கர்ப்ப காலத்தில் சாப்பிட வேண்டிய சிறந்த காய்கறிகள் என்ன?

781
Vegetables During Pregnancy

ஒரு பெண் தன் கர்ப்ப காலத்தில் தன்னுள் ஒரு சிசுவையும் சுமப்பதால் அவர்கள் சாப்பிடப்படும் உணவு ஆரோக்கியமானதாக மட்டுமே இருக்க வேண்டும். ஏனென்றால் அவர்கள் எடுத்துக்கொள்ளும் உணவில் உள்ள சத்துகள் அவர்களுக்குள் வளரும் ஒரு கருவுக்கும் பகிர்ந்து கொடுக்கப்படுகிறது. கர்ப்ப காலத்தில் சாப்பிட வேண்டிய காய்கறிகள் (Vegetables During Pregnancy) சரியானதா என்பதை தெரிந்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

கருவில் வளரும் குழந்தையின் ஆரோக்கியம் தான் அடுத்த தலைமுறைக்கான விதை. எனவே கர்ப்பிணிப் பெண்கள் தங்கள் ஆரோக்கியத்தோடு சேர்த்து, கர்ப்பிணிகளுக்கு தேவையான வைட்டமின்கள் மற்றும் குழந்தையின் ஆரோக்கியத்தையும் பார்க்க வேண்டிய அவசியம் இருப்பதால் தான் உணவில் கவனம் தேவை என்று பெரியோர்களும், மருத்துவர்களும் கூறுகின்றனர்.

கர்ப்ப காலத்தில் பச்சை காய்கறிகளில் (Vegetables During Pregnancy) பெண்கள் மற்றும் குழந்தைகளின் உடல் ஆரோக்கியத்திற்குத் தேவையான அனைத்து சத்துக்களும் உள்ளன. அதிலும் சில காய்கறிகளை வேக வைத்து சாப்பிடும் போது சுவையாகவும் இருக்கும். அதே சமயம் உடலுக்கு வலுவும் கிடைக்கும்.

கர்ப்ப காலத்தில் சாப்பிட வேண்டிய காய்கறிகள் (Vegetables During Pregnancy)

What to eat when pregnant

பீட்ரூட்

பீட்ரூடில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி அதிகம் உள்ளது. அதுமட்டுமல்லாமல் இருப்புச்சத்து, ஃபோலிக் அமிலம் போன்ற சத்துக்களும் நிறைந்துள்ளது. இதில் நார்ச்சத்து உள்ளதால் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளைக் குறைத்து நல்ல கொழுப்பை அதிகப்படுத்துகிறது.

beetroot vegetable

இது இரத்த நாளங்களில் தங்கும் கொழுப்பினையும் கறைக்க உதவுகிறது. பீட்ரூட் ஜூஷ் குடிப்பதன் மூலம் குழந்தையின் முதுகெலும்பு பலமாகிறது. கர்ப்பிணிகளுக்கு கர்ப்பகாலத்தில் ஹீமோகுளோபின் குறைய வாய்ப்புள்ளது. அதற்கான சிறந்த காய் இந்த பீட்ரூட் தான்.

இதனைத் தொடர்ந்து எடுப்பது கூட உடலுக்கு வலுவையும், மனதிற்கு உற்சாகத்தையும் கொடுக்கும். இது கர்ப்ப காலத்தில் மட்டும் இல்லாமல் சாதாரண நாட்களில் கூட சமைத்தோ அல்லது பச்சையாகவோ சாப்பிடலாம். கர்ப்பிணிப் பெண்கள் வாரத்தில் இரண்டு முறை சூப்-பாக செய்து கூட சாப்பிடலாம்.

அதிகமான சத்து நிறைந்த உணவான பீட்ரூட்டை உணவாக எடுத்துக்கொள்வது கர்ப்பிணிப் பெண்களுக்கும், கருவில் வளரும் குழந்தைக்கும் மிகவும் நல்லது.

ப்ரோக்கோலி

broccoli vegetable

ப்ரோக்கோலியில் கால்சியம் மற்றும் ஃபோலேட் சத்துக்கள் உள்ளது. இது குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகிறது. அதனால் இதை கர்ப்பிணிகள் எடுத்துகொள்வது அவசியமாகிறது.

பச்சை பட்டாணி

பச்சை பட்டாணியில் வைட்டமின் கே சத்து அதிகம் உள்ளது. இதனால் கருவில் வளரும் குழந்தைக்கு மத்திய நரம்பியல் மண்டலம், எலும்புகளின் வளர்ச்சி மற்றும் ஆரோக்கியம், முக்கியமாக தசைகளின் வளர்ச்சியினை அதிகரிக்க கூடிய அளவுக்கு சத்துகள் நிறைந்துள்ளது.

green beans

மேலும் பச்சை பட்டாணியில் கொலஸ்ட்ராலைக் குறைக்கும் பீட்டா குளுக்கோன் அதிக அளவு உள்ளதால் இது இதய நோயிலிருந்து நம்மைக் காக்க உதவுகிறது மற்றும் ஆன்டி-ஆக்சிடண்டுகள் அதிகம் உள்ளதால் உடலில் இரத்த ஓட்டத்தை சீராக்குகிறது.

எனவே பச்சை பட்டாணியை சூப்-பாகவோ, பொறியலகவோ அல்லது வேகவைத்து மாலை உணவாக கூட எடுக்கலாம். இத்தனை சத்துக்கள் இதில் அடங்குவதால் மருத்துவர்கள் அதிகம் இந்த பச்சை பட்டாணியை கர்ப்பிணிப் பெண்களை சாப்பிடுமாறு பரிந்துரைக்கின்றனர்.

கீரைகள்

முருங்கைக்கீரை, அரைக்கீரை, முடக்கத்தான்கீரை, சிறுகீரை, பொண்ணாங்கண்ணி கீரை, புளிச்சகீரை, தூதுவளைக்கீரை, முள்ளங்கிக்கீரை, முளைக்கீரை, அகத்திக்கீரை, மணத்தக்காளிக்கீரை, கரிசலாங்கண்ணி கீரை, இது போன்ற கீரைகளில் ஜிங்க் சத்து அதிகம் உள்ளது. அது குழந்தையின் உறுப்பு வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகிறது.

மேலும் பசலைக் கீரை, வெந்தயக் கீரையில் ஜிங்க், மாங்கனீசு, நார்ச்சத்து இன்னும் இதர வைட்டமின்கள் உள்ளது. அதனால் கர்ப்பிணிகள் வாரம் இருமுறை கீரை சாப்பிட வேண்டும்.

spinach

கீரை சூப்பாகவோ அல்லது பருப்பு போட்டு கூட்டாகவோ இல்லை வெங்காயம் போட்டு தாளித்து கூட சாப்பிடலாம். அவர்கள் விருப்படும் வகையில் செய்து சாப்பிடுவது மிகவும் நல்லது. ஆனால் முருங்கைகீரை கண்டிப்பாக வாரத்திற்கு ஒருமுறையாவது எடுத்துகொள்ள வேண்டும்.

தக்காளி

tomato

தக்காளியில் புற்றுநோய் செல்களை அழிக்கக் கூடிய லைகோஃபைன் என்ற சத்து உள்ளது. இதனை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் குழந்தை பிறந்த பின்பு அவனின் / அவளின் உடலில் வரக்கூடிய நோய்களை எதிர்ப்பதற்கான நோயெதிர்ப்பு சக்தியை பெரும் அளவிற்கு கருவிலே அதற்கான சக்தியை கொடுக்கிறது. அதனால் கர்பிணிகளுக்கு தக்காளி பரிந்துரைக்கப்படுகிறது.

சர்க்கரைவள்ளிக் கிழங்கு

சர்க்கரைவள்ளிக் கிழங்கில் வைட்டமின் கே, வைட்டமின் பி 6, கால்சியம், இரும்புச்சத்து, பீட்டா கரோட்டின், மாவுச்சத்து, நார்ச்சத்து, பொட்டாசியம் போன்ற சத்துகள் அடங்கியுள்ளது. இந்த சத்துகள் குழந்தை உறுப்புகளின் வளர்ச்சிக்கு நல்லது. கர்ப்பமாக இருப்பவர்கள் இந்த சர்க்கரைவள்ளிக் கிழங்கை சாப்பிடலாம்.

sweet potato

இதில் போலிக் அமிலம் இருப்பதால் கருவில் உள்ள குழந்தைக்கு நல்ல வளர்ச்சி கொடுக்கும். இனிப்பு சுவை கொண்டிருப்பதால் கர்ப்பிணிப் பெண்களுக்கும் எந்த ஒரு குமட்டல் பிரச்சனைகளும் இல்லாமல் நன்றாக சாப்பிடலாம். நன்றாக கழுவி வேகவைத்து சாப்பிடும் போது சுவை இன்னும் கூடுதலாகவே இருக்கும்.

வெள்ளரிக்காய்

cucumber

வெள்ளரிக்காயில் வைட்டமின் கே, வைட்டமின் பி, இரும்புச்சத்து, ஃபோலிக் அமிலம் மற்றும் மக்னீசியம் போன்ற சத்துகள் உள்ளது. வைட்டமின் கே உடலின் எலும்பு வளர்ச்சிக்கு தேவையான ஊட்டச்சத்து. மேலும் இது கருவில் வளரும் குழந்தையின் மூளையையும் ஆரோக்கியமாக வைத்திருக்க பெரிதளவில் உதவுகிறது. இதில் அதிகம் நீர்ச்சத்து உள்ளதால் தாகப் பிரச்சனையை போக்குகிறது.

கத்திரிக்காய்

கத்தரிக்காயில் வைட்டமின் சி, வைட்டமின் பி காம்ப்ளக்ஸ், வைட்டமின் ஏ, வைட்டமின் ஈ, பொட்டாசியம், தாமிரம், நியாசின், மாங்கனீஸ் மற்றும் இரும்புச்சத்து போன்றவைகளை உள்ளடக்கியுள்ளது. இது குழந்தைகளை பிறப்பு குறைபாடுகளிருந்து பாதுகாக்கிறது. கர்ப்பிணிப் பெண்களை நீரிழிவு நோயிலிருந்து காப்பாற்றுகிறது.

brinjal

மலச்சிக்கல் மற்றும் செரிமான கோளறுகளிலிருந்து பாதுகாக்கிறது. ஆனால் அதிகம் சாப்பிட பரிந்துரைக்கப்படவில்லை. அளவாக எடுப்பது நல்லது.

கேரட்

கேரட்டில் உயிர்சத்துகள் அதிகம் உள்ளது . அதனை பச்சையாக மென்று சாப்பிடும் போது உமிழ் நீர் அதிகம் சுரக்கும். இது செரிமானத்தை எளிதாக்க உதவும்.

carrot

கர்ப்பிணிப் பெண்கள் கேரட்டை சமைத்தோ அல்லது பச்சையாகவோ சாப்பிட்டு வந்தால் களைப்பு நீங்கும் மலச்சிக்கல் ஏற்படாது, இரத்த சோகை சரியாகும். குழந்தையின் உடலுக்கு ஆரோக்கியமும் கூடும், காண்பார்வை நன்றாக இருக்கும், நிறமும் அதிகமாகும்.

முட்டைக்கோஸ்

cabbage

முட்டைக்கோஸில் வைட்டமின் ஏ, வைட்டமின் ஈ, வைட்டமின் கே மற்றும் மக்னீசியம், ஜிங்க், பொட்டாசியம் போன்ற சத்துகள் அதிகம் உள்ளது. இத்தனை சத்துகளை உள்ளடக்கிய முட்டைக்கோஸை கண்டிப்பாக கர்ப்பிணிப் பெண்கள் எடுத்துக்கொண்டே ஆக வேண்டும். இவை எல்லாம் குழந்தைக்கு தேவைப்படும் சத்துக்கள் ஆகும்.

பூசணி

பூசணிக்காய் மிகவும் ஆரோக்கியமானது. பூசணிக்காயில் புரதம், கொழுப்பு, கார்போஹைட்ரேட், வைட்டமின் ஏ, வைட்டமின் பி1, வைட்டமின் பி2, நியாசின், வைட்டமின் சி, கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் இரும்புச்சத்து 0.03 மி.கி. உள்ளது. எல்லாவற்றிற்கும் மேலாக, கர்ப்ப காலத்தில் பூசணியின் மிக உயர்ந்த வைட்டமின் ஏ உள்ளடக்கம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக காணப்படுகிறது.

pumpkin

கர்ப்பிணிப் பெண்களுக்கு பூசணி சிறந்தது. இதை வேகவைத்தோ, வறுத்தோ அல்லது சூப் செய்தோ எடுத்துகொள்ளலாம் . விதைகளை சமைத்து சிற்றுண்டியாக உண்ணலாம். இது கர்ப்ப காலத்தில் வயிற்றுப் பிடிப்பைப் போக்க உதவும்.

Follow @ Google News : கூகுள் செய்திகள் பக்கத்தில் ஜம்மி ஸ்கேன்ஸ் வலைப்பதிவுகள்!

காய்கறிகள் பொதுவாகவே அனைவரும் எடுத்துக்கொள்ள வேண்டிய ஒன்று. அதையும் நன்றாக கழுவிய பிறகே சாப்பிட வேண்டும். பச்சைக் காய்கறிகளை சாப்பிடுவது நல்லது. சிலருக்கு அப்படி சாப்பிட அசவுகரியமாக இருந்தால் தாராளமாக வேகவைத்து பொறியலாகவோ, அவியலாகவோ அல்லது பருப்பு சேர்த்து கூட்டாகவோ சாப்பிடலாம். ஆனால் தினமும் ஏதாவது ஒரு காய் எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியம்.

5/5 - (200 votes)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here