ஃபோலிகுலர் ஆய்வு

ஃபோலிகுலர் ஆய்வு அதாவது ஃபோலிகுலர் ஸ்கேன் என்பது என்ன என்பதை தம்பதியர் முழுமையாக அறிந்து கொள்ள வேண்டும். தம்பதியர் குழந்தைப்பேறுக்கு முயற்சிக்கும் போது கருத்தரிக்க இயலாத நிலையில் பெண் அண்டவிடுப்பின் கண்காணிக்கும் முறை ஆகும்.

தம்பதியர் கருத்தரிக்க இயலாமல் போகும் போது உரிய காலத்துக்கு பிறகு கருத்தரிப்பை எதிர்கொள்ளாத போது மருத்துவரை அணுகுவார்கள். அப்போது அண்டவிடுப்பின் சுழற்சியை கண்காணிக்க ஒவ்வொரு மாதம் ஃபோலிகுலர் ஸ்கேன் செய்ய அறிவுறுத்த படுவார்கள். இந்த ஸ்கேன் ஏன் அவசியம் என்பதை பார்க்கலாம்.

கருத்தரிப்பை உறுதி செய்யும் ஃபோலிகுலர் ஸ்கேன்

ஃபோலிகுலர் ஸ்கேன் என்பது அண்டவிடுப்பை கண்டுபிடிக்க உதவும் பரிசோதனை. ஒவ்வொரு பெண்ணுக்கும் மாதவிடாய் நாட்களுக்கு பிந்தைய 9 ஆம் நாட்களுக்கு பிறகு அண்டவிடுப்பின் உண்டாகும்.இந்த காலத்தில் கருமுட்டை வெளிவரும் காலத்தை கணக்கிட கருப்பையின் நுண்ணறை வளர்ச்சி மருத்துவரால் ஆராயப்படும். இந்த நேரத்தில் உடலுறவு கொள்ளும் போது அது கருத்தரிப்பதற்கான வாய்ப்பை அதிகரிக்க செய்யும்.

ஒரு முறை மட்டுமே ஆய்வு செய்வதன் மூலம் கருத்தரிப்பு நிகழ்ந்துவிடாது. மாதவிடாய்க்கு பின்பு 9 முதல் 20 நாட்கள் வரை கருமுட்டை வெளிவரும் நேரத்தை கணக்கிட பல முறை செய்ய வேண்டியிருக்கும்.

அதே போன்று ஒவ்வொரு மாதமும் இந்த ஃபோலிகுலர் ஸ்கேன் செய்வதன் மூலம் சில மாதங்களில் கருத்தரிக்கும் வாய்ப்பு அதிகரிக்கலாம். அதனால் தான் இது ஃபோலிகுலர் கண்காணிப்பு என்றும் அழைக்கப்படுகிறது.

ஃபோலிகுலர் ஆய்வு செய்வது எப்படி

பெண் உறுப்பு வழியாக செய்யப்படும் பரிசோதனை ஆகும். இந்த சோனோகிராஃபர்கள் நுண்ணறைக்குள் முட்டையின் வளர்ச்சியை கண்காணிக்க உதவுகிறது. கருமுட்டை வெளிவரும் காலம் முதல், முன்கூட்டியே சிதைந்த நுண்ணறைகள், கர்ப்பப்பை புறணிக்குள் முட்டை பொருத்துதல் என எல்லாமே இந்த சோதனையில் செய்யலாம்.

ஒரு மாதத்தில் பல முறை பரிசோதனை செய்ய நேர்ந்தாலும் குறைந்த நேரத்தில் இந்த ஃபோலிகுலர் ஸ்கேன் செய்துவிட முடியும். இது வலியில்லாத ஸ்கேன்.லேசான அசௌகரியத்தை உண்டாக்கும் அவ்வளவே.

தம்பதியர் அனைவருக்கும் அவசியமா?

இளவயது தம்பதியருக்கு இந்த ஃபோலிகுலர் ஸ்கேன் தேவைப்படாது. 33 வயதைக் கடந்த பெண்களுக்கு ஒரு வருடம் வரை பாதுகாப்பற்ற முறையில் உடலுறவு கொண்டாலும் கருத்தரிக்க இயலாத போது ஃபோலிகுலர் ஆய்வு தேவை.

ஐவிஎஃப் என்னும் செயற்கை கருத்தரிப்பு நிகழ்வு அல்லது ஐயூஐ என்னும் கருப்பையக கருவூட்டல் நடைமுறைகள் மூலம் கருவுறுதல் மருந்துகள் பரிந்துரைக்கப் படுபவர்களுக்கு இந்த ஃபோலிகுலர் ஸ்கேன் அவசியமாகிறது.

ஃபோலிகுலர் ஆய்வுக்கும் பி.சி.ஓ.எஸ் க்கும் இருக்கும் தொடர்பு குறித்து பார்ப்பதற்கு முன்னர் பி.சி.ஓ.எஸ் பிரச்சனை குறித்து சுருக்கமாக பார்க்கலாம்.

பி.சி.ஓ.எஸ் (PCOS) -பாலிசிஸ்டிக் ஓவரியன் சிண்ட்ரோம்

பாலிசிஸ்டிக் ஓவரியன் சிண்ட்ரோம் அல்லது பி.சி.ஓ.எஸ் என்பது பெண்களுக்கு உண்டாகும் ஹார்மோன் கோளாறு. இது வளர்சிதை மாற்றம் முதல் இனப்பெருக்க சிக்கல்கள் வரை உருவாக்கும்.

கருப்பைக்கும் உருவாகும் திரவத்தால் நிரப்பப்பட்ட குமிழ்கள் நீர்க்கட்டிகள் காரணமாக பி.சி.ஓ.எஸ் உண்டாகிறது. கருப்பையில் ஒவ்வொரு மாதமும் கருமுட்டை வெளியிடுகின்றன.

பாலிசிஸ்டிக் ஓவரியன் சிண்ட்ரோம் பிரச்சனை கொண்டுள்ள பெண்களுக்கு கருமுட்டை தாமதமாக உருவாகும். அல்லது உருவாகும் காலத்தில் மாற்றம் உண்டாகலாம். இதனால் தான் வழக்கமான மாதவிடாய் சுழற்சியின் போது சிக்கல்கள் நேரிடுகிறது.

இந்த பி.சி.ஓ.எஸ் (PCOS) உண்டாவதற்கு சரியான காரணங்கள் இதுவரை சொல்லப்படவில்லை ஆனால் பொதுவான காரணங்களில் மரபணு மற்றும் அன்றாட வாழ்க்கை முறை காரணங்களாக சொல்லப்படுகிறது. உடல் பருமனும் பிசிஓஎஸ் உடன் தொடர்பில் இணைக்கப்பட்டுள்ளது.

பி.சி.ஓ.எஸ் இருந்தால் ஏன் ஃபோலிகுலர் ஸ்கேன் அவசியம்

பி.சி.ஓ.எஸ் பெண்கள் அதிக அளவு ஆண் ஹார்மோன்களான ஆண்ட்ரோஜன்கள் கொண்டிருப்பார்கள். இந்த ஆண்ட்ரோஜன் அதிகரிக்கும் போது சிக்கல்கள் அறிகுறிகள் உணரலாம்.

பாலிசிஸ்டிக் ஓவரியன் சிண்ட்ரோம் கொண்டிருக்கும் பெண்கள் ஆண் ஆண்ட்ரோஜன் அதிகமாக கொண்டிருக்கும் போது ஒழுங்கற்ற அல்லது தவறவிட்ட தாமதமான மாதவிடாய் சுழற்சியை கொண்டிருப்பார்கள். இந்த காலத்தில் அவர்களுக்கு அதிகமான ரத்தப்போக்கு உண்டாகிறது. இந்த மாதவிடாய் சுழற்சி காலமானது வலிமிகுந்த மாதவிடாய் நாட்களை உண்டாக்க செய்யும்.

சாதாரணமாக மாதவிடாய் காலத்தில் வயிற்று வலி, அடி வயிறு வலி, இடுப்பு வலி, தொடை வலி போன்ற பிரச்சனைகளை எதிர்கொள்வார்கள். இதனோடு பி.சி.ஓ.எஸ் பிரச்சனையும் கொண்டிருந்தால் மாதவிடாய் நாட்கள் மேலும் அதிகரிக்க செய்யும்.

உடலில் முகத்தில், மார்பில் என தேவையற்ற இடங்களில் முடி வளர்ச்சி இருக்கும். முகப்பருக்கள், அதிகமாக முடி உதிர்தல், தோலில் கருப்பு நிற திட்டுகள், கழுத்தின் பின்புறம் கருமை நிறம் என எல்லாம் உண்டாகும்.

இவையெல்லாம் தாண்டி பி.சி.ஓ.எஸ் பிரச்சனை இருக்கும் பெண்களுக்கு கருவுறுதலில் பிரச்சனை உண்டாகும். பெண் கருவுறாமைக்கு விளங்கும் காரணங்களில் முக்கியமானவை இந்த பி.சி.ஓ.எஸ் பிரச்சனை தான். இளம் பெண்கள் திருமணத்துக்கு முன்பு பி.சி.ஓ.எஸ் (PCOS) பிரச்சனை கொண்டிருந்தால் தாமதிக்காமல் மருத்துவரை அணுக வேண்டும்.

முன்கூட்டியே சிகிச்சை எடுத்து உணவு முறை, வாழ்க்கை முறையில் தகுந்த மாற்றம் செய்யும் போது அதன் அறிகுறிகளை குறைவாக பெறலாம். இந்த அறிகுறிகள் தீவிரமாக இருந்தால் அது திருமணத்துக்கு பின்பு குழந்தைப்பேறு எதிர்பார்க்கும் போது சிக்கலை உண்டாக்கும்.

பி.சி.ஓ.எஸ் அறிகுறிகளை உற்று நோக்கினால் ஏன் இத்தகைய பெண்களுக்கு ஃபோலிகுலர் ஆய்வு அவசியம் என்பதை அறிய முடியும். பி.சி.ஓ.எஸ் (PCOS) பிரச்சனை கொண்டிருக்கும் பெண்கள் ஹார்மோன் சீரற்ற தன்மை பெற்றிருப்பதால் மாதவிடாய் சுழற்சியும் ஒழுங்கற்று இருக்கும்.

மாதவிடாய் சுழற்சி சீராக இல்லாத நிலையில் கருமுட்டை அண்டவிடுப்பின் வெளிவரும் காலமும் மாறிவரும். இதனால் பாதுகாப்பற்ற முறையில் உடலுறவு கொண்டாலும் கருத்தரித்தலில் சிக்கலை சந்திப்பார்கள்.

மாதவிடாய் சுழற்சி என்பது 28 முதல் 35 நாட்களுக்கு இடைப்பட்ட காலத்தில் வரலாம். இது ஒவ்வொரு பெண்களுக்கும் இந்த இடைப்பட்ட காலங்கள் ஆனது மாறுபடலாம். ஆனால் ஒவ்வொரு மாதமும் சீரான இடைவெளியில் இருக்க வேண்டும். அப்படி இருந்தால் அவர்களுக்கு அண்டவிடுப்பின் சுழற்சி காலம் சீராக இருக்கும்.

இவர்கள் பி.சி.ஓ.எஸ் பிரச்சனை கொண்டிருக்கும் போது மாதவிடாய் சுழற்சி என்பது இந்த இடைப்பட்ட காலத்தில் பெற மாட்டார்கள். சிலருக்கு இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்கு ஒரு முறை வரலாம். சிலர் 45 நாட்களுக்கு ஒருமுறை மாதவிடாய் சுழற்சி பெற்றிருப்பார்கள். சிலர் ஆறு மாதங்கள் வரையில் கூட மாதவிடாய் சுழற்சி இல்லாமல் இருப்பார்கள்.

இன்னும் சில பெண்களுக்கு மாதவிடாய் சுழற்சி என்பது ஒரே மாதத்தில் இரண்டு முறை வரலாம். அதோடு உதிரப்போக்கு அதிகமாக இருக்கும். இந்த முறையற்ற மாதவிடாய் சுழற்சி தான் அண்டவிடுப்பின் முறையையும் பாதிக்க செய்கிறது. அண்டவிடுப்பின் சீராக இருந்தால் பெண்ணின் கருமுட்டை விந்தணுக்களுடன் இணைந்து கருவை உண்டாக்கும்.

அதனால் தான் அண்டவிடுப்பின் என்பது குறித்து குழந்தைப்பேறை எதிர்நோக்கும் தம்பதியர் அவசியம் அறிய வேண்டும் என்று சொல்லப்படுகிறது. இந்த அண்டவிடுப்பு எப்போது நிகழ்கிறது என்பதை அறிந்துகொள்ள பி.சி.ஓ.எஸ் பெண்களுக்கு ஃபோலிகுலர் ஆய்வு அவசியமாகிறது.

பி.சி.ஓ.எஸ் பெண்களுக்கு ஃபோலிகுலர் ஆய்வு செய்வதன் மூலம் என்ன நன்மைகள் கிடைக்கும்.

பி.சி.ஓ.எஸ் (PCOS) இருக்கும் பெண்களுக்கு ஒழுங்கற்ற மாதவிடாய் இருப்பதால் அண்டவிடுப்பின் சுழற்சியும் சீரற்று இருக்கும். அதனால் குழந்தைப்பேறு சிகிச்சையின் போது அண்டவிடுப்பு குறித்து அறிந்துகொள்ள ஃபோலிகுலர் ஆய்வு தேவை.

இந்த ஃபோலிகுலர் ஆய்வு மூலம் கருமுட்டையின் சரியான வளர்ச்சியை ஸ்கேன் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

ஃபோலிகுலர் ஸ்கேன் பெண்ணின் மாதவிடாய் சுழற்சிக்கு பிறகு 9 முதல் 20 நாட்களில் செய்யப்படுகிறது. இது ஒரு முறை இல்லாமல் பல முறை செய்யப்படுகிறது. இதன் மூலம் அண்டவிடுப்பின் சுழற்சி கணக்கிடப்பட்டு முட்டை வெளியிடும் காலம் கணிக்கப்பட்டு அந்த நாட்களில் உறவு கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.

இந்த பரிசோதனை தொடர்ந்து செய்யவேண்டுமா, அல்லது குறிப்பிட்ட நாட்களுக்கு இடைவெளியில் செய்ய வேண்டுமா என்பதை மருத்துவர் தீர்மானிப்பார். தொடர்ந்து அண்டவிடுப்பின் கண்காணித்து மாதவிடாய் சுழற்சிக்கு ஊக்கம் அளிக்க கருவுறுதல் மருந்துகளை தருவார்கள். சுழற்சிகள் எத்தனை தேவைப்படலாம் என்பதை மருத்துவரே தீர்மானிப்பார்.

Follow @ Google News : கூகுள் செய்திகள் பக்கத்தில் சென்னை மகளிர் மருத்துவமனை வலைப்பதிவுகள்!

தொடர்ந்து ஆறு மாதங்கள் வரை சிகிச்சை பெற்றும் கருத்தரிப்பதில் பிரச்சனை இருந்தால் அடுத்த கட்ட சிகிச்சைக்கு செல்வார்கள். அதற்கேற்ப ஃபோலிகுலர் ஸ்கேன் போது கருப்பை பிரச்சனைகள் கண்டறியப்படும்.

இது பெண்களின் வயதை பொறுத்து பிரச்சனைகள் மாறுபடலாம். குழந்தையின்மை பிரச்சனை கொண்டு இருக்கும் தம்பதியர் பிசிஓஎஸ் உடன் இருந்தால் ஃபோலிகுலர் ஸ்கேன்க்கு மருத்துவர் பரிந்துரைக்கும் போது தவிர்க்காமல் உட்படுவது பலனளிக்க செய்யும்.

Rate this post

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here