ஒரு பெண் கருவுற்றிருப்பதையே அவளுக்கு உண்டாகும் குமட்டல் , வாந்தி உடல் சோர்வு போன்றவற்றிலிருந்து தெரிந்துகொள்ளலாம். குறிப்பாக காலை நேர சோர்வு என்பது எல்லா கர்ப்பிணிகளுக்கும் வரக்கூடியதே. ஆரோக்கியமான பெண் கருவுற்றிருந்தாலும் அவர்களுக்கும் இந்த காலை சோர்வு இருக்க செய்யும்.
இந்த சோர்வை முழுவதுமாக தடுக்க முடியாது. ஆனால் சில குறிப்பிட்ட விஷயங்களை கடைப்பிடிப்பதன் மூலம் அது தீவிரமாகாமல் தடுக்க செய்யலாம். அதற்கு நீங்கள் என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்று தெரிந்துகொள்வோம். ஒவ்வொரு கர்ப்பிணிகளும் என்றில்லாமல் ஒவ்வொரு பெண்ணும் இது குறித்து தெரிந்துகொள்வது அவசியம்.
கர்ப்பிணி பெண்கள் செய்யும் தவறு சாப்பிடுவதால் தான் இந்த குமட்டல், வாந்தி, அதை தொடர்ந்து சோர்வு என்று உணவை தவிர்ப்பார்கள். இப்படி உணவை எடுத்துகொள்ளாமல் வெறும் வயிற்றில் இருப்பது இந்த சோர்வை காலை நோயை மேலும் மோசமாக்க செய்யும். அதே நேரம் அதிக உணவையும் எடுத்துகொள்ள முடியாது, எனவே கர்ப்பிணி பெண்கள் உணவுகள் சரியாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
கர்ப்பகால உடல் சோர்வு நீக்க என்ன தீர்வு என்கிறீர்களா?
உணவை சிறிது சிறிதாக எடுத்துகொள்வதன் மூலம் இந்த அறிகுறிகளை குறைவாக பெறமுடியும். அதோடு கூடுதல் நன்மையாக அடிக்கடி குறைவாக சாப்பிடுவதால் சர்க்கரை அளவு அதிகரிக்காமல் கட்டுப்பாட்டில் இருக்கும்.
உணவில் புரதச்சத்து நிறைந்த உணவுகளை எடுத்துகொள்வதும் சோர்வை போக்கும். புரதம் நிறைந்த முட்டை, கோழி இறைச்சி, கொட்டைகள் மேலும் புரதம் நிறைந்த உணவுகள் எடுத்துகொள்வதன் மூலம் இந்த காலை நோயை குறைக்க முடியும்.
சோர்வுக்கு காரணம் குமட்டலாகவும் இருக்கலாம். எப்போதும் குமட்டல் உணர்வை கொண்டிருந்தால் உங்கள் உணவில் வைட்டமின் பி 6 குறைவாக இருக்க வாய்ப்புண்டு. அதனால் உணவில் வைட்டமின் பி 6 நிறைந்த உணவுகளை எடுத்துகொள்ளுங்கள்.
அசைவம் சாப்பிடுபவர்கள் கோழி, மீன் போன்றவற்றை சேர்க்கலாம். இவை தவிர முழு தானியங்கள், சோயா, பீன்ஸ் வகைகள், வேர்க்கடலை, பால், உருளைக்கிழங்கு போன்றவற்றிலும் வைட்டமின் பி6 உள்ளது.
உணவை சூடாக எடுக்க வேண்டாம். உணவு சூடாக இருக்கும் போது அதன் மணமும் அதிகமாக இருக்கும். உணவை சமைக்கும் போது வரும் வாசனை போன்று இந்த வாசனையும் குமட்டலை தரக்கூடும். அதனால் காலை வேளையில் அதிக சூடான உணவை எடுத்துகொள்ளாமல் குளிர்ந்த உணவை எடுத்துகொள்வதன் மூலம் இந்த காலை நோய் அதிகரிக்காமல் தடுக்கலாம்.
கர்ப்பிணி காலை நோயால் அவதிபடும் போது காலை வேளையில் எழுந்திருக்கும் போதே அதிக சோர்வை கொண்டிருப்ப்பார்கள். அதனால் தாமதமாகவே எழுவார்கள். இந்நிலையில் எழுந்து குளித்த பிறகு காலை உணவு என்பது மேலும் சோர்வை அதிகரிக்கும். அதனால் காலை எழுந்ததும் ஸ்நாக்ஸ் வகைகளாக எதையாவது கொறித்துவிட்டு பிறகு காலை உணவை எடுத்துகொள்ளலாம். எனினும் தொடர்ந்து உங்கள் உணவு நேரம் உங்கள் காலை நோய் இரண்டையும் கவனித்து அதற்கேற்ப உங்கள் உணவு நேரத்தை மாற்றிகொண்டால் போதுமானது.
உடல் சோர்வு காலை நோய் என இரண்டுக்கும் இடையில் உடலை நீரேற்றமாக வைத்திருப்பதும் முக்கியம். உணவுக்கு இடையில் அடிக்கடி திரவபானங்கள் எடுத்துகொள்வதன் மூலம் உடலில் நீரிழிப்பு ஏற்படாமல் பார்த்துகொள்ளலாம். திரவ ஆகாரங்கள் நீராக இருக்கலாம், அல்லது பழச்சாறாக இருக்கலாம். காலை வேளையில் காஃபி போன்ற பானங்களை தேடினால் நீங்கள் இஞ்சி டீ குடிக்கலாம். அதிக இஞ்சி சேர்க்காமல் அளவாக இஞ்சிப்பொடி ஏலக்காய் சேர்த்து குடிக்கலாம். கர்ப்பகாலத்தில் இஞ்சி சேர்ப்பதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை பெறுவதுஅவசியம்.
Follow @ Google News : கூகுள் செய்திகள் பக்கத்தில் சென்னை மகளிர் மருத்துவமனை வலைப்பதிவுகள்!
குமட்டல் அதிகமாக இருக்கும் போது எலுமிச்சை கலந்த தேநீர் குடிக்கலாம். ஒவ்வொரு சிப் – ஆக உறிஞ்சி குடிக்கும் போது அதன் புளிப்பு சுவை உங்கள் குமட்டல் உணர்வை தடுக்க கூடும். கூடுதலாக உடல் சோர்வை நீக்கி உடலுக்கு புத்துணர்ச்சி தரவும் செய்யும்.
கர்ப்பிணிக்கு இரும்புச்சத்து அதிகமிருந்தால் அது குமட்டல் உணர்வை மேலும் மோசமாக்க செய்யும். அதனால் நீங்கள் எடுக்கும் வைட்டமின்கள் குறித்தும் உங்கள் மருத்துவரை கலந்து ஆலோசியுங்கள்.
உடல் சோர்வை போக்கும் மற்றொரு வழி உடலுக்கு ஓய்வு தருவது. கர்ப்ப காலத்தில் மன அழுத்தம், சோர்வு போன்றவை கர்ப்ப நோயை மேலும் மோசமாக்க செய்யும். அதனால் கிடைக்கும் நேரத்தில் ஓய்வெடுப்பது உடல் சோர்வை குறைக்க உதவும்.