நஞ்சுக்கொடி பிரிவீயா என்றால் என்ன? அறிகுறிகள் காரணங்கள் மற்றும் சிகிச்சை முறைகள்!

1102
Placenta Previa

தாய்க்கும் அம்மாவுக்கும் இடையேயான தொடர்பு நஞ்சுக்கொடி தான். கர்ப்பத்துக்கு இது மிக முக்கிய உறுப்பு.

நஞ்சுக்கொடி பிரிவீயா (Placenta Previa) என்றால் என்ன?

கர்ப்பிணி பெண்ணின் நஞ்சுக்கொடியானது குழந்த பிறக்க அனுமதிக்கும் கருப்பை வாயின் திறப்பை தடுக்கும் போது உண்டாகும் நிலை நஞ்சுக்கொடி பிரிவீயா (Placenta Previa) என்றழைக்கப்படுகிறது. இது கர்ப்பம் மற்றும் பிரசவத்தின் போது கடுமையான இரத்தப்போக்கை உண்டாக்கும் நிலை. நஞ்சுக்கொடி பிரீவியா உள்ள தாய்மார்கள் கர்ப்பத்தின் 37 வாரங்களுக்கு முன்கூட்டியே பிரசவிக்கும் ஆபத்தை பெறுகிறார்கள்.

நஞ்சுக்கொடி என்பது கர்ப்ப காலத்தில் கருப்பையின் உட்புறத்தில் வளரும் ஒரு உறுப்பு ஆகும். இது தொப்புள் கொடியுடன் இணைகிறது. உங்களிடமிருந்து பிறக்காத குழந்தைக்கு ஆக்ஸிஜன் மற்றும் ஊட்டச்சத்துக்களை எடுத்து செல்கிறது. மேலும் குழந்தையின் கழிவுகளையும் வெளியேற்றுகிறது.

நஞ்சுக்கொடியானது கருப்பையின் திறப்பான கருப்பை வாயை ஓரளவு அல்லது முழுமையாக மூடும் போது நஞ்சுக்கொடி பிரிவீயா உண்டாகிறது. கர்ப்பிணிக்கு சுகப்பிரசவத்தின் போது குழந்தை கருப்பை வாய் மற்றும் பிறப்பு கால்வாய் வழியாக செல்கிறது. பொதுவாக நஞ்சுக்கொடி கருப்பை வாயில் இருந்து விலகி, கருப்பையின் மேற்பகுதியை நோக்கி இணைகிறது.

நஞ்சுக்கொடி பிரிவீயா குழந்தைக்கு தீங்கு விளைவிக்குமா?

நஞ்சுக்கொடி பிரிவீயா பெரும்பாலும் கர்ப்ப காலத்தில் இரத்தப்போக்கு உண்டாக்குகிறது. இது கடுமையானதாக இருந்தால் அது தாய்க்கும் குழந்தைக்கும் சுகாதார பிரச்சனைகளை உருவாக்கும். அதிக இரத்தப்போக்கு இருந்தால் குழந்தைக்கு முன்கூட்டியே பிரசவம் செய்ய வேண்டியிருக்கும். ஏனெனில் நுரையீரல் வளர்ச்சி, வெப்பநிலை, கட்டுப்பாடு மற்றும் சுவாசம் போன்ற சிக்கல்களுடன் வரலாம்.

நஞ்சுக்கொடி பிரீவியா நிலையில் பிரசவத்துக்கு சென்றால் நஞ்சுக்கொடி கிழிந்து அது தாய் மற்றும் குழந்தைக்கு ஆபத்தை உண்டாக்கலாம்.

நஞ்சுக்கொடியின் வகைகள்

நஞ்சுக்கொடியின் வகைகள் பொறுத்து வெவ்வேறு விளைவுகளை கொண்டிருக்கலாம். கர்ப்பப்பை வாயின் முழு திறப்பையும் நஞ்சுக்கொடி மறைக்கும் போது அது முழுமையான பிரிவீயா என்று அழைக்கப்படுகிறது. இது ஆபத்தான வகையும் கூட

நஞ்சுக்கொடி பிரீவியா கர்ப்பப்பை வாயில் விளிம்பை தொடும்போது அதை மறைக்காத போது மார்ஜின் பிரிவீயா அல்லது ஓரளவு பிரிவீயா என்றழைக்கப்படுகிறது. இது நஞ்சுக்கொடி கர்ப்பப்பை பகுதியை உள்ளடக்கியது. கர்ப்பப்பை வாயின் திறப்புக்கு அருகில் இருந்தாலும் அதை மறைக்காது. குழந்தை பிறப்பதற்கு முன் அது தானாக சரியாகிவிடும். நஞ்சுக்கொடி பிரீவியாவின் அறிகுறிகளை நீங்கள் கவனிக்கலாம்.

நஞ்சுக்கொடி பிரீவியா அறிகுறிகள்

பெரும்பாலும் நஞ்சுக்கொடி பிரீவியா என்பதை மருத்துவர்கள் கண்டறியும் வரை தெரியாது. ஆனால் நஞ்சுக்கொடி பிரீவியா பெரும்பாலும் கர்ப்பிணிகள் கண்டறிந்துவிடுவார்கள். ஆனால் அறிகுறீகளை உன்னிப்பாக கவனிக்க வேண்டும்.

கர்ப்பத்தின் இரண்டாம் பாதியில் யோனியில் இருந்து பிரகாசமான சிவப்பு இரத்தப்போக்கு, இது இலேசானது முதல் கனமானது வரை இருக்கலாம். இது வலியற்றது. இரத்தப்போக்குடன் சுருக்கங்கள் இருக்கலாம். மேலும் தசைபிடிப்பு அல்லது இறுக்கத்தை நீங்கள் உணரலாம். மேலும் முதுகில் அழுத்தத்தை உணரலாம்.

அதிக இரத்தப்போக்கு இருந்தால் இரத்த சோகை, வெளிர் தோல், விரைவான மற்றும் பலவீனமான துடிப்பு, மூச்சுத்திணறல் அல்லது குறைந்த இரத்த அழுத்தம் போன்ற பிற அறிகுறிகளும் உங்களுக்கு இருக்கலாம்.

நஞ்சுக்கொடி பிரீவியா அபாயங்கள்

நஞ்சுக்கொடி பிரீவியா ஒவ்வொரு 200 கர்ப்பிணிகளில் ஒருவருக்கு உண்டாகிறது. அதனால் இது குறித்து எப்போதும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

  • 35 வயதுக்கு மேற்பட்ட நிலையில் கருவுறூதல்,
  • சிகரெட் பழக்கம் கொண்டிருத்தல்,
  • முதல் கர்ப்பத்தில் அறுவை சிகிச்சை பிரிவில் இருந்தவர்கள்
  • கர்ப்பப்பையில் ஏதேனும் அறுவை சிகிச்சைகள் செய்து கொண்டவர்கள்
  • ஒன்றுக்கு மேற்பட்ட கர்ப்பத்தை கொண்டிருப்பவர்களுக்கு இந்த நிலை வரலாம்.

நஞ்சுக்கொடி பிரீவியா பல சிக்கல்களை உண்டு செய்யும். யோனி பகுதியில் இரத்தக்கசிவு இருக்கும். பொதுவாக கர்ப்பத்தின் மூன்றாம் ட்ரைமெஸ்டரில் கர்ப்பத்தின் மூன்றாம் மூன்று மாதங்களில் இவை உண்டாகிறது.யோனி இரத்தப்போக்கு தவிர இன்னும் பல அபாயங்களை உண்டு செய்யலாம்.

நஞ்சுக்கொடி பிரீவியா குழந்தையின் எடையை குறைக்கலாம். குழந்தைக்கு தாமதமான வளர்ச்சியை ஏற்படுத்தும். இது குழந்தையின் வளர்ச்சிக்கு கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும்.

நஞ்சுக்கொடி பிரீவியா மிக அரிதாக பிறவி குறைபாடுகள் உண்டாக்கலாம். இது குறைந்த சதவீதம் என்றாலும் குழந்தை சில உடல்ரீதியிலான குறைபாடுகளுடன் அல்லது அதன் உறுப்புகளின் செயல்பாட்டில் பிறக்கலாம்.

நஞ்சுக்கொடி பிரீவியாவின் ஆபத்துகளில் முக்கியமானது முன் கூட்டிய பிரசவம். இந்த நிலையில் பெண்களுக்கு அறுவை சிகிச்சை பிரிவு பொதுவாக தடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த நஞ்சுக்கொடி பிரீவியாவை தடுக்கவோ சிகிச்சையளிக்கவோ முடியாது. எனினும் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.

நஞ்சுக்கொடி பிரீவியா நோய் கண்டறிதல்

வழக்கமான மகப்பேறு சோதனையில் அல்ட்ராசவுண்டின் போது நஞ்சுக்கொடி பிரீவியாவை மருத்துவர்கள் கண்டறிவார்கள். கர்ப்பிணியின் நஞ்சுக்கொடி கருப்பையில் இருந்து கருப்பை வாய் வரையிலான திறப்பை மறைக்கிறதா என்பதை காட்ட சோதனை ஒலி அலைகளை பயன்படுத்துகிறது. இது அடிவயிற்றில் வைக்கப்படும் டிரான்ஸ்யூசர் எனப்படும் கருவியை கொண்டு தொடங்கும். தேவையெனில் யோனிக்குள் டிரான்ஸ்யூசரை பயன்படுத்துவார்கள்.

பெரும்பாலும் இது இரண்டாவது மூன்று மாத காலத்தில் அல்ட்ராசவுண்ட் செய்யும் போது கண்டறியப்படுகிறது.

நஞ்சுக்கொடி பிரீவியாவுக்கு சிகிச்சை முறைகள்

நஞ்சுக்கொடி பிரீவியா சிகிச்சை எதுவும் இல்லை. சிகிச்சையின் குறிக்கோள் இரத்தப்போக்கை கட்டுப்படுத்துவது தான். அதனால் நீங்கள் இயன்றவரை பிரசவத்தேதி வர பொறுமை காக்கலாம்.

முன்கூட்டிய பிரசவம் தடுக்க மருத்துவர் மருந்துகளை பரிந்துரைப்பார். குழந்தையின் நுரையீரல் வேகமாக வளர்ச்சியடைய உதவும். கார்டிகோஸ்டீராய்டு மருந்துகளையும் அவர்கள் கொடுக்கலம். குழந்தையை பாதுகாப்பாக பெற்றெடுக்க முடியும் என்று அவர்கள் உணர்ந்ததும் அதாவது கர்ப்பத்தின் 36 வாரங்களுக்கு பிறகு அவர்கள் சிசேரியன் அறுவை சிகிச்சையை திட்டமிடுவார்கள். இரத்தப்போக்கு நிற்கவில்லை என்றால் குழந்தைக்கு உரிய பருவம் இல்லாவிட்டாலும் அவசர சிசேரியன் தேவைப்படலாம்.

இரத்தப்போக்கு மிதமானதாக இருந்தால் உடலுறவு மற்றும் உடற்பயிற்சி உள்ளிட்ட செயல்களை தவிர்க்க மருத்துவர் பரிந்துரைக்கலாம். இரத்தப்போக்கு அதிகமாக இருந்தால் அறுவை சிகிச்சை பரிந்துரைக்கப்படும். மருத்துவமனையில் தங்கி இரத்தமாற்றம் செய்ய வேண்டும். பிரசவ தேதிக்கு எவ்வளவு ஆரோக்கியமாக இருக்கிறீர்கள் மற்றும் உங்கள் குழந்தையின் ஆரோக்கியம் நஞ்சுக்கொடி மற்றும் குழந்தையின் நிலை பொறுத்து மருத்துவரை தொடர்பு கொள்ள வேண்டும். அதோடு உங்கள் இரண்டாவது அல்லது மூன்றாவது மூன்று மாதங்களில் இரத்தப்போக்கு ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை சந்திப்பது நல்லது. கடுமையானதாக இருந்தால் மோசமான ஆபத்தை உண்டு செய்யலாம்.

நஞ்சுக்கொடி பிரீவியா நிலையில் இரத்தப்போக்கு இல்லாத போது சாத்தியமான இரத்தப்போக்கு அபாயத்தை குறைப்பதும் பிரசவ தேதியை முடிந்தவரை நெருங்க வைப்பதும் சிகிச்சையின் நோக்கமாக இருக்கும். அதே நேரம் கர்ப்பிணிகள் சில விஷயங்களில் கவனமாக இருக்க மருத்துவர்கள் பரிந்துரைப்பார்.

  • உணர்சிக்கு வழிவகுக்கும் உடலுறவு அல்லது பாலியல் செயல்பாடு
  • மிதமான அல்லது கடுமையான உடற்பயிற்சி
  • மிதமான அல்லது கனமான பொருள்களை தூக்குதல்
  • நீண்ட நேரம் நிற்பது
  • முதல் இரத்தப்போக்கு பிறகு மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு திரும்பினால் இரண்டாவது முறை குறைக்க இன்னும் சில விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும்.

யோனி இரத்தப்போக்கு அல்லது சுருக்கங்கள் இருந்தால் அவசர மருத்துவ நிலை தேவைப்படலாம்.

நஞ்சுக்கொடி பிரீவியா நிலை இருப்பவர்கள் கடைப்பிடிக்க வேண்டியவை

கர்ப்பிணிக்கு நஞ்சுக்கொடி இருந்தால் நிலைமையை சமாளிக்கவும் பிரசவத்துக்கு தயாராவது குறித்தும் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்கள் உள்ளன.

நீங்கள் நஞ்சுக்கொடி பிரீவியா குறித்து முழுமையாக அறிந்திருக்க வேண்டும். ஏற்கனவே நஞ்சுக்கொடி பிரீவியா கொண்டு பிரசவித்தவர்களுடன் தொடர்பு கொள்ளுங்கள்.

சிசேரியன் பிரசவத்துக்கு தயாராகுங்கள். நஞ்சுக்கொடி பிரீவியா வகை பொறுத்து சுகப்பிரசவம் ஆகாமால் இருக்கலாம். எனினும் குழந்தையின் ஆரோக்கியம், பிரசவக்காலம் குறித்து கவனித்து எச்சரிக்கையாக இருங்கள்.

இந்த நிலையில் ஓய்வு எடுக்கும் போது இடுப்பு ஓய்வு முக்கியமானது. எந்த கடினமான செயலிலும் அதிக எடை தூக்குதலிலும் ஈடுபடக்கூடாது. இதன் மூலம் நீங்கள் பாதுகாப்பில் இருக்கலாம்.

கர்ப்பத்தின் 3 வது மூன்று மாதங்களில் நஞ்சுக்கொடி பிரீவியா கொண்ட பெண்கள் பொதுவாக உடலுறவு மற்றும் உடற்பயிற்சியை தவிர்க்க வேண்டும்.

இரத்தப்போக்கு குறைவாக இருந்தாலோ நிறுத்தப்பட்டாலோ படுக்கையறையில் ஓய்வெடுக்கலாம்.

Follow @ Google News : கூகுள் செய்திகள் பக்கத்தில் ஜம்மி ஸ்கேன்ஸ் வலைப்பதிவுகள்!

நஞ்சுக்கொடி பிரீவியாவை தடுக்க முடியுமா?

நஞ்சுக்கொடி பிரீவியாவை தடுக்க முடியாது. சில சந்தர்ப்பங்களில் ஆபத்து காரணிகள் ஏற்படாமல் தடுக்கலாம்.

5/5 - (142 votes)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here