ஆரோக்கியம் என்பது உடலை மேம்படுத்தும் விஷயங்கள் மட்டும் அல்ல அது மனம், உடல் மற்றும் பாலியல் ஆரோக்கியத்தையும் சேர்ந்தது. கர்ப்பிணிகள் மருத்துவரிடம் தனக்கு ஏற்படும் அனைத்து சந்தேகங்களையும் கேட்டு தெரிந்து கொள்வது அவசியம். பாலியல் மற்றும் இனப்பெருக்க ஆரோக்கியத்தின் நல்வாழ்வு மேம்பட மகளிர் மருத்துவ நிபுணரை சந்தித்து ஆலோசனை பெறுவது நல்லது. ஏனெனில் பெரும்பாலான பெண்கள் தங்கள் அந்தரங்கம் குறித்த விஷயங்களை மருத்துவர்களிடம் கூட நேரடியாக சொல்ல தயங்குகிறார்கள்.

இதனால் பிரச்சனைகள் தீவிரமாகி பெரிய அளவில் உருவாகும் போது சிகிச்சை அளிப்பதும் சிக்கலாகிவிடுகிறது. பாலியல் குறித்த விஷயங்களை பேசுவதோ அல்லது சங்கடப்படுவதோ கூடாது. இது வெட்கப்பட வேண்டிய அல்லது பயப்பட வேண்டிய விஷயமல்ல என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.

குறிப்பாக பெண்கள் கருத்தரிக்க முயற்சிக்கும் போது பாலியல் குறித்த பிரச்சனைகள், இனப்பெருக்க உறுப்பு பிரச்சனைகளை மருத்துவரிம் மறைக்க கூடாது. கருத்தரிப்பதற்கு முன்பும் கருத்தரித்த பிறகும் ஆரோக்கியமான குழந்தையை பெறுவதற்கு நீங்கள் விரும்பினால் இந்த பிரச்சனைகளை நீங்கள் மருத்துவரிடம் மறைக்க கூடாது. அப்படி கண்டிப்பாக பகிர்ந்துகொள்ள வேண்டிய விஷயங்கள் என்ன என்பதை பார்க்கலாம்.

மேலும் தெரிந்து கொள்ள: கரு தங்க என்ன செய்ய வேண்டும்? என்ன செய்ய கூடாது?

மாதவிடாய் கால அதிக வயிற்று வலி

மாதவிடாய் சுழற்சியில் உண்டாகும் வலி என்பது பொதுவானது. மாதவிடாய் அதிக வயிற்று வலி, மாதவிடாயின் போது பிடிப்புகள், மார்பக வலி மற்றும் தலைவலி உண்டாகலாம். சில பெண்களுக்கு மிதமானது முதல் தீவிரமானது வரை இந்த வலி இருக்கும் சிலருக்கு தாங்க முடியாத அளவுக்கு இருக்கலாம். காலப்போக்கில் ஒவ்வொரு மாதமும் வேதனையாக மோசமானதாக இருக்கும் போது உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். ஏனெனில் மாதவிடாய் கால தீவிர வலி என்பது எண்டோமெட்ரியோசிஸ் (Endometriosis) அல்லது கர்ப்பப்பைக்குள் ஃபைப்ராய்டு பிரச்சனை ஆகியவற்றுக்கான அறிகுறிகளாக இருக்கலாம். எல்லோருக்கும் பொதுவானதுதான் ஆனால் தாங்க முடியாத வலி அதிகரிக்கும் போது மருத்துவரை அணுகுவது பாதுகாப்பானது.

உடலுறவின் போது வலி அல்லது அசெளகரியம்

தாம்பத்தியம் மேற்கொள்ளும் போது உடலுறவில் தீவிரமாக வலி இருந்தால் இது இயல்புதான் என்று நினைக்காமல் மருத்துவரிடம் ஆலோசியுங்கள். ஏனெனில் பிறப்பு உறுப்பில் வறட்சி தன்மை இருந்தால் உடலுறவின் போது அசெளகரியம் உண்டாக்குவதோடு வலியையும் ஏற்படுத்தும். இதற்கு ஈஸ்ட்ரோஜன் குறைபாடும் காரணமாக இருக்கலாம். இந்த நிலையில் லூப்ரிகண்டுகள் பயன்படுத்தினாலும் அவை பெண் உறுப்பு வறட்சியை போக்காது. அதனால் பெண்களுக்கு உடலுறவின் போது பிறப்புறுப்பு வறட்சியாகவே இருந்தால் அல்லது உறவுக்கு பின்பு பெண் உறுப்பில் இரத்தக்கசிவு இருந்தால் மகப்பேறு மருத்துவரின் ஆலோசனை அவசியம்.

பெண் உறுப்பில் வெள்ளைப்படுதல் பிரச்சனை

பெண்களின் பிறப்புறுப்பில் கசியும் வெள்ளைப்படுதல் பெண் உறுப்பை பாதுகாக்கவே. ஒவ்வொரு மாதவிடாய் சுழற்சியின் போதும் முன்பு அல்லது பின்பு இந்த வெள்ளைப்படுதல் இருக்கும். இது எல்லாருக்குமே பொதுவானது. இது வெள்ளை நிறத்தில் சளி போன்று இருக்கும். துர்நாற்றம் இருக்காது. ஆனால் சிலருக்கு வெள்ளைப்படுதல் அதிகரிப்பதோடு அவை நிறத்திலும் மஞ்சள் பச்சை என்று இருந்தால் அது உடனடியாக கவனிக்க வேண்டியதே. உடனடி சிகிச்சை தேவையாக இருக்கலாம்.

பெண் உறுப்பு பகுதியில் கட்டி அல்லது வீக்கம்

பெண்களின் பிறப்புறுப்பு பகுதியின் உட்பகுதி வல்வா (vulva) என்று அழைக்கப்படும். இந்த இடத்தில் வரும் புடைப்புகள் மற்றும் வளர்ச்சியை கண்டறிந்தால் நீங்கள் தாமதிக்காமல் மகப்பேறு மருத்துவரை அணுக வேண்டும். இது ஹெர்பேஸ் அல்லது மருக்கள் போன்ற பாலியல் ரீதியாக பரவும் நோய்க்களின் அறிகுறியாக இருக்கலாம். அதனால் உங்கள் மகப்பேறு மருத்துவரிடம் உங்கள் பாலியல் வரலாறு குறித்து வெளிப்படையாக இருப்பது அவசியம். குறிப்பாக ஒன்றுக்கு மேற்பட்டவர்களுடன் உறவு கொண்டிருந்தால் அதை கண்டிப்பாக தெரிவிக்க வேண்டும்.

Follow @ Google News : கூகுள் செய்திகள் பக்கத்தில் சென்னை மகளிர் மருத்துவமனை வலைப்பதிவுகள்!

சிறுநீர் அல்லது மலம் கசிவு

சிறுநீர் அல்லது மலம் அடங்காமை அனுபவிக்கும் பெண்கள் தங்கள் யோனி பிரச்சனையை அலட்சியம் செய்யாமல் மருத்துவரை பார்க்க வேண்டும். இத்தகைய அனுபவங்கள் கர்ப்ப கால மன அழுத்தம் உண்டாக்கலாம். இது வாழ்க்கை தரத்தை மோசமாக்கலாம். குறிப்பாக கருத்தரிப்புக்கு பிறகு குழந்தை பிறந்த பிறகு இது மோசமான நிலையை உண்டாக்கலாம். அடங்காமையின் தன்மையை பொறுத்து மருத்துவ சிகிச்சை இருக்கலாம். தேவையெனில் அவர் இடுப்பு தளக்கோளாறு நிபுணரிடம் பரிர்ந்துரைக்கலாம்.

மேலும் தெரிந்து கொள்ள: சீக்கிரம் கர்ப்பம் அடைவது எப்படி?

அறிகுறிகளை அலட்சியம் செய்யாமல் மருத்துவரை அணுகுவதன் மூலம் நோய் வரும் முன் தடுக்கலாம்.

5/5 - (1 vote)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here