கர்ப்பத்திற்குப் பிறகு சிறந்த முடி பராமரிப்பு

1335
Hair care tips for after pregnancy

பிரசவத்துக்கு பிறகு இளந்தாய்மார்கள் சந்திக்கும் பிரச்சனையில் முடி உதிர்வும் மற்றும் முடி பராமரிப்பு ஒன்று. இது உண்மையில் இளந்தாய்மார்களுக்கு பிரச்சனை தரக்கூடியதே. பெண்கள் இயல்பாகவே அழகை விரும்புபவர்கள். அதிலும் கூந்தலில் பிரச்சனை என்பதை எப்போதுமே விரும்பமாட்டார்கள். 

கர்ப்பிணி பெண்கள் சத்தான உணவு வகைகள் எடுத்துகொண்டாலும் ஏன் முடி உதிர்தல் பிரச்சனை உண்டாகிறது என்னும் சந்தேகம் கர்ப்பிணிகளுக்கு உண்டாக கூடும். மகப்பேறுக்கு பிறகு முடி உதிர்வு (Postpartum Hair Loss) என்பது தற்காலிகமாக நிகழக்கூடியது தான். 

கர்ப்பத்துக்கு பிறகு முதல் சில மாதங்களில் முடி உதிர்வு இருக்க கூடும். அதே போன்று பிரசவக்காலத்துக்கு பிறகு சில மாதங்கள் வரை இந்த முடி உதிர்வு இருக்க கூடும். அதனால் கவலை கொள்ள தேவையில்லை. அதே நேரம் இழந்த முடி மேலும் அதிகரிக்காமல் இருக்க உரிய பராமரிப்பும் மேற்கொள்ள வேண்டும். 

கர்ப்ப காலத்துக்கு பிறகு முடி இழப்பு ஏன் (Hair care tips for after pregnancy) இயல்பானது என்னும் காரணத்தை அறிந்துகொள்வோம். 

இளந்தாய்மார்கள் கர்ப்பத்துக்கு பிறகு முடி இழப்பு (Postpartum Hair Loss) சாதாரணமானது என்பதை மீண்டும் கவனத்தில் கொள்ள வேண்டும். பொதுவாகவே கூந்தலில் தலைமுடி உதிர்வு 15 % வரை இருக்க கூடும். இது தலைக்கு குளிக்கும் போது அல்லது சீவும் போது உதிரக்கூடும். இது கூந்தலின் மயிர்க்கால்களுக்கு வலு கொடுக்க கூடும். 

கர்ப்பகாலத்தில் ஈஸ்ட்ரோஜன் என்னும் ஹார்மோன் சுரப்பு அதிகரிப்பதால் முடி வளர்ச்சி கூடுதலாக இருக்கும். இந்த ஹார்மோன் உச்சந்தலையின் ரத்த ஓட்டம் மற்றும் சுழற்சியை அதிகரித்து கூந்தலின் வேர்களை பலப்படுத்துகிறது. இதனால் முடி உதிர்வு கர்ப்பகாலத்தில் அதிகம் இருக்காது.

ஆனால் இதுவே பிரசவக்காலத்துக்கு பிறகு உடலில் ஹார்மோன் சுழற்சியில் மீண்டும் மாற்றம் உண்டாகிறது. உடலில் ஈஸ்ட்ரோஜன் அளவு குறைந்து முடியின் மயிர்க்கால்கள் பலவீனமாகிறது. இதனால் முடி உதிர்வு அதிகமாக எளிதாக இருக்கிறது. அதே நேரம் இது நிரந்தரமானது அல்ல. இது சில மாதங்கள் வரை நீடிக்கும். ஆறு முதல் எட்டு மாதங்களில் இவை மீண்டும் வலுவடைய தொடங்கும். இந்த முடி உதிர்தலில் மாற்றம் என்பது தற்காலிகமானது. 

இளந்தாய்மார்கள் மிக நீண்ட நெடிய கூந்தலை கொண்டிருந்து அதில் அளவுக்கு அதிகமாக முடி உதிர்வு பிரச்சனையை சந்தித்தால் அது நிச்சயம் மருத்துவரை அணுகி சரிசெய்ய வேண்டியது அவசியம்.

இதையும் தெரிந்து கொள்ள: பிரசவத்திற்குப் பிறகு உடல் எடையைக் குறைக்க 5 குறிப்புகள்!

கர்ப்ப காலத்தில் பிறகு உங்கள் தலைமுடியை எவ்வாறு பராமரிப்பது?

  • எண்ணெய் மசாஜ்
  • நல்ல ஷாம்பு மற்றும் கண்டிஷனரை தேர்வு செய்யவும்
  • இரசாயன சிகிச்சைகள் தவிர்க்கவும்
  • தலை முடியின் நுனியின் முனைகளை பராமரிக்க வேண்டும்
  • ஈரமாக இருக்கும்போது சீப்பு போட வேண்டாம்
  • உங்கள் முடி மற்றும் உச்சந்தலையின் வகையை அறிந்து கொள்ளுங்கள்
  • மிகவும் இறுக்கமான தலை அலங்காரங்களைத் தவிர்க்கவும்
  • ஆரோக்கியமாக சாப்பிடுங்கள்
  • மன அழுத்தம் குறையுங்கள்
  • வெந்தய விதைகள் ஊற வைத்து, அரைத்து தலையில் பயன் படுத்தலாம்

இந்த முடி உதிர்தலுக்கு என்ன மாதிரியான பராமரிப்புகள் செய்ய வேண்டும் என்று தெரிந்துகொள்வோம். பிரசவத்துக்கு பிறகு முடி உதிர்வை கட்டுப்படுத்த தனியாக சிகிச்சைகள் எதுவும் இல்லை. ஆனால் அதை பெருமளவு கட்டுப்படுத்திவிடமுடியும். 

வழக்கத்தை விட கூந்தல் பராமரிப்பில் அதிக கவனம் செலுத்துங்கள். அதிக இரசாயனம் கொண்ட ஷாம்புக்கள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். 

தலை குளியல் வாரம் இருமுறை செய்வது கூந்தலுக்கு நன்மை செய்யும் என்றாலும்  அடிக்கடி தலைக்கு குளிப்பது நல்லதல்ல. 

கூந்தலை சீவும் போது நெருக்கமான சீப்புகள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். 

இதையும் தெரிந்து கொள்ள:தாய்ப்பால் கொடுக்கும் முறைகள் என்ன?

தலை குளியலுக்கு பிறகு ஹேர் டிரையர் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். அதே போன்று கூந்தலை இறுக்கி பிடிக்கும் அலங்காரங்கள் தவிர்க்க வேண்டும். இது கூந்தலை வேரோடு உடைத்து உதிர்வை உண்டாக்கும். 

பிரசவக்காலத்துக்கு பிறகு இளந்தாய்மார்களுக்கு  மன அழுத்தம் உண்டாவது இயல்பு. இவை அதிகரிக்காமல் பார்த்துகொண்டால் ஆரோக்கிய குறைபாடுகள் போன்று கூந்தல் உதிர்வு பிரச்சனையும் கட்டுக்குள் இருக்கும். 

கூந்தலை இறுக பின்னகூடாது என்பது போன்றே கூந்தலுக்கு அதிக அலங்காரம் செய்வதையும் தவிர்த்து இயன்றவரை சிக்கில்லாமல் வைக்கவும். 

தலை குளியலின் போதும் வேகமாக தலையை தேய்ப்பதால் அது  முடி உதிர்வை மேலும் மேலும் அதிகரிக்க செய்யும். 

உணவு முறையில் அக்கறை செலுத்துங்கள். குழந்தைக்கு தாய்ப்பால் சத்தாக கொடுக்க வேண்டும். பழங்கள், காய்கறிகள், புரதம் நிறைந்த உணவுகள் என எல்லாமே உடலுக்கு தேவையான ஊட்டச்சத்தை  கொடுக்க கூடியவையே. இது முடி வளர்ச்சியையும் ஊக்குவிக்க கூடியவை. 

Follow @ Google News : கூகுள் செய்திகள் பக்கத்தில் சென்னை மகளிர் மருத்துவமனை வலைப்பதிவுகள்!

சுருக்கமாக என்ன மாதிரியான உணவுகள் என்பதையும் பார்க்கலாம். அடர்ந்த நிறத்தில் இருக்கும் கீரைகள், சர்க்கரை வள்ளிக்கிழங்கு, கேரட், முட்டை , மீன் போன்றவை எல்லாமே நன்மை தருபவை. வைட்டமின் சி, பீட்டா கரோட்டின், வைட்டமின் டி, ஒமேகா 3 போன்ற சத்துகள் கிடைக்கும். 

உடலில் வைட்டமின் குறைபாடுக்கு மருத்துவர் ஏதேனும்  வைட்டமின் நிறைந்த மருந்தை கொடுத்திருந்தால் தவிர்க்காமல் எடுத்துகொள்வது அவசியம். இவையெல்லாம் கூந்தல் உதிர்வை முழுவதுமாக கட்டுப்படுத்திவிடாது என்றாலும் கூந்தல் உதிர்வை கட்டுப்படுத்த கூடும்.

5/5 - (157 votes)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here