கர்ப்ப காலத்தில் நீரிழிவு : அறிகுறிகள், காரணங்கள் மற்றும் சிகிச்சை முறைகள்!

644
Gestational Diabetes

கர்ப்ப காலத்தில் நீரிழிவு என்பது முதல் முறையாக கண்டறியப்படும் நீரிழிவு நோயாகும். மற்ற வகை நீரிழிவு போலவே கர்ப்பகால நீரிழிவும் உங்கள் செல்கள் சர்க்கரையை பயன்படுத்துவதை பாதிக்கிறது. இது கர்ப்பம் மற்றும் குழந்தையின் ஆரோக்கியத்தை பாதிக்கும் உயர் இரத்த சர்க்கரையை ஏற்படுத்துகிறது.

கர்ப்ப சிக்கல் இருந்தாலும் கருவுற்றிருக்கும் தாய்மார்கள் ஆரோக்கியமான உணவுகளை எடுத்துகொள்வதன் மூலமும் கர்ப்ப காலத்தில் உடற்பயிற்சி செய்வதன் மூலமும் மருந்துகளை (அவசியமெனில்) எடுப்பதன் மூலமும் கர்ப்பகால சர்க்கரை நோய் (Gestational Diabetes) நோயை கட்டுப்படுத்தலாம். ஏனெனில் இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்துவது உங்களையும் உங்கள் குழந்தையையும் ஆரோக்கியமாக வைத்திருக்க செய்யும். மேலும் கடினமான பிரசவ சிக்கலையும் தடுக்க செய்யும்.

கர்ப்பகால நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு பிரசவத்துக்கு பிறகு இரத்த சர்க்கரை அளவு வழக்கமான இயல்பு நிலைக்கு திரும்பும். ஆனால் கர்ப்பகால சர்க்கரை நோய் இருந்தால் எதிர்காலத்தில் டைப் 2 நீரிழிவு நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. அதனால் தான் கர்ப்பகாலத்தில் இரத்த சர்க்கரை அளவை அடிக்கடி பரிசோதிக்க வேண்டும் என்று மருத்துவர்கள் வலியுறுத்துகிறார்கள்.

மேலும் தெரிந்து கொள்ள: கர்ப்ப காலத்தில் தைராய்டு இருந்தால் ஏற்படும் பிரச்சனைகள்?

கர்ப்பகால நீரிழிவு நோய் அறிகுறிகள்

கர்ப்பகாலத்தில் நீரிழிவு நோய் (Gestational Diabetes) இருந்தாலும் சிலருக்கு அறிகுறிகள் எதுவும் காட்டாது. சிலருக்கு அறிகுறிகளை உண்டாக்கலாம். எனினும் நீங்கள் பயப்பட வேண்டிய அவசியம் இல்லாத சில அறிகுறிகளும் உண்டு. அதனால் இந்த அறிகுறிகள் தென்பட்டதும் மருத்துவரை அணுகுவது நல்லது.

 • வழக்கத்துக்கு மாறாக தாகம் எடுப்பது
 • அடிக்கடி சிறுநீர் கழித்தல்
 • அதிக சோர்வு
 • தீவிர குமட்டல்
 • தோல், பெண் உறுப்பு மற்றும் சிறுநீர்ப்பையில் அடிக்கடி தொற்று
 • மங்கலான பார்வை

இந்த அறிகுறிகள் இருந்தால் கர்ப்பகால சர்க்கரை நோய்க்கான பரிசோதனையை செய்து கொள்வது நல்லது.

கர்ப்ப காலத்தில் நீரிழிவு வருவதற்கான காரணங்கள்

கர்ப்ப காலத்தில் நீரிழிவு நோய் பாதிப்புக்கான காரணம் குறித்து ஆராய்ச்சியாளர்களுக்கு இன்னும் முழுமையான நிரூபனம் புலப்படவில்லை. எனினும் கர்ப்பத்துக்கு முன் அதிக எடை நீரிழிவு உண்டாக காரணமாக இருக்கலாம்.

பொதுவாக, உங்கள் இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க பல்வேறு ஹார்மோன்கள் வேலை செய்கின்றன. ஆனால் கர்ப்பகாலத்தில் ஹார்மோன் அளவுகள் மாறி உடல் இரத்த சர்க்கரையை திறம்பட செயலாக்குவதை இவை கடினமாக்குவதால் இரத்த சர்க்கரை அளவு அதிகரிக்கிறது.

அதாவது கர்ப்பகாலத்தில் நஞ்சுக்கொடி கருவின் ஊட்டச்சத்தின் ஆதாரமாக செயல்படுகிறது மற்றும் கர்ப்பத்தை பராமரிக்க ஹார்மோன்களை உருவாக்குகிறது. இந்த ஹார்மோன்களில் சில ஈஸ்ட்ரோஜன் மற்றும் கார்டிசோல் மற்றும் மனித நஞ்சுக்கொடி லாக்டோஜென் போன்றவை. இவை இன்சுலின் சுரப்பை தடுக்கலாம்.இன்சுலின் எதிர்ப்பை தூண்டலாம்.

இன்சுலின் கணையத்திலிருந்து சுரக்கும் ஹார்மோன். இது உடலின் செல்கள் குளுக்கோஸை உறிஞ்சும் போது இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுகிறது. இன்சுலின் சுரப்பை சமாளிக்க தாயின் உடல் அதிக இன்சுலினை உற்பத்தி செய்கிறது. ஆனால் கர்ப்பம் முன்னேறும் போது இன்சுலின் உற்பத்தியானது. இன்சுலின் எதிர்ப்பை கொள்ளும் போது கர்ப்பகால சர்க்கரை நோய் உண்டாகிறது.

மேலும் தெரிந்து கொள்ள: கரு வளர்ச்சி குறைபாடு காரணங்கள், அறிகுறிகள், தீர்வுகள் என்ன?

கர்ப்பகால நீரிழிவு நோய்க்கான ஆபத்து யாருக்கு அதிகம்?

நோய்கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் படி சில கர்ப்பிணி பெண்களுக்கு கர்ப்பத்துக்கு முன்பே இன்சுலின் எதிர்ப்பு உள்ளது. இது கர்ப்பகாலத்தில் நீரிழிவு நோயை உண்டாக்க காரணமாகிறது. இவை தவிர வேறு யாருக்கு வருவதற்கான வாய்ப்பு உள்ளது

 • 25 வயதுக்கு மேல் இருக்கும் பெண்கள் நீரிழிவு நோய் வரலாறு குடும்பத்தை கொண்டிருந்தால்
 • அதிக எடை கொண்டிருக்கும் பெண்கள்
 • உடல் பருமன்
 • கர்ப்ப காலத்தில் உடல் உழைப்பு இல்லாமல் ஒரே இடத்தில் இருப்பது
 • முந்தைய கர்ப்பத்தில் சர்க்கரை நோய் எதிர்கொண்டவர்கள்.
 • முதல் பிரசவத்தில் ஒன்பது பவுண்டுகளுக்கு மேல் எடையுள்ள குழந்தை பெற்றெடுத்தது
 • விவரிக்கப்படாத கருச்சிதைவு
 • குழந்தை இறந்து பிறப்பது
 • குளுக்கோகார்டிகாய்டுகள் போன்ற சில மருந்துகளின் விளைவுகள்
 • பாலிசிஸ்டிக் ஓவரியன் சிண்ட்ரோம்
 • உயர் இரத்த அழுத்தம்
 • இதயநோய் போன்ற நீண்ட கால உடல்நல பிரச்சனைகள்
 • கர்ப்பம் தரிப்பதற்கு முன்பு டைப் 1 அல்லது டைப் 2 நீரிழிவு நோய் கொண்டிருக்கலாம்.
  நீரிழிவு நோய்களின் காரணங்கள் வேறுபட்டாலும் இரண்டும் கர்ப்பகால சர்க்கரை நோயை உண்டாக்க கூடியவை.

நீரிழிவு நோயால் என்ன மாதிரியான ஆபத்து உண்டாகும்?

கர்ப்பகால நீரிழிவு (Gestational Diabetes) கவனிக்காமல் விட்டால் இது இரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிக்கும். உயர் இரத்த சர்க்கரை அளவு உங்களுக்கும் உங்கள் குழந்தைக்கும் சிக்கல்களை உண்டாக்கலாம். பிரசவம் சுகப்பிரசவம் ஆகாமல் சி பிரிவு உண்டாகலாம்.

குழந்தையை பாதிக்கக்கூடிய சிக்கல்கள் ஏதேனும் கர்ப்பகால நீரிழிவில் இருந்தால் அது கீழ்க்கண்ட அதிக ஆபத்தை உண்டாக்கலாம்.

அதிகப்படியான எடை

தாய்மார்களின் இரத்த சர்க்கரை அளவு அதிகமாக இருந்தால் குழந்தையின் எடை அதிகமாக இருக்கலாம். இதனால் சுகப்பிரசவமாக வாய்ப்பிருக்காது. பெரும்பாலும் சிசேரியன் பிரசவம் ஆகலாம். அல்லது முன்கூட்டிய பிறப்பு உண்டாகலாம். இத்தகைய அபாயத்தை அதிகரிக்கலாம். .

குழந்தைக்கு சுவாச பிரச்சனை

கர்ப்பகால சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட பெண்களின் குழந்தைகள் ஆரம்பத்தில் சுவாசக்கோளாறு நோய்க்குறியை அனுபவிக்கலாம். இது சுவாசத்தை கடினமாக்கும். குறைந்த இரத்த சர்க்கரை இருந்தால் குழந்தைக்கு வலிப்புத்தாக்கங்களை உண்டாக்கலாம். உடனடி உணவு மற்றும் சில நேரங்களில் ஒரு நரம்பு வழியாக குளுக்கோஸ் கரைசல் குழந்தையின் இரத்த சர்க்கரை அளவை இயல்பு நிலைக்கு கொண்டு வரலாம்.

குழந்தையின் எடை பிற்காலத்தில் உடல் பருமன் மற்றும் வகை 2 நீரீழிவு (Type 2 Diabetes) உண்டாக்கலாம்.

சிகிச்சையளிக்கப்படாத கர்ப்பகால நீரிழிவு இருந்தால் சில சமயங்களில் குழந்தை பிறந்த உடன் இறக்கவோ அல்லது பிறந்த உடனோ இறக்கலாம். இது அரிதானது.

தாயை பாதிக்க கூடிய சிக்கல்கள்

 • உயர் இரத்த அழுத்தம் மற்றும் ப்ரீக்ளாம்ப்சியா

கர்ப்பகால நீரிழிவு உயர் இரத்த அழுத்தம் மற்றும் ப்ரீக்ளாம்ப்சியாவின் (Preeclampsia) அபாயத்தை அதிகரிக்கிறது. உயர் இரத்த அழுத்தமானது தாய் மற்றும் குழந்தை இருவரின் உயிருக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடிய அறிகுறிகளை உண்டு செய்யும் தீவிர சிக்கலாகும்.

மேலும் தெரிந்து கொள்ள: கர்ப்ப காலத்தில் ஹீமோகுளோபின் அளவை எப்படி அதிகரிப்பது?
 • அறுவை சிகிச்சை பிரசவம்

கர்ப்பகால சர்க்கரை நோய் (Gestational Diabetes) கட்டுக்குள் இல்லாமல் இருந்தால் சி- பிரிவு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். எதிர்காலத்தில் நீரிழிவு நோய் வருவதற்கும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

கர்ப்பகால நீரிழிவு கண்டறியும் பரிசோதனை

பொதுவாக இந்த இன்சுலின் விளைவு ஆனது கர்ப்பத்தின் 20 மற்றும் 24 வது வாரங்களுக்கு இடையில் தொடங்குகிறது. அதனால் மகப்பேறுக்கு முற்பட்ட கவனிப்பின் ஒரு பகுதியாக கர்ப்பத்தின் 24 மற்றும் 28 வது வாரங்களுக்கு இடையில் வழக்கமான பரிசோதனையின் போது அனைத்து கர்ப்பிணிகளுக்கும் இந்த நீரிழிவு பரிசோதனை செய்யப்படுகிறது.

பெண்ணுக்கு நீரிழிவு நோய்க்கான ஆபத்து காரணி இருந்தால் மருத்துவரே கர்ப்பகாலத்தில் இந்த பரிசோதனைக்கு அறிவுறுத்தலாம்.

குளுக்கோஸ் சோதனை

கர்ப்பகால நீரிழிவுக்கு முதல் பரிசோதனை இது. பரிசோதனைக்காக 50 கிராம் சர்க்கரை. குளுக்கோஸ் கொண்ட இனிப்பு திரவத்தை குடிக்க வலியுறுத்துவார்கள். பிறகு 1 மணி நேரம் கழித்து உங்கள் இரத்த சர்க்கரை அளவை அளவிட இரத்த பரிசோதனை மேற்கொள்வார்கள்.

இரத்த சர்க்கரை அளவு 140mg/dL -ஐ விட அதிகமாகவோ அல்லது சமமாகவோ இருந்தால் மருத்துவர் வாய்வழி குளுக்கோஸ் சகிப்புத்தன்மை சோதனைக்கு பரிந்துரைப்பார் சர்க்கரை அளவு 200mg/dL விட அதிகமாக இருந்தால் உங்களுக்கு டைப் – 2 நீரிழிவு நோய் இருக்கலாம்.

Follow @ Google News : கூகுள் செய்திகள் பக்கத்தில் சென்னை மகளிர் மருத்துவமனை வலைப்பதிவுகள்!

வாய்வழி குளுக்கோஸ் சகிப்புத்தன்மை சோதனை

இது காலையில் வெறும் வயிற்றில் உடலில் இருக்கும் குளுக்கோஸ் அளவை வெளியிடுகிறது. சோதனைக்கு முதலில் குறைந்தது எட்டு மணி நேரம் உண்ணாவிரதம் இருக்க வேண்டும். பிறகு சுகாதார நிபுணர் இரத்த மாதிரியை எடுத்து, 300 மில்லி தண்ணீரில் 75 கிராம் சர்க்கரை, குளுக்கோஸ் அடங்கிய இனிப்பு திரவத்தை கொடுப்பார்.

ஒவ்வொரு மணி நேரமும் இரண்டு முதல் மூன்று மணி நேரம் வரை சர்க்கரை அளவு பரிசோதிக்கப்படும். இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட பரிசோதனை அதிகமாகவோ அல்லது சமமாகவோ இருந்தால் நீரிழிவை குறிக்கும்.

ஒரு பெண்ணுக்கு ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நீரிழிவு ஆபத்து இருந்தால் முதல் முறை மருத்துவரை அணுகும் போதே சரியான இடைவெளியில் குளுக்கோஸ் பரிசோதனை பரிந்துரைக்கப்படுகிறது. சில நேரங்களில் சிறுநீரில் உள்ள குளுக்கோஸை பரிசோதிப்பதற்காக சிறுநீர் பரிசோதனையை மருத்துவர் பரிந்துரைக்கலாம்.

கர்ப்பகால நீரிழிவு சிகிச்சை

ஆரோக்கியமான உணவு சுறுசுறுப்பான வாழ்க்கை முறை மற்றும் மருந்துகள் தேவைப்பட்டால் மருத்துவரே வழங்குவார். கர்ப்பகால சர்க்கரை நோயை நிர்வகிக்க என்ன செய்யலாம்

ஆரோக்கியமான உணவு

கர்ப்பகால நீரிழிவு உள்ள பெண்கள் தங்கள் சர்க்கரை அளவுகள், செயல்பாடு அளவுகள் மற்றும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தின் அடிப்படையில் உணவு திட்டத்தை பின்பற்ற வேண்டும். என்ன சாப்பிட வேண்டும். எவ்வளவு சாப்பிட வேண்டும் என்ற விவரங்களுடன் நன்கு சமநிலையான திட்டத்தை திட்டமிட வேண்டும். இதை மருத்துவர் அல்லது ஊட்டச்சத்து நிபுணர் பரிந்துரைப்பார்.

உணவை ஒரே நேரத்தில் எடுக்காமல் இடைவெளிவிட்டு இரண்டு முதல் மூன்று மணி நேரத்துக்கு ஒருமுறை எடுக்கலாம். கார்போஹைட்ரேட் எடுக்கும் போது இது முக்கியமான முறை. கார்ப் நிறைந்த உணவுகள் தகுந்த இடைவெளியில் வைப்பது சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுகிறது.

மேலும் தெரிந்து கொள்ள: கர்ப்ப காலத்தில் எடுத்துக்கொள்ள வேண்டிய உணவுகள்!

முழு தானியங்கள், குறைந்த சர்க்கரை கொண்ட பழங்கள், மாவுச்சத்துள்ள காய்கறிகள் என சிக்கலான கார்போஹைட்ரேட்டுகளை சாப்பிடுங்கள், கொழுப்பு நிறைந்த மீன், கொழுப்பு இல்லாத அல்லது குறைந்த கொழுப்புள்ள பால், மெலிந்த இறைச்சி மற்றும் சோயா பொருள்கள் போன்ற புரத உணவுகளை இரண்டு அல்லது மூன்று பரிமாறல்களில் உண்ணுங்கள்.

வெண்ணெய், உப்பு சேர்க்காத பருப்புகள் விதைகள் மற்றும் ஆலிவ் எண்ணெய் போன்ற இதய ஆரோக்கியமான ஒமேகா 3 நிறைந்த உணவுகளை சேர்க்கவும். கர்ப்பகால நீரிழிவு கொண்டுள்ள பெண்கள் தங்கள் வாழ்நாளில் டைப் 2 நீரிழிவு நோயை உருவாக்கும் அபாயத்தில் இருப்பதால் கர்ப்பத்துக்கு பிறகும் கூட ஆரோக்கியமான எடை மற்றும் பாதுகாப்பான சர்க்கரை அளவை பராமரிப்பது ஆரோக்கியத்துக்கு அவசியம். இது குறித்து மேலும் சந்தேகம் இருந்தால் மருத்துவரை அணுகுங்கள்.

5/5 - (1 vote)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here