கர்ப்பிணி பெண்களுக்கான டிப்ஸ்!

1665
Health Tips for Pregnant Women

கர்ப்பமா இருக்கும் போது இதை செய்தா (Health Tips for Pregnant Women) ஆரோக்கியமா இருப்பீங்க!

ஒவ்வொரு பெண்ணுக்கும் கர்ப்ப காலம் என்னும் பேறுகாலம் இரண்டாவது ஜென்மம் என்று சொல்வதுண்டு. ஒரு உயிரை அடுத்த சந்ததியை உருவாக்கும் வல்லமை பெண்களுக்கு உண்டு. அத்தகைய சிறப்பு மிக்க கர்ப்பக் காலத்தில் தங்களையும், வயிற்றில் வரும் கருவையும் மிக கவனமாக பார்த்து கொள்ள வேண்டும்.

கர்ப்ப காலத்தில் கர்ப்பிணி பெண்ணிடமிருந்து தான் வயிற்றில் வளரும் குழந்தைக்கு தேவையான சத்துகள் செல்கிறது என்பதால் வழக்கத்தை விட கூடுதலாக சத்தான ஆகாரங்கள் எடுத்துகொள்ள வேண்டும்.

வாழ்க்கை முறையிலும் கருவின் வளர்ச்சி மற்றும் அதன் முக்கியத்துவத்தை மனதில் கொண்டு செயல்பட வேண்டும். அப்படி மிக முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயஙள் (Health Tips for Pregnant Women) குறித்து பார்க்கலாம். 

கர்ப்ப காலத்தில் ட்ரைமெஸ்டர் என்பது என்ன?

கர்ப்ப காலத்தை மூன்று காலங்களாக பிரித்திருக்கிறார்கள். ஒவ்வொரு காலமும் மூன்று மாதங்களை கொண்டிருக்கிறது. முதல் மூன்று மாதங்கள் முதல் ட்ரைமெஸ்டர் என்றும் இரண்டாவது மூன்று மாதங்கள் இரண்டாம் ட்ரைமெஸ்டர் என்றும் மூன்றாம் மூன்று மாதங்கள் மூன்றாம் ட்ரைமெஸ்டர் என்றும் மருத்துவத்துறை அழைக்கிறது.

இதை ஏன் இப்போது சொல்கிறோம் என்றால் இனி வரும் காலங்களில் கர்ப்பிணிகளுக்கான குறிப்புகளில் முதல் ட்ரைமெஸ்டர், இரண்டாம்  ட்ரைமெஸ்டர், மூன்றாம் ட்ரைமெஸ்டர் என  ஒவ்வொரு  காலங்களிலும் பின்பற்ற வேண்டிய குறிப்புகள், உணவு முறைகள், வாழ்க்கை முறைகள், சந்திக்க விரும்பும் பிரச்சனைகள் என பலவற்றையும் தொடர்ந்து பார்க்க போகிறோம்.

இப்போது பொதுவாக கர்ப்பிணி பெண்கள் கர்ப்பகாலம் முழுவதும் சந்திக்கும் பிரச்சனை மற்றும் பொதுவான தேவைப்படும் குறிப்புகள் குறித்து தான் சொல்ல போகிறோம். 

கருவுறுதல் உறுதியானதும் என்ன செய்ய வேண்டும்?

ஒரு பெண் கருவுற்றதை உறுதியானதில் இருந்து பிரசவ காலம் முழுக்க கவனம் செலுத்த வேண்டிய விஷயங்கள் பல உண்டு. கருவுற்றதை மருத்துவரிடம் உறுதி செய்ததும் மருத்துவரின் ஆலோசனையோடு முதலில் உங்கள் உணவு முறைக்கான டயட் ஷீட் வாங்கி அதை பின்பற்றவேண்டும். 

What Happens After You Get a Positive Pregnancy

கருவுற்ற பெண்களுக்கு வேண்டிய சத்துகள் பின்பற்ற வேண்டிய உணவு முறைகள் என அனைத்தையும் மருத்துவர் மற்றும் டயட்டீஷியனிடம் ஆலோசனை பெற்று அதை தவறாமல் பின்பற்ற வேண்டும். 

சரியான இடைவெளியில் பரிசோதனை அவசியமா?

அதிக பலவீனம், உடல் குறைபாடு போன்ற நேரங்களில் கருச்சிதைவு பிரச்சனை வரை கொண்டுவிடும் என்பதால் அதிக கவனம் அவசியம்.

கருவுற்றலை உறுதி செய்ததும் உங்களுக்கு பிரசவம் பார்க்கும்  மருத்துவரை தேர்வு செய்து எப்போதெல்லாம் பரிசோதனை செய்ய அறிவுறுத்துகிறார்களோ அப்போதெல்லாம் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.

Regular Pregnancy Test

கர்ப்ப கால இரத்த அழுத்தம், கர்ப்பிணிக்கு நீரிழிவு, ஹெச்.ஐ.வி முதலான பரிசோதனைகள் அவசியம். இவை தாண்டி உங்களுக்கு வேறு ஏதேனும் பிரச்சனைகள் இருந்தால் அதையும் மருத்துவரிடம் தெரிவிப்பது அவசியம்.

இவை தவிர கருவின் வளர்ச்சிக்குரிய ஸ்கேன்கள், இரத்த பரிசோதனை போன்றவையும் அவசியம். கருவுற்ற காலத்தில் முதல் ட்ரைமெஸ்டர் மாதங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

கர்ப்ப காலம் முழுவதும் குழந்தையின் வளார்ச்சியை கண்காணிக்க மருத்துவரின் அறிவுறுத்தலோடு அனைத்து பரிசோதனையையும் உரிய இடைவேளையில் செய்து கொள்ள வேண்டும். 

கர்ப்ப காலத்தில் உணவு முறை

பொதுவாகவே கர்ப்ப காலத்தில்  கர்ப்பிணி பெண்களுக்கு சத்து குறைபாடு நேர்வது உண்டு, எனவே கர்ப்பிணி பெண்கள் சாப்பிட வேண்டிய உணவு வகைகள் மருத்துவரிடம் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும்.

Pregnancy Foods

ஆரோக்கியமான பெண்களுக்கே இந்த நிலை என்னும் போது பலவீனமான பெண்களுக்கு மேலும் பலவீனம் உண்டாகும். அன்றாட உணவில் புரதச்சத்து, இரும்புச்சத்து, ஃபோலிக் அமிலம், வைட்டமின் சத்து  போன்றவை அனைத்துமே உடலுக்கு நிறைவாக கிடைக்க அதற்கேற்ற உணவை திட்டமிட்டு எடுத்துகொள்ள வேண்டும். 

அன்றாட உணவில் அவசியம் பசுமையான காய்கறிகள், கீரைகள், முழு தானியங்கள், உலர் பழங்கள், அசைவம் சாப்பிடுபவர்கள் இறைச்சி போன்றவற்றை சேர்க்க வேண்டும்.

அதே நேரம் எண்ணெயில் பொரித்த உணவுகள், நொறுக்குத் தீனிகள், செயற்கை இனிப்புகள், கோலா பானங்களுக்கு குட் பை சொல்ல வேண்டும். எப்போது மிதமான வெந்நீர் குடிப்பதன் மூலம் உணவு செரிமானம் எளிதாகும் நெஞ்செரிச்சல்  இல்லாமல் தவிர்க்க முடியும். 

கர்ப்ப காலத்தில் உடற்பயிற்சி

கர்ப்ப காலத்தில் அதிலும் முதல் ட்ரைமெஸ்டர் மாதங்கள் கடுமையான உடல் சோர்வு, வாந்தி, மசக்கை போன்றவை இருக்கும். உடல் ஆரோக்கியமாக இருந்தால் தான் அதை எதிர்கொள்ள முடியும். பலவீனமான பெண்கள் கூடுதல் சோர்வுக்கு ஆளாவதுண்டு. இந்த கர்ப்பகால மசக்கை, காலை சோர்வு நீங்க மிதமான கர்ப்ப கால உடற்பயிற்சி செய்யலாம். 

Pregnancy Exercise

உடற்பயிற்சி கடுமையாக உடலை வறுத்தி செய்ய வேண்டும் என்பதில்லை மிதமான நடைபயிற்சியே உங்கள் சோர்வை விரட்டி விடும். மார்னிங் சிக்னஸ் இருப்பவர்கள் மாலை நேரங்களிலும் உணவுக்கு பின்பும் மிதமான நடைபயிற்சி மேற்கொள்ளலாம். சிலருக்கு கர்ப்ப காலத்தில் உடல் சோர்வு இருக்கும். இதை சீராக வைக்க நடைபயிற்சி செய்யலாம். 

கர்ப்ப காலத்தில் நடைபயிற்சி செய்வதன் மூலம் உணவு செரிமானம் ஆகலாம். நெஞ்செரிச்சல் இல்லாமல் தவிர்க்க முடியும். இடுப்பு எலும்புகள் வலுப்பெறும். பிரசவம் எளிதாக இருக்கும். 

கர்ப்ப காலத்தில் ஓய்வு

கர்ப்ப காலத்தில் தூக்கம் மிக அவசியம். ஆனால் கர்ப்பகால ஹார்மோன்கள் உடல் மற்றும் மனம் இரண்டிலும் பல மாற்றங்களை உண்டாக்கும். அதோடு கர்ப்பகாலத்தில் அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும் என்னும் உந்துதல் உண்டாகும்.

இதனால் இரவு நேரங்களில் தூக்கம் கெடும். இது தவிர்க்க முடியாதது. அதே போன்று சிறுநீரை அடக்கி வைப்பதன் மூலம் கர்ப்ப காலத்தில் சிறுநீர் தொற்று உண்டாகலாம் என்பதால்  அடக்கவும் கூடாது. தண்ணீர் குடிப்பதையும் குறைத்துகொள்ள கூடாது. 

இரவு நேரங்களில் உணவுக்கு பிறகு நடைபயிற்சியும் வெதுவெதுப்பான நீரில் குளியலும் போட்டு ஒரு டம்ளர் பால் குடித்த பிறகு  தூங்கினால் தூக்கம் ஆழ்ந்து இருக்கும். 

Follow @ Google News : கூகுள் செய்திகள் பக்கத்தில் சென்னை மகளிர் மருத்துவமனை வலைப்பதிவுகள்!

கர்ப்பக் காலத்தில் தூங்கும் நிலை

கர்ப்பக் காலத்தில் தூங்கும் முறை தனியாக உண்டு. எப்போதும் மல்லாந்து படுக்க கூடாது. குப்புற கவிழ்ந்து படுக்க கூடாது. எப்போதும் ஒருபக்கமாக படுக்க வேண்டும். குறிப்பாக இடதுபக்கமான தோள்பட்டை வழியே படுக்க வேண்டும். அப்போதுதான் குழந்தைக்கு ரத்த ஓட்டம் சீராக கிடைக்கும்.

Sleep During Pregnancy

கர்ப்பிணிக்கு மூச்சுத்திணறல் இல்லாமல் சீரான சுவாசம் இருக்கும். கர்ப்பிணிகள் தூங்குவதற்கென்றே பிரத்யேகமான தலையணைகள் மார்க்கெட்டில்  கிடைக்கிறது. இரவு நேரம் போன்று பகல் நேரங்களிலும் தூக்கம் வருவது தூங்குவது நல்லது. 

துக்கம் வராத போது பிடித்த நகைச்சுவையான புத்தகங்கள், மெல்லிய இசைகள் கேட்கலாம். இதன் மூலம்  தாய் சேய் இருவருக்கும் மகிழ்ச்சி அதிகரிக்கும். 

கர்ப்ப காலத்தில் முறையான மருத்துவ பரிசோதனை, சத்து குறைபாடில்லாத திட்டமிட்ட உணவுகள்,  உடலுக்கு தேவையான உடற்பயிற்சி, மன அழுத்தம் இல்லாமல் மகிழ்ச்சியான மனநிலை இந்த நான்கும் சீராக இருந்தாலே பிரசவம் ஆரோக்கியமாகும். தாய்- சேய் இருவரது நலனும் சிறப்பாக இருக்கும்.

5/5 - (285 votes)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here