பெண்கள் பிரசவத்துக்கு பிறகு உடற்பயிற்சி செய்வது அவர்கள் உடல் இழந்த வலுவை மீட்டு தரக்கூடும். எனினும் என்ன செய்யலாம், என்னவெல்லாம் செய்யகூடாது என்பதை அவர்கள் தெரிந்துகொள்ள வேண்டும்.

குழந்தை பிறந்த பிறகு கர்ப்பத்துக்கு முன்பு செய்த உடற்பயிற்சியை இப்போதும் பெறுவதற்கு ஆர்வமாக இருக்கலாம். சிசேரியனுக்கு பிறகு உடற்பயிற்சி செய்வதன் மூலம் உடல் விரைவாக மீண்டுவர முடியும். ஆனால் உடல்பயிற்சி செய்வதற்கு தயாராக இருக்க வேண்டும். அதே நேரம் எந்த பயிற்சியை செய்யலாம் எந்த பயிற்சியை செய்ய கூடாது என்பதை தெரிந்து வைத்திருக்க வேண்டும். ஏனெனில் சிசேரியனுக்கு பிறகு பெண்ணின் வயது, உடல்நிலையையும் மனதில் கொண்டு தான் உடற்பயிற்சி செய்வது அறிவுறுத்தப்படுகிறது.

உடற்பயிற்சி செய்யும் வழக்கத்தை கொண்டிருக்கும் அம்மாக்கள் வேகமாக குணமடைந்துவிடுவார்கள். ஆனால் உடல் பயிற்சி செய்வதை தவிர்ப்பவர்கள் குணமடைய சில காலம் பிடிக்கும்.

சிசேரியனுக்கு பிறகு ஆரோக்கியமாக இருந்தாலும் முதல் ஆறு அல்லது எட்டு வாரங்கள் வரை உடற்பயிற்சியை தவிர்ப்பது தான் சிறந்தது. அப்போது தான் வயிற்றில் தையல் போட்ட இடங்களில் வீக்கம் விழாமல் பாதுகாக்க முடியும்.

சிசேரியனுக்கு பிறகு என்னென்ன உடற்பயிற்சிகள் தவிர்க்க வேண்டும் என்று தெரிந்துகொள்வோம்.

வயிற்றுக்கான பயிற்சிகள் தவிர்க்க வேண்டும். குறிப்பாக எட்டு முதல் 12 வாரங்கள் வரை வயிற்றுக்கு செய்யகூடிய பயிற்சிகள் அனைத்தையும் தவிர்க்க வேண்டும். ஏனெனில் அடிவயிற்றில் அழுத்தம் கொடுக்கும் அல்லது அசெளகரியங்களை உண்டாக்கும் பயிற்சிகள் உங்கள் வயிற்றில் இருக்கும் தையல்களையும் சேதப்படுத்தும்.

ஹெவி லிஃப்ட்டிங்

கர்ப்பத்துக்கு முன்பு நீங்கள் உடலை வறுத்தும் பயிற்சிகளை செய்திருக்கலாம். ஹெவி லிஃப்ட்டிங் பயிற்சியையும் செய்திருக்கலாம். ஆனால் சிசேரியனுக்கு பிறகு பிறந்த குழந்தையை தூக்குவதே சிரமாக இருக்கும் என்னும் போது குழந்தையை காட்டிலும் அதிக எடையுள்ள எதையும் தூக்குவதை தவிர்க்க வேண்டும். உடற்பயிற்சி என்று மட்டும் இல்லாமல் கனமான பொருள்கள், தண்ணீர் குடம், அதிக எடை கொண்ட பயிற்சி போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.

இதையும் தெரிந்து கொள்ள: கர்ப்ப காலத்தில் உடற்பயிற்சி செய்யலாமா?

ஓடுதல், ஏரோபிக்ஸ், இடுப்புக்கான பயிற்சிகளும் தவிர்க்க வேண்டும். இடுப்பு தசைகள் மற்றூம் மூட்டுகள் குணமடைந்து வரும் காலத்தில் தீவிரமான பயிற்சிகள் குணமடைவதை மீட்பதில் இடையூறாக இருக்கும்.

உடலை வளைத்து செய்யும் பயிற்சி

சிசேரியன் பிரசவத்தில் வயிற்றில் தையல் போடப்பட்டிருக்கும். அப்போது உடலை முறுக்கும் பயிற்சிகள் தவிர்க்க வேண்டும். யோகா, நடனம் போன்ற பயிற்சிகளின் போது உடலை வளைக்க வேண்டியதாக இருக்கும். அப்போது இந்த பயிற்சிகளை தவிர்க்க வேண்டும்.

சிசேரியனுக்கு பிறகு செய்யவே கூடாத பயிற்சிகள் இதுதான். அதே நேரம் நீங்கள் வேறுஎந்த பயிற்சி செய்வதாக இருந்தாலும் மருத்துவரின் அறிவுரையோடு செய்வதும் அவசியம்.

சிசேரியனுக்கு பிறகு செய்யகூடிய உடற்பயிற்சிகள் குறித்தும் தெரிந்துகொள்ளுங்கள்.

மருத்துவரை அணுகுங்கள்

உடற்பயிற்சி செய்வதற்கு முன்பு மருத்துவரை அணுகி உங்கள் உடல் நிலை உடற்பயிற்சி செய்வதற்கு ஏற்றதா என்பது குறித்து ஆலோசனை செய்வது நல்லது. சிசேரியனுக்கு பிறகு 8 வாரங்களுக்கு பிறகு உடற்பயிற்சி செய்வதற்கு முன்பு உங்கள் வயிற்றில் காயம் ஆறியிருப்பதை உறுதி செய்த பிறகு உடற்பயிற்சி செய்வதை அறிவுறுத்துவார்கள்.

நடைபயிற்சி மேற்கொள்ளுங்கள்

சிசேரியனுக்கு பிறகு உடல் எடை இழப்பு செய்யவேண்டும் என்று நினைப்பவர்கள் முதலில் செய்ய வேண்டிய பயிற்சி நடைபயிற்சி தான். 20 நிமிடங்கள் வரை மிதமான நடைபயிற்சி செய்வதன் மூலம் உங்கள் பயிற்சியை தொடங்குங்கள். பிறகு படிப்படியாக நடைப்பயிற்சியை அதிகரியுங்கள். பிறகு விறுவிறூப்பான நடைபயிற்சி மேற்கொள்ளுங்கள்.

ஆழ்ந்த சுவாசம்

ஆழ்ந்த சுவாசம் என்பது கூட முக்கியமானது. தினமும் 15 நிமிடங்கள் மூச்சை ஆழமாக இழுத்து பொறுமையாக விடுவதன் மூலம் உங்கள் உடல் ஆரோக்கியமடைகிறது. ஒவ்வொரு முறை மூச்சை உள்ளிழுக்கும் போதும் வயிற்று தசைகளை இறுக்குவதில் கவனம் செலுத்துங்கள். அப்படி செய்தால் உங்கள் தொப்பை குறைவதோடு வயிற்றுப்பகுதி விரைவில் குணமடைய செய்யும்.

Follow @ Google News : கூகுள் செய்திகள் பக்கத்தில் சென்னை மகளிர் மருத்துவமனை வலைப்பதிவுகள்!

இந்த உடற்பயிற்சிகளை தொடர்ந்து செய்த பிறகு உங்கள் உடலும் தசைகளும் வலுவடைந்திருக்கும். ஆரோக்கியமான உணவில் கவனம் செலுத்தும் போது உடல் ஆற்றல் அதிகரித்து பழைய நிலைக்கு மீண்டு வருவீர்கள். இந்த காலம் வரும் போது நீங்கள் சிசேரியன் முடிந்து 12 முதல் 16 வாரங்களை கடந்திருப்பீர்கள். இப்போது நீங்கள் உங்கள் உடற்பயிற்சி நிபுணரை அணுகி உங்கள் பயிற்சியில் யோகா, நீச்சல், மென்மையாக ஜாகிங், குறைந்த உடல் உழைப்பு கொண்ட ஜிம் பயிற்சி முயற்சிக்கலாம்.

சிசேரியனுக்கு பிறகு பலவீனமான உங்கள் வயிற்றுப்பகுதி தசைகளை வலுப்படுத்துவதற்கான உடற்பயிற்சிகளை கற்று செய்யலாம்.

எச்சரிக்கை

சிசேரியனுக்கு பிறகு வயிற்றில் தையல் ரணம் ஆறிவிட்டது என்று சுயமாக எந்த பயிற்சியையும் செய்ய கூடாது அது இலகுவான பயிற்சியாக இருந்தாலும் மருத்துவரின் அறிவுரை அவசியம். அதே போன்று நடைபயிற்சி முதல் வேறு எந்த பயிற்சியாக இருந்தாலும் அதை செய்து முடித்த பிறகு உடலில் சோர்வு அதிகமாகவோ அல்லது தையல் போட்ட இடத்தில் வலி, ரத்தப்போக்கு, அசெளகரியம் போன்றவை இருந்தால் தாமதிக்காமல் உடற்பயிற்சியை நிறுத்தி மீண்டும் மருத்துவ ஆலோசனை பெற்று படிப்படியாக பயிற்சியை அதிகரிக்க செய்யலாம்.

5/5 - (142 votes)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here