கருச்சிதைவுக்கு பிறகு கர்ப்பம் தரிப்பதில் பிரச்சனை இருக்க வாய்ப்புண்டா, எளிதாக கருத்தரிக்க முடியுமா? அல்லது கருச்சிதைவுக்கு பிறகு கருத்தரிக்கும் போது மீண்டும் கருச்சிதைவு உண்டாகுமா என்பதையும் கருச்சிதைவுக்கு உண்டான பெண்கள் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டும். அதற்கு முன்பு கருச்சிதைவு குறித்து சுருக்கமாக பார்க்கலாம்.

கருச்சிதைவு என்றால் என்ன?

ஒவ்வொரு பெண்ணும் கர்ப்பத்தின் முதல் ட்ரைமெஸ்டர் காலங்களில் முதல் மூன்று மாதங்களில் கர்ப்ப இழப்பு ஆரம்பகால கர்ப்ப இழப்பு என்று சொல்லப்படுகிறது. அதன் பிறகு உண்டாகும் கர்ப்ப இழப்பு இரண்டாவது மூன்று மாத கருச்சிதைவுகள் அழைக்கப்படுகின்றன.

கருச்சிதைவுக்கு காரணம் என்ன, எப்போது மீண்டும் கருத்தரிக்க வேண்டும் என்று கருச்சிதைவுக்கு ஆளான பெண்கள் கவலைப்படலாம். இது குறித்து குழப்பமடையலாம். கருச்சிதைவுக்கு பிறகு கர்ப்பத்தை புரிந்து கொள்வது கர்ப்பத்தை எளிதாக எதிர்கொள்ள உதவும்.

கருச்சிதைவுக்கு காரணங்கள் என்ன?

கருச்சிதைவுக்கு காரணங்கள் என்ன என்பதை அறிந்தால் அடுத்த கர்ப்பத்தில் நீங்கள் இதை தவிர்க்க முடியும். உங்களுக்கு கருச்சிதைவு 20 வாரத்துக்கு முன்பு உண்டாவது கர்ப்பத்தின் தன்னிச்சையான இழப்பு ஆகும்.

கரு பொதுவாக வளராததால் இந்த இழப்பு உண்டாகிறது. பெரும்பாலும் கருச்சிதைவுகள் கரு வளராததால் தான் உண்டாகிறது. குழந்தைகளின் குரொமோசோம்களில் உள்ள பிரச்சனைகள் தான் ஆரம்ப கர்ப்ப இழப்புக்கு 50% காரணமாகிறது. இவை பெரும்பாலும் கரு பிளவுபட்டு வளரும் போது தற்செயலாக நிகழ்கின்றன. பெரும்பாலும் வயதாகும் பெண்களுக்கு கருச்சிதைவு வாய்ப்பு அதிகமாகிறது.

சில நேரங்களில் உடல்நலக்குறைபாடு, நீரிழிவு நோய் போன்றவையும் கருச்சிதைவுக்கு வழிவகுக்கும். கருச்சிதைவுக்கு துல்லியமான காரணம் நிர்வகிக்கப்படவில்லை.

கர்ப்பங்களில் 8 முதல் 20% கருச்சிதைவில் முடிகிறது. குறிப்பாக கர்ப்பத்தை அறியும் முன்னரே பெண்கள் கருச்சிதைவுக்கு ஆளாகிறார்கள். சில பெண்களுக்கு கரு வளர்ச்சி இல்லாத போது மருத்துவரே கருச்சிதைவுக்கு பரிந்துரைப்பார்.

இவர்களுக்கு 7 முதல் 9 வாரங்களுக்குள் இருந்தால் மாத்திரைகள் மூலம் கருச்சிதைவு செய்யப்படும். அதை தொடர்ந்து அவர்கள் கருப்பை சுத்தமாக உள்ளதா என்பதை கவனிக்க வேண்டும். அதன் பிந்தைய கருச்சிதைவு அனஸ்தீஷியா கொடுத்து அல்ட்ராசவுண்ட் மூலம் கருப்பை சுத்தம் செய்யப்படும். இவர்களை தொடர்ந்து கவனித்து உடல் நிலை சீரான பிறகு அன்றே அவர்களை வீட்டுக்கு அனுப்புவார்கள்.

கருச்சிதைவுக்கு பிறகு அதிகமான உதிரபோக்கு, அதிகமான அடி வயிறு வலி, தீவிரமான காய்ச்சல் போன்றவை இருந்தால் தாமதிக்காமல் மருத்துவரை அணுகுவது நல்லது.

கருச்சிதைவுக்கு பிறகு வெற்றிகரமாக கர்ப்பம் தரிப்பதற்கான வாய்ப்பு உங்கள் மனம் சம்பந்தப்பட்ட விஷயமும் கூட.

கருச்சிதைவு பிறகு மீண்டும் கர்ப்பம் ஆவது எப்படி?

கருச்சிதைவை எதிர்கொண்ட பெண்கள் மீண்டும் கருத்தரிக்க முயற்சிக்கும் போது ஒவ்வொரு பெண்களுக்குள்ளும் இது வேறுபடலாம். சிலருக்கு ஒருமாதங்களிலேயே கருத்தர்ப்பு நிகழலாம். இன்னும் சிலருக்கு ஆண்டுகள் வரை ஆகலாம்.

கரு வலுவாக இருந்து பிரசவத்துக்கு பிறகு உங்கள் குழந்தையை கையில் ஏந்தும் கனவை தம்பதியர் கொண்டிருக்கலாம். ஆனால் கருச்சிதைவுக்கு பிறகு வெற்றிகரமாக கர்ப்பம் தரிப்பதற்கான வாய்ப்பு உங்கள் மனம் சம்பந்தப்பட்ட விஷயமும் கூட. இது தம்பதியருக்கு நம்பிக்கை தரக்கூடிய செய்தியாக இருக்க வேண்டும். நீங்கள் கருவை மீண்டும் சுமக்க எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும்.

பிறகு கர்ப்பம் தரிப்பது

கருச்சிதைவு தானாகவே நடந்தால் அதற்கு பிறகு கருப்பையின் உள்ளே ஏதெனும் திசு இருக்கிறதா என்பதை அறிந்து அதை அகற்ற மருத்துவரை அணுகுவது அவசியம். கருச்சிதைவுக்கு பிறகு எவ்வளவு காலத்தில் உறவு கொள்வது என்பதையும் தம்பதியர் அறிந்து வைத்திருக்க வேண்டும். கருச்சிதைவுக்கு பிறகு மீண்டும் கரு உருவாக உடலுறவு கொள்ளும் நேரம் குறித்தும் உங்கள் மருத்துவரிடம் ஆலோசிக்க வேண்டும். சில பெண்கள் அதிக பலவீனமாக இருந்தால் அவர்கள் உறவில் ஈடுபட சற்று காலம் நீடிக்கலாம்.

கருச்சிதைவுக்கு பிறகு பெண்ணின் உடல்நலம்

கருச்சிதைவுக்கு ஆளான பெண்ணின் உடல்நிலை பலவீனமாக இருக்கும். பெண்களுக்கு கருச்சிதைவு மோசமானதாக இருந்தால் அறுவைசிகிச்சைக்கு பிறகு இரத்தப்போக்கை கட்டுப்படுத்த சில வாரங்கள் காத்திருக்க வேண்டியதாக இருக்கும். சில பெண்களுக்கு மோசமான இரத்தப்போக்கு உண்டாகலாம். இவை எல்லாம் சரியாகும் காலம் பெண்ணின் உடல் ஆரோக்கியம் பொறுத்து 1 முதல் 3 மாதங்கள் வரை கூட ஆகலாம். சில பெண்கள் விரைவாகவே அடுத்த கருத்தரிப்பை எதிர்கொள்ளலாம்.

சாதாரண மாதவிடாய் கூட இல்லாமல் கருச்சிதைவுக்கு பிறகு கர்ப்பமாகவும் வாய்ப்புண்டு. நீங்கள் கருச்சிதைவு செய்த பிறகு, உடல் வழக்கமான இனப்பெருக்க வழக்கத்துக்கு திரும்பும் செயல்முறையை கொண்டுள்ளது. மாதவிடாய் வருவதற்கு முன்பு அண்டவிடுப்பை தொடங்குவீர்கள்.

கருச்சிதைவுக்கு 2 வாரங்களுக்கு பிறகு அண்டவிடுப்பின் ஏற்படலாம். இந்த முதல் அண்டவிடுப்பின் போது நீங்கள் கர்ப்பமாகிவிட்டால் நினைத்தை விட கர்ப்ப பரிசோதனையில் நேர்ம்றையான அறிகுறிகளை பார்ப்பீர்கள்.

கருச்சிதைவுக்கு பிறகு 1 முதல் 3 மாதங்களுக்குள் கர்ப்பம் தரிப்பதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கும் என்று ஆய்வுகள் சொல்கிறது. அதோடு கருச்சிதைவுக்கு பிறகு முதல் 3 மாதத்துக்குள் கருத்தரிக்கும் போது ,மீண்டும் கருச்சிதைவு நேரும் ஆபத்தை குறைந்த அளவு கொண்டிருப்பார்கள். இதை 2017 ஆம் ஆண்டு ஆய்விலும் கண்டறியப்பட்டுள்ளது. இது குறித்து மருத்துவர் உங்களுக்கு வழிகாட்டுவார் என்பதால் தொடர்ந்து சிகிச்சையிலும் ஆலோசனையிலும் இருங்கள்.

கருச்சிதைவுக்கு பிறகு கருவை எதிர்நோக்கும் பெண்களில் சிலரை மருத்துவர்கள் சில காலம் கருத்தரிப்பை தள்ளி போக செய்ய அறிவுறுத்துவார்கள். குறிப்பாக

 • அறுவை சிகிச்சை மூலம் கருச்சிதைவு செய்யப்பட்டவர்கள்
 • உடல் பலவீனமாக இருப்பவர்கள்
 • இரண்டாவது முறையும் கருச்சிதைவுக்கு ஆளானவர்கள்
 • ஊட்டச்சத்து குறைபாடு கொண்டிருப்பவர்கள்
 • கருப்பை புண் ஆறாமல் இருப்பவர்கள்
 • மன அழுத்தம் அதிகமாக கொண்டிருப்பவர்கள்
 • உடல் ஆரோக்கியம் சரியாக இல்லாதவர்கள்

இவர்கள் அனைவருக்குமே கருச்சிதைவுக்கு பிறகு கருவுறுதலுக்கு அதிக காலம் தேவைப்படுகிறது. இவர்கள் தொடர்ந்து மருத்துவரது ஆலோசனக்கு பிறகு கருவுறுதலுக்கு முயற்சிப்பது நன்மை கிடைக்கும். குறிப்பாக உடல் அளவிலும் மனதளவிலும் ஆரோக்கியமாக இருக்கும் பெண்கள் தாமதிக்காமல் மருத்துவரை அணுகலாம்.

கருச்சிதைவுக்கு பிறகு மீண்டும் கருவுறுதலுக்கு பரிசோதனைகள் தேவைப்படுமா?

கர்ப்பம் தரிப்பதற்கு முன்பு சிறப்பு சோதனைகள் பரிந்துரைக்கப்படுகின்றன. நீங்கள் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட தொடர்ச்சியான கருச்சிதைவுகளை அனுபவித்தால் உடல்நலன் ஆரோக்கியம் குறித்து அடிப்படை காரணங்களை கண்டறிய சோதனை செய்யலாம்.

இரத்த பரிசோதனைகள்

ஹார்மோன்கள் அல்லது உங்கள் நோயெதிர்ப்பு மண்டலத்தில் உள்ள சிக்கல்களை கண்டறிய உங்கள் இரத்தத்தின் மாதிரி மதிப்பீடு செய்யப்படுகிறது.

குரோமோசோமல் பரிசோதனை

உங்கள் கருச்சிதைவுக்கு காரணம் குரோமோசோம்கள் என்பதை தீர்மானிக்க இரத்தப்பரிசோதனை தேவைப்படும். இது இருவருக்குமே செய்யப்படும் பரிசோதனை ஆகும்.

கருச்சிதைவிலிருந்து திசு கிடைத்தால் அவை பரிசோதிக்கப்படலாம். கருப்பை பிரச்சனைகளை கண்டறிவதற்கான நடைமுறைகளையும் செய்ய பரிந்துரைக்கலாம். உதாரணத்துக்கு அல்ட்ராசவுண்ட் செய்யும் போது உடலில் உள்ள கட்டமைப்புகளின் துல்லியமான படங்களை உருவாக்க அதிக அதிர்வெண்ட் ஒலி அலைகளை பயன்படுத்துகிறது.

இந்த பரிசோதனை மூலம் கருப்பை குழியில் உள்ள ஃபைப்ராய்டுகள் கண்டறிப்பட்டு பிரச்சனைகள் சரியாக சிகிச்சை அளிக்கப்படும். கருப்பை தொடர்பான இனப்பெருக்க மண்டலம் அனைத்தும் பரிசோதனை செய்யப்படும்.

கருச்சிதைவுக்கான காரணத்தை அடையாளம் காண முடியாவிட்டால் நம்பிக்கை இழக்க வேண்டாம். மீண்டும் மீண்டும் கருச்சிதைவை அனுபவிக்கும் பெண்களாக இருந்தாலும் அவர்களுக்கு கருவுறுதல் உண்டாக அதிகம் வாய்ப்புண்டு.

கருச்சிதைவுக்கு பிறகு ரத்தக்கசிவு இருப்பது இயல்பானது. இவை அதிகமாக இருந்தாலோ துர்நாற்றத்துடன் வெளிப்பட்டாலோ தாமதிக்காமல் மருத்துவரை அணுக வேண்டும்.

கருச்சிதைவுக்கு பிறகு மீண்டும் கருவுறுதல் எப்போது, மருத்துவர் சொல்லும் எளிய குறிப்புகள்!

 • உடல் ஆரோக்கியம் பேணுதல்
 • சீரான ஓய்வு
 • ஊட்டச்சத்து மிக்க உணவு
 • சுகாதாரம் ஆக இருத்தல்
 • மன அழுத்தம் இல்லாமல் இருப்பது
 • மருத்துவரின் ஆலோசனை
 • நீரேற்றமாக வைத்திருப்பது

கருச்சிதைவு என்பது ஒவ்வொரு பெண்ணுக்கும் கடினமான காலம் ஆகும். கர்ப்பிணிக்கு உடலளவிலும் மனதளவிலும் அதிக பாதிப்பை உண்டாக்க செய்யும். கருச்சிதைவுக்கு ஆளான பெண்கள் அதிக கவனமாக இருக்க வேண்டும். இது உடல் ஆரோக்கியம் போன்று மன ஆரோக்கியத்தையும் குறைத்துவிடக்கூடும். அதனால் மீண்டும் கருவுறுதல் ஆரோக்கியமாக இருக்க பெண் கவனிக்க வேண்டிய விஷயங்கள்.

பிறகு மீண்டும் கருவுறுதலுக்கு பரிசோதனைகள்

கருச்சிதைவுக்கான காரணங்களை ஆராய வேண்டாம்.முதலில் கருச்சிதைவுக்கு ஆளான பெண்கள் போதுமான அளவு ஓய்வில் இருக்க வேண்டும். சீரான ஓய்வும் போதுமான தூக்கமும் மன கலக்கத்தை குறைக்க செய்யும்.

கருச்சிதைவுக்கு பிறகு ரத்தக்கசிவு இருப்பது இயல்பானது. இவை அதிகமாக இருந்தாலோ துர்நாற்றத்துடன் வெளிப்பட்டாலோ தாமதிக்காமல் மருத்துவரை அணுக வேண்டும். அதே நேரம் உதிரபோக்கு வெளிப்படுத்தும் போது சுகாதாரமான முறையில் இருக்க வேண்டும். மென்சுரல் கப், டேம்பன் காட்டிலும் நாப்கின் பயன்படுத்தலாம். குறிப்பிட்ட இடைவெளியில் இதை வெளியேற்றவும் செய்ய வேண்டும். இனப்பெருக்க உறுப்பை வெற்று நீரில் வெதுவெதுப்பான நீரில் சுத்தம் செய்ய வேண்டும்.அப்போதுதான் தொற்று இல்லாமல் பார்த்துகொள்ள முடியும்.

கருச்சிதைவுக்கு பிறகு உரிய சிகிச்சை முடித்து வீடு திரும்பினாலும் மருத்துவரின் ஆலோசனையை அவ்வபோது பெற வேண்டும். சமயங்களில் தொற்று தொடர்ந்தால் அது அடுத்த கருத்தரிப்பை தடுக்கலாம். அல்லது தாமதமாக்கலாம்.

ஊட்டச்சத்து மிக்க உணவுகளில் கவனம் செலுத்த வேண்டும். குறிப்பாக ஃபோலிக் அமிலம், கால்சியம், இரும்புச்சத்து நிறைந்த உணவுகள் சேர்க்க வேண்டும். அதோடு உடலுக்கு எதிர்ப்பு சக்தி தரக்கூடிய வைட்டமின் உணவுகளை எடுத்துகொள்ள வேண்டும். உடலுக்கு புரதச்சத்தும் நார்ச்சத்தும் அவசியம். ஊட்டச்சத்து மிக்க உணவுகளை பட்டியலிட்டு எடுத்துகொள்வது அவசியம்.

Follow @ Google News : கூகுள் செய்திகள் பக்கத்தில் சென்னை மகளிர் மருத்துவமனை வலைப்பதிவுகள்!

மன அழுத்தம் இல்லாமல் இருப்பது மிக முக்கியமானது. கருச்சிதைவு அதிகப்படியான மன அழுத்தத்தை உண்டாக்க செய்யலாம். பல பெண்கள் குற்ற உணர்ச்சியோடு அதிகப்படியான மன அழுத்தத்தை கொண்டிருக்கிறார்கள். இவை மீண்டும் கருத்தரிப்பதில் பிரச்சனையை உண்டாக்கலாம். இயன்றவரை சுற்றி இருப்பவர்களும், கணவனும் அன்பாக பார்த்துகொண்டாலே அந்த பெண் மீண்டு வருவதற்கு வாய்ப்புண்டு. மன அழுத்தத்தை குறைக்க யோகா, தியானம், நடைபயிற்சி போன்றவற்றை மேற்கொள்ளலாம்.

கருச்சிதைவை யாருமே விரும்பி ஏற்பதில்லை. இது எதிர்பாராமல் நிகழும் மோசமான விளைவு. முதல் முறை நிகழும் போது தடுக்கவும் முடியாது. ஆனால் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை தேர்ந்தெடுப்பது உங்கள் குழந்தைக்கு முக்கியம். கருச்சிதைவுக்கு பிறகு கருத்தரிப்பதற்கு முன்பு பெற்றோர் ரீதியான வைட்டமின் அல்லது ஃபோலிக் அமிலம் சப்ளிமெண்ட் எடுத்துகொள்ளுங்கள்.

கர்ப்பகாலத்தை எதிர்நோக்கும் போது காஃபைன் அளவை குறைத்து எடுத்துகொள்ளுங்கள். மது அருந்துதல், புகைப்பிடித்தல் போன்ற பழக்கங்களையும் தவிர்ப்பது மிகவும் நல்லது.

கருச்சிதைவுக்கு பிறகு மீண்டும் கருவுற்ற உடன் மருத்துவரை அணுகி கருச்சிதைவு உண்டாகமால் இருக்க என்ன செய்யலாம் என்பதை ஆலோசிக்க வேண்டும். போதுமான ஊட்டச்சத்து, சரியான வாழ்க்கை முறை, தொற்று இல்லாத சுகாதாரம், மன ஆரோக்கியம் இவை எல்லாமே மீண்டும் கருவுறுதலை வெற்றிபெற செய்யும்.

5/5 - (220 votes)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here