கர்ப்ப காலத்தில் பனிக்குட நீர் அளவு எவ்வளவு இருக்க வேண்டும், குறைந்தால் என்ன ஆகும்? முழுமையாக அறிந்து கொள்ளுங்கள்!

12089
Amniotic Fluid During Pregnancy

பனிக்குட நீர் என்றால் என்ன?

ஒரு பெண் கர்ப்பத்தின் போது கர்ப்பப்பையில் இருக்கும் குழந்தைக்கும் கர்ப்பப்பைக்கும் இடையே ஒரு நீர்ப்படலம் இருக்கும். இந்த நீர்ப்படலம் தான் பனிக்குட நீர் (Amniotic Fluid) அல்லது அம்னோடிக் திரவம் என்று அழைக்கப்படுகிறது. பனிக்குட நீர் நிறமற்றது. இது வெள்ளையாகவோ அல்லது இளஞ்சிவப்பாகவோ இருக்கலாம். இது மணம் அற்றது. இந்த பனிக்குட நீர் உடைந்த பிறகு தான் பிரசவ வலி தொடங்குகிறது. சில பெண்களுக்கு வலி வந்த பிறகு தான் பனிக்குட நீர் உடைகிறது. பனிக்குட நீர் அளவு சீராக இருந்தால் தான் குழந்தையின் சுவாசம் இயல்பாக இருக்கும். குழந்தை பாதுகாப்பாகவும் இருக்கும்.

பனிக்குட நீர் ஊட்டச்சத்து நிறைந்தது. ஒவ்வொரு கர்ப்பிணிக்கும் பனிக்குட நீர் (Amniotic Fluid During Pregnancy) என்பது குறைவாகவோ அல்லது அதிகமாகவோ இருக்கும். இது குறையும் போது குழந்தைக்கு பாதிப்புகளை உண்டாக்கும்.

பனிக்குட நீர் குறைவாக இருந்தால் என்ன ஆகும்?

தண்ணீர் பற்றாக்குறை காரணமாக சிசுவின் நஞ்சுக்கொடியானது கர்ப்பப்பையோடு ஒட்டி கொண்டு விடும். இதனால் வயிற்றில் வளரும் குழந்தைக்கு போக வேண்டிய ரத்த ஓட்டம் சீராக இல்லாமல் போகும். இதனால் குழந்தையின் மூளைக்கு தேவையான ஆக்ஸிஜன் கிடைக்காது. இதனால் குழந்தையின் மூளை வளர்ச்சி பாதிக்கப்படலாம். நுரையீரல் வளர்ச்சியிலும் குறை உண்டாகலாம். பிரசவத்துக்கு முன்னும் பின்னும் குழந்தைக்கு மூச்சுத்திணறல் போன்ற சிக்கல்கள் ஏற்படும். சமயங்களில் குழந்தைக்கு வளைந்த நிலையில் பாதங்கள் ஏற்படலாம்.

குழந்தை பனிக்குட நீர் குறையும் போது நஞ்சுக்கொடியின் அழுத்தத்தால் குழந்தையின் முகத்தில் மாறுதல்கள் உண்டாகலாம். பனிக்குட நீர் அதிகமாக குறைந்தால் அது அப்பெண்ணுக்கு அவசரமான மருத்துவ சிகிச்சை தேவை என்று சொல்லலாம். இது அப்பெண்ணின் கர்ப்பகாலத்தில் எந்த மாதத்தில் உண்டாகிறது என்பதை பொறுத்து பாதிப்புகள் தீவிரமாகவோ சிகிச்சைக்குரியதாகவோ இருக்கலாம்.

பனிக்குட நீர் குறைவாக இருப்பதை ((Amniotic Fluid During Pregnancy)) எப்படி கண்டறிவது?

கர்ப்பத்தின் ஆரம்ப கால ஸ்கேன்களில் இவை கண்டறியலாம். ஒருவேளை பனிக்குட நீர் குறைபாடு கண்டறியப்பட்டால் குரோமோசோமல் பரிசோதனை செய்யப்படும். அப்போது பிரச்சனையின் தீவிரமும் சரிசெய்ய முடியுமா என்பதையும் மருத்துவர்கள் பரிசோதனை செய்வார்கள்.

கர்ப்பத்தின் ஆரம்ப கட்டம் என்றால் இதை பொறுத்து கர்ப்பத்தை தொடர்வதா வேண்டாமா என்று முடிவு செய்வார்கள். மோசமான பனிக்குட நீர் (Amniotic Fluid) தொடர்ந்தால் பெண்ணின் ஆறாம் மாதத்தில் குழந்தையின் அனாடமியை பரிசோதிப்பார்கள். அப்போது பனிக்குட நீரின் அளவு. நஞ்சுக்கொடி, குழந்தைக்கு போதுமான இரத்த ஓட்டம் கிடைக்கிறதா, ஆக்ஸிஜன் தேவையான அளவு கிடைக்கிறதா என்பதையும் பரிசோதிப்பார்கள். குறிப்பாக கர்ப்பிணியின் இறுதி மூன்றாம் மாதத்தில் பரிசோதனை செய்யப்படும்.

பனிக்குட நீர் குறைவதற்கு என்ன காரணமாக இருக்கும்?

ஒரு பெண்ணின் கர்ப்பத்தின் ஆரம்ப காலத்தில் பனிக்குட நீர் பற்றாக்குறையால் உண்டாகும் பல பிரச்சனைகள் சரி செய்யகூடியவை தான்.

குரோமோசோம் குறைபாடு காரணமாக சில குழந்தைகளுக்கு இப்பிரச்சனை உண்டாகலாம். பெரும்பாலும் வயிற்றில் ஆண் குழந்தை வளர்ந்தால் அவர்களுக்கே இந்த நிலை உண்டாகலாம். அதாவது யூரினரி ட்ராக்ட் அடைப்பு காரணமாக இந்த பிரச்சனை உண்டாகலாம்.

நஞ்சுக்கொடி வழியாக குழந்தைக்கு ரத்த ஓட்டம் குறையும் போதும் குழந்தைக்கு சிறுநீரக வளர்ச்சி குறைபாடு இருந்தாலும் பனிக்குட நீர் குறையலாம். நஞ்சுக்கொடி சரியான நிலையில் இல்லாமல் கர்ப்பப்பை ஒட்டி இருந்தாலும் பனிக்குட நீர் அளவு மாறுபடலாம். பெண்ணுக்கு கர்ப்பப்பை காலம் தாண்டி பிரசவக்காலம் நெருங்கும் போது பிரசவத்தேதி கடந்தால் அப்போது பனிக்குட நீர் குறைய தொடங்கும்.

குழந்தையை தாண்டி தாய்க்கு ஏதேனும் கர்ப்பப்பையில் ஏற்படும் நோய்த்தொற்று ஒரு முக்கிய காரணம் ஆகும். கர்ப்பிணிக்கு கர்ப்பத்துக்கு முன்னரே அல்லது கர்ப்பகாலத்தில் ரத்த அழுத்தம், சிறுநீரக பிரச்சனைகள் போன்றவையும் காரணமாக இருக்கலாம். தாயால் குழந்தைக்கு பனிக்குட நீர் பிரச்சனை ஏற்பட்டால் அடுத்து கருத்தரிக்கும் போதும் இந்த பிரச்சனை உண்டாகலாம்.

ஆரம்ப கட்டத்தில் ஆண் குழந்தைகளுக்கு ஏற்படும் யூரினரி ட்ராக்ட் அடைப்பை வயிற்றுக்குள் சர்ஜரி மூலமாக நீக்கிவிட முடியும். தாய் ஆண்டி பயாடிக் மாத்திரைகளை எடுத்துகொள்வதன் மூலம் சரிசெய்யலாம்.

பனிக்குட நீர் குறைவதை கர்ப்பிணிகளால் கண்டறிய முடியுமா

கர்ப்பிணிக்கு குறிப்பிட்ட மாதத்தில் குழந்தையின் அசைவு நன்றாக உணர முடியும். தொடர்ந்து மருத்துவரிடம் பரிசோதனை செய்யும் போது இவை கண்டறியும் வாய்ப்பு அதிகம். அறிகுறிகள் என்றால் அதில் முக்கியமானது குழந்தையின் அசைவு தெரியாமல் உணர்வதுதான்.

குழந்தையின் அசைவை உணர்ந்த பெண்கள் திடீரென்று குழந்தையின் அசைவை உணர முடியவில்லை என்று வருவார்கள். காரணம் குழந்தையை சுற்றி நாலா பக்கமும் இருக்கும் இந்த பனிக்குட நீர் குறைந்தது 2 செ.மீ அளவில் இருக்க வேண்டும். இந்த அளவு குறையும் போது பனிக்குட நீரில் மிதக்கும் குழந்தை கர்ப்பப்பையை சுற்றி வராமல் ஒரே இடத்தில் நின்று விடும். இந்நிலை கர்ப்பத்தின் இறுதி வாரங்களில் இருந்தால் குழந்தை தலைக்கீழாக அல்லது சில நேரங்களில் குறுக்கு நெடுக்காகவும் நின்றுவிடும். அப்போது தான் சிசேரியன் அவசியமாகிவிடுகிறது.

பனிக்குட நீர் பிரசவக்காலத்தில் குறைந்தால் எப்படி அறிவது?

கர்ப்ப காலத்தில் ஒரு பெண் பனிக்குட நீரை சரியான அளவில் வைத்திருந்து பிரசவக்காலம் நெருங்கும் போது நீரின் அளவு குறைந்தால் அதுவும் சிக்கலே. அப்போது கர்ப்பபைக்கு செயற்கையாக நீரை ஏற்றி சுகப்பிரசவத்துக்கு முயற்சி செய்வார்கள். அரிதாக சில குழந்தைகள் மலம் கழித்துவிடக்கூடும். எனினும் குழந்தை மலத்தை விழுங்காமல் இருக்க இந்த அம்னியா இன்ஃப்யூஷன் செய்வதன் மூலம் தடுக்கலாம். இந்நிலையிலும் சிக்கல் தொடர்ந்தால் பாதுகாப்பான தாய் சேய் ஆரோக்கியத்துக்கு சிசேரியன் செய்வதற்கு மருத்துவர்கள் ஆலோசனை வழங்குவார்கள்.

ஏனெனில் இது குழந்தைக்கு மூச்சுத்திணறலை உண்டாக்கும். சில பெண்கள் பனிக்குட நீர் (Amniotic Fluid) வெளியேறுதலை சிறுநீர் கழிவதாக நினைத்து முழு நீரும் வெளியேறிய பிறகு வருவார்கள். இவர்களுக்கு உடனடி சிசேரியன் அவசியமாகிறது. இந்த பனிக்குட நீர் குறைவாக பெற்றுள்ள குழந்தைகள் பிறந்த பிறகு அவர்களது நுரையீரல் வளர்ச்சி, சிறுநீரகம், மலம் போன்ற இயற்கை உபாதைகள் சீராக இருக்கிறதா என்ற பரிசோதனையும் செய்யப்படும்

பனிக்குட நீர் குறைந்தால் என்ன செய்ய வேண்டும்?

பனிக்குட நீர் குறைந்தால் மருத்துவர் சில வழிமுறைகளை பரிந்துரைப்பார். பெண்கள் தண்ணீர் குடிப்பதை அதிகரிக்க செய்ய வேண்டும். கர்ப்பகாலத்தில் பனிக்குட நீர் குறைவாக கொண்டிருந்த பெண்கள் சிகிச்சையில் தண்ணீர் அதிகமாக குடித்த பெண்களை ஆய்வு செய்ததில் அவர்களது அம்னோடிக் திரவம் அதிகரித்தது கண்டறியப்பட்டது.

இவர்கள் அதிக உடல் உழைப்பில்லாமல் சில காலம் ஓய்வில் இருக்க வேண்டும். பனிக்குட நீர் அதிகரிக்கும் வரை உடல் செயல்பாடுகலை குறைக்க மருத்துவர் அறிவுறுத்துவர். அம்னியோஇன்ஃப்யூஷன் எனப்படும் செயல்முறையுடன் குறைந்த அளவு அம்னோடிக் திரவத்துக்கு சிகிச்சையளிக்கலாம். இந்த சிகிச்சைக்கு திரவ அளவை அதிகரிக்க மருத்துவர் கருப்பை வாய் வழியாக அம்னோடிக் சாக்கில் உப்பு கரைசலை அறிமுகப்படுத்துவார்.

கர்ப்பத்தின் இறுதி கட்டங்களில் அம்னோடிக் திரவம் மிக குறைவாக இருந்தால் மருத்துவர்கள் பிரசவத்தை பரிந்துரைக்கலாம். இதனால் பிரசவத்தின் போது ஏற்படக்கூடிய சிக்கல்களை தடுக்க உதவும்.

பனிக்குட நீர் அதிகமாக இருந்தால் என்ன ஆகும்?

கர்ப்பிணிகளில் பொதுவாக பனிக்குட நீரை கால் பகுதியிலிருந்து அரை பகுதி அளவு மட்டுமே உள்ளது. ஆனால் 8 சதவீதம் பேர் அதை விட குறைவாக கொண்டிருக்கிறார்கள். அவர்களில் 4% குறைந்த பனிக்குட நீரை கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் 1 % கர்ப்பிணி பெண்கள் அதிகப்படியான பனிக்குட நீரை கொண்டிருக்கிறார்கள்.

குறைவான அளவு பனிக்குட நீர் கொண்டிருப்பது போன்றே அதிக அளவு கொண்டிருப்பதும் சிக்கல்களை உண்டாக்கும். அதிக அளவு பனிக்குட நீர் கொண்டிருந்தாலும் இலேசான பாலிஹைட்ராம்னியோஸ் பெரும்பாலும் சிக்கல்களை உண்டாக்காது. கடுமையான சந்தர்ப்பங்களில் முன்கூட்டிய பிறப்பு, குறைப்பிரசவம், நஞ்சுகொடி சீர்குலைவு ( நஞ்சுக்கொடி கருப்பையின் சுவரிலிருந்து சீக்கிரம் பிரியகூடும் ) அதிகப்படியான கருவின் வளர்ச்சி தொப்புள் கொடி குறைவது, பிரசவத்துக்கு பிறகு ரத்தக்கசிவு போன்றவை அடங்கும்.

பனிக்குட நீர் அதிகரிக்க காரணம் என்ன?

குழந்தை சில நேரங்களில் விழுங்கும் திறனில் குறைபாட்டால் இந்நிலை ஏற்படலாம். அதாவது குழந்தை அம்னோடிக் திரவத்தை விழுங்கி சிறுநீராக வெளியேற்றுவதால் அதிகரிக்கலாம்.

இரட்டை குழந்தைகள் இருக்கும் போது ஒரே மாதிரியான இரட்டையர்கள் அதிக ரத்தத்தையும் மற்றொன்று மிக குறைவாகவும் பெறலாம்.

உயர் இரத்த குளுக்கோஸ் அளவும் அதிக அம்னோடிக் திரவ அளவுக்கு வழிவகுக்கும். தாய்க்கு ஆர்ஹெச் எதிர்மறை இரத்த வகை இருந்தால் குழந்தை அதற்கு நேர்மறையாக இருந்தால் அப்போது அதிக பனிக்குட நீர் அதிகரிக்க செய்யலாம்.

பனிக்குட நீர் அதிகமாக இருந்தால் என்ன செய்வது?

பனிக்குட நீர் அதிகமாக இருந்தால் மருத்துவரால் தொடர்ந்து கண்காணிக்கப்படுவீர்கள். இலேசான அதிகரிப்புக்கு சிகிச்சை வேண்டியதில்லை. அதிகமான நீரை கொண்டிருந்தால் பெரிய ஊசியை பயன்படுத்தி கருப்பையில் இருந்து திரவத்தை உறிஞ்சு எடுப்பார்கள். இது ஆபத்தை உண்டாக்க கூடும்.

பனிக்குட நீர் வெளிவருதல் என்றால் என்ன?

பனிக்குட நீர் வெளிவருதல் என்பது எப்போது வேண்டுமானாலும் நிகழலாம். குறிப்பாக பிரசவக்காலத்தின் இறுதியில் இவை நிகழலாம் . பெண்களின் யோனி வழியாக மெதுவாக சொட்டு சொட்டாக வெளியேறும். உள்ளாடை நனையக்கூடும். இவர்கள் சமயங்களில் அதை சிறுநீர் வெளியேற்றம் என்று நினைத்துவிடுவார்கள்.

ஆனால் இது நிறமற்றது. மணமற்றது. கர்ப்பிணி முதல் குழந்தையை சுமந்தால் இது குறித்து விழிப்புணர்வு கொண்டிருக்கமாட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

பனிக்குட நீர் வெளியேறிய உடனேயே பிரசவ வலி உண்டாகலாம். பெரும்பாலான பெண்களுக்கு இது உழைப்பை வேகப்படுத்தாது. அதனால் பனிக்குட நீர் வெளிவரும் போது தாமதிக்காமல் மருத்துவமனை அழைத்து நல்லது. நீர் சிறிது சிறிதாக வெளியேறினாலும் அது கர்ப்பிணிக்கு மோசமான நோய்த்தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது.

குழந்தையின் வளர்ச்சியில் குறைபாடு, குறைப்பிரசவம் ( பிரசவக்காலத்துக்கு முன்பு ) நிகழலாம். வெகு அரிதாக குழந்தை இறக்கவும் வாய்ப்புண்டு. அதனால் பனிக்குடநீர் வெளியேறுவதை அறிந்தால் தாமதிக்காமல் மருத்துவரை அணுகுவது நல்லது.

Follow @ Google News : கூகுள் செய்திகள் பக்கத்தில் சென்னை மகளிர் மருத்துவமனை வலைப்பதிவுகள்!

ஒரு பெண் முதல்முறை கருத்தரிக்கும் போது கர்ப்பகால உடல் மாற்றம், உடலில் உண்டாகும் அறிகுறிகள், கவனமாக இருக்க வேண்டிய அறிகுறிகள் என அனைத்தையும் குறித்து மருத்துவர்களிடம் ஆலோசனை பெறுவது அவசியம். குறிப்பிட்ட மாதங்களுக்கு மேல் குழந்தையின் அசைவு உணர்வீர்கள். குழந்தையின் அசைவு குறித்தும் விழிப்புணர்வு வேண்டும். ஏனெனில் ஸ்கேன் பரிசோதனை தவிர்த்து குழந்தையின் அசைவை கொண்டு தான் பனிக்குட நீர் குறைவதை கண்டறியமுடியும் என்பதால் ஒவ்வொரு விஷயங்களிலும் கர்ப்பிணி எச்சரிக்கையாக இருக்க வேண்டும். குறிப்பாக பனிக்குட நீர் அளவில். இந்த கட்டுரை கர்ப்பிணி பெண்ணுக்கு உதவியாக இருக்கும் என்று நம்புகிறோம்.

மேலும் பனிக்குட நீர் பற்றிய தகவல்:

பனிக்குட நீர் அதிகரிக்க தேவையான உணவு வகைகள்

4.9/5 - (294 votes)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here