கர்ப்பம் கண்டுபிடிப்பது எப்படி?

912
How To Check Pregnancy

கர்ப்பத்தை எப்படி கண்டுபிடிப்பது? (How To Check Pregnancy)

மாதவிடாய் தவறும் போது குழந்தையை எதிர்நோக்குபவர்களுக்கு ஆர்வம் அதிகமாய் இருக்கும். ஒரு பெண் கர்ப்பமாக இருக்கிறாரா இல்லை கர்ப்பம் கண்டுபிடிப்பது எப்படி (How To Check Pregnancy) என்பதை சில அறிகுறிகள் மூலம் நம்மால் கண்டறிய முடியும்.

முதலில் மாதவிடாய் தள்ளிப்போவது, உணவுகளில் வெறுப்பு அடைவது, காலை நோய் அணுபவிப்பது, சிலருக்கு வாந்தியும் வரக்கூடும். இப்படி சில அறிகுறிகள் மூலம் கர்ப்பத்தை கண்டுபிடிக்கலாம். உங்களுக்கு சந்தேகம் வரும் வேளையில் சிறுநீர் பரிசோதனை செய்து உறுதி செய்துகொள்ளலாம்.

கர்ப்ப பரிசோதனை எப்போது செய்யலாம்?

பெரும்பாலான இடங்களில் மாதவிடாய் வரும் முன்னரே கர்ப்பத்தை அறியலாம் என்று கூறுவர். ஆனால் சிறிது காலம் காத்திருந்து பின்னர் முயற்சி செய்தால் நன்றாக உறுதி செய்யலாம். இதனோடு கர்ப்பம் எத்தனை நாளில் உறுதி செய்யலாம் என்பதை தெரிந்து வைத்து கொள்ளுவது அவசியம்.

கர்ப்பத்தை பரிசோதிக்க மருந்தகத்தில் கிடைக்கும் டெஸ்ட் கிட் வாங்கி சிறுநீரில் தான் பரிசோதனை செய்ய வேண்டும் என்பதில்லை. இதனோடு கர்ப்பத்தை உறுதி செய்ய வீட்டில் உள்ள பொருட்களை வைத்து வீட்டில் கர்ப்ப பரிசோதனை செய்யலாம், என்பது உங்களுக்கு தெரியுமா?

hCG hormone

கர்ப்பமான பெண்களின் சிறுநீரில் மனித கோரியானிக் கோனாடோட்ரோபின் அதாவது எச்.சி.ஜி ஹார்மோனின் அளவை பொறுத்தே கர்ப்பத்தை உறுதி செய்கின்றனர்.

மேலும் கருதரித்த ஒரு வாரத்தில் இந்த ஹார்மோன் அதிகமாக சுரப்பதால் மாதவிடாய் தவறிய பிறகு பரிசோதிப்பது நல்லது. இது அதிகாலையில் செய்யும் போது இன்னும் துல்லியமான முடிவுகளை தருவதாக கூறுகின்றனர்.

கர்ப்ப பரிசோதனையில் தாமதமாக முடிவுகள் வந்தால் என்ன ஆகும்?

False Negative Pregnancy Test

கர்ப்ப பரிசோதனையில் முடிவுகள் தாமதமாக வந்தால் வருத்தம் கொள்ளாமல் மீண்டும் சில நாட்கள் கழித்து சோதனை செய்து பார்க்கலாம். எனவே கர்ப்பம் கண்டுபிடிப்பது எப்போது (How To Check Pregnancy) என்பதை தெரிந்து வைத்து கொள்ள வேண்டும்.

அடுத்த பரிசோதனையிலும் கர்ப்பம் உறுதி செய்யபடவில்லை என்றால் மகப்பேறியல் மருத்துவரிடம் சென்று ஆலோசனை பெற்று அதன்படி நடந்து கொள்ளுங்கள்.

ஃபோலிக் அமிலம் மாத்திரை உங்களுக்கு பரிந்துரைக்கப்படும். அதனை தவறாமல் எடுத்துக்கொள்ளலாம். நல்ல உணவு முறைகள், மிதமான உடற்பயிற்சி, ஆரோக்கியம் தரும் பழங்கள் மற்றும் உலர்பழங்கள், நட்ஸ்-களை மருத்துவர் பரிந்துரைக்கும் அளவு எடுத்துகொள்ளுங்கள்.

இரத்த கர்ப்ப பரிசோதனை எந்த நாள் செய்யலாம்?

pregnancy blood test

அண்டவிடுப்பின் 11-14 நாட்களுக்கு முன்பே நீங்கள் இரத்த கர்ப்ப பரிசோதனையை செய்துகொள்ளலாம். இரத்த கர்ப்ப பரிசோதனையை செய்ய, மருத்துவர் உங்கள் கையில் உள்ள நரம்பிலிருந்து இரத்தத்தை எடுக்கிறார்.

இந்த இரத்தம் பரிசோதனைக்காக ஆய்வகத்திற்கு அனுப்பப்படுகிறது. பெரும்பாலான இரத்த கர்ப்ப பரிசோதனைகளின் முடிவுகள் குறைந்தது இரண்டு நாட்கள் ஆகும். ஆய்வகம் அதன் முடிவை மருத்துவரிடம் தெரிவித்துவிடுவார்.

இரத்த பரிசோதனை முடிவுகள் 99 சதவீதம் துல்லியமானவை மற்றும் சிறுநீர் கர்ப்ப பரிசோதனைகளை விட குறைவான அளவு hCG ஐ கண்டறிய முடியும்.

இரத்த கர்ப்ப பரிசோதனையின் 2 முக்கிய வகைகள்:

அளவு இரத்த பரிசோதனை – இரத்தத்தில் உள்ள hCG இன் சரியான அளவை அளவிடுகிறது மற்றும் கர்ப்பம் எவ்வளவு தூரம் முன்னேறியுள்ளது என்பதை மதிப்பிடலாம்.

தரமான இரத்த பரிசோதனை – hCG இருப்பதை மட்டுமே சரிபார்க்கிறது. இந்த சோதனையானது hCG இன் சரியான அளவை அளவிடாததால், இது கர்ப்பகாலத்தின் மதிப்பீட்டை வழங்க முடியாது.

இரத்த கர்ப்ப பரிசோதனை எவ்வளவு துல்லியமானது?

How Pregnancy Blood Tests Work

வீட்டில் பரிசோதனையில் ஈடுபடும் போது மருந்தகத்தில் வாங்கிய கருவி சரியாக பயன்படுத்தப்பட்டிருந்தால் 99 சதவீதம் துல்லியமான முடிவுகளையே வழங்கும். ஏனென்றால் மாதவிடாய் தவறிய காலம் முதல் உங்கள் சிறுநீரில் அதிகமான எச்.சி.ஜி ஹார்மோனின் சுரப்பு அதிகமாய் காணப்படும்.

சிறுநீர் கர்ப்ப பரிசோதனையில் கர்ப்பம் அடைந்திருப்பதில் சந்தேகம் வரும்போது, இரத்த பரிசோதனை செய்து உறுதி செய்யலாம். இரத்தத்தில் ஹார்மோன் அளவைப் பரிசோதித்து உறுதிசெய்வார்கள்.

pregnancy blood test result

இது 5 mIU/ml க்குக் குறைவாக இருந்தால் நீங்கள் கர்ப்பம் இல்லை என்று அர்த்தம். அதற்கு மேல் இருந்தால் உங்கள் கர்ப்பம் உறுதி செய்யப்படுகிறது. மேலும் கர்ப்பமான பெண்ணின் இரத்ததில் எச்.சி.ஜி யின் அளவு நாளுக்கு நாள் அதிகமாகும்.

அதன் அளவுகள்:

ரத்தத்தில் hCG அளவு கருத்தரித்து mIU/ml ஏழு நாட்களில் 0 5 ml அளவில் துவங்கி முப்பத்தைந்து முதல் நாற்பத்து இரண்டு நாட்களில் 7650 – 229000 ml ஆக இருக்கும்.

hcg pregnancy blood test

ஸ்பாட்டிங் இருக்கும் போது கர்ப்ப பரிசோதனை செய்யலாமா?

ஸ்பாட்டிங் இருக்கும் போது கர்ப்ப பரிசோதனை தாராளமாக செய்யலாம். ஏனெனில் இரத்தக்கசிவிற்கும், hCG பரிசோதனைக்கு தொடர்பு இல்லை. இந்த hCG பரிசோதனை கையில் உள்ள இரத்த மாதிரிகள் மூலம் எடுக்கப்படுகிறது.

எச்.சி.ஜி. அளவு துல்லியமாக காட்டுமா என்று எந்தவொரு சந்தேகமும் இல்லமல் பரிசோதிக்கலாம், எச்.சி.ஜி முடிவுகள் சரியானவையாக இருக்கும்.

பரிசோதிக்கும் போது உங்களுக்கு முடிவுகள் எதிமறையாக வந்தால் என்ன செய்யலாம்?

hCG Levels

பெரும்பாலான வீட்டு கர்ப்ப பரிசோதனை கருவிகள் உடலுறவுக்குப் பிறகு 10-14 நாட்களுக்குப் பிறகு உங்கள் சிறுநீரில் HCG ஐ அளவிட முடியும். நீங்கள் உடலுறவுக்குப் பிறகு 14 நாட்களுக்கும் மேலாக இருந்தும், உங்களுக்கு பரிசோதனை முடிவுகள் எதிர்மறையாக இருந்தால், அந்த இரத்தப்போக்கு உங்கள் மாதவிடாயாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

சோதனை நேர்மறையாக இருந்து இன்னும் இரத்தப்போக்கு இருந்தால். ஆரம்ப கர்ப்பத்தில் இரத்தப்போக்கு ஏற்படுவதற்கான சில காரணங்கள் கருச்சிதைவு மற்றும் உள்வைப்பு இரத்தப்போக்கு ஆகியவை அடங்கும்.

உள்வைப்பு இரத்தப்போக்கு என்றால் என்ன?

pregnancy Bleeding and spotting

“ஒரு குழந்தையை கருத்தரித்த 10 முதல் 14 நாட்களுக்குப் பிறகு சில பெண்களுக்கு யோனியில் இருந்து லேசான இரத்தப்போக்கு ஏற்படுகிறது” இதை தான் ஸ்பாட்டிங்க் என்று கூறுவர். தாயின் கருப்பையின் உட்புறத்தில் கரு தன்னை இணைத்துக் கொள்வதால் இது நிகழ்கிறது.

கர்ப்பம் உறுதியானதும் தொடர்ந்து செய்ய வேண்டிய முக்கிய பரிசோதனை என்ன?

ஆரம்ப கால கர்ப்ப ஸ்கேன், கர்ப்பம் உறுதியான பிறகு 15 நாட்காள் கழித்து அல்டாசவுண்ட் ஸ்கேன் செய்யலாம். அதாவது கர்ப்பம் தரித்து 45 நாட்களில் பார்க்கும் போது கரு தரித்திருப்பதை நம்மால் கண்டறிய முடியும்.

first ultrasound scan in pregnancy

கர்ப்பபையில் குழந்தை ஒற்றை அல்லது பல கர்ப்பமாக இருக்கிறதா, குழந்தை வயிற்றில் தான் இருக்கிறதா, மற்றும் கருவின் இதய துடிப்பு போன்றவைகள் கண்டறியலாம். இதுதான் முதலில் எடுக்க வேண்டிய பரிசோதனை. அதன் பிறகு ஹீமொகுளோபின் அளவு மற்றும் தைராய்டின் அளவுகளை அறிவதற்கு இரத்த பரிசோதனை செய்ய வேண்டும்.

Follow @ Google News : கூகுள் செய்திகள் பக்கத்தில் ஜம்மி ஸ்கேன்ஸ் வலைப்பதிவுகள்!

மேற்கண்ட அனைத்தும் கர்ப்ப பரிசோதனையை பற்றிய தகவல்களை வைத்து கொண்டு கர்ப்பம் கண்டுபிடிப்பது எப்படி (How To Check Pregnancy) என்பதை உங்களால் அறிந்திருக்க முடியும். மேலும் எந்த ஒரு இரத்த பரிசோதனையாக இருந்தாலும் முறையாக மருத்துவரின் ஆலோசனைப்படி செய்ய வேண்டியது அவசியமாகிறது.

5/5 - (205 votes)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here