கரு வளர்ச்சி நிலைகள் (Fetal Development Stages) என்றால் என்ன?

கர்ப்பிணியின் முதல் மூன்று மாத கருவளர்ச்சி குறித்து அறிவோமா?

கருவுற்ற  ஒரே நாளில் கருமுட்டை பல கலமாக பிரிகிறது என்பது தெரியுமா? ஒரு பெண் கருத்தரித்த எட்டு வாரங்களுக்குள் அதாவது இரண்டு மாதங்களுக்குள் கருவளர்ச்சி நிலைகள், குழந்தை கர்ப்பப்பையில் பொருந்தும். கர்ப்பகாலம் என்பது 40 வாரங்கள் வரை கணக்கிலடப்படும். 

கர்ப்ப காலம் மூன்று  மூன்று மாதங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. இந்த மூன்று கட்டத்திலும் உங்களது குழந்தையின் வளர்ச்சி பற்றி நீங்கள் அறிந்து கொள்ள விரும்பினால் தொடர்ந்து படியுங்கள். 

ஒரு பெண் கருவுறுதல் என்பது அவளது இறுதி மாதவிடாய் காலத்தின் முதல் நாளில் தொடங்குகிறது. குழந்தை பிறப்பின் சரியான தேதியை குறிக்கும் போது அப்பெண்ணின் இறுதி மாதவிடாய் நாளின் முதல் தேதியே பெரும்பாலும் இருக்கும். கருவின் வளர்ச்சி நிலைகள் குறித்து இப்போது அறிந்துகொள்வோம். கருவின் வளர்ச்சி நிலைகள் குறித்து தற்போது முதல் மூன்று மாதங்கள் 12 வாரங்கள் வரையான கரு வளர்ச்சி குறித்து பார்க்கலாம். 

கருவுற்ற மூன்று மூன்று மாதங்களில் முதல் மூன்று மாதங்களில் அதாவது 12 வாரங்கள் வரை கருவின் வளர்ச்சி நிலைகள் குறித்து பார்க்கலாம். இந்த மூன்று மாதங்களில் வயிற்றீல் வளரும் கருவானது சிறிய செல்களிலிருந்து குழந்தையின் உருவ அம்சங்களை கொண்ட கருவாக மாற தொடங்கும். 

கருவுற்ற முதல் மாதத்தில் முட்டை வளரும் போது அதை சுற்றி  நீர் இறுக்கமான சாக் போன்று உருவாகி அது படிப்படியாக திரவத்தால் நிரப்பப்படுகிறது. இது தான் அம்னோடிக் திரவம் என்று சொல்லப்படுகிறது. மேலும் இது வளர்ந்து வரும் கருவை மென்மையாக்க கூடும். இப்போதுதான் நஞ்சுக்கொடியும் உருவாகிறது. 

நஞ்சுக்கொடி என்பது வட்டமான தட்டையான உறுப்பு. இது தான் தாயிடமிருந்து குழந்தைக்கு ஊட்டச்சத்துகளை அளிக்கிறது. குழந்தையின் கழிவுகளை மாற்றுகிறது. கர்ப்பகாலம் முழுவதுமே உங்கள் குழந்தைக்கு நஞ்சுக்கொடி உணவு ஆதாரமாக செயல்படுகிறது. 

இந்த முதல் மாதங்களில் கருவிற்கு கண்களுக்கு பெரிய இருண்ட வட்டங்களுடன் ஒரு  முகம், வாய், கீழ், தாடை மற்றும் தொண்டை உருவாகும், ரத்த அணுக்கள் வடிவம் வரும். சுழற்சியோடு சிறிய இதயம் முதல் மாதத்தின் இறுதியில் உருவாகும்.  அப்போது இதயத்துடிப்பு நிமிடத்துக்கு 65 முறை இருக்கும். இந்த முதல் மாதத்தில் கருவானது ஒரு அரிசி அளவு இருக்கும். 

இரண்டாவது மாதம் அதாவது  5 வது வாரங்கள் முதல் 8 வது வாரங்கள் வரை

குழந்தையின் முக்அம் சீராக் தொடங்குகிறது. குழந்தையின் காதுகளும் தலையின் ஓரத்தில் தோலின் ஒரு சிறிய மடிப்பு போல் தொடங்குகிறது.  பிறகு கைகள், கால்களில் சிறிய மொட்டுகள் உருவாகும். விரல்கள், கால்விரல்கள்  கண்களும் படிப்படியாக உருவாகின்றன. 

நரம்புக்குழாய் மூளை, முதுகெலும்பு மத்திய நரம்பு மண்டலம் உடன் நரம்பு திசுக்களும் இப்போது உருவாக கூடும். குழந்தையி செரிமான பாதை உணர்ச்சி உணர்ச்சி உறுப்புகளும் இப்போது உருவாக கூடும். அடுத்தது குருத்தெலும்புகள் மாறக்கூடும்.  எனினும் இந்த நிலையில் கருவின் தலையானது அதன் உடல் பகுதிகளுக்கு ஏற்ப மிகபெரியதாக இருக்கும். கருவின் ஆறாவது வாரங்களில் இதயத்துடிப்பை நன்றாக உணர முடியும்.  இரண்டாவது மாதங்களின் முடிவில் இதை கரு என்று சொல்லலாம். அதோடு இந்த வாரத்தில் குழந்தை 1 அங்குல நீளம்  கொண்டிருக்க கூடும். 

மூன்றாவது மாதம்  கருவுருவான 9 வாரங்கள் முதல் 12 வாரங்கள் வரை

குழந்தையின் கைகள், கை விரல்கள், கால்கள், கால்விரல்கள் முழுமையாக உருவாக கூடும். இந்த காலகட்டத்தில் தான் குழந்தை அதன் கைமுட்டிகளையும், வாயையும் திறந்து மூடக்கூடிய வேலையை செய்யும். விரல்கள் வளர்ச்சியில் விரல் நகங்களும், கால் விரல் நகங்களும் கூட உருவாக கூடும். கருவின் காதுகள் வெளிப்புற காதுகள் உருவாக கூடும். கருவின் பற்களின் ஆரம்பமாக  ஈறுகள் உருவாகும். கருவின் இனப்பெருக்க்க உறுப்புகள் உருவாகும் காலமும் இதுதான். இந்த இனப்பெருக்க உறுப்புகளை கொண்டு தான் முன்பு ஆண் குழந்தையா, பெண் குழந்தையா என்று கண்டறிந்தார்கள். எனினும் இதை அல்ட்ராசவுண்ட் பரிசோதனையில் இந்த காலகட்டத்தில் தெளிவாக வேறுபடுத்திபார்ப்பது சற்று கடினமும் கூட. அனுபவமிக்க வல்லுநர்களால் மட்டுமே இதை பற்றி  சரியாக சொல்ல முடியும். 

Follow @ Google News : கூகுள் செய்திகள் பக்கத்தில் சென்னை மகளிர் மருத்துவமனை வலைப்பதிவுகள்!

மூன்றாவது மாதத்தின் முடிவில் குழந்தையின் வளர்ச்சி முழுமையாக உருவாகிவிடும். அதாவது குழந்தை முழுமையாக உருவாகி குழந்தையின் அனைத்து உறுப்புகளும்  உருவாகி இருக்கும். இப்போது குழந்தையின் சிறுநீர் செயல்பாடுகளும், கல்லீரல், பித்தப்பையும் உருவாக கூடும். மூன்றாவது  மாதத்தின் முடிவில் குழந்தை  1 அவுன்ஸ் எடையோடு சுமார் 4 அங்குல நீளமும் கொண்டிருக்கும். 

மூன்று மாதங்களில் குழந்தையின் வளர்ச்சி  ஓரளவு இருப்பதால் கருச்சிதைவு ஏற்படுவதற்கான வாய்ப்பு இந்த மூன்று மாதங்களுக்கு பிறகு  ஓரளவு குறைந்திருக்கும். எனினும் கர்ப்பிணி பெண் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். ஏனெனில் உடல் பலவீனமாக இருக்கும் பெண்கள்  மருத்துவரின் ஆலோசனையின் பெயரில்  நடந்துகொள்வது கருச்சிதைவு ஆபத்தை பெருமளவு குறைக்கும். 

கர்ப்பிணியின் முதல் மூன்று மாத காலத்தில் கருவின் வளர்ச்சி நிலைகள் குறித்து அறிந்துகொண்டோம் அடுத்த இரண்டு மூன்று மாதங்கள் கருவின் வளர்ச்சி குறித்து மேலும் விரிவாக பார்க்கலாம்.  

மேலும் கரு வளர்ச்சி பற்றிய தகவல்கள்:

கரு எவ்வாறு உருவாகிறது – முதல் ட்ரைமெஸ்டர்

கரு எவ்வாறு உருவாகிறது – இரண்டாம் ட்ரைமெஸ்டர்

கரு வளர்ச்சி குறைபாடு காரணங்கள்

5/5 - (212 votes)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here