கரு உண்டாகியிருப்பதை உணர்த்தும் அறிகுறிகள் வரும் வரை காத்திராமல் சில கர்ப்ப பரிசோதனை மூலம் கருவுற்றிருப்பதை அறிந்துகொள்ள முடியும்.

வீட்டிலேயே செய்யகூடிய கர்ப்ப பரிசோதனைகள் மூலம் எளிதாக கண்டறியவும் முடியும். கர்ப்ப பரிசோதனையில் ஹெச்.சி.ஜி (hCG) என்னும் ஹார்மோன் முக்கிய பங்குவகிக்கிறது.

ஹெச்.சி.ஜி (Human Chorionic Gonadotropin (hCG)) என்றால் என்ன?

கரு உருவாகி கருப்பை சுவரில் இணைந்த பிறகு உடல் இந்த ஹார்மோனை உருவாக்குகிறது. ஹெ.சி.ஜி என்னும் பெயரை கொண்ட இந்த ஹார்மோன் சிறுநீர் அல்லது இரத்தத்தில் இருக்கலாம். இது கருத்தரித்த 6 நாட்களுக்கு பிறகு நடக்கும்.

உடலில் இந்த ஹெச். சி. ஜி. ஹார்மோன்கள் விரைவாக உயரும். ஒவ்வொரு 2 அல்லது 3 நாட்களுக்கு இரட்டிப்பாகும்.அதே நேரம் ஒரு பெண் கருவுற்று இருந்தால் மட்டுமே உடலில் இந்த ஹார்மோன் சுரப்பு அதிகமாக இருக்கும்.

இந்த ஹார்மோன் அளவு கொண்டு கரு வளர்ச்சியின் ஆரோக்கியமும் கணக்கிடப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

கருவுற்று இருப்பதை உறுதி செய்யும் கர்ப்ப பரிசோதனைகள் என்னென்ன? எங்கு செய்யலாம்?

இரண்டு வகையான முக்கிய கர்ப்ப பரிசோதனைகள் உண்டு. ஒன்று இரத்த பரிசோதனை மற்றொன்று சிறுநீர் பரிசோதனை.

இரத்த பரிசோதனை

இதை மருத்துவரின் பரிந்துரையோடு பரிசோதனை செய்வீர்கள். இது சிறுநீர் பரிசோதனை போன்று அடிக்கடி இருக்காது. இந்த சோதனைகள் அண்டவிடுப்பின் 6 முதல் 8 நாட்களுக்கு பிறகு செய்வார்கள். இதன் முடிவுகள் மிக துல்லியமாக இருக்கும்.

வீட்டில் கர்ப்ப பரிசோதனையை இதற்கு முன்கூட்டியே செய்து கண்டறிய முடியும். பெரும்பாலும் முடிவுகள் துல்லியமாக இருக்கும் என்றாலும் உறுதி செய்ய மீண்டும் எடுக்க வேண்டி இருக்கலாம். இரத்த பரிசோதனையில் முடிவுகளை விட ஆய்வகத்தில் முடிவுகள் அதிக நேரம் எடுக்கும்.

hCG Blood Pregnancy Test

ஒரு தரமான ஹெச்.சி.ஜி என்பது அந்த ஹார்மோனை மட்டுமே சரிபார்க்கும். அதாவது கர்ப்பமாக இருக்கிறீர்களா இல்லையா என்பதை மட்டுமே தெரிந்துகொள்ள முடியும்.

கருத்தரித்த 10 நாட்களுக்கு முன்பே கருவுறுதலை உறுதிப்படுத்த மருத்துவர்கள் இந்த சோதனை செய்ய அறிவுறுத்துவார்கள். சிலர் இன்னும் முன்னதாகவே இந்த ஹெச். சி. ஜி கண்டறிவார்கள்.

இரத்த ஹெச்.சி.ஜி சோதனை (பீட்டா ஹெச். சி. ஜி) இரத்தத்தில் இருக்கும் ஹெச்.சி.ஜி அளவு கணக்கிடுகிறது. மிககுறைந்த அளவு ஹெச்.சி.ஜி இருந்தால் கர்ப்ப காலத்தில் உண்டாகும் பிரச்சனைகளை முன்கூட்டியே கண்காணிக்க உதவும்.

ஏனெனில் எக்டோபிக் கர்ப்பத்தை நிராகரிக்கவும், கரு கருப்பைக்கு வெளியே வைக்கும் போது அல்லது கருச்சிதைவுக்கு பிறகு இந்த ஹெச்.சி.ஜி அளவுகள் விரைவாக குறையலாம். அப்போது மருத்துவர் அதை மற்ற சோதனைகளுடன் உறுதி செய்யலாம். அதனால் தான் சிறுநீர் பரிசோதனை மூலம் கர்ப்பம் உறுதி செய்யப்பட்டாலும் இரத்தப்பரிசோதனை செய்ய அறிவுறுத்துவார்கள்.

வீட்டில் சிறுநீர் பரிசோதனை

இந்த பரிசோதனை மிக எளிமையானது. இதை வீட்டிலும் ஆய்வகத்திலும் செய்யலாம். வீட்டில் என்னும் போது தனிப்பட்ட முறையில் வசதியானதாக இருக்கும். விரைவாக பலன் அளிக்கும். அதோடு பயன்படுத்தவும் எளிதாக இருக்கும். இதன் முடிவுகள் துல்லியமானதாக இருக்கும்.

மருந்துகடைகளில் கர்ப்ப பரிசோதனை கிட் கிடைக்கும். அதன் வழிமுறைகள் படி சரியாக பயன்படுத்தினால் பரிசோதனை முடிவுகள் சரியாக கிடைக்கும். இவை 100 க்கு 99 முறை வேலை செய்கிறது.

pregnancy test at home

மருத்துவரிடம் பெறக்கூடிய சிறுநீர் கர்ப்ப பரிசோதனை போலவே இவை துல்லியமானவை. அதிலும் நீங்கள் உங்கள் மாதவிடாய் தவறிய பிறகு எடுக்கும் போது இந்த பரிசோதனை மிகவும் துல்லியமாக இருக்கும்.

சிறுநீர் கழிக்கும் போது சில துளி எடுத்து அந்த கிட்டில் ( வழிகாட்டுதலின் படி) துளையில் விடவும். சில நிமிடங்களில் பரிசோதனை முடிவுகளை நீங்கள் பார்க்கலாம். கருவுற்று இருந்தால் என்ன மாதிரியான படங்கள் காட்டும் என்பதும் தெளிவாக அந்த கிட்டில் இருக்கும்.

மேலும் இதை பற்றி தெரிந்து கொள்ள: பிசிஓஎஸ் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்!

கர்ப்ப பரிசோதனைகள் எவ்வளவு துல்லியமானது?

சிறுநீர் முலம் வீட்டிலேயே பரிசோதனை செய்வது 99% துல்லியமானவை. வீட்டுப் பரிசோதனைகள் வழிமுறைகளை எவ்வளவு கவனமாக பின்பற்றுகிறீர்கள் என்பதை பொறுத்து முடிவுகள் துல்லியமாக பெறலாம்.

நீங்கள் அண்டவிடுப்பின் போது மற்றும் எவ்வளவு விரைவில் முட்டை உள்வைப்பு வைத்துள்ளீர்கள். கர்ப்பத்துக்கு பிறகு நீங்கள் எவ்வளவு விரைவில் சோதனை செய்கிறீர்கள் என்பதையெல்லாம் பொறுத்தும் முடிவுகள் அமையும்.

மேலும் சில கர்ப்ப பரிசோதனைகள் மாதவிடாய் ஏற்படுவதற்கு முன்பு ஹெச். சி. ஜி கண்டறியலாம். ஆனால் மாதவிடாய் தவறிய முதல் நாள் வரை காத்திருந்தால் முடிவுகள் துல்லியமாக இருக்கும்.

வீட்டில் பரிசோதனை செய்யும் போது அதிகாலையில் செய்ய வேண்டும். சிறுநீர் அதிக செறிவூட்டப்பட்ட நிலையில் சோதனை செய்யும் போது முடிவுகள் துல்லியமாக இருக்கும். ஆனால் இரத்தபரிசோதனைகள் இன்னும் துல்லியமானவை

கர்ப்ப பரிசோதனை முடிவுகளில் கவனம் செலுத்துங்கள்

நீங்கள் பயன்படுத்தும் கிட்டை பொறுத்து இதன் முடிவுகள் ஒரு கோடாகவோ , நிறமாகவோ அல்லது + குறியீடு – குறியீடாக காட்டலாம். டிஜிட்டல் சோதனைகள் கர்ப்பம் அல்லது இல்லை என்ற வார்த்தைகளை காட்டுகிறது. அதனால் கர்ப்ப பரிசோதனையோடு நேர்மறை எதிர்மறை முடிவுகள் குறித்து அறிவது அவசியம்.

நேர்மறையான முடிவை பெற்றால் கர்ப்பமாக இருக்கிறீர்கள் என்று நினையுங்கள். அது மங்கலாக இருந்தாலும் அதுதான் உண்மை. நேர்மறை முடிவை பெற்றால் அடுத்து நீங்கள் மருத்துவரை அணுக வேண்டும்.

உங்கள் பரிசோதனையில் அரிதாக நீங்கள் தவறான நேர்மறை முடிவையும் பெறலாம். அதாவது நீங்கள் கர்ப்பமாக இல்லாவிட்டாலும் கர்ப்பமாக இருப்பதாக சொல்கிறது.

உங்கள் சிறுநீரில் இரத்தம் அல்லது புரதம் இருந்தால் தவறான நேர்மறையான முடிவை பெறலாம். சில மருந்துகள் வலிப்பு எதிர்ப்பு மருந்துகள், ஹிப்னாடிக்ஸ் மற்றும் கருவுறுதல் மருந்துகள் போன்றவை தவறான நேர்மறையான முடிவுகளை உண்டாக்கலாம்.

கர்ப்ப பரிசோதனையில் எதிர்மறையான முடிவு இருந்தால் என்ன செய்வது?

கர்ப்ப பரிசோதனையில் எதிர்மறையான முடிவை பெற்றால் நீங்கள் கர்ப்பமாக இல்லை என்று நினைப்பீர்கள். ஆனால் கர்ப்பமாக இருக்கலாம். அதற்கான அறிகுறிகள் உங்களிடம் இருக்கும். அதனால் குழப்பம் இல்லாமல் தெளிவுபெற மருத்துவரை அணுகலாம்.

ஏனெனில் உங்கள் பரிசோதனையில் தவறான வழியில் இருக்கலாம். விரைவாக சோதித்திருப்பீர்கள். அல்லது சோதனைக்கு முன்பு அதிகளவு திரவங்களை குடித்ததால் சிறுநீர் கழிக்கும் அளவு நீர்த்துவிட்டிருக்கலாம். டையூரிடிக்ஸ் அல்லது ஆண்டிஹிஸ்டமின்கள் போன்ற சில மருந்துகளை எடுத்துகொள்ளலாம்.

negative pregnancy test

எதிர்மறையான முடிவை பெற்றால் ஒரு வாரத்துக்குள் மீண்டும் சோதனை செய்து இரண்டு முறை சரிபார்க்க வேண்டும். உங்க்ள் முடிவுகள் எதுவாக இருந்தாலும் சில வீட்டு முறை கர்ப்ப பரிசோதனைகள் எப்போதும் இரண்டு முறை செய்வதற்கு பரிந்துரை செய்கிறார்கள்.

உங்கள் பரிசோதனையின் ஒவ்வொரு முறையும் வெவ்வேறு முடிவுகளை பெற்றால் மருத்துவரை அழைக்க வேண்டும். முடிவுகளை உறுதி செய்ய இரத்த பரிசோதனை அறிவுறுத்தப்படும்.

நீங்கள் கரு பரிசோதனை செய்வதாக இருந்தால் மருத்துவர் சொல்லும் இந்த குறிப்புகள் உங்களுக்கு உதவும்.

நீங்கள் கர்ப்ப பரிசோதனை செய்து கொள்ள விரும்பினால் மருந்துகடைகளில் பிரக்னன்ஸி கிட் கிடைக்கும். இதில் சி மற்றும் டி என்னும் எழுத்து பொதிந்திருக்கும். சிறுநீர் துளைகளில் விடும் போது சில நிமிடங்கள் கழித்து இந்த எழுத்து நேராக பிங்க் லைன் தெரியக்கூடும்.

இதில் முதல் லைன் டார்க் பிங்க்கில் இருக்கும். இரண்டாவது லைன் டார்க் பிங்கில் தான் வரும் என்றில்லை. நீங்கள் கருவுற்று இருந்தாலும் கூட அந்த லைன் மங்கலாக தெரியலாம். அப்படி இருந்தால் மீண்டும் இரண்டு நாள் கழித்து நீங்கள் இந்த பரிசோதனை செய்யலாம்.

Follow @ Google News : கூகுள் செய்திகள் பக்கத்தில் சென்னை மகளிர் மருத்துவமனை வலைப்பதிவுகள்!

பீட்டா ஹெச்.சி. ஜி (Beta hCG – Beta Human Chorionic Gonadotropin (hCG)) என்றால் என்ன?

பீட்டா ஹெச்.சி. ஜி ( Beta hCG- Beta HUMAN CHORIONIC GONADOTROPIN ) என்னும் பரிசோதனை இது கர்ப்ப ஹார்மோன் ஆகும். இந்த ஹார்மோன் உடலில் 5, 10, 15 வீதம் அதிகரித்தாலே துல்லியமான முடிவுகள் தந்துவிடும்.

சிறுநீர் வழியாக பரிசோதிக்கும் போது இந்த ஹெச். சி. ஜி ஹார்மோன் 250, 300 அளவு அதிகமாக இருந்தால் தான் பரிசோதனை முடிவுகள் துல்லியமாக இருக்கும். அதனால் சிறுநீர் பரிசோதனையை விட இரத்த பரிசோதனை மிக துல்லியமானது.

இரத்தப்பரிசோதனை மூலம் உறுதி செய்யப்பட்டு மீண்டும் 48 மணி நேரம் கழித்து பரிசோதிக்கும் போது இந்த ஹெச். சி. ஜி அளவு மேலும் 600 அளவு அதிகரித்து இருந்தால் கரு வளர்ச்சி சரியான திசையில் உள்ளது என்பதையும் உறுதி செய்ய முடியும். கருவின் வளர்ச்சி ஆரோக்கியம் அறிய இரத்தபரிசோதனையை மருத்துவரின் அறிவுரையோடு செய்வது பாதுகாப்பானது.

நாட்கள் தள்ளியிருக்கு என்பவர்கள் வீட்டில் சிறுநீர் பரிசோதனை செய்து உறுதி செய்த உடன் மருத்துவரை அணுகி முறையான பரிசோதனை செய்வதன் மூலம் கருவளர்ச்சியும். தாயின் ஆரோக்கியமும் பாதுகாக்கலாம் என்கிறார் மருத்துவர்.

5/5 - (350 votes)

1 COMMENT

  1. This article is very helpful and genuine. Thank you very much and I humbly request you to publish many more articles like this.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here