவத்தில் பிறக்கும் குழந்தைக்கு அதிக மருத்துவ பிரச்சனைகள் தேவைப்படலாம். மேலும் இவர்கள் நீண்ட காலம் மருத்துவமனையில் தங்க வேண்டியிருக்கலாம். இந்த குழந்தைகள் எதிர்காலத்தில் கற்றல் குறைபாடுகள் அல்லது உடல் குறைபாடுகள் போன்ற நீண்ட கால உடல்நல பிரச்சனைகளையும் கொண்டிருக்கலாம்.

குறைப்பிரசவம் என்பது சுருக்கமாக பார்த்தால்

 1. கர்ப்பத்தின் 34 முதல் 36 வாரங்கள் வரை பிறக்கும் குழந்தைகள் மிதமான குறைப்பிரசவம் கொண்டவர்கள்.
 2. கர்ப்பத்தின் 32 முதல் 34 வாரங்கள் வரையில் பிறக்கும் குழந்தகள் குறைபிரசவக் குழந்தைகள் என்றழைக்கப்படுவார்கள்.
 3. கர்ப்பத்தின் 32 வாரங்களுக்கு முன்கூட்டியே பிறப்பவர்கள் மிகவும் குறைப்பிரசவத்தில் பிறந்தவர்கள் ஆவார்கள்.

குறைப்பிரசவம் (Preterm Birth Symptoms) அறிகுறிகள்

குழந்தைகள் முன்கூட்டிய பிரசவத்தில் வெளியேறுவதாக இருந்தால் அந்த பெண் கர்ப்பகாலத்தில் சில அறிகுறிகளை எதிர்கொள்வார்கள். அதனால் ஒவ்வொரு அறிகுறிகளையும் கவனிக்க வேண்டும். ஏனெனில் சிலருக்கு இந்த அறிகுறி மோசமாக இருக்கலாம். சிலருக்கு இலேசாக இருக்கலாம். குறைப்பிரசவத்தின் அறிகுறிகள் (Preterm Birth Signs and Symptoms) என்னென்ன என்பதை பார்க்கலாம்.

 • தொப்பை சிறியதாக இருப்பது
 • குழந்தையின் தலை மட்டும் பெரியதாக இருப்பது
 • குழந்தையின் கூர்மையான தோற்றம்
 • குழந்தையின் உடலில் கொழுப்பு இல்லாதது
 • குறைந்த உடல் வெப்பநிலை
 • மூச்சுத்திணறல்
 • அனிச்சை செயலால் விழுங்க முடியாத நிலை
 • உணவளிப்பதில் சிரமம்

போன்றவற்றை எதிர்கொள்ளலாம். கர்ப்பகாலத்தில் குழந்தைகள் முன்கூட்டி பிறக்கும் நிலை சராசரி பிறப்பு எடை குறைவது நீளம் மற்றும் தலை சுற்றளவு போன்றவற்றை காட்டுகின்றன.

குறைபிரசவ குழந்தைக்கு உண்டாகும் உடல் நல பிரச்சனைகள்

குறைபிரசவத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு உண்டாகும் உடல்நல பிரச்சனைகள் என்னவெல்லாம் இருக்கலாம்.

 • மூச்சுவிடுதலில் சிரமம்
 • மிக குறைந்த எடை
 • மிக குறைவான கொழுப்பு
 • உடல் வெப்பநிலையை பராமரிக்க இயலாமை
 • குறைவான செயல்பாட்டை கொண்டிருப்பது
  குழந்தை இயக்கம் மற்றும் ஒருங்கிணைப்பு பிரச்சனைகள்
  குழந்தைக்கு உணவளிப்பதில் சிரமம்
 • குழந்தையின் சருமம் மஞ்சள் அல்லது வெளிறி இருக்கும் நிலை

போன்றவற்றை எதிர்கொள்வார்கள். இதனோடு மருத்துவ ரீதியாக உண்டாகும் அறிகுறிகள் குறித்தும் பார்க்கலாம்.

 • மூளையில் இரத்தபோக்கு
 • நுரையீரல் இரத்தபோக்கு
 • இரத்த சர்க்கரை அளவு குறை
  செப்சிஸ் என்னும் நிலை
 • பாக்டீரியா இரத்த தொற்று நிமோனியா
 • தொற்று மற்றும் வீக்கம்
 • இதயத்தின் முக்கிய இரத்த நாளத்தில் மூடப்படாத துளை
 • இரத்த சோகை
 • ஆக்ஸிஜனை கொண்டு செல்லும் இரத்த சிவப்பு அணுக்கள் இல்லாதது
 • வளர்ச்சியடையாத நுரையீரலால் ஏற்படும் சுவாச கோளாறு
 • மூச்சுத்திணறல் நோய்க்குறி

போன்ற அறிகுறிகளும் உண்டாகலாம். புதிதாக பிறந்த குழந்தைக்கு இந்த அறிகுறிகள் இருந்தால் சிகிச்சையளிப்பதன் மூலம் இவை சரிசெய்ய முடியும். சில குழந்தைகள் நீண்டகால இயலாமை அல்லது நோயை எதிர்கொள்ளலாம்.

பிரசவத்துக்கு பிறகு முன்கூட்டிய குழந்தைகளுக்கு மருத்துவர்கள் குறிப்பிட்ட சில சோதனைகள் செய்கிறார்கள். இந்த சோதனைகள் குழந்தையின் எதிர்கால சிக்கல்களின் அபாயத்தை குறைக்க செய்கின்றன. அவற்றில் குறிப்பிடத்தக்க சோதனைகள்

 • இதயம்
 • நுரையீரல் வளர்ச்சி
 • மார்பு எக்ஸ்ரே
 • குளுக்கோஸ்
 • கால்சியம் மற்றும் பிலிரூபன் அளவு
 • இரத்த பரிசோதனைகள்
 • இரத்த ஆக்ஸிஜன் அளவு

போன்ற பரிசோதனைகள் செய்யப்படலாம்.

குறைப்பிரசவத்திற்கான (Preterm Birth) காரணங்கள்

குறைப்பிரசவத்துக்கு பொதுவான காரணங்களாக சொல்லப்படுவது என்னென்ன?

 • கருவில் ஒரு குழந்தைக்கும் மேல் உருவாகுதல்
 • செயற்கை முறையில் கருவுறுதலை எதிர்கொண்ட பெண்கள் (எல்லோருக்கும் கிடையாது. ஆனால் இவர்களுக்கு வாய்ப்பு உண்டு)
  கர்ப்ப கால இரத்த சோகை, கர்ப்பகால சர்க்கரை நோய், உயர் இரத்த அழுத்தம் போன்ற பாதிப்புகள் தீவிரமாகும் இருக்கும் போது அவர்களுக்கு குறைப்பிரசவம் நேரலாம்.
 • கர்ப்பப்பை கோளாறுகள்
 • கர்ப்பப்பை வாய் பகுதியில் பிரச்சனைகள்
  பிரசவக்காலம் நிகழ்வதற்கு முன்னரே பனிக்குடம் உடைதல்
 • கர்ப்பகாலத்தில் உதிரபோக்கு
 • புகைப்பிடித்தல் அல்லது புகைப்பிடிப்பவர்கள் இருக்கும் இடங்களில் வசித்தல்
 • மருத்துவரின் பரிந்துரையில்லாமல் சுயமாக மாத்திரை எடுத்துகொள்ளுதல்
 • தீவிரமான உடற்பயிற்சிகளை செய்வது
 • கர்ப்பப்பை வாய் பகுதியில் சிகிச்சைகள் தேவையெனில் அலட்சியப்படுத்துவது

மேற்கண்டவையெல்லாமே குறைப்பிரசவத்துக்கு காரணமாக இருக்கலாம். பெரும்பாலும் இதற்கு துல்லியமாக காரணம் கண்டறியப்படவில்லை. மரபணு தாக்கம் இருக்கலாம். காரணங்கள் மற்றும் வழிமுறைகளை புரிந்துகொள்வது குறைப்பிரசவத்தை தடுக்க உதவும்.

குறைப்பிரசவத்தை தடுக்க முடியுமா?

முன்கூட்டிய பிறப்பை தடுக்கும் வகையில் பெற்றோர்கள் முக்கியமான விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும். இது குறைப்பிரசவத்தை உண்டாக்காமல் தடுக்க செய்யும்.

கர்ப்பத்துக்கு முன்பும் பின்பும் ஆரோக்கியமான உணவை எடுத்துகொள்வது நல்லது.

முழு தானியங்கள், ஒல்லியான புரதங்கள்,காய்கறிகள் மற்றும் பழங்கள் அதிகமாக எடுத்துகொள்ள வேண்டும்.

ஃபோலிக் அமிலம் மற்றும் கால்சியம் மருந்துகளை எடுத்துகொள்வது பரிந்துரைக்கப்படுகிறது.

தினமும் நிறைய தண்ணீர் குடிப்பது,பரிந்துரைக்கப்பட்ட அளவில் தினமும் 8 டம்ளர் அளவு தண்ணீர் குடிப்பது கடைப்பிடியுங்கள்.

முதல் மூன்று மாதங்கள் தொடங்கி தினமும் ஆஸ்ப்ரின் எடுத்துகொள்ளுங்கள். மருத்துவரின் ஆலோசனையோடு எடுத்துகொள்ளுங்கள். உயர் இரத்த அழுத்தம் அல்லது முன்கூட்டிய பிறப்பு வரலாறு இருந்தால் தினமும் 60 முதல் 80 மில்லிகிராம் ஆஸ்ப்ரின் எடுத்துகொள்ள மருத்துவர் பரிந்துரைக்கலாம்.

புகைப்பிடிப்பதை நிறுத்துவது, புகைப்பிடிக்கும் இடத்தில் புழங்குவதை தவிர்க்க வேண்டும். இது பிறப்பு குறைபாடுகள் மற்றும் கருச்சிதைவு அதிக ஆபத்துக்கு வழிவகுக்கும்.

குறைப்பிரசவத்தில் பிறக்கும் குழந்தைகள் வளர்ப்பில் கவனம் செலுத்த வேண்டிய விஷயங்கள்

குழந்தை குறைப்பிரசவத்தில் பிறக்கும் போது குறிப்பிட்ட நாட்கள் வரை மருத்துவமனையில் சிகிச்சை பெறுவார்கள். அதன் பிறகு சுகாதார நிபுணரின் ஆலோசனையோடு குழந்தை வளர்ப்பில் கவனம் செலுத்த வேண்டும். அப்படி கவனம் செலுத்த வேண்டிய விஷயங்கள்.

 • தாய்பால் புகட்டும் நேரம்
 • பாலூட்டுதலில் சரியான இடைவெளி நேரம்
 • தாய்ப்பால் கொடுக்கும் நிலைகள்
 • உடல் எடை அதிகரிக்க உதவும் மருந்துகள்
  உடல் உஷ்ணத்தை பாதுகாக்கும் முறைகள்
 • சரியான இடைவெளியில் தடுப்பூசி போடுதல்
 • உடல் வெப்பநிலையை சரியாக பராமரித்தல் அதற்கான குறிப்புகள்

போன்றவை குறித்து அறிந்துகொள்ள வேண்டும். குழந்தை வளர்ப்பில் முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன என்பதை பார்க்கலாம்.

 • குழந்தைக்கு கேட்கும் திறன்
 • குழந்தையின் பேச்சுத்திறன்
 • குழந்தையின் பார்வைத்திறன் செயல்பாடு
 • மூளை நரம்பியல் செயல்பாடு

இவையெல்லாம் குழந்தை வளர தொடங்கும் போதே குழந்தையின் ஒரு வயதுக்குள் மருத்துவரின் ஆலோசனைப்படி பரிசோதனை செய்து அறிய வேண்டும். இதில் ஏதேனும் குறைபாடு இருந்தால் அதை கண்டறிந்து சிகிச்சை அளிப்பதன் மூலம் சரி செய்து விட முடியும். ஏனெனில் குறைப்பிரசவ குழந்தைகளை காப்பாற்றி இயல்பான குழந்தையாக மாற்றும் அளவுக்கு மருத்துவம் வளர்ந்துள்ளது.

குறைப்பிரசவ குழந்தைகள் வளர்ப்பில் சிறப்பு கவனிப்பு தேவையா?

தற்போது குறைப்பிரசவ முறையில் பிறக்கும் குழந்தைகள் உயிர்வாழும் விகிதம் அதிகரித்துள்ளது. இது குறித்து வெளியிடப்பட்ட ஆய்வு ஒன்று 28 வாரங்களுக்கு முன்பு பிறந்த குழந்தைகளின் உயிர்வாழும் விகிதம் அதிகரித்துளது. 1993 ஆம் ஆண்டு 70% சதவீதத்திலிருந்து 2012 ஆம் ஆண்டு 79% சதவீதமாக அதிகரித்துள்ளது.

அதே நேரம் குறைப்பிரசவ குழந்தைகளுக்கு நீண்ட கால அபாயங்களும் உள்ளது. வளர்ச்சி, மருத்துவ மற்றும் நடத்தை பிரச்சனைகள் குழந்தை பருவத்தில் தொடங்கலாம். சிலர் ஊனங்களை கூட கொண்டிருக்கலாம். தீவிரமாக முன்கூட்டிய பிறந்த மோசமான குறைப்பிரசவ குழந்தைகள் பொதுவாக நீண்ட கால பிரச்சனைகளை எதிர்கொள்வார்கள்.

இந்த குழந்தைகள் கேட்கும் பிரச்சனைகள், பார்வை இழப்பு, அல்லது குருட்டுத்தன்மை, கற்றல் குறைபாடுகள், உடல் குறைபாடுகள், தாமதமான வளர்ச்சி மற்றும் மோசமான ஒருங்கிணைப்பு கொண்டிருப்பதால் இவர்களது வளர்ச்சியில் பெற்றோர்கள் கூடுதலாக கவனம் செலுத்த வேண்டும்.

Follow @ Google News : கூகுள் செய்திகள் பக்கத்தில் சென்னை மகளிர் மருத்துவமனை வலைப்பதிவுகள்!

குறைப்பிரசவம் கொண்ட தாய்மார்களுக்கு தாய்ப்பால் சுரப்பு இருக்குமா?

குழந்தை தாய்ப்பாலை உறிஞ்சு குடிப்பதில் சிக்கல் இருக்கலாம். எனினும் குழந்தைக்கு தாய்ப்பால் உறிஞ்சுவதில் விழுங்குவதில் சிக்கல் இருக்கலாம். இந்த குழந்தைக்கு தாய்ப்பாலை பீய்ச்சி பாலாடையில் இரண்டு மணி நேரத்துக்கு ஒரு முறை கொடுக்க வேண்டும். தாய்ப்பால் சுரப்பிகள் செயல்படாத தாய்மார்களுக்கு உணவு முறை மாற்றம் மூலம் தாய்ப்பால் சுரப்பு ஊக்குவிக்கப்படுகிறது.

குறைப்பிரசவம் ஏற்பட்ட பெண்களுக்கு மீண்டும் அடுத்த முறை கருவுறுதல் உண்டாகும் போது குறைப்பிரசவமே உண்டாகுமா?

முதல் பிரசவம் குறைப்பிரசவமாக இருந்தால் அடுத்தடுத்த பிரசவங்களும் குறைப்பிரசவமாகவே இருக்குமா என்று கேட்கலாம். ஆனால் நோய் எதிர்ப்பு சக்தி குறைவு, கர்ப்பப்பை வாய் சிறியதாக இருப்பது, ஹார்மோன் பிரச்சனை கொண்டிருப்பவர்களுக்கு அடுத்தடுத்த பிரசவங்களும் குறைப்பிரசவத்தை கொண்டிருக்க வாய்ப்புண்டு.

ஆனால் எல்லோருக்கும் குறைப்பிரசவம் தான் என்று உறுதியாக சொல்ல முடியாது. கருவுற்ற நாள் முதல் மருத்துவரை அணுகி முறையான உடல் பரிசோதனை, போதுமான ஊட்டச்சத்து எடுத்துகொள்வது என எல்லாமே குறைப்பிரசவத்தை தடுக்க செய்யும்.

5/5 - (215 votes)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here