அனோமலி ஸ்கேன் செய்வதற்கு முன் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்

4976
before doing an anomaly scan

அனோமலி ஸ்கேன் குறித்த முழுமையான தகவல்கள்!

அனோமலி ஸ்கேன்

பெண் கருவுற்ற பிறகு கருவின் வளர்ச்சி முறையாக உள்ளதா என்பதை தீர்மானிக்க இந்த ஸ்கேன் செய்யப்படுகிறது.

இந்த பரிசோதனையின் மூலம் மூளை, முகம், முதுகெலும்பு, இதயம் , வயிறு, குடல், சிறுநீரகங்கள், கை கால்கள் மற்றும் அம்னோடிக் திரவத்தின் அளவு சரிபார்க்கப்படுகிறது. இந்த அனோமலி ஸ்கேன் செய்வதால் கருவின் அசாதாரணங்களை கண்டறிய முடிகிறது. அதே நேரம் இந்த ஸ்கேன் பரிசோதனை செய்வதன் மூலம் குழந்தை அடுத்த 40 வாரங்களை தொடும் போது ஆரோக்கியமான முறையில் வளருமா என்பதற்கு உத்தரவாதம் அளிக்க முடியாது என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.

அனோமலி ஸ்கேன் வாரம்

கர்ப்பத்தில் அனோமலி ஸ்கேன் பெண் கருவுற்ற 18 முதல் 20 வாரங்களில் செய்யப்படுகிறது. அதாவது இரண்டாவது மூன்று மாதங்களில் இது செய்யப்படுகிறது.

இது விரிவான ஸ்கேன். இந்த அனோமலி ஸ்கேன் வாரத்தில் கருவின் உடல் கூறு மற்றும் கருவின் ஒவ்வொரு உறுப்பும் சரியாக வளர்கிறதா என்று ஆய்வு செய்யப்படுகிறது. முக்கியமாக கருவின் வளர்ச்சியில் அம்னோடிக் திரவம் உள்ளதா என்பது கவனிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

கர்ப்பிணிக்கு இரட்டை கரு அல்லது அதற்கு மேற்பட்ட கரு இருந்தால் அனோமலி ஸ்கேன் உடன் வேறு சில ஸ்கேன்களையும் பரிசோதிக்க வலியுறுத்துவார்.

அதே போன்று அனோமலி ஸ்கேன் (Anomaly Scan) பரிசோதனையின் போது அனோமலி ஸ்கேன் கீழே இறங்கிய நஞ்சுக்கொடியை காட்டினால் அப்போதும் வேறு சில பரிசோதனைகளுக்கு வலியுறுத்துவார்.

கர்ப்பிணிக்கு கர்ப்பகால நீரிழிவு நோய் அல்லது உயர் இரத்த அழுத்தம் போன்ற பாதிப்புகள் இருந்தால் கர்ப்பிணி அதற்கு முந்தைய முன்கூட்டிய பிரசவம் அல்லது தாமதமாக கருச்சிதைவு ஏற்பட்ட வரலாற்றை கொண்டிருந்தாலும் அவர்களுக்கு வேறு சில பரிசோதனைகளுக்கு பரிந்துரை செய்வார்.

அனோமலி ஸ்கேன் செயல்முறை

அனோமலி ஸ்கேன் செயல்முறையின் போது கரு மருந்து நிபுணர் கர்ப்பிணியின் வயிற்றில் வளரும் கருவின் அனைத்து உறுப்புகளையும் பரிசோதனை செய்வார்.

குழந்தையின் தலை வடிவம் அதன் அமைப்பு இந்த கட்டத்தில் மூளை வளர்ச்சியில் ஏதேனும் குறைபாடு இருந்தால் அதையும் கண்டறிவார்.

கருவில் வளரும் குழந்தைக்கு உதடு பிளவுப்பட்டுள்ளதா என்பது கண்காணிக்கப்படும். அதே நேரம் குழந்தையின் வாயினுள் மேல் தாடை மற்றும் கீழ் தாடையில் பிளவு இருந்தால் அதை பார்ப்பது கடினமாக இருக்கும். இது பெரும்பாலும் கவனிக்க முடியாது.

குழந்தையின் முதுகெலும்பு அதன் நீளம், குறுக்குவெட்டு, எலும்புகள் அனைத்தின் வளர்ச்சி அதன் சீரமைப்பு, தோல் முதுகெலும்புகளை பின்புறத்தில் மூடியிருப்பது என் அனைத்தையும் உறுதி செய்ய முடியும்.

குழந்தையின் வயிற்றுப்பகுதி முன்பக்கம் உள்ள உள் உறுப்புகள், நஞ்சுக்கொடி தொப்புள் கொடி அதை தொடர்ந்து குழந்தையின் அம்னோடிக் திரவத்தையும் கவனிப்பார்கள்.

குழந்தையின் இதயம், இதயத்தின் முழு அமைப்பு முதல் இரண்டு அறைகள், கீழ் இரண்டு அறைகள் சமமாக உள்ளதா, வால்வுகள் இதயத்துடிப்புடன் திறந்து மூடப்படுகிறதா? குழந்தையின் இதயத்துக்கு இரத்தம் எடுத்துசெல்லும் முக்கிய நரம்புகள் மற்றூம் தமனிகளையும் நிபுணர்கள் ஆய்வு செய்வார்கள்.

குழந்தையின் சிறுநீரகங்கள் கவனிக்கும் போது இரண்டு சிறுநீரகங்கள் உள்ளதா, அவற்றில் சிறுநீர் தடையில்லாமல் செல்கிறதா என்றும் பரிசோதிக்கப்படும். ஒரு வேளை குழந்தையின் சிறுநீர்ப்பை காலியாக இருந்தால் ஸ்கேன் செய்யும் காலத்தில் அது நிரப்பப்பட வேண்டும்.

குழந்தையின் கைகள், கால்கள், விரல்கள் பரிசோதிக்கப்படும் ஆனால் சரியான எண்ணிக்கையில் உள்ளதா, குறைவாக உள்ளதா என்பதை பரிசோதிக்க மாட்டார்கள்.

இந்த காலத்தில் நஞ்சுக்கொடி கருப்பையின் வாயை அடைவதை அல்லது மூடி இருப்பதை தெளிவாக பார்க்க முடியாது. நஞ்சுக்கொடியானது கர்ப்பிணியின் கருப்பையில் கீழாக இருந்தால் அதன் நிலையை சரிபார்க்க முடியாது. இதை மீண்டும் பரிசோதிக்க மறுமுறை ஸ்கேன் செய்யப்படும். அதற்குள் நஞ்சுக்கொடி கருப்பை வாயிலிருந்து விலகி சென்றிருக்கலாம். குழந்தை அசைவு நன்றாக வைத்திருக்கும் அளவு அம்னோடிக் திரவத்தின் அளவு சரிபார்க்கப்படும்.

  • கருவில் குழந்தையின் தலை சுற்றளவு
  • குழந்தையின் வயிற்று சுற்றளவு
  • தொடை எலும்பு

இந்த மூன்றும் குழந்தை 40 வாரங்கள் கழித்து பிறக்கும் தேதியை ஒத்து சரியான அளவில் இருக்க வேண்டும்.

அனோமலி ஸ்கேன் (Anomaly Scan) பரிசோதனையில் டவுன் சிண்ட்ரோம் அல்லது கருவின் குரோமோசோம் அசாதாரணங்களை கண்டறிய முடியுமா?

அனோமலி ஸ்கேன் செய்யும் போது டவுன் நோய்க்குறியின் 50 முதல் 60% வரை கண்டறிய முடியும். இது 18 வாரங்களில் தான் செய்யப்படுகிறது. அதற்கு முன்னதாக மூன்று மாத ஸ்க்ரீனிங் பரிசோதனையில் (FTS) சோதனையில் இதை நிச்சயமாக கண்டறிய முடியும்.

அல்ட்ரா சவுண்ட் பரிசோதனையில் கருவை சுற்றி இருக்கும் அம்னோசென்டெசிஸ் மட்டுமே இதன் தகவலை கொடுக்க செய்யும். சில நேரங்களில் குரோமோசோமால் அசாதாரணங்களை கொண்ட குழந்தைகளுக்கு அல்ட்ராசவுண்ட் குறிப்பான்கள் அறிகுறிகள் உண்டு.

கழுத்தின் பின்னால் அடர்த்தியான தோல் இருப்பது இது நுச்சல் மடிப்பு என்று சொல்லப்படுகிறது. நாசி எலும்பு மூளையின் வெண்ட்ரிக்களுக்குள் இலேசான திரவம், கழுத்தில் மாறுபட்ட சப்ளாவியன் தமனி, குறுகிய கைகள் மற்றும் குறுகிய கால்கள் கொண்டிருப்பது.

குரோமோசோம் அசாதாரணங்களை கொண்டிருக்கும் சில குழந்தைகளுக்கு இந்த அறிகுறிகள் இருக்கும் போது பல சாதாரண குழந்தைகளுக்கு இந்த அறிகுறி இருக்க வாய்ப்புண்டு. குரோமோசோம் சிக்கலை கண்டறிவதற்கு ஒரே வழி அம்னோசென்டெசிஸ் என்னும் பரிசோதனை தான்.

அனோமலி ஸ்கேன் கருவின் ஆரோக்கியத்துக்கு உறுதி கொடுக்குமா

கருவின் உடலில் சில பகுதிகள் அசாதாரணமாக வளர்ந்திருக்கும் போது கருவின் வளர்ச்சி 18 முதல் 20 வாரங்களில் ஸ்கேன் மூலம் கண்டறிய முடியும். இது எதனால் உண்டானது என்பதை கண்டறியவோ அல்லது ஸ்கேன் பரிசோதனை மூலம் துல்லியமான நோயறிதலை கண்டறியவோ முடியாது.

சமயங்களில் இந்த சந்தேகமான அறிகுறியை எதிர்கொள்ள மீண்டும் ஸ்கேன் செய்ய சில வாரங்கள் பொறுத்திருப்பார்கள்.ஒரு முறை அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் சாதாரணமான முடிவுகளை கொடுத்தால் அந்த குழந்தை ஆரோக்கியமாக பிறக்கும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை.

ஏனெனில் கருவின் வளர்ச்சி ஆரோக்கியத்தை உறுதி செய்யும் இந்த 18 முதல் 20 வாரங்களுக்கான காலகட்டத்தில் சில குறைபாடுகள் கர்ப்பத்தின் பிற்பகுதி வரை கூட தெளிவாக தெரிவதில்லை. கருவின் குறைபாடுகள் அனைத்தையும் இந்த ஸ்கேன் மூலம் கண்டறியப்படுவதில்லை.

கர்ப்பிணிக்கு முந்தைய பிரசவம் அறுவை சிகிச்சை முறையில் நடந்தால் அதன் வடுக்கள்,குழந்தை கருவிலிருக்கும் முறை போன்ற காரணிகள் இந்த சோதனையின் திறனை குறைக்க செய்யும்.

அதனால் தான் இதய குறைபாடுகள், குடல் அடைப்பு உள்ளிட்ட முக்கிய சில விஷயங்கள் கர்ப்பத்தின் பிற்பகுதி வரை கண்டறியப்பாடமல் போகலாம். அதே நேரம் அனோமலி ஸ்கேன் சரியான முறையில் சரியான நேரத்தில் செய்யப்படும் போது இவை பெரும்பாலும் கண்டறியப்பட்டுவிடுகிறது.

அனோமலி ஸ்கேன் அடிக்கடி செய்யலாமா?

அனோமலி ஸ்கேன் (Anomaly Scan) செய்வதன் மூலம் கருவின் பிரச்சனைகளை அறிந்துவிட முடியும். அதே நேரம் குழந்தையின் வளர்ச்சிக்கேற்ப தான் அதன் குறைபாட்டு அறிகுறிகளை கண்டறியவும் முடியும். கர்ப்பிணிக்கு 18 முதல் 20 வாரங்களுக்குள் தான் இந்த அனோமலி ஸ்கேன் எடுக்கப்படுகிறது.

அதே நேரம் கர்ப்பத்தின் 24 முதல் 25 வாரங்களுக்கு பிறகு தான் குழந்தையின் மூளை தாமதமான சல்வேஷன் போன்ற சில முரண்பாடுகள் உண்டாகலாம். அதனால் அனோமலி ஸ்கேன் செய்யும் போது ஏதேனும் அறிகுறிகள் கவனிக்க வேண்டியவையாக இருந்தால் மீண்டும் இந்த காலத்தில் அனோமலி ஸ்கேன் தேவைப்படலாம். அறிகுறிகளின் தன்மைக்கேற்ப மீண்டும் மீண்டும் தேவைபடலாம்.

பிசி மற்றும் பிஎன் டி டி சட்டத்தின் கீழ் பிறப்புறுப்பு உறுப்புகளை பார்ப்பது தடை செய்யப்பட்டுள்ளது. இதனால் பிறப்புறுப்பு உறுப்புகளின் அசாதாரணங்களை கண்டறிவது சாத்தியமில்லை.

இந்த அனோமலி ஸ்கேன் பரிசோதனை மூலம் விரிவான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டாலும் பெற்றோர் ரீதியிலான அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் பரிசோதனை செய்யும் போது சில முரண்பாடுகள் கவனிக்க முடியாததாகிவிடலாம். சில சமயங்களில் சாதாரண அல்ட்ரா சவுண்ட் பரிசோதனையானது ஒழுங்கின்மையாக தவறாக புரிந்துகொள்ளலாம்.

பரிசோதனைகளின் போது சில சந்தர்ப்பங்களில் மீண்டும் ஒரு ஸ்கேன், உயிர்வேதியியல் சோதனை தேவைப்படலாம். சில நேரங்களில் சில அறிகுறிகள் நிலையற்றதாக இருக்கலாம். காலப்போக்கில் அவை மாறக்கூடும்.

அனோமலி ஸ்கேன் (Anomaly Scan) பரிசோதனை செய்யும் போது கர்ப்பிணியின் வயது, ஸ்கேன் செய்யும் போது கருநிலை, தாய்வழி உடல் பழக்கம், மதுபான அளவு மற்றும் கருவின் பாகங்களிலிருந்து வரும் நிழல்கள் பரிசோதனை பார்வைத்திறனை கட்டுப்படுத்தலாம். இந்த நிலை வரும்போது அனோமலி ஸ்கேன் பரிசோதனை மீண்டும் தேவைப்படும்.

இதையும் தெரிந்து கொள்ள: கர்ப்ப காலத்தில் செய்யப்படும் அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் வகைகள்!

கர்ப்பிணியின் உடல் பருமன் பரிசோதனைக்கு சவால் விடக்கூடும். தாயின் வயிற்றுசுவரில் இருக்கும் கொழுப்பு அல்ட்ராசவுண்ட் ஆற்றலை உறிஞ்சு கொள்வதன் மூலம் கருப்பையின் படங்களின் உபயோகத்தன்மையை குறைக்க செய்கிறது. இது கருவில் நோயறிதலை கடினமாக்குகிறது என்பதால் மீண்டும் ஒரு ஸ்கேன் பரிசோதனை தேவைப்படுகிறது.

அனோமலி ஸ்கேன் 3 டி/ 4 டி

அனோமலி ஸ்கேன் 3 டி மற்றும் 4 டி என்பது மதிப்பிடுவதற்கு மட்டுமே. இது வழக்கமான ஸ்கேன் பரிசோதனை கிடையாது.

பல நேரங்களில் கர்ப்பிணிகள் இரட்டை அல்லது மும்மடங்கு கர்ப்பம் கொண்டிருந்தால் அப்போது கருவின் நிலையை மீண்டும் பரிசோதிக்க வேண்டியிருக்கும். ஏனெனில் ஒன்றை ஒன்று மறைப்பதால் அல்ட்ராசவுண்ட் பரிசோதனையில் சிரமங்களை உண்டாக்க கூடும்.

அனோமலி பரிசோதனையின் போது கருவில் இருக்கும் குழந்தைக்கு சிக்கல் கண்டறிந்தால் அடுத்து என்ன செய்வார்கள் என்ற கேள்வி எழலாம். அறிகுறியை கண்டதும் குழந்தைக்கு உண்டாகும் விளைவுகள் குறித்து சரியாக உறுதியாக சொல்ல முடியாது. கர்ப்பிணிக்கு தொடர்ந்து சோதனை செய்வதற்கான விருப்பம் வழங்கப்படும். சோதனையின் போது ஏதேனும் வெளிப்படுத்தப்பட்ட குறைபாடுகள் இருந்தால் இது குறித்து இன்னும் ஆழமாக ஆராயப்படும். மேலும் கர்ப்பிணிக்கு அம்னோசென்டெசிஸ் செயல்முறை உட்படுத்துவதற்கான பரிந்துரையும் செய்யப்படலாம்.

அனோமலி ஸ்கேன் செய்வதற்கான நேரம்

முதல் மூன்று மாத ஸ்கேன் போல் இது இருக்காது. கர்ப்பிணிகளுக்கு அனமாலி ஸ்கேன் செய்வதற்கு அவர்களது சிறுநீர்ப்பை முழுவதுமாக நிரம்பியிருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. மேலும் கருப்பையில் அடிவயிற்றில் செய்யப்படும் ஸ்கேன் மூலம் இதை மிகத்தெளிவாக காணமுடியும். ஸ்கேன் செய்யும் போதே இதற்கான முடிவுகளை நீங்கள் தெரிந்துகொள்ளலாம்.

Follow @ Google News : கூகுள் செய்திகள் பக்கத்தில் சென்னை மகளிர் மருத்துவமனை வலைப்பதிவுகள்!

அனோமலி ஸ்கேன் நன்மைகள்

குழந்தையின் வளர்ச்சி நிலை குறித்து இந்த பரிசோதனை மூலம் அறியலாம். ஏதேனும் பிரச்சனைகள் இருந்தால் மருத்துவர்கள் தெரிவித்துவிடுவார்கள். 100% குழந்தையின் குறைபாட்டை அறிய முடியாது என்றாலும் குழந்தையின் குறைபாட்டை அறிய செய்யலாம். கருவிலேயே அதை சரிசெய்யவும் முயற்சிக்கலாம்.

அனோமலி ஸ்கேன் (Anomaly Scan) பரிசோதனை மூலம் குழந்தைக்கு குறைபாடு ஏதேனும் கண்டறியப்பட்டால் மருத்துவரின் ஆலோசனையை பெற்று தொடர்ந்து சிகிச்சை எடுத்துகொள்வதும் அவசியம். இதை அலட்சியம் செய்தால் தாய் மற்றும் சேய்க்கு பாதிப்பு உண்டாகலாம். கருவுற்ற பிறகு மருத்துவர் உங்கள் உடல் வரலாறில் ஏதேனும் சந்தேகம் அடைந்து, கருவின் வளர்ச்சி குறித்து மேலும் அறிந்து கொள்ள இந்த அனோமலி ஸ்கேன் பரிசோதனைக்கு அறிவுறுத்தினால் நீங்கள் தவிர்க்க வேண்டாம்.

5/5 - (12 votes)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here