பொதுவாகவே ஒரு பெண் கருத்தரிக்கும் போது விந்தணுக்கள் கருமுட்டையை நோக்கி நீந்தி சென்று சேரும் போதுதான் கருத்தரிப்பு நிகழ்கிறது என்று நினைத்திருக்கிறோம். விந்தணுக்கள் தரமானதாக உறுதியாக வேகமாக நீந்திசெல்லும் என்று தான் படித்திருக்கிறோம்.
தற்போது விந்தணுக்கள் தரமானதா என்பதை தேர்வு செய்வதே பெண்ணின் கருமுட்டை தான் என்பது கண்டறியப்பட்டுள்ளது. உண்மைதான் 2020 ஆம் ஆண்டின் ஆய்வு ஒன்றில் விந்தணுக்கள் அதன் முதல் இடத்தை பெற நீந்தி வேகமாக செல்வதில்லை. எது சேரவேண்டும் என்பதை கருமுட்டை தான் தேர்வு செய்தது கண்டறியப்பட்டது.
ஸ்டாக்ஹோம் பல்கலைக்கழகம் மற்றும் மான்செஸ்டர் பல்கலைக்கழத்தின் NHS அறக்கட்டளை ஆகியவற்றின் ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வின்படி தான் கருமுட்டை விந்தணுக்களை தேர்வு செய்தது கண்டறியப்பட்டது. அதிலும் விந்தணுவை தேர்ந்தெடுக்க முட்டைகள் இராசயன சமிக்ஞைகளை பயன்படுத்துவதை அவர்கள் கண்டறிந்திருக்கிறார்கள்.
பெண்களின் கருமுட்டைகள் அதாவது வெவ்வேறு பெண்களின் கருமுட்டைகள் வெவ்வேறு ஆண்களின் விந்தணுக்களை ஈர்க்கின்றன. இது அவர்களின் துணையாக இருக்க வேண்டிய அவசியமில்லை.
மேலும் இதை தெரிந்து கொள்ள: பெண் உடலில் ஏற்படும் அண்டவிடுப்பின் என்றால் என்ன?
ஸ்டாக்ஹோம் பல்கலைக்கழகத்தின் (Stockholm University) இணைபேராசிரியர் ஜான் ஃபிட்ஸ்பேட்ரிக் (John Fitzpatrick) இது குறித்து கூறும் போது, பெண்ணின் கரு முட்டைகளுக்கு விந்தணுக்களை ஈர்க்கும் வேதியியல் இராசயனங்கள் எனப்படும் இராசயனங்களை வெளியிடுகின்றன. முட்டையானது எந்த விந்தணுவை ஈர்க்கின்றன என்பதை இந்த இராசயனங்கள் தான் தேர்வு செய்கின்றனவா என்பதை அறிய ஆய்வில் விரும்பினார்கள்.
ஃபோலிகுலர் திரவத்தில் விந்தணுக்கள் எப்படி செயல்படுகின்றன என்பதை கவனித்தார்கள். முட்டைகளை சுற்றியுள்ள திரவம் மற்றும் விந்தணு வேதிப்பொருள்களை கொண்டுள்ளது. வெவ்வேறு பெண்களிடமிருந்து வரும் ஃபோலிகுலர் திரவங்கள் சில ஆண்களிடமிருந்து விந்தணுக்களை மற்றவர்களை விட அதிகமாக ஈர்க்கின்றனவா என்பதை அவர்கள் கண்டறிந்தார்கள்.
ஃபிட்ஸ்பேட்ரிக் (Fitzpatrick ) அறிக்கை ஒன்றில் ஒரு பெண்ணின் ஃபோலிகுலர் திரவம் ஆணின் விந்தனுக்களை ஈர்ப்பதில் சிறந்தது என்றும் அதே நேரம் மற்றொரு பெண்ணின் ஃபாலிகுலர் திரவம் வேறு ஆணின் விந்தணுக்களை ஈர்ப்பதில் சிறந்தது என்றும் கூறினார்.
Follow @ Google News : கூகுள் செய்திகள் பக்கத்தில் சென்னை மகளிர் மருத்துவமனை வலைப்பதிவுகள்!
கருமுட்டைகளுக்கும், விந்தணுக்களுக்கும் இடையிலான தொடர்புகள் சம்பந்தப்பட்ட பெண்கள் மற்றும் ஆண்களின் குறிப்பிட்ட அடையாளத்தை பொறுத்தது என்பதை இந்த ஆய்வு காட்டுகிறது என்றும் கூறினார்.
பெண்களின் கருமுட்டை ஆனது அவர்களது துணையின் விந்தணுக்களை ஈர்க்க ஒத்துப்போவதில்லை. ஆனால் மற்றொரு ஆணின் விந்தணுக்களுடன் ஒப்பிடும் போது அவர்களின் துணையிடமிருந்து அதிக விந்தணுக்களை ஈர்க்கவில்லை என்று ஆராய்ச்சி காட்டுகிறது. ஏனெனில் இந்த விந்தணுக்களுக்கு ஒரு வேலை மட்டும் தான். அதாவது முட்டைகளை கருத்தரித்தல் மட்டுமே ஆனால் அந்த கருமுட்டையை விந்தணுக்களால் தேர்வு செய்ய முடியாது. மறுபுறம் கருமுட்டையானது தரமான விந்தணுக்கள் அதிக தரம் அல்லது அதிக மரபணு இணக்கமான ஒன்றை தேர்ந்தெடுப்பதன் மூலம் பயனடைகிறது.
இனி விந்தணுக்கள் நீந்தி சென்றாலும் கரு முட்டை தான் விந்தணுவை தேர்வு செய்ய முடியும் என்பதை மறந்துவிடாதீர்கள்.