மருத்துவர் தீப்தி ஜம்மி தனது இளங்கலை மற்றும் முதுகலை கல்வியை சென்னை ஸ்ரீ இராமச்சந்திரா மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தில் முடித்திருக்கிறார். மருத்துவத்துறையில் நுழைந்ததும் இவருடைய முழு கவனமும் மருத்துவத்துறையின் வரலாறு, ஒவ்வொரு துறையிலும் ஏற்படும் முன்னேற்றம், மருத்துவத்துறையில் உண்டான நவீன மாற்றம் என ஒவ்வொன்றையும் தேடி தேடி விரும்பி கற்றுகொள்ள தொடங்கினார்.

இளவயதிலேயே இவரது குறிக்கோள் சிகிச்சைக்கு வருபவர்களின் பிரச்சனைகள் குறித்த முழுமையான தகவலை தெரிந்துவைத்திருப்பதோடு, அவர்களுக்கு நோய் குறித்த முழுமையான தகவலையும் புரிய வைக்க வேண்டும் என்பதுதான். அதை சிறிதளவும் மாற்றிக்கொள்ளாமல் மருத்துவம் படித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் மருத்துவரான பிறகும் சர்வதேச மற்றும் தேசிய அளவில் மருத்துவ மாநாடுகள் பலவற்றிலும் கலந்துகொண்டு பலவிதமான பதக்கங்களை பெற்றிருக்கிறார். கரு மருத்துவத்தில் விருதுகள் பெற்றிருப்பதோடு குழந்தை மருத்துவம், காது மூக்கு தொண்டை மற்றும் தடவியல் மருத்துவம் என பல துறைகளிலும் முக்கியத்துவம் பெற்று அனைத்திலுமே தங்கப் பதக்கங்களை பெற்றார். இவர் மருத்துவம் பயிலும் போது உடன் இருந்த 155 மாணாக்கர்கள் கொண்ட வகுப்பில் சிறந்த கரு மருத்துவ மாணவராக தேர்வு செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

மருத்துவர் தீப்தி ஜம்மி அவரின் பங்கு இதோடு மட்டும் முடிவடையவில்லை. மகப்பேறு மருத்துவத்தில் கருவின் வளர்ச்சி குறித்து முழுமையாக அறிந்துகொள்ள ஸ்கேன் செய்வது உண்டு. அந்த பரிசோதனையிலும் சிறந்த நிபுணராக விளங்குகிறார். தம்பதியருக்கு தேவைப்பட்டால் ஆலோசனை வழங்குவதிலும் பிறக்கும் குழந்தைக்கு அளிக்கப்பட வேண்டிய தனிப்பட்ட கவனம் குறித்தும் தம்பதியருக்கு வழிகாட்டுவதில் தனி கவனம் எடுத்து வெற்றிகரமாகவும் செயல்புரிந்துவருகிறார்.

மருத்துவர் தீப்தி ஜம்மி

எம்.பி.பி.எஸ்., எம்.எஸ் (மகப்பேறு மற்றும் பெண்ணோயியல்)
மகப்பேறிலும் அல்ட்ராசவுண்ட் (மெடிஸ்கேன்) பரிசோதனை குறித்த துறையில் மேம்பட்ட பெல்லோஷிப்
கரு மருத்துவத்தில் பிந்தைய முனைவர் பெல்லோஷிப் (மெடிஸ்கேன்/ டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக்கழகம் – சென்னை)

சாதனைகள் மற்றும் முதன்மை விருதுகள் (கோல்டு மெடல்)

Gold Medallist in Forensic Medicine2003
Gold Medallist in Paediatrics2005
Best Outgoing Student (INTERN)2006
Winner of IAP (Indian Academy of Paediatrics ) Quiz2007

தேசிய மற்றும் சர்வதேச மாநாடுகளிலும் விருதுகள்

Award for best oral presentation at INSUOG / IIS at Delhi2015
Award for best poster presentation at INSUOG / IIS at Delhi2015
Gold medal for best oral presentation at USCON Mumbai2015

மருத்துவத்துறை வெளியீடுகள் மற்றும் மருத்துவ விளக்கங்களில் பங்கேற்பு

IJM(International Journal of Medicine), Nov 2006, Article on Ankylosing Spondylitis
Birth Defect Registry (Mediscan), Jan 2008,Antenatallydiagnosed fetal bowel gangrene
Sri Ramachandra Journal, June & July 2008, Mucinous Cystadenoma of Appendix
OGSSI Conference, Nov 2008,Prenatal Genetic Diagnosis–What’s New?
AICOG Conference (Guhawati), Jan 2010, Comparison between Fluconazole/Clotrimazole in MonilialVaginitis
CUSP Conference (Chennai), September 2014 , oral presentation – Flat facial profile – familial or pathological?
CUSP Conference (Chennai), September 2014 , poster on CSP – The Pandora’s Box
INSUOG Conference (Delhi),May 2015 , oral presentation – Mesocardia – to worry or not ?
INSUOG Conference (Delhi),May 2015, poster on Isolated Rectosigmoid dilatation & its significance
USCON Conference (Mumbai) , October 2015 , oral presentation on First trimester diagnosis of ACC

மருத்துவத்துறையிலும் மேலும் ஆர்வமான துறைகள்

தாய்வழி கரு மருத்துவம்
கரு சிகிச்சை (Fetal therapy)
சிக்கலான கர்ப்பங்கள் (High Risk Pregnancies)
பரந்த அளவிலான சிகிச்சையை நடைமுறைப்படுத்துதல் (interventional procedures)

Translate »
error: Content is protected !!