கர்ப்ப காலத்தில் கருப்பை மேல்நோக்கி விரிவடையும், உடல் ஹார்மோன் மாற்றங்களுக்கு ஏற்றவாறு உண்டாகும் அறிகுறிகளில் இந்த மூச்சுத்திணறல் அறிகுறியும் பொதுவானது தான். எனினும் அரிதான சந்தரப்பங்களில் சுவாசிப்பதில் சிரமங்கள் நிமோனியா அல்லது இரத்தக்கட்டிகள் போன்ற தீவிர சிக்கலையும் இது குறிக்கலாம். கர்ப்ப காலத்தில் மூச்சுத்திணறல் (Shortness of Breath During Pregnancy) சாதாரணமானது மற்றும் அசாதாரணமானது குறித்து விரிவாக அறிந்து கொள்வோம்.

கர்ப்பிணிகள் சிலருக்கு படிக்கட்டுகளில் ஏறினால் கூட மூச்சு விடுவதில் சிரமத்தை எதிர்கொள்ளலாம். வேகமாக நடக்கும் போது மூச்சுத்திணறல் இருக்கலாம். கடினமான வேலைகள் செய்யும் போதும் இந்த மூச்சுத்திணறல் இருக்கலாம்.

2015 ஆம் ஆண்டு ஆய்வின்படி 60-70% நம்பகமான பெண்கள் கர்ப்ப காலத்தில் மூச்சுத்திணறலை அனுபவிக்கின்றனர். நுரையீரலில் கருப்பை மேல்நோக்கி தள்ளுவது மற்றும் ஹார்மோன் அதிகரிப்பு போன்றவை காரணங்களாக சொல்லலாம்.

பொதுவாக கர்ப்பகால மூச்சுத்திணறல் பாதிப்பில்லாதது இருப்பினும், சில சந்தர்ப்பங்களில் மிகவும் தீவிரமான கர்ப்ப சிக்கல்கள் சுவாசிப்பதில் சிரமத்தை உண்டு செய்யும். அப்போது மருத்துவ சிகிச்சை கூட தேவைப்படும்.

கர்ப்பிணிக்கு மூச்சுத்திணறல் வர என்ன காரணம்?

கர்ப்பிணிக்கு மூச்சுத்திணறல் ஏற்படுவது மிகவும் பொதுவானது. ஒரு மருத்துவரால் இதற்கான காரணத்தை துல்லியமாக அறிய முடியாது. ஏனெனில் கர்ப்பத்தின் அறிகுறியாக கூட கருதலாம். அதே நேரம் இந்த மூச்சுத்திணறல் எப்போது உண்டாகலாம் என்பது குறித்து சொல்லலாம்.

கர்ப்ப கால மூச்சுத்திணறல் (Shortness of Breath During Pregnancy) முதல் மூன்று மாதங்களில் தொடங்கும் என்பதால் கர்ப்பம் தொடர்பான உயிரியல் மற்றும் உடல் மாற்றங்கள் காரணமாக இருக்கலாம். இந்த காரணிகள் வளர்ந்து வரும் கருப்பையில் இருந்து இதயத்தின் தேவைகளில் ஏற்படும் மாற்றங்கள் வரை இருக்கலாம்.

சில கர்ப்பிணிகள் தங்கள் சுவாசத்தில் மாற்றங்களை உடனடியாக கவனிக்கலாம். மற்றவர்கள் இரண்டாவது மற்றும் மூன்றாவது ட்ரைமெஸ்டர் மாதங்களில் வேறுபாடுகளை காணலாம்.

கர்ப்ப காலத்தில் முதல் ட்ரைமெஸ்டர் மாதங்கள்

ஒரு கர்ப்பிணி பெண்ணில் சுவாச மாற்றங்களை ஏற்படுத்துவதற்கு ஒரு கரு மிகப்பெரியதாக இருக்க வேண்டியதில்லை. முதல் ட்ரைமெஸ்டர் மாதங்களில் இருந்து தோராயமாக 14 வது வாரம் வரை நீடிக்கும். ஏனெனில் கர்ப்பிணியின் ஆக்ஸிஜன் நுகர்வு அதிகரிக்க தொடங்குகிறது.

இதயம் மற்றும் நுரையீரலை வயிற்றில் இருந்து பிரிக்கும் தசைநார் திசுக்களின் உதரவிதானம் கர்ப்பத்தின் முதல் மூன்று மாதங்களில் 4 சென்டி மீட்டர் வரை உயரும்.

உதரவிதானத்தின் இயக்கம் நுரையீரல் காற்றை நிரப்ப உதவுகிறது. சிலர் எவ்வளவு ஆழமாக சுவாசிக்க முடியும் என்பதில் ஏற்படும் மாற்றங்களை அறியாமல் இருக்கலாம். சிலர் மட்டுமே முழு ஆழமான சுவாசத்தை விடுவதில் சிரமத்தை எதிர்கொள்ளலாம்.

பெரும்பாலும் உதரவிதானம் உண்டாகும் மாற்றங்களுடன் கர்ப்பிணிகள் பெரும்பாலும் ப்ரோஜெஸ்டெரோன் (Progesterone) மற்றும் ஈஸ்ட்ரோஜென் (Estrogen) ஹார்மோன்களின் அதிகரிப்பு காரணமாக வேகமாக சுவாசிக்கலாம். இவை இரண்டும் கருவின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கின்றன. புரோஜெஸ்ட்டிரோன் சுவாச தூண்டுதலாகும். இது நபரது சுவாசத்தை விரைவுபடுத்துகிறது.

கர்ப்பிணி பெண்ணின் உடலில் புரோஜெஸ்ட்டிரோன் அளவு கர்ப்பம் முழுவதும் அதிகரிக்கும். இதனால் வேகமாக சுவாசிப்பது மூச்சுத்திணறலை அதிகரிக்குமா என்று கேட்கலாம். ஆனால் வேகமான மூச்சுத்திணறல் சுவாச மாற்றங்களை சற்று உற்று கவனித்தால் அறியலாம்.

கர்ப்ப காலத்தில் இரண்டாவது ட்ரைமெஸ்டர்

கர்ப்பத்தின் இரண்டாவது ட்ரைமெஸ்டர் என்பது 4 முதல் 6 மாதங்கள் வரையான காலங்கள் ஆகும். இந்த மாதங்களில் குறிப்பிடத்தக்க மூச்சுத்திணறலை அனுபவிக்கலாம். இது சுமார் 28 வது வாரம் வரை நீடிக்கும். 1970 களில் நடத்தப்பட்ட ஓர் ஆய்வில் 62 ல் 31% பேர் 19 வது வாரத்தில் மூச்சுத்திணறலை உருவாக்கினர்.

வளர்ந்து வரும் கருப்பை பொதுவாக இரண்டாவது ட்ரைமெஸ்டர் மாதங்களில் மூச்சுத்திணறலுக்கு பங்களிக்கிறது. எனினும் இதயத்தின் செயல்பாட்டில் சில மாற்றங்கள் உண்டு செய்தாலும் மூச்சுத்திணறலை ஏற்படுத்தும்.

கர்ப்ப காலத்தில் ஒரு நபரின் உடலில் இரத்தத்தின் அளவு கணிசமாக அதிகரிக்கிறது. அப்போது உடல் நஞ்சுக்கொடிக்கு இரத்தம் அனுப்ப இதயம் கடினமாக பம்ப் செய்ய வேண்டும். அப்போது மூச்சுத்திணறல் உண்டாகலாம்.

இதயத்தை அதிகரித்த பணிச்சுமைகூட கர்ப்ப காலத்தில் மூச்சுத்திணறலை ஏற்படுத்தும்.

கர்ப்பத்தின் மூன்றாவது ட்ரைமெஸ்டர் என்பது 7 முதல் 9 மாதங்கள் ஆகும். 29 வது வாரத்தில் தொடங்கும் மூன்றாவது ட்ரைமெஸ்டர் மாதங்களில், வளரும் குழந்தையின் தலையின் பொறுத்து சுவாசம் எளிதாகவோ அல்லது கடினமாகவோ இருக்கலாம்.

குழந்தை இடுப்பிற்கு திரும்பிச் செல்லத் தொடங்கும் முன் குழந்தையின் தலை விலா எலும்பின் கீழ் இருப்பதை போலவும், உதரவிதானத்தில் அழுத்துவது போலவும் உணரலாம். இது சுவாசிப்பதை இன்னும் கடினமாக்கும். மூன்றாவது ட்ரைமெஸ்டர் காலத்தில் மூச்சுத்திணறல் இன்னும் அதிகரிக்கும்.

தேசிய மகளிர் சுகாதார வளமையத்தின்படி, இந்த வகையான மூச்சுத்திணறல் கர்ப்பிணிகளுக்கு 31 – 34 வாரங்களுக்கு இடையில் ஏற்படும். இந்த மூச்சுத்திணறல் தொடர்ந்து வறட்டு இருமலுடன் சேந்து வரலாம்.

கூடுதல் பல காரணங்கள்

ஒரு கர்ப்பிணி பெண் கடுமையான மூச்சுத்திணறலை எதிர்கொண்டால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.

கர்ப்பகால மாற்றங்கள் சில மூச்சுத்திணறலை ஏற்படுத்தும் அதே வேளையில் மருத்துவ நிலைமைகளும் பிரச்சனைக்கு பங்களிக்கலாம். அவை என்னென்ன என்பதையும் அறிந்துகொள்வோம்.

ஆஸ்துமா – கர்ப்பம் கொண்டிருந்த பெண்கள் ஆஸ்துமாவை முன்கூட்டியே கொண்டிருந்தால் அது ஆஸ்துமா அறிகுறிகளை மோசமாக்கலாம். ஆஸ்துமா உள்ளவர்கள் கர்ப்ப காலத்தில் இன்ஹேலர்கள் அல்லது மருந்துகள் போன்ற சிகிச்சை முறைகள் குறித்து முன் கூட்டியே மருத்துவரிடம் ஆலோசிக்க வேண்டும்.

பெரிபார்டம் கார்டியோமயோபதி (Peripartum cardiomyopathy)

இது கர்ப்பகாலத்தில் அல்லது பிரசவத்துக்கு பிறகு ஏற்படக்கூடிய ஒரு வகை இதய செயலிழப்பு ஆகும். கணுக்கால் வீக்கம், குறைந்த இரத்த அழுத்தம், சோர்வு மற்றும் இதயத்துடிப்பு ஆகியவை இதன் அறிகுறிகளாகும். பலர் ஆரம்பத்தில் தங்கள் அறிகுறிகளை கர்ப்பம் என்று கூறலாம். ஆனால் இது அவர்களது ஆரோக்கியத்தை தீவிரமாக பாதிக்கலாம். மற்றும் பெரும்பாலும் சிகிச்சை தேவைப்படுகிறது.

நுரையீரல் தக்கடையப்பு

நுரையீரலில் உள்ள தமனியில் இரத்த உறைவு சிக்கிக்கொண்டால் நுரையீரல் தக்கையடைப்பு உண்டாகிறது. உண்மையில் இந்த எம்போலிசம் சுவாசத்தை வியத்தகு முறையில் பாதிக்கும் மற்றும் இருமல், மார்புவலி மற்றும் மூச்சுத்திணறலை உண்டாக்கும்.

கர்ப்ப காலத்தில் மூச்சுத்திணறலை நிர்வகிப்பது எப்படி?

மூச்சுத்திணறல் உணர்வு சங்கடமாக இருக்கும். மேலும் இது உடல் செயல்பாடுகளை கட்டுப்படுத்தலாம். கர்ப்பகாலத்தில் மூச்சுத்திணறலுக்கான குறிப்பிட்ட சிகிச்சையை ஆதரிக்க போதுமான ஆராய்ச்சி இல்லை. எனினும் கர்ப்பிணிகள் சுவாசத்தை எளிதாக்க செய்ய வேண்டிய விஷயங்கள் என்னென்ன என்பதை பார்க்கலாம்.

நல்ல தோரணை

நல்ல தோரணையை பயிற்சி செய்வது கருப்பை உதரவிதானத்திலிருந்து முடிந்தவரை நகர்த்த உதவும். கர்ப்பகாலத்தில் பெல்ட்கள் நல்ல தோரணையை பயிற்சி செய்வதை எளிதாக்கும். நிமிர்ந்து தோள்பட்டையை பின் தள்ளியபடி வைத்திருப்பது நுரையீரலை விரித்து ஆக்ஸிஜன் தடையில்லாமல் உடல் முழுவதும் எடுத்து செல்ல உதவும்.

மேல் முதுகை உயர்த்தியபடி தூங்குவது

மேல் முதுகை தாங்கும் தலையணைகளுடன் தூங்குவதால் புவீஈர்ப்பு விசை கருப்பையின் கீழ் இழுத்து நுரையீரலுக்கு அதிக இடத்தை அளிக்கும். இதனால் சற்று இடது பக்கம் சாய்வதும் கருப்பையை நாடியிலிருந்து விலக்கி வைக்கவும் மேலும் உடலின் வழியாக ஆக்ஸிஜனேற்றப்பட்ட இரத்தத்தை நகர்த்தும் முக்கிய தமனி ஆகும்.

சுவாச நுட்பங்களை பயிற்சி செய்தல்

கர்ப்ப காலத்தில் பிரசவத்தில் பொதுவாக பயன்படுத்தப்படும் சுவாச நுட்பங்களை பயிற்சி செய்தல் அவசியம். கர்ப்பகாலத்தில் இந்த நுட்பங்களை பயிற்சி செய்வதன் மூலம் பிரசவக்காலத்தில் இதை பயன்படுத்தும். சுவாசம் செய்வது கடினமாக இருந்தால் ஓய்வு அவசியம். கர்ப்பத்தின் பிற்பகுதியில் சுவாசம் கடினமாக இருப்பவர்களுக்கு உடல் செயல்பாடுகளை செய்ய முடியாது.

கர்ப்பிணிகள் மூச்சுத்திணறல் எதிர்கொண்டால் அவர்கள் மருத்துவரின் தொடர் கண்காணிப்பில் பரிசோதனையில் இருக்க வேண்டும். மருத்துவரின் பரிந்துரையின் பெயரில் சிகிச்சை எடுத்துகொள்ள வேண்டும்.

கடுமையான சந்தர்ப்பங்களில் கூடுதல் ஆக்ஸிஜனை பெறுவது அடங்கும். மூச்சுத்திணறல் ஒரு நபரின் உடலில் கர்ப்பத்தின் தாக்கத்தின் விளைவால் உண்டானதா அல்லது வேறு அடிப்படை காரணம் உள்ளதா என்பதையும் இது சார்ந்துள்ளது.

மூச்சுத்திணறலை அதிகரிக்க செய்யும் ஒவ்வாமை அல்லது ஆஸ்துமா நோய் கொண்டுள்ள கர்ப்பிணிகள் மருத்துவரின் அறிவுரையோடு நாசி சலைன் ஸ்ப்ரேக்கள் அல்லது பரிந்துரைக்கப்பட்ட நாசி ஸ்டீர்யாடுகளை பயன்படுத்த வேண்டும்.

கர்ப்ப காலத்தில் மூச்சுத்திணறல் ஏதேனும் சிக்கல்களை உண்டு செய்யுமா?

உங்களுக்கு எப்போதாவது மூச்சுத்திணறல் இருந்தால் குறிப்பாக உங்கள் மூன்றாவது மூன்று மாதங்களில் குழந்தை மேல்நோக்கி அழுத்தும் போது அது கவலையாக எடுக்கவேண்டாம். ஆனால் நீங்கள் ஆஸ்துமா அல்லது காய்ச்சல் போன்ற சுவாச பிரச்சனை கொண்டிருந்தால் அது மோசமாக்கலாம்.

ஆஸ்துமா உள்ள பெண்களில் 45% கர்ப்பகாலத்தில் மோசமான அறிகுறிகளை அனுபவிக்கிறார்கள். மேலும் கடுமையான மூச்சுத்திணறல் இருந்தால் அது குழந்தைகளுக்கு தீங்கு விளைவிக்கும்.

காய்ச்சல் மற்றும் சுவாச நோய்களை கொண்ட கர்ப்பிணி பெண்கள் பெரும்பாலும் தீவிரமான அறிகுறிகளை கொண்டுள்ளனர் நிமோனியா போன்ற சிக்கல்களை உருவாக்குவதற்கான வாய்ப்புகள் அதிகம். அதனால் கர்பிணிகள் கர்ப்பகாலத்தில் காய்ச்சல் தடுப்பூசி பெறுவது முக்கியம்.

கர்ப்ப காலத்தில் இரத்தம் உறையும் விதத்தில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக நுரையீலுக்கு செல்லும் இரத்த உறைவு ஏற்படுவதற்கான அதிக ஆபத்தில் உள்ளீர்கள். இந்த நிலை அரிதானது ஆனால் மிகவும் தீவிரமானது.

கர்ப்பிணி மூச்சுத்திணறல் பிரச்சனைக்கு எப்போது மருத்துவரை அழைக்க வேண்டும்?

படிக்கட்டுகளில் ஏறுவது அல்லது கனமான ஒன்றை சுமந்து செல்வது போன்ற நேரங்களில் உங்களுக்கு இலேசான மூச்சுத்திணறல் இருந்தால், நீங்களே கவனித்து சில நிமிடங்கள் கழித்து ஓய்வெடுக்கும் போது அவை சரியாகிறதா என்பதை கவனிக்க வேண்டும். எனினும் உங்களுக்கு கடுமையான அறிகுறிகள் இருந்தால் நீங்கள் உடனடியாக மருத்துவரை அழைக்க வேண்டும்.

  • திடீர் அல்லது கடுமையான மூச்சுத்திணறல்
  • மோசமான ஆஸ்துமா
  • விரைவான துடிப்பு
  • விரைவான அல்லது ஒழுக்கற்ற இதயத்துடிப்பு
  • நீங்கள் மயக்கம் அடைய போகிறீர்கள் என்ற உணர்வு இருந்தால்
  • நீங்கள் சுவாசிக்கும் போது மார்பு வலி அல்லது வலி
  • வெளிறிய தன்மை
  • நீல நிற உதடுகள்
  • விரல்கள் அல்லது கால்விரல்கள் உங்களுக்கு போதுமான ஆக்ஸிஜன் கிடைக்கவில்லை தொடர் இருமல், காய்ச்சல் அல்லது சளியுடன் கூடிய இருமல்.

மூச்சுத்திணறல் இல்லாவிட்டாலும் இது போன்ற அறிகுறிகளுக்கு உடனடி கவனம் தேவை.

பிரசவத்துக்கு பிறகு மூச்சுத்திணறல்

பிரசவத்துக்கு பிறகு மூச்சுத்திணறல் உண்டாகுமா? அல்லது சரியாகிவிடுமா, கர்ப்ப காலத்தில் அனுபவிக்காத மூச்சுத்திணறல் ஒருவருக்கு பிரசவத்துக்கு பிறகு ஏற்பட்டால் அது இதய கோளாறு குறித்த அறிகுறிகளாக இருக்கும். அதனால் பிரசவத்துக்கு பிறகு மூச்சுத்திணறல் இருந்தால் நீங்கள் மருத்துவரை அணுகுவது நல்லது.

Follow @ Google News : கூகுள் செய்திகள் பக்கத்தில் சென்னை மகளிர் மருத்துவமனை வலைப்பதிவுகள்!

மூச்சுப்பயிற்சியை செய்வதன் மூலம் நீங்கள் கர்ப்ப காலத்தில் அதை எளிதாக நிர்வகிக்கலாம். காலை மற்றும் மாலையில் மூச்சுப்பயிற்சி ஆழமாக செய்வதன் மூலம் நுரையீரலில் போதுமான ஆக்ஸிஜன் நிரப்பி நாள் முழுவதும் உடலுக்கு வேண்டிய ஆக்சிஜனை தடையில்லாமல் கொடுக்கும். இதனால் மூச்சுத்திணறல் பெருமளவு கட்டுக்குள் வைக்கலாம். குறிப்பாக காலை நேரத்தில் செய்து வரலாம். இவை தவிர்த்து உணவு பழக்கத்தையும் ஊட்டச்சத்து நிபுணரின் பரிந்துரையோடு எடுத்துகொள்வது நல்லது.

கர்ப்பிணிகள் சரியான நேரத்தில் மருத்துவ பரிசோதனை, சிகிச்சை முறை, உணவு, அன்றாட பயிற்சி போன்றவற்றில் கவனம் செலுத்தினால் ஆரோக்கியமாக இருப்பார்கள்.

5/5 - (41 votes)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here