தைராய்டு பரிசோதனை என்றால் என்ன?

ஹைப்பர் தைராய்டின் அறிகுறிகள்

ஹைப்போ தைராய்டு அறிகுறிகள்

கருவுற்ற பெண்கள் முதல் 3 மாதங்களில் கருவளர்ச்சி சீராக இருக்க உடல் ஆரோக்கியம் மிக மிக அவசியம். குறிப்பாக  ஹார்மோன்கள் சுரப்பு சீராக இருப்பதும் முக்கியம். அப்படியான ஒன்று தான் தைராய்டு ஹார்மோன். ஹைப்போ மற்றும் ஹைப்பர் தைராய்டு இரண்டும் வருவதற்கான வாய்ப்புகள் உண்டு என்பதால் கர்ப்பத்துக்கு முன்கூட்டியே இது குறித்து கவனம் செலுத்த வேண்டும். 

தைராய்டு பரிசோதனை என்றால் என்ன & ஏன் அவசியம் என்று பார்க்கலாம்?

தைராய்டு கழுத்தில் சிறிய பட்டாம்பூச்சி வடிவில் இருக்கும் சுரப்பி. இது உடல் வேலை செய்ய உதவும் பொருள்களை உருவாக்கும் முக்கிய உறுப்பு. தைராய்டு சீராக பணி செய்தால் உடல் ஆரோக்கியமும் சீராக இருக்கும். ஏனெனில் உடல் ஆரோக்கியத்துக்கு ஹார்மோன்களை இவை உருவாக்குகிறது. இந்த தைராய்டு ஹார்மோன் இதயத்துடிப்பு மற்றும் வளர்சிதை மாற்றத்துக்கு அவசியமானவையும் கூட. 

தைராய்டு சுரப்பு ஹார்மோன்கள் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ சுரக்க செய்யும் போது இந்த குறைபாடு நேரிடுகிறது. இது தைராய்டு கோளாறு என்று சொல்லப்படுகிறது. சில பெண்களுக்கு தைராய்டு கோளாறு கருவுறுதலுக்கு முன்பே தொடங்குகிறது. சிலருக்கு கர்ப்பகாலத்தில் அல்லது பிரசவகாலத்துக்கு பிறகு தைராய்டு பிரச்சனைகள் உருவாகலாம். 

தைராய்டு பாதிக்கப்பட்ட பெண் சிகிச்சையோடு கருவுறுதலை தொடரும் போது அது எந்த பாதிப்பையும் உண்டாக்காது. ஆனால் சிகிச்சை அளிக்காத தைராய்டு  கர்ப்பகாலத்திலும் பிரசவத்துக்கு பிறகு குழந்தைக்கும் தாய்க்கும் பிரச்சனைகளை உண்டாக்கும். 

தைராய்டு சுரப்பு அதிகமாக இருந்தால் அது  ஹைப்பர் தைராய்டு என்றும் குறைவாக இருந்தால் அது ஹைப்போ தைராய்டு என்றும் அழைக்கப்படுகிறது. இவை இரண்டுக்கும் அறிகுறிகள் உண்டு.  இந்த அறிகுறிகள் என்னவென்பதை பார்க்கலாம். 

தைராய்டு சுரப்பு அதிகமாக இருக்கும் ஹைப்பர் தைராய்டின் அறிகுறிகள்:

  1. சாதாரண வெப்பநிலையிலும் உடல் வெப்பநிலை அதிகமாக இருப்பதை உணர்வார்கள்.

2. இதயத்துடிப்பு வழக்கத்தை காட்டிலும் அதிகமாக இருக்கும்.  அல்லது ஒழுங்கற்று இருக்கும். 

3. கைகள், விரல்களில் நடுக்கங்கள் இருக்கும். 

4. கருவுற்ற பிறகு ஆரோக்கியமான சத்தான உணவை எடுத்துகொண்டாலும் உடல் எடை அதிகரிக்காமல் உடல் எடை குறைய தொடங்கும். 

5. கர்ப்பகால சோர்வு இருக்க கூடும் என்றாலும் எப்போதும் ஒரு வித சோர்வு   இருக்க கூடும். 

6. தூங்குவதிலும் அதிக சிரமத்தை சந்திக்க கூடும். 

7. எப்போதும் பதட்டமோ அல்லது எரிச்சலோ  இருக்க கூடும். பதட்டம் வேகமாக இருக்கும். 

8. கர்ப்பகாலத்தில் குமட்டல் அல்லது வாந்தி உணர்வு இருந்தாலும் அது வழக்கத்தை காட்டிலும் அதிகமாகவே இருக்கும். 

இவையெல்லாம் கர்ப்பகாலத்தில் உண்டாகும் அறிகுறிகளோடு தொடர்பு கொண்டவை என்பதால் பலரும் இதை கவனத்தில் கொள்வதில்லை என்பதால் இது குறித்த விழிப்புணர்வு கர்ப்பிணிகளுக்கு அவசியம் தேவை. 

தைராய்டு சுரப்பு குறைவாக இருக்கும் ஹைப்போ தைராய்டு அறிகுறிகள்:

1. கர்ப்பகாலத்தில் பெண்கள் சோர்வாக இருப்பது வழக்கம் என்றாலும் அதிகப்படியான சோர்வு எப்போதும் இருந்தால் அது தைராய்டு சுரப்பு குறைவாக  இருக்கும் ஹைப்போதைராய்டின் அறிகுறியாகவும் இருக்கலாம். 

2. கர்ப்ப காலத்தில் உடல் எடை அதிகரிக்க கூடும் என்றாலும் வழக்கத்தை காட்டிலும் உடல் எடை மேலும் அதிகரிக்க கூடும். 

3. கூந்தல் உதிர்வு, சருமம் வறண்டு போதல் போன்ற பிரச்சனைகளும் உண்டாக கூடும். 

4. கர்ப்ப காலத்தில் மலச்சிக்கல் இயல்பானது போன்றே குறைவான தைராய்டு சுரப்பும் கூட மலச்சிக்கலை அதிகரிக்க செய்யும். 

இவை எல்லாமே தைராய்டு சுரப்புக்கான தனித்துவமான அறிகுறிகள் அல்ல. இவை எல்லாமே கர்ப்பகாலத்தில் பொதுவான அறிகுறிகளே. இவை எல்லாமே தைராய்டு குறைபாடு தான் என்பதை ரத்த பரிசோதனையில் அறிய முடியும். 

Follow @ Google News : கூகுள் செய்திகள் பக்கத்தில் சென்னை மகளிர் மருத்துவமனை வலைப்பதிவுகள்!

இவையும் கர்ப்பகால அறிகுறிகளோடு தொடர்பு கொண்டவை என்பதால் இதையும் பெரும்பாலும் தைராய்டு உடன் தொடர்பு படுத்தி பார்ப்பதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.  தைராய்டு சுரப்பு அதிகமாகவோ குறைவாகவோ இருக்கும் போது  இந்த அறிகுறிகள் அதிகம் தலைதூக்காது. 

இதையும் தெரிந்து கொள்ள: ஃபோலிகுலர் Study என்றால் என்ன?

கர்ப்பிணிகள் கர்ப்பகாலத்தில் தைராய்டை கொண்டிருக்கும் போது மற்ற கர்ப்பிணி பெண்களை காட்டிலும்  சிக்கலை சந்திக்க வாய்ப்புண்டு.  கர்ப்பிணிகள் தைராய்டு கொண்டிருக்கும் குடும்ப வரலாறை கொண்டிருந்தால் கருவுறுதலுக்கு முன்பு அல்லது கருவுற்ற உடன் மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெறுவது அவசியம். 

கர்ப்பகால பரிசோதனையில் தைராய்டு பரிசோதனையும் செய்யப்படும். தைராய்டு ஹார்மோன்கள் அளவை அளவிடுவதற்கான அறிகுறிகள், உடல் பரிசோதனை, ரத்த பரிசோதனை போன்றவற்றின் அடிப்படையில் இவை கண்டறியப்பட்டு  சிகிச்சை அளிக்கப்படுகிறது. 

கர்ப்பத்தின் ஒவ்வொரு  மாதத்திலும் தைராய்டு சோதனை செய்யப்பட்டு  சிகிச்சைகள் அளிக்கப்படும். மருத்துவரின் ஆலோசனை மற்றும் தொடர் சிகிச்சையும் தைராய்டு கொண்ட கர்ப்பிணி பெண்ணுக்கு இருந்தால் பிரசவம் ஆரோக்கியமாக இருக்கும்.

பொதுத்துறப்பு

சென்னை மகளிர் மருத்துவமனை மற்றும் ஸ்கேன் மையம் ( Chennai Women’s Clinic and Scan Centre (CWC) ) வழங்கும் கட்டுரைகள், தகவல்கள், வீடியோக்கள் போன்றவை தகவல் தொடர்பு நோக்கங்களுக்காக மட்டுமே.

இவை எல்லாமே மகப்பேறு மருத்துவர்கள், ஸ்கேன் பரிசோதனை நிபுணர்கள், அதற்கான நடைமுறைகள் போன்றவை நிபுணர்களால் வழங்கப்படும் பொதுவான கட்டுரைகள் மட்டுமே.

எங்கள் இணையதளத்தில் இருக்கும் கட்டுரைகள் மற்றும் வீடியோக்கள் பொதுவான விஷயங்கள் குறித்து மட்டுமே வழங்கப்படுகின்றன. வீடியோக்களில் இருக்கும் தகவல்களும் , கட்டுரைகளும் தனிப்பட்ட நபர்களுக்கான நோயறிதல் குறித்தவை என்று கருதக்கூடாது. அதனால் இதன் வாயிலாக வெளியிடப்படும் சிகிச்சை முறைகளை சுயமாக செய்து கொள்ள கூடாது.

சென்னை மகளிர் மருத்துவமனை மற்றும் ஸ்கேன் பரிசோதனை தளத்தில் வெளியான கட்டுரைகள் மற்றும் வீடியோக்களின் மூலம் நோயறிதலையும், சிகிச்சையையும் சுயமாக செய்து கொள்ள கூடாது. மாறாக உங்கள் உடல் ஆரோக்கியம் குறித்து உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது சுகாதார நிபுணரின் ஆலோசனை செய்த பிறகு உரிய சிகிச்சை பெறுவது நல்லது.

சென்னை மகளிர் மருத்துவமனை மற்றும் ஸ்கேன் மையம் உருவாக்கும் ( இணையதளம் மற்றும் அச்சு) தகவல்கள் மருத்துவ ரீதியிலான பொதுவான கட்டுரைகள் மட்டுமே. எந்தவொரு தனி நபருக்கும் சிகிச்சையளிக்கும் வகையில் கட்டுரைகள் வெளியிடப்படவில்லை என்பதை உறுதி கூறுகிறோம். அதனால் தனிப்பட்ட முறையில் சுயமாக ஒருவர் சிகிச்சை கொள்வதற்கு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ நாங்கள் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது என்பதையும் இத்தருணத்தில் உறுதி அளிக்கிறோம்.

Rate this post

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here