எக்டோபிக் கர்ப்பத்தின் வகைகள் என்ன?

138
Types of Ectopic Pregnancy

கர்ப்பம் தரிக்கும் பெண்களின் ஆர்வத்திற்கு என்றுமே அளவில்லை. அப்படி கர்ப்பான பெண்கள் தங்களின் கருப்பையில் தான் கரு தங்கியிருக்கிறதா இல்லை கரு குழாயில் (Ectopic Pregnancy) தங்கியிருக்கிறதா என்பதை தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம்.

இதனை அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் மூலம் நீங்கள் தெரிந்து கொள்ளலாம் என்பதால் நீங்கள் தவறாமல் அந்த பரிசோதனையில் ஈடுபட்டு உங்களின் கர்ப்பத்தை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

எக்டோபிக் கர்ப்பத்தின் வகைகள் (Types of Ectopic Pregnancy)

ectopic pregnancy 3 types

1. கரு குழாய் கர்ப்பம்

கருவுற்ற முட்டை கருப்பையில் பதிய வேண்டிய இடத்தில் அதன் பயணத்தைத் தொடர்வதற்குப் பதிலாக ஃபலோபியன் குழாயிலோ அல்லது வேறு இடத்திலோ தங்கும்போது எக்டோபிக் கர்ப்பம் ஏற்படுகிறது. இதனால் முட்டைகள் கரு குழாயில் சிக்கிக்கொள்ளலாம். இதனை கரு குழாய் கர்ப்பம் என்கின்றனர்.

2. கரு குழாய் அல்லாத எக்டோபிக் கர்ப்பம்

இந்த வகையான கர்ப்பம் பெரும்பாலும் வயிற்றுத் துவாரம், கருப்பை வாய், கருப்பை, ஃபலோபியன் குழாயின் இடைப்பட்ட பகுதி, அகன்ற தசைநார், கருவளையம், அல்லது சிசேரியன் பிரிவில் வடு உள்ள இடங்களில் தான் இணைகிறது.

இந்த கர்ப்பங்கள் வழக்கமான குழாய் கர்ப்பங்களை விட பிற்பகுதியில் தோன்றுவதால், அவை அதிக தாய்வழி நோயுற்ற தன்மை மற்றும் இறப்புடன் தொடர்புடையவையாக இருக்கிறது. அல்ட்ராசவுண்ட் தொழில்நுட்பத்தின் முன்னேற்றங்களின் உதவியால், எக்டோபிக் கர்ப்பங்களை முன்கூட்டியே கண்டறிவதற்கு வசதியுள்ளது என்பதால் பரிசோதனையினை மெற்கொண்டு கர்ப்பத்தை கண்டறிய வேண்டும்.

3. ஹெட்டோரோடோபிக் கர்ப்பம்

ஒரு கருவுற்ற முட்டை கருப்பையின் உள்ளேயும் மற்றொன்று கருப்பைக்கு வெளியேயும் இணைந்து உருவாகிறது. இதன் காரணமாகவே எக்டோபிக் கர்ப்பம் எப்போதும் கருப்பையக கர்ப்பத்திற்கு முன்பே கண்டறியப்படுகிறது.

இந்த கர்ப்பத்தை அகற்றிய பிறகும், உங்களுக்கு கர்ப்பமாக இருக்கும் அறிகுறிகள் (மனித கோரியானிக் கோனாடோட்ரோபின் அளவுகள்) தொடர்ந்து அதிகரித்துக் கொண்டிருந்தால் உங்கள் கருப்பையில் கரு தங்கியிருக்கலாம். அதனால் உடனே உங்கள் மருத்துவரை அணுகி அடுத்து என்ன செய்ய வேண்டும் என்ற ஆலோசனையினை கேட்க வேண்டும்.

எக்டோபிக் கர்ப்பத்திற்கு என்ன காரணம்?

ectopic pregnancy reasons

கரு குழாய்களில் ஏற்படும் பிரச்சனைகள் எக்டோபிக் கர்ப்பத்திற்கு முக்கிய காரணமாகும். சில சந்தர்ப்பங்களில், முந்தைய இடுப்பு அறுவை சிகிச்சை, தொற்றுநோயால் ஏற்படும் ஃபலோபியன் குழாய்களின் வீக்கம், ஃபலோபியன் குழாய்களில் உள்ள வடு திசு மற்றும் அசாதாரண வடிவ ஃபலோபியன் குழாய்கள் ஆகியவை முட்டையின் மென்மையான இயக்கத்தில் குறுக்கிடலாம்.

இவை உடல் ரீதியான காரணங்களாக இருந்தாலும் அவை தொடர்ந்து கருப்பைக்கு வெளியே வளர்ந்தால் அதுவே உங்களுக்கு ஆபத்தாக முடியம். எனில் உடனே மருத்துவரை அணுகி இவ்வகை கர்ப்பத்தை அகற்றுவது நல்லது.

எக்டோபிக் கர்ப்பத்தின் வாய்ப்பை அதிகரிக்கும் காரணங்கள்

முந்தைய எக்டோபிக் கர்ப்பம்

இதற்கு முன்பு உங்களுக்கு இதுபோன்ற கர்ப்பம் இருந்திருந்தால், உங்களுக்கு மற்றொரு கர்ப்பம் ஏற்பட வாய்ப்புகள் அதிகம்.

அழற்சி அல்லது தொற்று

கோனோரியா மற்றும் கிளமிடியா போன்ற பாலியல் ரீதியாக பரவும் நோய்கள் ஃபலோபியன் குழாய்கள் மற்றும் அருகிலுள்ள பிற உறுப்புகளில் வீக்கத்தை ஏற்படுத்தும், இது எக்டோபிக் கர்ப்பத்தின் அபாயத்தை அதிகரிக்கும்.

கருவுறுதல் சிகிச்சை

செயற்கை கருத்தரித்தல் (IVF) அல்லது இதே போன்ற சிகிச்சைகள் மேற்கொள்ளப்படும் பெண்களுக்கு எக்டோபிக் கர்ப்பம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மேலும் இது மலட்டுத்தன்மையும் அதிகரிக்கலாம்.

ஃபலோபியன் குழாய் அறுவை சிகிச்சை

தடுக்கப்பட்ட அல்லது சேதமடைந்த ஃபலோபியன் குழாய்களை சரிசெய்வதற்கான அறுவை சிகிச்சை இந்த எக்டோபிக் கர்ப்பத்தின் அபாயத்தை அதிகரிக்கும்.

கருத்தடை தேர்வு

கருப்பையக சாதனத்தை (IUD) பயன்படுத்தும் போது கர்ப்பமாக இருப்பதற்கான வாய்ப்புகள் குறைவு. இருப்பினும், காப்பர் டி (IUD) அணியும்போது கர்ப்பம் தரிப்பது ஃபலோபியன் குழாய் சிதைவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கிறது.

புகைபிடித்தல்

கருத்தரிப்பதற்கு முன்பு புகைபிடிப்பது எக்டோபிக் கர்ப்பத்தின் அபாயத்தை அதிகரிக்கும். நீங்கள் அதிகமாக புகைபிடித்தால் ஆபத்து அதிகமாக இருக்கும்.

எக்டோபிக் கர்ப்பம் எவ்வளவு தீவிரமானது?

எக்டோபிக் கர்ப்பம் என்பது உடனடியாக கவனிக்கப்பட வேண்டிய ஒன்று. பொதுவாகவே உடல் உங்களுக்குள் வளரும் கருவைத் தாங்கும் அளவிற்கு கருப்பை தனித்தன்மை வாய்ந்ததாக இருக்கிறது. மேலும் கரு கருப்பைக்குள் வளரும் போது வெளியே நம் வயிறு விரிவடையக் கூடிய ஒன்றாக தான் இருக்கிறது.

ஆனால் உங்கள் ஃபலோபியன் குழாய்கள் அந்த அளவு விரிவானது அல்ல. மேலும் கருவுற்ற முட்டை கருகுழாயில் உருவாகும்போது குழாய் வெடிக்க வாய்ப்புகள் இருக்கும். இப்படி நிகழும்போது, உங்களுக்கு அதிக அளவு உள் இரத்தப்போக்கு உண்டாகும் .

இதனால் உங்கள் உயிருக்கு ஆபத்தாக கூடிய நிலையும் வரலாம். கருப்பை குழாய், வயிற்று குழியில் உள்ள மற்ற உறுப்புகள், உட்புற இரத்தப்போக்கினால் காயம் ஏற்படும் என்பதால் அதனை தவிர்க்க உடனடியாக எக்டோபிக் கர்ப்பத்திற்கு சிகிச்சையளிக்கப்பட வேண்டும்.

எக்டோபிக் கர்ப்பத்திற்குப் பிறகு

after ectopic pregnancy

தாயின் மன மற்றும் உடல் ஆரோக்கியம் இயற்கையாகவே பாதிக்கப்படுகிறது.

ஒரு எக்டோபிக் கர்ப்பம் கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்ட பிறகு, ஒரு மருத்துவர் கர்ப்பத்தின் விளைவைச் சரிபார்க்க வேண்டும், கருச்சிதைவுக்கு பிறகும் உடலில் HCG போன்ற கர்ப்ப ஹார்மோன்கள் இருப்பதால் இது முக்கியமாகும். இது இன்னும் கர்ப்பமாக இருப்பது போன்ற உணர்வை அளிக்கிறது.

பயம், பதட்டம், கோபம் அல்லது மனச்சோர்வு போன்ற உணர்வுகளை அனுபவித்தால், கர்ப்பம் தோல்வியுற்றது அவளுடைய தவறு அல்ல என்பதை தாய்க்கு நினைவூட்ட வேண்டும்.

ectopic pregnancy after

கருச்சிதைவு என்பது தாய்க்கு மட்டுமல்ல, குடும்பத்திற்கும் மனச்சோர்வை ஏற்படுத்துகிறது. உங்களுக்குத் தேவையான தொழில்முறை உதவியைப் பெறுவது அல்லது உங்களுக்கு நெருக்கமான ஒருவருடன் இதயப்பூர்வமான உரையாடலைத் பகிர்வது புத்திசாலித்தனம்.

Follow @ Google News : கூகுள் செய்திகள் பக்கத்தில் ஜம்மி ஸ்கேன்ஸ் வலைப்பதிவுகள்!

இயற்கையான கர்ப்பத்தை விரும்பும் பெண்கள் கண்டிப்பாக நல்ல உணவுமுறைகளையும், முறையான உடற்பயிற்சியையும் கடைபிடிக்க வேண்டும். மேலும் இது போன்ற எக்டோபிக் கர்ப்பத்திற்கான அறிகுறிகள் இருந்தால் உடனே மருத்துவரை அணுகி சரியான சிகிச்சையினை பின்தொடர வேண்டும்.

5/5 - (177 votes)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here