ஒழுங்கற்ற மாதவிடாய் பிரச்சனை (Irregular periods) என்றால் என்ன?

ஒரு பெண்ணின் மாதவிடாய் சுழற்சி என்பது 28 நாட்கள் ஆகும். 21 முதல் 35 நாட்களுக்குள் வரக்கூடிய மாதவிடாய் சாதாரணமானது. ஆனால் மாதவிடாய் சுழற்சி 35 நாட்களை கடந்த பிறகு வருவது ஒழுங்கற்ற மாதவிடாய் பிரச்சனை (Irregular periods) என்றழைக்கப்படுகிறது. அதே நேரம் இது ஒவ்வொவருக்கும் வேறுபடுகிறது.

பெண் வயதுக்கு வந்த பிறகு உடலில் ஈஸ்ட்ரோஜன் சுரப்பி 14 நாட்களும், புரோஜெஸ்ட்ரான் சுரப்பி 14 நாட்களும் சுரக்கும். இந்த சுரப்பிகள் முடிந்த 28 வது நாட்களில் மாதவிடாய் சுழற்சி உண்டாகும். இந்த நாட்கள் என்பது அனைத்து பெண்களுக்கும் ஒரே மாதிரி இருக்காது.

மாதவிடாய் நிற்கும் காலம் மெனோபாஸ் காலம் என்றழைக்கப்படுகிறது. இந்த காலங்களில் ஒழுங்கற்ற மாதவிடாய்க்கு சிகிச்சைக்கு தேவையில்லை ஆனால் இனப்பெருக்க ஆண்டுகளில் ஒழுங்கற்ற மாதவிடாய் ஏற்பட்டால் மருத்துவ ஆலோசனை அவசியம் தேவை.

மாதவிடாய் அல்லது மாதவிடாய் சுழற்சி என்றால் என்ன?

மாதவிடாய் சுழற்சி என்பது பொதுவாக பெண் பருவமடைதலில் தொடங்கி அதாவது 10 முதல் 16 வயதுக்குள் இது தொடங்குகிறது. பிறகு பெண்களின் 45 முதல் 60 வயதுவரை இந்த மாதவிடாய் சுழற்சி இருக்கும். பிறகு படிப்படியாக குறைந்து கருப்பை முழுவதும் செயலிழந்துவிடும்.

மாதவிடாய் என்பது கருப்பையின் புறணி இருக்கும் எண்டோமெட்ரியம் சிந்தப்படும் விளைவு ஆகும். இது யோனி வழியாக வெளியேறும். கருப்பையில் இருந்து உதிரபோக்கு வெளியேறும். இது மூன்று முதல் ஐந்து அல்லது சிலருக்கு 7 நாட்கள் வரை இருக்கும்.

ஒழுங்கற்ற மாதவிடாயை எப்படி கணக்கிடுவது

ஒழுங்கற்ற மாதவிடாயை (Irregular periods) கண்டறிய முதலில் உங்கள் ஒவ்வொரு மாதவிடாய் சுழற்சியையும் கண்காணியுங்கள். உங்கள் மாதவிடாய் சுழற்சியின் இறுதி நாட்களை கவனியுங்கள். அடுத்த மாதம் உங்கள் முதல் மாதவிடாயின் முதல் நாளை குறியுங்கள். இடைப்பட்ட நாட்களை குறித்து வையுங்கள். இதை தொடர்ந்து மூன்று மாதங்கள் வரை செய்யவேண்டும்.

இந்த இடைப்பட்ட நாட்கள் 21 நாட்கள் முதல் 35 நாட்களுக்குள் இருந்தால் நீங்கள் கவலைகொள்ள வேண்டாம். ஆனால் அதற்கு மேற்பட்டு இருந்தால் உங்களுக்கு ஒழுங்கற்ற மாதவிடாய் என்பதை அறியலாம். அதே போன்று மாதவிடாய் சுழற்சி 20 நாட்களுக்கு மேல் மாறுபடும் என்றால் அது ஒழுங்கற்ற மாதவிடாயாக இருக்கலாம்.

சிலருக்கு மாதவிடாய் உதிரபோக்கானது ஏற்றத்தாழ்வாக இருக்கும். ஐந்து நாட்களுக்கு மேல் தொடர்ந்து இரத்தபோக்கு இருக்கும். ஒரே நாளில் 6 க்கும் மேற்பட்ட நாப்கின்கள் மாற்றுவார்கள். சிலருக்கு உதிரபோக்கே இருக்காது. நாள் ஒன்றுக்கு ஒரு நாப்கினை மட்டுமே பயன்படுத்துவார்கள். இதுவும் ஒழுங்கற்ற மாதவிடாய் என்பதற்கான அறிகுறிகளே.

ஒழுங்கற்ற மாதவிடாய் அறிகுறிகள் எப்படி அறிவது?

பெரும்பாலான பெண்கள் ஒவ்வொரு ஆண்டும் 11 முதல் 13 மாதவிடாய் வரை கொண்டிருக்கிறார்கள். பொதுவாக இவர்களுக்கு இரத்தப்போக்கு 5 நாட்கள் நீடிக்கும். ஆனால் இவர்களுக்கு 2 முதல் 7 நாட்கள் வரை மாறுபடும்.

பருவமடைந்த பெண்களுக்கு மாதவிடாய் தொடங்கும்போது வழக்கமான மாதவிடாய் சுழற்சி பெறுவதற்கு 2 ஆண்டுகள் வரை ஆகலாம். பருவமடைவதற்கு பிறகு பெரும்பாலான பெண்கள் பெண்களுக்கு மாதவிடாய் ஒழுங்காகவே இருக்கும். சில பெண்களுக்கு உதிரபோக்கு அளவு வேறுபடும். அதிகமாகவோ அல்லது குறைவாகவோ இருக்கும். இதுவும் ஒழுங்கற்ற மாதவிடாயின் (Irregular periods) அறிகுறிகளே ஆகும்.

மாதவிடாய் சுழற்சி 35 நாட்களுக்கு மேல் இருந்தால் மாதவிடாய் நாட்கள் நீளமாக மாறும். இதுவும் ஒழுங்கற்ற மாதவிடாயின் அறிகுறி. உதிரபோக்கு கட்டிகளாக இருந்தால் அல்லது 2. 5 செண்டிமீட்டருக்கும் அதிகமான விட்டம் கொண்டு இருந்தால் அதிகமான உதிரப்போக்கு இருந்தால் அது ஒழுங்கற்ற மாதவிடாயின் அறிகுறியாக சொல்லலாம். சீரற்ற மாதவிடாய் பிரச்சனைகளை கொண்டு இருப்பவர்கள், அண்டவிடுப்பின் சரியான காலத்தை அறிந்து வைத்துக்கொள்ள வேண்டும் அப்போது தான் கருத்தரிக்க சரியான நாள் எது என்பது தெரியும்.

ஒழுங்கற்ற மாதவிடாய்க்கு காரணங்கள் என்ன?

ஒழுங்கற்ற மாதவிடாய் தீவிரமாகும் போது அல்லது அலட்சியப்படுத்தும் போது அது பல்வேறு பிரச்சனைகளை உண்டாக்குகிறது. அதனால் ஒழுங்கற்ற மாதவிடாய் பிரச்சனைக்கு காரணங்களை அறிவதும் சிகிச்சை அளிப்பதும் அவசியம்.

பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம் (பி.சி.ஓ.எஸ்)

கருப்பை அல்லது அட்ரீனல் சுரப்பிகள் ஆண் ஆண்ட்ரோஜன்கள் ஹார்மோன்களை அதிகமாக உற்பத்தி செய்யும் போது உடலில் இன்சுலின் எதிர்ப்பு இருக்கும் போது இந்த வளர்சிதை மாற்ற மற்றும் ஹார்மோன் கோளாறுகள் உண்டாகிறது. ஒழுங்கற்ற மாதவிடாய் சுழற்சி கொண்ட பெண்களில் 87% பேருக்கு பி.சி.ஓ.எஸ் பிரச்சனை இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

தைராய்டு அல்லது பிட்யூட்டரி கோளாறுகள்

ஹைப்போதைராய்டிசம் ( உங்கள் தைராய்டு சுரப்பி போதுமான தைராய்டு ஹார்மோனை உற்பத்தி செய்யாதபோது) ஹைப்பர் தைராய்டிசம் (உங்கள் தைராய்டு சுரப்பி அதிகமான சுரப்பி உற்பத்தி செய்யும் போது) மற்றும் ஹைப்பர்ப்ரோலாக்டின்மீயா (உங்களிடம் அதிகமான பொரோலாக்டின் உள்ளது. உங்கள் பிட்யூட்டரி சுரப்பியில் இருந்து ஹார்மோன்) இதுவும் மாதவிடாய் சுழற்சியை பாதிக்கும் என்று சொல்லப்படுகிறது.

வளர்சிதை மாற்றத்தின் வளர்ச்சியை பாதிக்கும். இதனால் உடலின் செயல்பாடுகள் குறைந்து உடல் சோர்வடையும். மாதவிடாய் சுழற்சி மட்டுமின்றி, உடல்பருமன், கரு உருவாவதில் சிக்கல், இதயபாதிப்புகள் போன்ற பிரச்சனைகளையும் உண்டாக்கும்.

ஒழுங்கற்ற காலங்களை கொண்ட ஆய்வில் பங்கேற்றவர்களில் 44% பேருக்கு தைராய்டு பிரச்சனைகள் இருப்பதாக ஆய்வில் கண்டறியப்பட்டது.

இடுப்பு அழற்சி

இடுப்பு அழற்சி நோய் பி.ஐ.டி பெண் இனப்பெருக்க அமைப்பின் அழற்சி பொதுவாக பாலியல் மூலம் பரவும் தொற்றுநோயாக அறியப்படுகிறது. இவையெல்லாம் உடலில் உண்டாகும் ஆரோக்கியமற்ற நிலையால் உண்டாவது.

ஹார்மோன் இம்பேலன்ஸ்

புரோஜெஸ்ட்ரான், ஈஸ்ட்ரோஜன் போன்ற மாதவிடாய்க்கு உதவும் ஹார்மோன்களில் பாதிப்பு உண்டாகும் போது மாதவிடாய் சுழற்சியில் பாதிப்பு உண்டாக்கும்.

இது தவிர நோயற்ற தொடர்பான மாதவிடாய் சுழற்சியும் உண்டாகலாம்.

பெரிமெனோபாஸ் நீங்கள் மாதவிடாய் நிறுத்தத்துக்கு வரும் போது முன்கூட்டிய அறிகுறியாக வரும் போது இது 10 ஆண்டுகள் வரை நீடிக்கலாம். மாதவிடாய் சுழற்சிகள் செயல்பாட்டின் ஒரு பகுதியாக ஒழுங்கற்றதாகி இருக்கும். இரண்டு மாதங்களை கடந்தும் மாதவிடாய் சுழற்சி வரவில்லை எனில் அது பெரிமெனோபாஸாக இருக்கலாம்

மாதவிடாய் சுழற்சி நிறுத்த அணுகு முறையில் 70% பெண்கள் மாதவிடாய் முறைகேடுகளை எதிர்கொள்வதாக கூறியிருக்கிறார்கள்.

மன அழுத்தம் மற்றும் பதட்டம் ஒரு குறிப்பிட்ட சிக்கலை பற்றிய நீண்டகால மன அழுத்தம் அல்லது குறுகிய கால கவலை கூட உங்கள் ஹார்மோன் சமநிலையுடன் ஏற்ற இறக்கத்தை உண்டாக்கும். இது மாதவிடாய் சுழற்சியில் ஒழுங்கற்ற காலத்தை உண்டாக்கும்.

சில நேரங்களில் கடினமான உடற்பயிற்சி செய்வது கூட மாதவிடாய் இரத்தபோக்கு காலத்தை தாமதிக்க செய்து சமயங்களில் அதை நிறுத்திவிடக்கூடும்.

உணவு முறை கோளாறுகள், தீவிர உடற்பயிற்சியின் மூலம் எடை இழப்பு போன்றவையும் இந்த கோளாறுகளை உண்டாக்கும்.

பெண்கள் நடுத்தர வயதுக்கு பிறகு பெரிமெனோபாஸ் பிரச்சனையால் ஒழுங்கற்ற மாதவிடாயை கொண்டிருக்கலாம். பிறப்பு கட்டுப்பாடு மற்றும் பிறப்பு கட்டுபாட்டு மாத்திரைகள், ஐயூடி -கள், உள்வைப்புகள் மற்றும் காப்பர் டி போன்றவையும் ஒழுங்கற்ற இரத்தப்போக்கை கொண்டிருக்கும்.

புதிதாக பிறந்த குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கும் போது ஒழுங்கற்ற காலங்கள் ஏற்படக்கூடும். இயற்கையாக பிறப்பு கட்டுப்பாடு பிரத்யேகமான தாய்ப்பால் அமினோரியவை ஏற்படுத்தக்கூடும். மாதவிடாய் இல்லை எனில் சுமார் ஆறு மாதங்கள் வரை அண்டவிடுப்பின் வாய்ப்பு குறைவாக இருக்கலாம்.

சிலருக்கு கருச்சிதைவு கர்ப்ப இழப்புக்கு பிறகு ஒழுங்கற்ற சுழற்சி ஏற்படக்கூடும். கருக்கலைப்புக்கு பிறகும் ஒழுங்கற்ற மாதவிடாய் இருக்கலாம். கர்ப்பத்தின் 20 வது வாரத்துக்கு முன்பு கரு அல்லது கரு இறந்தால் கருச்சிதை உண்டாகிறது. எனினும் இது கர்ப்ப இழப்பு என்பதை காட்டிலும் பிரசவமாகவே நினைக்க வேண்டும். ஏனெனில் இதற்கு பிறகு வழக்கமான காலங்களை தொடங்குவதற்கு சில மாதங்கள் வரை ஆகலாம்.

ஒழுங்கற்ற மாதவிடாய் எப்போது கவலைக்குரியதாகிறது?

வருடத்துக்கு ஓரிரு ஒழுங்கற்ற காலங்கள் பொதுவாக கவலை பட வேண்டியதில்லை. ஆனால் அதற்கும் மேலாக அண்டவிடுப்பின் பிரச்சனை அல்லது சுகாதார நிலைமை காரணம் அல்ல என்பதை உறுதி செய்ய மருத்துவரை அணுகுவது நல்லது.

மிக முக்கியமாக கருத்தடை மருந்துகள் எடுக்காமல் இருப்பவர்கள், பெரிமெனோபாஸ் வயது அடையாதவர்கள் மாதவிடாய் சுழற்சி ஒழுங்கற்று இருந்தால் மருத்துவரை அணுகுவது நல்லது. ஏனெனில் பி.சி.ஓ.எஸ் இருப்பவர்களுக்கு ஒழுங்கற்ற மாதவிடாய் சுழற்சியானது வருங்காலத்தில் கருப்பை புற்றுநோயின் அபாயத்தை அதிகரிக்க செய்யலாம்.

ஒழுங்கற்ற மாதவிடாய் சரி செய்ய என்ன செய்ய வேண்டும்? எப்போது சிகிச்சை அவசியம்?

முதலில் ஒழுங்கற்ற மாதவிடாயா என்பதை உறுதி செய்ய மருத்துவரை அணுகுங்கள். உங்கள் வரலாறு அறிந்து ஒழுங்கற்ற மாதவிடாய் உறுதி செய்யப்பட்டால் காரணம் அறிந்து சிகிச்சையை செய்வார்கள்.

கர்ப்பம் ஒழுங்கற்ற மாதவிடாய் கொண்டிருக்கும் போது கருவுறுதலில் சிக்கலை எதிர்கொள்ளலாம். ஆனால் இது எப்போதும் அப்படி இல்லை. மாதவிடாய் ஒழுங்கற்று இருந்தாலும் அண்டவிடுப்பு உண்டாகும். அதனால் அண்டவிடுப்பை கண்காணிக்க நீங்கள் சில விஷயங்களை செய்ய வேண்டும்.

உங்கள் மாதவிடாய் தேதியை ஒவ்வொரு முறையும் குறித்து வையுங்கள். மாதவிடாய் சுழற்சி முடிந்த இரண்டு வாரங்களில் கர்ப்பப்பை வாய் சளியில் ஏற்படும் மாற்றங்களை சரிபார்க்கவும். அண்டவிடுப்பு நெருங்கும் போது சளி அதிகமாகவும், தெளிவானதாகவும் நீட்டமாகவ்ம் இருக்கும். மேலும் உடலின் வெப்பநிலை அண்டவிடுப்பு காலங்களில் அதிகமாக இருக்கும். அதனால் தினமும் உடல் வெப்பநிலையை கவனியுங்கள். ஒழுங்கற்ற மாதவிடாய் கருவுறுதல் சிக்கல்களுடன் இணைக்கப்பட்டிருந்தால் மருத்துவர் உரிய சிகிச்சை மூலம் இதை சரிசெய்வார்.

பருவமடைதல் மற்றும் மாதவிடாய் நிறுத்தம் பருவமடையும் போது மாதவிடாய் நிறுத்த காலங்களில் ஒழுங்கற்ற மாதவிடாய் (Irregular periods) இருந்தால் இதற்கு பெரிதும் சிகிச்சை தேவைப்படாது. இதுகுறித்து அச்சம் கொள்ள தேவையில்லை.

ஒழுங்கற்ற மாதவிடாய் கருத்தடை காரணமாக பிறப்புக்கட்டுப்பாடு காரணமாக இருந்தால் இது தொடர்ந்து மாதவிடாய் சுழற்சியை ஒழுங்கற்று வைத்திருக்கும் போது மருத்துவரை அணுகுவது நல்லது.

பி.சி.ஓ.எஸ் மற்றும் உடல் பருமன், பி.சி.ஓ.எஸ் பிரச்சனை இருக்கும் போது அதிக எடை அல்லது உடல் பருமன் குறைப்பது மாதவிடாய் சுழற்சியை சீராக்க உதவும். ஏனெனில் உடல் எடை குறையும் போது உடலுக்கு அதிக இன்சுலின் உற்பத்தி தேவையில்லை. இது டெஸ்டொஸ்டிரான் அளவை குறைக்க வழிவகுக்கிறது. மேலும் அண்டவிடுப்பின் சிறந்த வாய்ப்பையும் உருவாக்குகிறது.

தைராய்டு சிக்கல்கள் ஒழுங்கற்ற மாதவிடாய் ஹைப்போ அல்லது ஹைப்பர் தைராய்டு பிரச்சனையை கொண்டிருந்தால் சிகிச்சை அவசியம். தைராய்டு அளவு பொறுத்து மருந்து , கதிரியக்க சிகிச்சை, அயோடின் அல்லது அறுவை சிகிச்சை தேவைப்படலாம்.

மன அழுத்தம் மற்றும் அதிகமாக உண்னும் கோளாறுகள் போன்றவை ஒழுங்கற்ற மாதவிடாயை கொண்டிருந்தால் உளவியல் சிகிச்சை தேவைப்படும். தியானம், யோகா போன்றவற்றின் மூலம் மன அழுத்தத்தை குறைக்கலாம். அதிகப்படியான உடற்பயிற்சியை குறைக்க வேண்டும். உணவு முறையில் என்ன மாற்றங்கள் செய்ய வேண்டும் என்பதை மருத்துவர் மற்றும் ஊட்டச்சத்து நிபுணரிடம் கலந்து ஆலோசிக்க வேண்டும். ஒழுங்கற்ற மாதவிடாய் என்பது நோய் அல்ல என்றாலும் தீவிரமாகாமல் பார்த்து கொள்ள வேண்டும்.

ஒழுங்கற்ற மாதவிடாயை பொறுத்தவரை சிகிச்சையின் போது டைப் 2 நீரிழிவு நோய்க்கு இன்சுலின் குறைக்கும் மருந்து பரிந்துரைக்கலாம். இது அண்டவிடுப்பு மற்றும் வழக்கமான மாதவிடாய் காலத்தை உண்டாக்கும்.

ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரொஜெஸ்ட்ரோன் கலவையை கொண்ட பிறப்பு கட்டுப்பாட்டு மாத்திரைகள் பரிந்துரைப்பார்கள். இது ஆண்ட்ரோஜன் உற்பத்தியை குறைக்கும் மேலும் அசாதாரண இரத்தபோக்கை சரி செய்ய உதவும்.

ஒவ்வொரு மாதமும் 10 முதல் 14 நாட்களுக்கு புரோஜெஸ்ட்ரோன் எடுத்துகொள்வதன் மூலம் அதிகமான இரத்தபோக்கு இருப்பவர்களுக்கு கட்டுப்படுத்தகூடும்.

Follow @ Google News : கூகுள் செய்திகள் பக்கத்தில் சென்னை மகளிர் மருத்துவமனை வலைப்பதிவுகள்!

ஒழுங்கற்ற மாதவிடாய் இருப்பவர்கள் கவனமாக இருப்பது எப்போது?

வீட்டு வைத்தியம் என்பது நோய் தீவிரமான பிறகு உதவாது என்றாலும் ஆரம்ப கட்டத்தில் சரியான வாழ்க்கை முறையை பின்பற்றும் போது அது சீராக வாய்ப்புண்டு. ஒழுங்கற்ற மாதவிடாய் காலத்திலும் சில முக்கிய விஷயங்களில் நீங்கள் கவனம் செலுத்தும் போது அவை தீவிரமாகாமல் பார்க்கலாம்.

ஆரோக்கியமான எடையை பராமரிக்க வேண்டும். பெண்கள் மன அழுத்தத்துடன் இருக்க கூடாது. மன அழுத்தம் இருந்தால் தொடர்ந்து உடற்பயிற்சி செய்யுங்கள். கடினமான உடற்பயிற்சி வேண்டாம். ஆரோக்கியமான உணவு முறை அவசியம் பின்பற்ற வேண்டும்.

மருத்துவரின் ஆலோசனையுடன் சில மூலிகை மருந்துகளை சேர்க்கலாம். அதிமதுரம், மஞ்சள் போன்றவை உதவுவதாக சொல்லப்படுகிறது. எனினும் சுயமாக எதையும் முயற்சிக்காமல் மருத்துவரின் ஆலோசனையுடன் சிகிச்சை எடுத்துகொண்டால் ஒழுங்கற்ற மாதவிடாய் பிரச்சனை ஆரம்பத்தில் சரி செய்து விடலாம்.

இளம் பெண்கள் இதை அலட்சியம் செய்யும் போது அது கருவுறுதலில் சிக்கலை உண்டாக்கிவிடலாம் என்பதால் மாதவிடாய் சுழற்சி குறித்து முழுமையான புரிதல் இருக்க வேண்டும்.

5/5 - (101 votes)

1 COMMENT

  1. This article is very helpful and genuine. Thank you very much and I humbly request you to publish many more articles like this.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here