எடை குறைவாக பிறக்கும் குழந்தை: காரணங்களும் தவிர்க்கும் வழிமுறைகளும்!

308
Low Birth Weight Baby

Contents | உள்ளடக்கம்

கர்ப்பிணிக்கு 37 வாரங்களுக்கு முன் பிறக்கும் குழந்தையானது முழுமையான குழந்தை வளர்ச்சியை விட குறைவான அல்லது எடை குறைவாக பிறக்கும் குழந்தை (Low Birth Weight Baby) என்று அழைக்கப்படுகிறது.

இந்த குழந்தை கருவில் வளராததால் சராசரியை விட குறைந்த எடையில் பிறக்கிறது. எதிர்காலத்திலும் பல உடல்நல பிரச்சனைகளை எதிர்கொள்கிறது. இந்த குறைந்த எடை பிறப்பு உண்டாக என்ன காரணங்கள் எப்படி கண்டறிவது, இதை தடுக்க முடியுமா என்பது பற்றி இப்போது பார்க்கலாம்.

எடை குறைவாக பிறக்கும் குழந்தை (Low Birth Weight Baby) என்றால் என்ன?

குறைந்த பிறப்பு எடை என்பது 5 பவுண்டுகள், 8 அவுன்ஸ் எடையில் குழந்தை பிறக்கும் போது குறைந்த எடை கொண்ட குழந்தைகள் என்று அழைக்கப்படுகிறது. குறைந்த எடை கொண்ட குழந்தைகள் (Low Birth Weight Baby) சிறியதாக இருந்தாலும் ஆரோக்கியமாக இருப்பார்கள். ஆனால் பிறக்கும் போது எடை குறைவாக இருப்பது சில குழந்தைகளுக்கு கடுமையான உடல்நல பிரச்சனைகளை உண்டு செய்யலாம்.

இந்த குழந்தைக்கு உணவு உண்பதிலும் எடை அதிகரிப்பதிலும் தொற்று நோய் எதிர்த்துபோராடுவதிலும் சிக்கல் இருக்கலாம். நீண்ட கால உடல்நல பிரச்சனைகளையும் உண்டு செய்யலாம். வழக்கத்தை விட இவர்களுக்கு கூடுதல் கவனிப்பும் பராமரிப்பும் தேவைப்படலாம்.

ஏன் குறைந்த எடை கொண்ட குழந்தை பிறக்கிறது. அதற்கான காரணங்கள் என்ன என்பதை பார்க்க்கலாம்.

சில விஷயங்கள் குறைவான எடை கொண்ட குழந்தை பிறக்கும் வாய்ப்பை மற்றவர்களை விட அதிகமாக செய்யலாம். இவை ஆபத்து காரணிகள் என்று அழைக்கப்படுகின்றன. ஆபத்து காரணிகள் இருந்தாலே நீங்கள் குறைந்த எடை கொண்ட குழந்தையை பெறுவீர்கள் என்று அர்த்தம் அல்ல. ஆனால் இது குறைந்த எடை கொண்ட குழந்தைக்கான வாய்ப்பை அதிகரிக்கலாம்.

உங்கள் ஆபத்தை குறைக்க என்ன செய்யலாம் என்பதை பற்றி உங்கள் கரு மருத்துவ நிபுணர் ஆலோசிப்பதன் மூலம் இதை தடுக்க முடியும். முன்னதாக குறைந்த எடை பிறப்புக்கு என்ன காரணம் என்பதை அறியலாம்.

குறைப்பிரசவம்:

இது கர்ப்பத்தின் 37 வாரங்களுக்கு முன்பே மிக விரைவில் தொடங்கும் பிரசவம் குறைப்பிரசவம் ஆகும்..

நாள்பட்ட சுகாதார நிலைமைகள்:

இவை நீண்ட காலத்துக்கு நீடிக்கும் அல்லது நீண்ட காலத்துக்கு பிறகு மீண்டும் நிகழும் சுகாதார நிலைகள். நாள்பட்ட சுகாதார நிலைமைகள் என்பது உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு, இதயம், நுரையீரல் மற்றும் சிறுநீரக பிரச்சனைகள் ஆகியவை குறைந்த பிறப்பு எடையுடன் குழந்தை பெற வழிவகுக்கும் சுகாதார நிலைமைகள்.

உங்களுக்கு இந்த குறைபாடு இருந்தால் தாமதிக்காமல் மருத்துவரை அணுகி சிகிச்சை பெறுவது நல்லது. மருத்துவரின் அறிவுரையின்றி வேறு எந்த மருந்தும் எடுத்துகொள்வது குறித்து மருத்துவரிடம் ஆலோசிப்பது நல்லது.

நோய்த்தொற்றுகள்:

சில நோய்த்தொற்றுகள் குறிப்பாக கர்ப்ப காலத்தில் உட்புற இனப்பெருக்க உறுப்புகளின் தொற்றுகள், கருப்பையில் குழந்தையின் வளர்ச்சியை மெதுவாக்கும். சைட்டோமெலகோ வைரஸ், ரூபெல்லா, சிக்கன் பாகஸ், டோக்ஸோபிளாஸ்மோசிஸ் (Toxoplasmosis) மற்றும் சில பாலியல் பரவும் நோய்த்தொற்றுகள் இதில் அடங்கும்.

நஞ்சுக்கொடி சிக்கல்:

நஞ்சுக்கொடி கருப்பையில் வளர்கிறது மற்றும் தொப்புள் கொடி வழியாக குழந்தைக்கு உணவு மற்றும் ஆக்ஸிஜனை வழங்குகிறது. நஞ்சுக்கொடியில் உள்ள சில பிரச்சனைகள் குழந்தைக்கு ஆக்ஸிஜன் மற்றும் ஊட்டச்சத்துக்களின் ஓட்டத்தை குறைக்கலாம். இதனால் குழந்தையின் வளர்ச்சியை கட்டுப்படுத்தி பிறக்கும் குழந்தையின் எடையை குறைக்கலாம்.

கர்ப்ப காலத்தில் போதுமான எடை அதிகரிப்பதில்லை:

கர்ப்ப காலத்தில் போதிய எடை அதிகரிக்காத கர்ப்பிணிகளுக்கு, சரியான அளவு எடை அதிகரிப்பவர்களை விட குறைந்த எடையில் குழந்தை பிறக்கும் வாய்ப்பு அதிகம். உங்களுக்கு உணவு உண்ணும் கோளாறு பிரச்சனை ஏதேனும் இருந்தால் மருத்துவரிடம் முன் கூட்டியே ஆலோசியுங்கள்.

கர்ப்பம் முழுவதும் குழந்தையையும் உங்களையும் கவனித்து பரிசோதிப்பார். குறைப்பிரசவத்தில் பிறந்த குழந்தை அல்லது கடந்த காலத்தில் குறைந்த எடையுடன் பிறந்த குழந்தையாக இருந்தால் அடுத்து பிறக்கும் குழந்தை எடை குறைவாக இருக்கும். முன்கூட்டியே மருத்துவரிம் ஆலோசனை பெறுவதன் மூலம் இதை தடுக்க முயற்சிக்கலாம்.

ஒன்றுக்கு மேற்பட்ட கர்ப்பம்:

கர்ப்பமாக இருக்கும் போது இரட்டையர்கள், அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட கர்ப்பம் இப்படி குழந்தைகள் வயிற்றில் வளர்ந்தால் சுருக்கமாக பல பிறப்பு குழந்தைகளில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் குறைந்த எடையுடன் பிறக்க வாய்ப்புண்டு.

கர்ப்பிணிகள் மோசமான பழக்கம்:

புகைப்பிடித்தல், மது அருந்துதல், தேவையற்ற மருந்துகளின் பயன்பாடுகள், பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளை அதிகமாக பயன்படுத்துதல், புகைப்பிடிக்காதவர்களை விட பிறக்கும் போதே எடை குறைவாக இருக்கும் குழந்தை (Low Birth Weight Baby) பிறக்கும் வாய்ப்பு இவர்களுக்கு 3 மடங்கு அதிகம்.

காற்று மாசுபாடு, ஈயத்தின் வெளிப்பாடு, சுகாதார ஏற்றத்தாழ்வுகளின் விளைவுகளில் இருப்பது. உடல் பாலியல் மற்றும் உணர்ச்சி ரீதியான துஷ்பிரயோகம் போன்றவையும் கூட இதில் அடங்கும். பதின்ம வயதினராக இருப்பது அதாவது 15 வயதுக்கு குறைவான அல்லது 35 வயதுக்கு மேற்பட்டவராக இருப்பது மற்ற பெற்றோரை விட குறைந்த எடை கொண்ட குழந்தையை பெற்றெடுப்பதற்கான வாய்ப்பை அதிகமாக்குகிறது.

எடை குறைவாக பிறக்கும் குழந்தைக்கு உண்டாகும் பிரச்சனைகள் என்னென்ன?

எடை குறைவாக இருக்கும் குழந்தைகள் சாதராண குழந்தைகளை விட உடல்நல பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். சில குழந்தைகளுக்கு எடை குறைவால் தீவிர கவனிப்பும் தேவைப்படுகிறது.

சுவாசக் கோளாறு நோய்க்குறி (Respiratory Distress Syndrome)

சுவாச பிரச்சனைகள் உடைய குழந்தைகளுக்கு சர்பாக்டண்ட் எனும் புரதம் இல்லை. இது குழந்தையின் நுரையீரலில் உள்ள சிறிய காற்றுப்பைகள் சரிந்துவிடாமல் தடுக்கிறது. இந்த சிகிச்சை வழியாக குழந்தை எளிதாக சுவாசிக்க உதவுகிறது.இந்த குழந்தைக்கு சுவாசிக்க ஆக்ஸிஜன் மற்றும் பிற சுவாச உதவி தேவைப்படலாம்.

மூளையில் இரத்தப்போக்கு

பெரும்பாலான மூளை இரத்தக்கசிவுகள் இலேசானவை. இது தானாகவே சரியாகிவிடும். மிகவும் கடுமையான இரத்தப்போக்கு மூளையில் அழுத்தத்தை ஏற்படுத்தும். இது மூளையில் திரவத்தை உருவாக்கலாம். இதனால் மூளை பாதிப்பு ஏற்படும். சில சந்தர்ப்பங்களில் அறுவை சிகிச்சை மூலம் குழந்தையின் மூளை திரவத்தை வெளியேற்ற செய்யலாம்.

குழந்தைக்கு இதய கோளாறு

ஆர்டெரியோசஸ் (Arteriosus) என்பது இதயத்தில் இருந்து செல்லும் 2 பெரிய இரத்த நாளங்களுக்கு இடையே உள்ள திறப்பு சரியாக மூடப்படாமல் இருக்கும் நிலை. இதனால் நுரையீரலுக்கு கூடுதல் ரத்தம் செல்லும். பல குழந்தைகளில் பிறந்த சில நாட்களுக்குள் திறப்பு தானாகவே மூடப்படும். சில குழந்தைகளுக்கு திறப்பை மூட மருந்து அல்லது அறுவை சிகிச்சை தேவை.

குழந்தைக்கு குடல் பிரச்சனை

குழந்தையின் குடலில் உள்ள பிரச்சனை என்று இது. குடல்கள் செரிமான அமைப்பின் ஒரு பகுதியாக இருக்கும். நீண்ட குழாய்கள் செரிமான அமைப்பு உடலை உணவை உடைக்க செய்கிறது. இந்த நெக்ரோடைசிங் எண்டோரோகோலிடிஸ் (Necrotizing enterocolitis) ஒரு குழந்தைக்கு ஆபத்தானது இதனால் உணவளிப்பதில் சிக்கலாக இருக்கும்.

இது குழந்தையின் வயிற்றில் வீக்கம் மற்றும் பிற சிக்கல்களை ஏற்படுத்தும். இந்த நிலை உள்ள குழந்தைகளுக்கு நுண்ணுயிர் எதிர்ப்பிகளுடன் சிக்ச்சை அளிக்கப்படுகிறது நரம்பு வழியாக அல்லது ஐவி குழாய் மூலம் குழந்தைக்கு உணவளிக்கப்படுகிறது. வெகு அரிதாக சில குழந்தைக்கு சேதமடைந்த பகுதிகளை அறுவை சிகிச்சை தேவைப்படுகிறது.

முன்கூட்டிய ரெட்டினோபதி (Retinopathy)

பிறந்த சில வாரங்களில் குழந்தையின் விழித்திரை முழுமையாக உருவாகாத போது, இந்த கண் நோய் உண்டாகிறது. மஞ்சள் காமாலை குழந்தையின் கண்கள் மற்றும் தோலை மஞ்சள் நிறமாக மாற்றும் ஒரு நிலை. இரத்தத்தில் பிலிரூபன் (Bilirubin) என்னும் பொருள் அதிகமாக இருக்கும் போது இது ஏற்படுகிறது.

நோய்த்தொற்றுகள்

நோயெதிர்ப்பு அமைப்பு உடலை தொற்றுநோயிலிருந்து பாதுகாக்கிறது. சீக்கிரம் பிறந்த குழந்தைக்கு நோயெதிர்ப்பு அமைப்பு முழுமையாக வளர்ச்சியடையாமல் இருக்கலாம். இதனால் குழந்தை தொற்றுநோயை எதிர்த்து போராட முடிவதில் சிக்கல் உண்டாகலாம்.

குறைவான எடையுடன் பிறக்கும் குழந்தைகளுக்கு பிற்கால வாழ்க்கையில் சில உடல்நல பிரச்சனைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

  • நீரிழிவு நோய்
  • இதய நோய்
  • உயர் இரத்த அழுத்தம்
  • அறிவுசார் மற்றும் வளர்ச்சி குறைபாடுகள்
  • வளர்சிதை மாற்ற நோய்க்குறி
  • உடல் பருமன்
    பிறக்க வேண்டியதை விட குறைவான எடை கொண்ட குழந்தை உங்களிடம் இருந்தால், குழந்தை ஆரோக்கியமாக இருக்க என்ன செய்யலாம் என்பதை மருத்துவரிடம் பேசுங்கள்.

பிரசவத்துக்கு முன்பாக குறைந்த எடை கொண்ட குழந்தை பிறப்பை மருத்துவர்களால் கணிக்க முடியுமா?

மகப்பேறுக்கு முற்பட்ட வருகையின் போது குழந்தை சரியாக வளரவில்லை என்பதை குறிக்கும் பரிசோதனைகளை மருத்துவர் பரிசோதிப்பார். குறிப்பாக ப்ரீக்ளாம்ப்சியா (Preeclampsia) மற்றும் கர்ப்ப கால நீரிழிவு போன்ற தாயின் நிலைகள், நஞ்சுக்கொடி மூலம் குழந்தை பெறும் ஊட்டச்சத்தை குறைக்கலாம். அதனால் இது குறித்து பரிசோதனையின் மூலம் கண்டறிவார்கள்.

மருத்துவர் தாயின் அந்தரங்க எலும்பிலிருந்து ஃபண்டஸின் உயரத்தை அல்லது கருப்பையின் மேற்பகுதியை அளவிடுவார். செண்டிமீட்டர்களில் அடிப்படை உயரம் அளவீடு 20 வது வாரத்தில் இருந்து கர்ப்பத்தின் வாரத்துடன் ஒத்திருக்க வேண்டும். எதிர்பார்த்ததை விட குழந்தை எடை குறைவாக இருந்தால் குழந்தை வளரவில்லை என்று மருத்துவர் கவலைப்படலாம். அல்ட்ராசவுண்ட் மூலம் குழந்தையின் அளவை மருத்துவர் கண்டறியலாம்.

பிரசவத்துக்கு முன் எடை குறைந்த குழந்தையை தடுக்க என்ன செய்ய வேண்டும்?

குறைந்த எடையுள்ள குழந்தை பிறப்பதை தவிர்ப்பதற்கான சிறந்த வழி. ஆரம்பகால மகப்பேறுக்கு முற்பட்ட கவனிப்பை பெறுவதும், கர்ப்பம் முழுவதும் பரிசோதனை தொடர்வதும் மிக முக்கியமானது.

குழந்தையின் வளர்ச்சி மற்றும் வளர்ச்சியை மருத்துவர் தொடர்ந்து கண்காணிப்பார். மேலும் குழந்தை எடை குறைப்பை அனுமதிக்கும் எந்த எச்சரிக்கை அறிகுறிகளையும் முன்கூட்டியே அறிந்திருப்பதால் தாய்க்கு உடல்நல பிரச்சனைகள் இருந்தால் குழந்தை பிறப்பதற்கு முன்பே இதை குணப்படுத்தலாம்.

கர்ப்ப காலத்தில் தாய்க்கு நல்ல ஊட்டச்சத்து மற்றும் போதுமான எடை அதிகரிப்பை உறுதி செய்து, ஆரோக்கியமான குழந்தையை பெற்றெடுப்பதற்காக மது போதைப்பொருள் மற்றும் சிகரெட் போன்றவற்றை தவிர்க்கவும்.

குழந்தைகள் எடை குறைவாக பிறந்தாலும் அவர்கள் உயிர்வாழ சிறப்பான மருத்துவ சிகிச்சை இங்குண்டு. குழந்தை எடை குறைவாக பிறப்பதை தடுக்க கர்ப்பிணி பெண் நீரிழிவு மற்றும் உயர் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த வேண்டும்.

Follow @ Google News : கூகுள் செய்திகள் பக்கத்தில் ஜம்மி ஸ்கேன்ஸ் வலைப்பதிவுகள்!

மேலும் கர்ப்பத்தில் ஃபோலிக் அமிலம் உள்ள பெற்றோர் ரீதியான வைட்டமின்களை எடுத்துகொள்வது அவசியம். அதனால் கர்ப்ப காலத்தில் எவ்வளவு எடை அதிகரிக்க வேண்டும் என்பது குறித்து மருத்துவரிடம் ஆலோசனை பெற்று அதன் படி நடக்க வேண்டும். குறைப்பிரசவ அறிகுறிகள் தென்பட்டால் மருத்துவ குழுவே சிகிச்சையை உரிய முறையில் அளிக்கும்.

எனினும் கர்ப்ப காலத்தில் சரியான இடைவெளியில் பரிசோதனை, ஆரோக்கியமான உணவு முறைகள், உடற்பயிற்சி, மனதை அமைதியாக வைத்தல் என எல்லாமே ஆரோக்கியமான எடை கொண்ட குழந்தை பிறப்பை உறுதி செய்யும்.

5/5 - (269 votes)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here