குழந்தைக்கு மலச்சிக்கல் அறிகுறிகள் எப்படி இருக்கும்? காரணங்கள் மற்றும் தீர்வுகள்!

731
Infant constipation

மலச்சிக்கல் என்பது பெரியவர்களுக்கு மட்டும் அல்ல. பிறந்த குழந்தைகளுக்கும் வரலாம். குழந்தைகளின் அழுகை, மலம் கழிக்கும் போது அலறல் மற்றும் முக மாற்றம் போன்ற அறிகுறிகளோடும் மலம் வெளியேறும் தன்மை கொண்டும் அவர்களது மலச்சிக்கலை அறியலாம். அதை தான் விரிவாக இந்த கட்டுரையில் தெரிந்துகொள்ள போகிறோம்.

குழந்தை இயல்பாக மலம் கழித்தல் பற்றி எப்படி தெரிந்து கொள்ளுவது?

குழந்தைகள் பிறந்த ஒரு வாரம் வரை நாள் ஒன்றுக்கு அதிக குடல் இயக்கம் இருக்கும். 5 முதல் 7 முறை வரை கூட இருக்கும். பிறகு படிப்படியாக ஒரு மாதத்தில் மலம் கழிக்கும் எண்ணிக்கை முறை குறையலாம். பிறகு வளர வளர நாள் ஒன்றுக்கு 3 அல்லது 2 முறை இருக்கும். சில நேரங்களில் 2 அல்லது 3 நாளைக்கு ஒரு முறை தான் மலம் கழிப்பார்கள். இது இயல்பானது. குழந்தை தாய்ப்பால் கழித்த பிறகு மலம் கழிப்பார்கள்.

குழந்தை திட உணவுகளை உட்கொள்ள தொடங்கிய போது ஆரம்பத்தில் குறைவான மலம் இருக்கலாம். இருப்பினும் திட உணவுக்கு இரைப்பை குடல் அமைப்பு சரி செய்தவுடன் அதிர்வெண் இயல்பு நிலைக்கு திரும்பும். குழந்தைக்கு உணவு கொடுப்பதை பற்றி நன்றாக தெரிந்து கொள்ள வேண்டும்.

குழந்தைக்கு மலச்சிக்கல் என்பதை எப்படி உறுதி செய்வது?

குழந்தை இரண்டு வாரங்கள் வரை கூட மலம் கழிக்காமல் இருப்பார்கள் அல்லது தாமதமாகலாம். எனினும் குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்குமான மலச்சிக்கலின் அறிகுறிகள் மாறுபடும். சில நாட்கள் வரை குழந்தைகள் மலம் கழிக்காமல் இருக்கலாம்.

 • மலம் வெளியேற்றும் போது குழந்தை சிவந்த முகத்துடன் 10 நிமிடங்களுக்கு மேல் கஷ்டப்படலாம். இது மலம் கழிப்பதில் சிரமத்தை குறிக்கிறது.
 • மலம் கழிக்கும் போது குழந்தை குழப்பமடையலாம். இது வலியுடன் இருப்பதை குறிக்கிறது.
 • மலம் கழிக்கும் போது வாயு திரட்சியால் வயிறு வீங்குவது. வாயு வெளியேற்றம் கடினமாக இருப்பது.
 • மலம் வெளியேறாமல் ஆசனவாய் வாய்பகுதியில் நீண்ட நேரம் இருப்பது.
 • மலம் கடினமாக துகள்கள் போன்று இருக்கும். குழந்தையின் வயிறு வழக்கத்திற்கு மாறாக வீங்கியதாகவும் தொடுவதற்கு கடினமாகவும் இருக்கலாம்.
 • கடுமையான மலச்சிக்கல் என்கோபிரெசிஸை ஏற்படுத்தலாம் இது குழந்தையின் டயபர் அல்லது உள்ளாடைக்குள் ஒரு சிறிய அளவு திரவ மலம் தன்னிச்சையாக கசிவை உண்டாக்கலாம்.
 • கடுமையான சந்தர்ப்பங்களில் குழந்தை நகரும் போது மலத்தில் இரத்தப்போக்கு உண்டாகலாம். குழந்தை மலத்தை வெளியேற்ற சிரமப்படலாம். மலம் கழிக்கும் வழக்கத்தில் மாற்றங்கள் தொடர்ந்து இருந்தால் மலச்சிக்கல் இருக்கலாம்.

மலச்சிக்கல் தான் என்பதை கண்டறிய இந்த அட்டவணை உதவலாம்?

பிறந்தது முதல் 6 மாதம் வரை உள்ள குழந்தைகள் தாய்ப்பால் மட்டும் குடிப்பவர்களாக இருந்தால் அவர்கள் மலம் கழித்தல் என்பது தாய்ப்பாலுக்கு பிறகு இருக்கும். நாள் ஒன்றுக்கு இரண்டு முறை. சில நேரங்களில் பிறந்த உடன் 5 முதல் 7 வரை இருக்கலாம். இது இயல்பானது. இந்த வகை குழந்தைக்கு மலச்சிக்கல் இருந்தால் கடினமான துகளாக வெளியேறும். அரிதாக மலம் மென்மையாகவும் பேஸ்ட் போலவும் இருக்கும்.

மேலும் இதையும் தெரிந்து கொள்ள: குழந்தைகளுக்கு டான்சில் ஏன் உண்டாகிறது?

பிறந்தது முதல் ஆறு மாதங்கள் வரை உள்ள குழந்தைக்கு ஃபார்முலா பால் ஆக இருந்தால் இரண்டு நாளைக்கு ஒரு முறை போவார்கள். இவர்களுக்கு மலச்சிக்கல் இருந்தால் மூன்று நாட்களுக்கு ஒரு முறை இருக்கும். மலம் இறூக்கமாக இருக்கும்.

ஆறு மாதம் முதல் 12 மாதங்கள் வரை இருக்கும் குழந்தைகள் ஒரு முறை அல்லது இரண்டு நாளைக்கு ஒரு முறை போவார்கள். மலச்சிக்கல் இருந்தால் வாரம் இரண்டு முறை செல்வார்கள்.

முதல் மாதத்தில் மலச்சிக்கல் பொதுவாக குழந்தைக்கு தாய்ப்பால் கிடைக்கவில்லை என்பதற்கான அறிகுறியாகும். தாய்ப்பால் மட்டுமே குடிக்கும் குழந்தைகளுக்கு மலம் கழிக்கும் பழக்கம் அதிகமாக இருக்கலாம். பிறந்த குழந்தைகள் ஊட்டச்சத்துக்காக பெரும்பாலான பாலை பயன்படுத்தலாம். அரிதாக சில குழந்தைகள் பிறந்து இரண்டு முதல் மூன்று நாட்களில் மலம் கழிக்காமல் போகலாம்.

குழந்தைகளுக்கு மலச்சிக்கல் உண்டாக என்ன காரணம்?

ஃபார்முலா பாலில் மாற்றம்

ஃபார்முலா பால் குடிக்கும் குழந்தை மலம் சரியாக கழிக்காமல் போகலாம். இது செரிமானத்தில் சிக்கலை உண்டாக்கலாம். இது இறுதியில் மலச்சிக்கலுக்கு வழிவகுக்கும்.

போதுமான உணவு

குழந்தைக்கு போதுமான தாய்ப்பால் கிடைக்கவில்லை என்றால் அரிதாக கடினமான மலத்தை கவனிக்கலாம்.

நீரிழப்பு

மோசமான திரவ உட்கொள்ளல் உடலின் மலம் கழிக்கும் திறனை பாதிக்கலாம். தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகள் தாய்ப்பாலில் இருந்து போதுமான திரவத்தை பெறுகிறார்கள். ஆனால் சற்று மாதங்கள் ஆன குழந்தை போதுமான அளவு தண்ணீர் குடிக்காததால் மலச்சிக்கல் ஏற்படலாம்.

நார்ச்சத்து இல்லாமை

திட உணவு உணவில் குறைந்த நார்ச்சத்து இருப்பதால் மலத்தை கடினப்படுத்தலாம்.

இரைப்பை குழாயில் தொற்று

மலச்சிக்கல் உண்டாவது இரைப்பை குடல் நோய்த்தொற்றின் விளைவாக இருக்கலாம். இதனால் புதிய அல்லது உறைந்த இரத்தத்துடன் கடினமான மலத்தை உண்டாக்கலாம்.

கடுமையான நோய்

இது அரிதானது நீரிழிவு, சிஸ்டிக் ஃபைப்ரோஸிஸ் மற்றும் ஹைப்போ தைராய்டிசம் போன்ற பல நோய்களின் அறிகுறியாக இருக்கலாம். இத்தகைய கோளாறுகள் மலச்சிக்கலை தாண்டி மற்ற அறிகுறிகளையும் காட்டுகின்றன.

குழந்தை ஆரோக்கியமாக இருக்கும் வரை, அவர்களின் குடல் பழக்கம் பெரும்பாலும் கணிக்க முடியாததாக இருப்பதால் கவலைப்பட வேண்டியதில்லை. எனினும் குழந்தை மூன்று மாதங்களுக்கும் குறைவாக இருந்தால் இது குறித்து குழந்தை மருத்துவரின் ஆலோசனை அவசியம்.

குழந்தைகளில் மலச்சிக்கல் எப்படி கண்டறியப்படுகிறது?

குழந்தைக்கு மலச்சிக்கல் உள்ளதா என்பதை தீர்மானிக்க மருத்துவர் சில வழிமுறைகளை அறிவுறுத்துவார்.

மலம் கழிக்கும் முறையை புரிந்துகொள்வது

ஒரு குழந்தை மருத்துவர் தங்கள் குழந்தையின் உனவு, மலம் கழிக்கும் முறைகள் மற்றும் பிற அறிகுறிகளை பற்றிய பெற்றோரின் கவனிக்கும் செயலை விசாரிப்பார். இந்த வரலாறு துல்லியமான நோயறிதலுக்கு உதவும்.

உடல் பரிசோதனை

ஒரு குழந்தையின் ஆசன வாய் திறப்பு மற்றும் வயிறு மலச்சிக்கலை சுட்டிக்காட்டக்கூடிய அறிகுறியாக இருக்கலாம்.

அடிவயிறு எக்ஸ்ரே

அடிவயிறு தாக்கத்தை எதிர்பார்க்க ஒரு எக்ஸ்ரே தேவைப்படலாம். பேரியம் எனிமா மற்றும் கொலோனோஸ்கோபி மூலம் ஆக்கிரமிப்பு நோயறிதல் பரிசோதனைகள் செய்யலாம். அதிலும் முதல் வார குழந்தைகளுக்கு இந்த பரிசோதனை தவிர்க்கப்படும்.

உணவு முறை மாற்றங்கள்

குழந்தை ஆறு மாதங்களுக்கு மேல் இருந்தால் குழந்தையின் உணவில் போதுமான தண்ணீருடன் நார்ச்சத்து நிறைந்த உணவையும் சேர்க்க மருந்துவர் பரிந்துரைக்கலாம்.

மலச்சிக்கல் உள்ள குழந்தைகளுக்கான உணவு அட்டவணையை பெற பெற்றோர்களுக்கு மருத்துவர்கள் பரிந்துரைக்கலாம். இது குறித்து குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து நிபுணரை சந்திக்கலாம்.

கிளிசரின் சப்போசிட்டர்களை பயன்படுத்துதல்

கிளிசரின் சப்போசிட்டரின் என்பது கிளிசரின் காப்ஸ்யூல். இது ஆசனவாய் வழியாக மலக்குடலில் செருகப்படுகிறது. காப்ஸ்யூல் மலப்பாதையை தூண்டுவதற்கு உள்ளே கரைகிறது. நார்ச்சத்து நிறைந்த திட உணவை கொடுக்க முடியாத தாய்ப்பால் கொடுக்கும் குழந்தைகளுக்கு கடுமையான மலச்சிக்கலுக்கு சிகிச்சையளிக்க கிளிசரின் சப்போசிட்டரிகள் பரிந்துரைக்கப்படலாம்.சுயமாக முயற்சிக்க முடியாது.

மலச்சிக்கலை போக்க குழந்தைக்கு மலமிளக்கியாகவோ, டானிக் அல்லது எனிமாவை கொடுப்பதற்கு எதிராக குழந்தை மருத்துவர்கள் எச்சரிக்கின்றனார். குழந்தைக்கு மலச்சிக்கல் இருந்தால் முதன் முதலில் செய்யகூடிய வீட்டு வைத்தியம் என்ன என்பதையும் தெரிந்துகொள்வோம்.

மேலும் இதையும் தெரிந்து கொள்ள: கருவில் இருக்கும் குழந்தைக்கு பிடிக்காத 10 விஷயங்கள்

குழந்தைகளின் மலச்சிக்கலுக்கான வீட்டு வைத்தியம் என்னென்ன?

தாய்ப்பாலூட்டும் எண்ணிக்கையை அதிகரிக்கவும். குழந்தைகள் ஒழுங்கற்ற மலம் வெளியேற்றுவதற்கு போதுமான உணவு கிடைக்காததும் பொதுவான காரணமாகும். அதனால் குழந்தைக்கு போதுமான உணவு கிடைக்கிறதா என்பதையும் உறுதிப்படுத்தி கொள்ளவும். நாள் ஒன்றுக்கு ஊட்டங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும்

ஃபார்முலா பால் கொடுப்பதை தவிர்க்கவும்

குழந்தைக்கு ஃபார்முலா பால் கொடுப்பதாக இருந்தால் நீங்கள் மற்றொரு ஃபார்முலா பால் பிராண்டுக்கு மாறலாம். இதன் மூலம் மலச்சிக்கலில் ஏதேனும் முன்னேற்றத்தை காட்டுகிறதா என்பதை பார்க்கலாம்.

பழச்சாறு கொடுங்கள்

மலச்சிக்கல் உள்ள குழந்தைக்கு ஒரு மாதம் ஆனவுடன் தினமும் ஒரு அவுன்ஸ் கொடுக்கலாம் என்று அமெரிக்க மருத்துவ அகாடமி கூறுகிறது. குழந்தை ஆறு மாதங்களுக்கும் மேலானதாக இருந்தால் மலச்சிக்கலை போக்க நான்கு அவுன்ஸ் 118 மிலி வரை கொடுக்கலாம். மல மிளக்கிய பண்புகளை கொண்ட கொடி முந்திரி மற்றும் பேரிக்காய் போன்ற பழங்களை தேர்வு செய்யவும்.

Follow @ Google News : கூகுள் செய்திகள் பக்கத்தில் சென்னை மகளிர் மருத்துவமனை வலைப்பதிவுகள்!

ஓட்ஸ் மற்றும் பார்லி தானியத்துக்கு மாறவும்

குழந்தை தானியங்களை சாப்பிட்டால் அரிசி தானியங்களை விட ஓட்ஸ் அல்லது பார்லி தானியங்களை தேர்வு செய்யவும். ஏனெனில் ஓட்ஸ் மற்றும் பார்லியில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால் மலம் எளிதில் வெளியேற உதவும். நார்ச்சத்து அதிகம் உள்ள பழங்கள் மற்றும் காய்கறிகளை சேர்க்கவும். திடப்பொருளை தொடங்கிய உடனே குழந்தைக்கு மலச்சிக்கல் இருந்தால், உணவில் போதுமான நார்சத்து இல்லாமல் இருக்க வாய்ப்புள்ளது. மலச்சிக்கலை எளிதாக்குவதற்கு நார்ச்சத்து நிறைந்த பழங்கள் மற்றும் காய்கறிகளை தினசரி உணவின் ஒரு பகுதியாக சேருங்கள்.

மசாஜ் செய்யுங்கள்

உடற்பயிற்சி மற்றும் மசாஜ் குழந்தைகளின் மலச்சிக்கலை போக்க உதவும். நீங்கள் செய்யக்கூடிய மூன்று விஷயங்கள்.

வட்ட வடிவில் மசாஜ்

குழந்தையை மல்லாக்க படுக்க வைத்து சுத்தமான விரல்களால் கையை தொப்புளில் 30 விநாடிகள் வைக்கவும். இது குழந்தையின் தசைகளை சூடேற்ற உதவுகிறது. குழந்தையின் வயிற்றை கடிகார திசையில் மெதுவாக மசாஜ் செய்யவும். வயிற்றை மசாஜ் செய்யும் போது தொப்பிளில் இருந்து மூன்று விரல்கள் அகலமான தூரத்தை கொண்டு மசாஜ் செய்யவும்.

குழந்தையின் முகம் மற்றும் உடல் மொழியை கவனியுங்கள். குழந்தை எதிர்ப்பை உணர்ந்தால் மற்றும் அசெளகரியத்தை கவனித்தால் உடனடியாக மசாஜ் செய்வதை நிறுத்துங்கள். குழந்தைகளுக்கு வழக்கமாக மசாஜ் செய்வது பாதுகாப்பான மற்றும் பயனுள்ள வழியாகும்.

சைக்கிள் பயிற்சி

குழந்தையை மல்லாக்க படுக்க வைக்கவும். குழந்தை சைக்கிள் ஓட்டுவதை போல் மெதுவாக அவர்களது கால்களை மேல் நோக்கி பிடித்து வட்ட இயக்கத்தில் நகர்த்தவும். தொடர்ந்து 30 விநாடிகள் வரை செய்யலாம். பிறகு ஐந்து நிமிடங்கள் இடைவெளிவிட்டு மீண்டும் இதை தொடங்கவும். இந்த சைக்கிள் பெடலிங் மிதிப்பது போன்ற பயிற்சியானது உடலில் குடலின் இயக்கத்தை மேம்படுத்துகிறது. குடல் பணியை தூண்டுகிறது. இதனால் குழந்தைகள் மலச்சிக்கல் இல்லாமல் இருப்பார்கள்.

மேலும் இதையும் தெரிந்து கொள்ள: பிறந்த குழந்தைக்கு ஒரு வயதாகும் வரை தவிர்க்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன?

ஊர்ந்து செல்லும் பழக்கம்

குழந்தை தவழும் வயதுடையவராக இருந்தால், அவர்கள் சுற்றி சுற்றி வருவதற்கான தூண்டுதலை உண்டாக்குங்கள். ஊர்ந்து செல்வது குழந்தைகளுக்கு சிறந்த உடல் செயல்பாடு ஆகும். இது அவர்களது குடல் இயக்கத்தை மேம்படுத்த உதவுகிறது. உணவு மற்றும் உடற்பயிற்சிகளில் செய்யும் இந்த மாற்றங்கள் குழந்தைகளிடையே மலச்சிக்கலை போக்க உதவும்.

குளியல்

வெதுவெதுப்பான குளியல் வயிற்று தசைகளை தளர்த்த உதவும். இறுக்கத்தை போக்கவும் செய்யும்.

எப்போது மருத்துவரை அணுக வேண்டும்? என்ன மாதிரியான சிகிச்சையளிக்கப்படுகிறது?

 • மலத்தில் இரத்தம் இருந்தால் அல்லது மலம் கருப்பு நிறமாக இருந்தால் இது உறைந்த இரத்தத்தை குறிக்கிறது.
 • மலம் கழிக்க மீண்டும் மீண்டும் சிரமப்படுவதால் தொடர்ந்து கோலிக் எதிர்கொள்ளும் போது.
 • குழந்தையின் ஆசனவாய் பகுதி சிவந்துவிடும் அறிகுறி கண்டாலும் மருத்துவரை அணுக வேண்டும்.
 • சில குழந்தைக்கு மலம் கழிக்கும் இடத்தில் சிவப்பு இல்லாமல் வீக்கம் இருக்கும் அப்போதும் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.
 • குழந்தைக்கு காய்ச்சல் மற்றும் வாந்தி இருக்கலாம். குழந்தைக்கு உணவளிக்க முடியாமை. மோசமான எடை அதிகரிப்பு போன்ற மலச்சிக்கல் நிலைமையும் உடனடியாக கவனிக்க வேண்டியதாக இருக்கும்.
 • குழந்தைக்கு நாள்பட்ட மலச்சிக்கல் அறிகுறி இருந்தால் அது மலத்தாக்கத்தின் அறிகுறியாக இருக்கலாம். இது குடலுக்குள் மலம் கெட்டியாகும் ஒரு தீவிர நிலையாகும்.

குழந்தைகளில் மலச்சிக்கல் பொதுவாக உணவு மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்களுடன் சிகிச்சையளிக்கப்படுகிறது. தேவைப்பட்டால் மட்டுமே மருந்துகள் பரிந்துரைக்கப்படுகிறது.

5/5 - (148 votes)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here