கர்ப்ப காலத்தில் ஈறுகளில் இரத்தக்கசிவு ஏற்படுவது இயல்புதானா?

1578
gums to be bleeding during pregnancy

கர்ப்ப காலத்தில் ஈறுகளில் இரத்தக்கசிவு (Gums to be bleeding during pregnancy) ஏற்படுவது சாதாரணமானதா?

கர்ப்ப காலத்தில் வரக்கூடிய பொதுவான பிரச்சனைகள் பலவும் உண்டு. சில கர்ப்பிணிகளுக்கு ஈறுகளில் ரத்தக்கசிவு உண்டாக கூடும். இது கேட்க பலருக்கும் ஆச்சரியமானதாக இருக்கலாம். ஆனால் உண்மையில் இந்த பிரச்சனைகளையும் அரிதாக கர்ப்பிணிகள் சந்திக்கிறார்கள். 

கர்ப்ப காலத்தில் இரத்தக்கசிவு என்பது இரண்டாவது மூன்று மாதங்கள் அதாவது நான்காம் மாதம் முதல் ஆறு மாதங்கள் வரை இருக்க கூடும். மூன்றாவது மூன்று மாதங்களில் உணர்திறன் மற்றும் இரத்தக்கசிவு உச்சநிலையுடன் அவற்றை சந்திக்க நேரிடலாம். கர்ப்பிணிகள் யாராவது ஏற்கனவே ஈறுகளில் ஆரோக்கிய குறைபாட்டை கொண்டிருந்தால் அது இந்த நேரத்தில் இன்னும் மோசமான உணர்வை கொண்டிருக்கும்.  

கர்ப்பகாலத்தில் ஏன் ஈறுகளில் இரத்தக்கசிவு உண்டாகிறது என்பதை அறிந்துகொள்வோம். இதற்கு மருத்துவ ரீதியாக பல காரணங்கள் சொல்லப்படுகிறது. 

ஹார்மோன்கள் உண்டாக்கும் மாற்றங்களின் போது நிகழக்கூடிய குறைப்பாட்டில் ஈறுகள் வீங்கிய உணர்திறனும் ஒன்று. கர்ப்பகால ஹார்மோன்களில் ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜெஸ்டிரோன் இரண்டும் முக்கியமானவை. இவை ரத்த ஓட்டத்தை அதிகரிப்பதால் ஈறுகளில் வீக்கம் உண்டாக கூடும். 

கர்ப்ப காலத்தில் உணவு சாப்டுவதில் மாற்றங்கள் இருந்தாலும் அவை ஈறுகளில் வீக்கத்தை உண்டாக்கும். குறிப்பாக உணவில் கார்போஹைட்ரேட் அதிகமுள்ள உணவுகள், துரித உணவுகள் போன்றவை கூட ஈறு பிரச்சனைக்கு காரணமாக இருக்கலாம். அதோடு கர்ப்பகாலத்தில் உணவு மாற்றங்களினால் உமிழ்நீர் உற்பத்தி குறையக்கூடும்.

இதையும் தெரிந்து கொள்ள: பிரசவத்திற்குப் பிறகு உடல் எடையைக் குறைக்க 5 குறிப்புகள்!

கர்ப்பம் என்பது அதிக ஹார்மோன்கள் மாற்றங்கள் உண்டாக கூடிய காலம் என்பதால் இந்த நேரத்தில் குறைவாக சுரக்கும் உமிழ்நீரால் பற்களின் மேற்பரப்பில் கார்போஹைட்ரேட் சுற்றியிருக்கும். பற்களின் மேல் மென்மையாக இருக்கும் இந்த ஒட்டு பொருள்கள் பல் சிதைவு மற்றும் ஈறு நோயை உண்டாக்கும் பாக்டீரியாக்களை கொண்டிருக்கிறது. இதனால் தான் கர்ப்ப காலத்தில் பல் வலி  வருகிறது. 

உமிழ்நீர் குறைவாக இருந்தால் தான் பற்களில் ஈறுகளில் வலி என்றில்லாமல் உமிழ்நீரில் அதிக அமிலத்தன்மை இருந்தாலும் கூட அது பல் அரிப்பு மற்றும் சிதைவு அபாயத்தை கொண்டிருக்கிறது. 

கர்ப்ப காலத்தில் சுவையறிதலில் விருப்பமின்மை என்பது போன்று பயன்படுத்தும் பேஸ்ட் வகையறாக்கள் கூட  பிரச்சனையை உண்டாக்கிவிடும். அதிக கடினத்தன்மை கொண்ட பேஸ்ட்டை உபயோகித்தால் நீங்கள் அதை தவிர்ப்பதே சிறந்தது. மென்மையான பேஸ்ட்டை  பயன்படுத்துவதோடு  தினமும் இரண்டு வேளை பல் துலக்குவதும்  கூட  அவசியம். அதே நேரம் பயன்படுத்தும் பேஸ்ட் வகைகள் அதிக சுவையில்லாமல் இருப்பதும் அவசியம். 

ஈறுகளில் இரத்தகசிவு வருவதற்கான அறிகுறிகளும் உண்டு.  இதை கவனித்து பார்த்தாலே கண்டறிய முடியும். ஈறுகள் வீக்கமாக இருக்கும், புண் ஆகி இருக்கும். ஈறுகள் சிவப்பு நிறமாக இருக்க கூடும். அதே நேரம் இலேசான வலியை உண்டாக்க கூடும். 

ஈறுகளில் சிவப்பு, பச்சையாக தோன்றும் இந்த வீக்கங்கள் பற்களுக்கு இடையில் இருக்கும். இது பாதிப்பை உண்டாக்காது. பெரும்பாலும் பிரசவத்துக்கு பிறகு  இது மறைந்துவிடக்கூடும். எனினும் ஈறுகளில் இரத்தக்கசிவு சுகாதார பிரச்சனையாலும் உண்டாகலாம் என்பதால் அதை தடுக்கும் வழிமுறைகள் குறித்தும் தெரிந்துகொள்ள வேண்டும். 

அதே போன்று பல் துலக்குவதற்கு முன்பு சுத்தமான நீரில் வாய் கொப்புளிப்பதை மறக்க வேண்டாம். உணவு சாப்பிட்ட பிறகும் வாய் கொப்புளிப்பது அவசியம். ஈறுகளில் இரத்தகசிவு அதிகமாக இருந்தால் பேக்கிங் சோடா சேர்த்த நீரில் வாய் கொப்புளிக்கலாம். மவுத்வாஷ் விரும்புபவர்கள் ஆல்கஹால் இல்லாத மவுத் வாஷ் பயன்படுத்தலாம். 

இனிப்பு  நிறைந்த உணவுகளை அதிகமாக எடுத்துகொள்வதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் சர்க்கரையின் தாக்குதலுக்கு முதலில் பாதிப்படைவது பற்கள் தான். சர்க்கரை இனிப்புக்கு மாற்றாக பழங்கள், காய்கறிகள் போன்றவற்றை எடுத்துகொள்ளலாம். 

Follow @ Google News : கூகுள் செய்திகள் பக்கத்தில் சென்னை மகளிர் மருத்துவமனை வலைப்பதிவுகள்!

ஈறுகள் ஆரோக்கியமாக வைக்க வைட்டமின் சி சிறந்தது என்று மருத்துவர்கள் சொல்கிறார்கள். கால்சியம் சத்து பற்களையும் எலும்புகளையும் வலுவாக வைத்திருக்கும். கால்சியம் பால் மற்றும்  பழம் போன்றவற்றில் நிறைந்திருக்கிறது. 

ஈறுகளில் இரத்தக்கசிவு என்பது அசெளகரியமாகவோ, அசாதாரணமாகவோ உணர்ந்தால் பல் மருத்துவரை சந்தித்து சிகிச்சை பெறுவது நல்லது. அதே நேரம்  கர்ப்பிணிகள் தாங்கள் கருவுற்று இருப்பதையும் மருத்துவரிடம் தெரிவிப்பது நல்லது. ஏனெனில் பற்களில் எதனால் பாதிப்பு உண்டாகி இருக்கிறது என்பதை கண்டறிய எக்ஸ்- கதிர்கள் பயன்படுத்துவதுண்டு. மேலும் மயக்க மருந்து கொடுத்து செய்யகூடிய சிகிச்சையாக இருந்தால் அதை கர்ப்பகாலத்தில் தவிர்க்க வேண்டும் என்பதால் மருத்துவரிடம் முன்கூட்டியே தெரிவிப்பது நல்லது.

5/5 - (56 votes)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here