மாதவிடாய் காலம் என்பதே பெண்களுக்கு ஒருவித அசெளகரியமான மனநிலையையே உண்டாக்கும். பொதுவாக மாதவிடாய் கோளாறுகள் குறித்த விஷயத்தில் ஒழுங்கற்ற மாதவிடாய் குறித்த விழிப்புணர்வு பல பெண்களிடம் உண்டு. ஆனால் மாதவிடய் முன் நோய்க்குறி என்னும் பி.எம்.எஸ் (Premenstrual Syndrome) பற்றி பெரும்பாலான பெண்கள் விழிப்புணர்வு கொண்டிருக்கவில்லை என்பதே உண்மை.

ஆய்வுகளின் படி மாதவிடாய் காலங்களுக்கு முந்தைய நாட்களில், பெண்களின் மனநிலையில் சில மாற்றங்கள் உண்டாகலாம். இந்த நாட்களை கடப்பது பெண்ணுக்கு சவாலனதாகவே இருக்கும். இந்த காலகட்டத்தில் தான் மனச்சோர்வு மற்றும் பதற்றத்தை கூடுதலாகவே உணர்வார்கள். இதுதான் மருத்துவ மொழியில் பி.எம்.டி.டி என்று சொல்லப்படுகிறது.

பி.எம்.டி.டி என்னும் மாதவிடாய் முன் நோய்க்குறி என்றால் என்ன?

ஒவ்வொரு பெண்ணுக்கும் மாதவிடாய் வருவதற்கு 2 முதல் 14 நாட்களுக்கு முன் உடல் அளவிலும் மன அளவிலும் அசெளகரியமான மாற்றங்கள் ஏற்படுகின்றன. இது பொதுவானது. பாதிப்பை உண்டாக்கும் அளவுக்கு அதிகமாகவும் இராது. அதே போன்று மாதவிடாய் தொடங்கியதும் இந்த அசெளகரியங்கள் மறைந்துவிடுகின்றன. பெரும்பாலும் இந்த மாற்றங்களை பெண்கள் உணர்வதில்லை. ஆனால் 70% பெண்களில் இந்த காலம் அன்றாட செயல்களில் பாதிப்பை ஏற்படுத்துகின்றன ஒவ்வொரு மாதமும் நடைபெறும் இந்த மாற்றங்கள் சில பெண்களின் வாழ்வையே முடங்க செய்யும் அளவுக்கு தீவிர பாதிப்பை உண்டாக்குகின்றன.

மாதவிடாய் முன்நோய்க்குறிக்கான அறிகுறிகள்

மாதவிடாய் முன் நோய்க்குறிக்கான சாத்தியமான அறிகுறிகள் அதிகமாகவே சொல்லலாம். எனினும் பெண்கள் இதில் சில அறிகுறிகளை மட்டுமே அனுபவிக்கிறார்கள்.

மனதளவில் உண்டாகும் அறிகுறிகள்

 • உணர்ச்சி மற்றும் ஏற்றத்தாழ்வான மனநிலை
 • பதற்றமான மனநிலை
 • மனச்சோர்வு
 • அழுகை
 • எரிச்சல் அல்லது கோபமான மனநிலை
 • பசி மாற்றங்கள்
 • தூங்குவதில் சிக்கல் அல்லது தூக்கமின்மை
 • லிபிடோவில் மாற்றமான நிலை

உடலில் உண்டாகும் அறிகுறிகள்

 • மூட்டு அல்லது தசை வலி
 • தலைவலி
 • சோர்வு
 • உடல் எடை அதிகரிப்பது
 • வயிறு வீக்கம்
 • மார்பகம் மென்மையாக மாறுவது
 • முகப்பரு
 • மலச்சிக்கல் அல்லது வயிற்றுப்போக்கு

சிலருக்கு உடல் வலி மற்றும் மனச்சோர்வு இருந்து அந்த அறிகுறியின் தீவிரத்தை பொருட்படுத்தாமல் இருந்தால் அது நாளடைவில் அன்றாட வாழ்க்கையை பாதிக்கும் அளவு கடுமையாக இருக்கும். பெரும்பாலான பெண்களுக்கு மாதவிடாய் காலம் தொடங்கிய நான்கு நாட்களுக்குள் அறிகுறிகள் மறைந்துவிடும்.

அதே நேரம் மாதவிடாய் முன் நோய்க்குறி உள்ள பெண்களில் குறைந்த எண்ணிக்கையில் ஒவ்வொரு மாதமும் அறிகுறிகள் முடக்குகிறது. பி.எம்.எஸ் -ன் இந்த வடிவம் மாதவிடாய் டிஸ்ஃபோரிக் கோளாறு premenstrual dysphoric disorder (PMDD) என்று அழைக்கப்படுகிறது.

தீவிரமான அறிகுறிகள்

 • மனச்சோர்வு – ( அன்றாட விஷயங்களிலும் நாட்டம் இல்லாமல் இருப்பது)
 • மனநிலை மாற்றங்கள் ( அன்றாட விஷயங்களில் முடிவெடுப்பதில் தடுமாற்றம்)
 • கோபம் – (எப்போதும் கோபமான மனநிலையில் இருப்பது)
 • பதட்டம் (சிறிய விஷயங்களிலும் அச்சமும் பதட்டமும் இருக்கலாம்)

பி.எம்.டி.டி என்னும் மாதவிடாய் முன்நோய்க்குறிக்கு என்ன காரணம் என்பதை துல்லியமாக அறியமுடியவில்லை. பெண்களின் மாதவிடாய் நோய்க்குறி பல காரணங்களால் வரலாம்.

ஹார்மோனின் சுழற்சி மாற்றங்கள்

 1. மாதவிடாய் முன் நோய்க்குறியின் அறிகுறிகள் ஹார்மோன் ஏற்ற இறக்கங்களுடன் மாறி கர்ப்பம் மற்றும் மாதவிடாய் நிறுத்தத்துடன் மறைந்துவிடும்.
 2. மூளையில் வேதியியல் மாற்றங்கள்
 3. மனநிலைகளில் முக்கிய பங்கு வகிப்பதாக கருதப்படும் மூளை இரசாயன (நரம்பியக்கடத்தி) ஏற்ற இறக்கங்கள் இந்த பி.எம்.எஸ் அறிகுறிகளை தூண்டும். செரடோனின் போதுமான அளவு சுரக்காத நிலையில் மாதவிடாய் முன் மனச்சோர்வு, சோர்வு, உணவு, பசி மற்றும் தூக்க பிரச்சனைகள் ஆகியவற்றுக்கு பங்களிக்க கூடும்.
 4. மனச்சோர்வு, கடுமையான மனசோர்வு மாதவிடாய் முன்நோய்க்குறி உள்ள சில பெண்களுக்கு கண்டறியப்படாத மனச்சோர்வு உள்ளது.

மாதவிடாய் முன்நோய்க்குறியை கண்டறிவது எப்படி?

மாதவிடாய் முன் நோய்க்குறியை நேர்மறையாக கண்டறிய தனித்துவமான உடல் கண்டுபிடிப்புகள் அல்லது ஆய்வக சோதனைகள் எதுவும் இல்லை. அறிகுறிகள் மாதவிடாய் முன்நோய்க்குறி அறிந்தால் மருத்துவரிடம் பேசலாம்.

மாதவிடாய் கால அறிகுறிகள் குறித்து தெளிவாக காலண்டரில் அல்லது நாட்குறிப்பில் குறைந்தது இரண்டு மாதவிடாய் சுழற்சிகளுக்கு குறித்து அதை மருத்துவரிடம் தெரிவியுங்கள். அதிலும் உங்கள் மாதவிடாய் காலம் தொடங்கி முடிவடையும் நாட்களையும் குறித்து வையுங்கள்.

முக்கிய அறிகுறிகளான சோர்வு, தைராய்டு கோளாறுகள், மனச்சோர்வு, பதட்டம் போன்ற மனநிலைக்கோளாறுகள் உங்கள் மாதவிடாய் காலத்துக்கு முன்பு நீங்கள் எதிர்கொண்டால் இது குறித்து மருத்துவரிடம் ஆலோசனை செய்யுங்கள். இதன் மூலம் தெளிவான நோயறிதலை கண்டறிய உதவும். கூடுதலாக மருத்துவர் தைராய்டு செயல்பாட்டு சோதனை ,மனநிலை பரிசோதனை போன்றவற்றை செய்வதற்கு மருத்துவர் பரிந்துரைப்பார்.

Follow @ Google News : கூகுள் செய்திகள் பக்கத்தில் சென்னை மகளிர் மருத்துவமனை வலைப்பதிவுகள்!

மாதவிடாய் முன்நோய்க்குறி சிகிச்சை முறைகள்

மாதவிடாய் முன்நோய்க்குறி கொண்டிருந்தால் அந்த அறிகுறிகளை குறைக்க வாழ்க்கை முறை மாற்றங்களே போதுமானது. அதோடு உங்கள் அறிகுறி தீவிரத்தை பொறுத்து மாதவிடாய் முன்நோய்க்குறிக்கு ஒன்றுக்கு மேற்பட்ட மருந்துகளையும் பரிந்துரைப்பார். அறிகுறிகளுக்கு சிகிச்சை அளிப்பதில் பெண்களுக்கிடையே வேறுபடுகிறது என்பதையும் உணர வேண்டும். மாதவிடாய் முன்நோய்க்குறி அறிகுறிகள் குறைய உதவும் வீட்டு வைத்தியம்:

 1. உணவு முறையை திட்டமிடுங்கள்
 2. வயிறு வீக்கம் பிரச்சனையை தவிர்க்க அடிக்கடி உணவை சிறிய அளவு பிரித்து உண்ணுங்கள்.
 3. வீக்கம் மற்றும் திரவ தக்கவைப்பை குறைக்க உப்பு மற்றும் உப்பு நிறைந்த உணவுகளை கட்டுப்படுத்துங்கள்.
 4. பழங்கள், காய்கறிகள் மற்றும் முழு தானியங்கள் போன்ற சிக்கலான கார்போஹைட்ரேட்டுகள் அதிகம் உள்ள உணவுகளை தேர்ந்தெடுங்கள்.
 5. பால் பொருள்கள் சாப்பிடாதவர்கள் எனில் மருத்துவர் அறிவுரையோடு கால்சியம் சப்ளிமெண்ட் எடுத்துகொள்ளலாம்.
 6. வழக்கமான உடற்பயிற்சி செய்வது அவசியம். (30 நிமிடங்கள் வேகமான நடைபயிற்சி, சைக்கிள் ஓட்டலாம். நீச்சல் அல்லது ஏரோபிக்ஸ் பயிற்சிகளில் ஈடுபடலாம். தினசரி உடற்பயிற்சி ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்தும். சோர்வு போன்ற அறிகுறிகளை குறைக்க உதவும்)
 7. மன அழுத்தம் குறைக்கும் முயற்சியில் ஈடுபடுங்கள் (மன அழுத்தம் குறைந்தாலே அதிக தூக்கம் கிடைக்கும்.
 8. ஆழமான சுவாச பயிற்சிகள் (தலைவலி, பதட்டம் அல்லது தூக்கத்தில் சிக்கல் போன்றவற்றை குறைக்க உதவும்)

வீட்டு வைத்தியம் தொடர்ந்து அறிகுறிகளையும் கவனித்து வையுங்கள். இந்த வாழ்க்கை முறை அறிகுறிகளை குறைக்க உதவும்.

மாதவிடாய் முன்நோய்க்குறியின் அறிகுறிகளை போக்க வைட்டமின், கால்சியம், மெக்னீசியம், வைட்டமின் ஈ மற்றும் வைட்டமின் பி-6 அனைத்தும் அறிகுறிகளை குறைக்க செய்யும். ஆனால் இது குறித்து இன்னும் ஆய்வுகள் தேவைப்படுகிறது. அதே போன்று மாதவிடாய் முன்நோய்க்குறி அறிகுறிகளுக்கு மூலிகைகள் உதவுமா என்பது குறித்தும் ஆய்வுகள் நடத்தப்பட்டுள்ளன. நீங்கள் மூலிகை மருந்துகளை எடுத்துகொண்டால் இது குறித்து மருத்துவரை ஆலோசித்த பிறகே எடுத்துகொள்ள வேண்டும்.

மேலும் மாதவிடாய் பற்றிய தகவல்கள்:

முதல் மாதவிடாய் சுழற்சி பற்றி அறிந்து கொள்ளுங்கள்

அதிக ரத்தபோக்கு என்றால் என்ன?

மாதவிடாய் நாட்களில் அதிக ரத்தப்போக்கு கண்டறிவது எப்படி?

5/5 - (156 votes)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here