ஆரம்ப கர்ப்ப காலத்தில் முதுகு வலி ஏன் வருகிறது?

1754
Back Pain During Early Pregnancy

கர்ப்ப காலத்தில் நம் உடலில் பல மாற்றங்களும், வலிகளும் ஆரம்பத்திலிருந்தே நம்மோடு பயணிக்கும். அதில் முக்கியமான ஒன்று ஆரம்ப கர்ப்ப காலத்தில் முதுகு வலி (Back Pain During Early Pregnancy), வலி குறைய நீங்கள் கவனிக்க வேண்டியவைகள் என்ன என்பதை தெரிந்துகொண்டால் நீங்கள் இந்த வலியிலிருந்து விடுபடலாம்.

ஆரம்ப கர்ப்ப காலத்தில் முதுகு வலி (Back Pain During Early Pregnancy) அறிகுறிகள்

கர்ப்ப காலத்தில் பெண்கள் சந்திக்கும் பொதுவான பிரச்சனைகளில் ஒன்று முதுகு வலி. இது எந்த நேரத்திலும் நிகழலாம், ஆனால் பெரும்பாலான பெண்கள் கர்ப்பத்தின் இரண்டாம் பாதியில் குழந்தையின் அளவு வளரும்போது முதுகுவலியை அனுபவிக்கிறார்கள்.

இந்த வலியின் தீவிரத்தை வெவ்வேறு இடங்களில் உணர முடியும். பொதுவாக, கர்ப்பிணிப் பெண்கள் கீழ் முதுகில், கீழ் இடுப்புப் பகுதியில் அல்லது பின்புற இடுப்புப் பகுதியில் வலியை உணர்கிறார்கள்.

Relaxin hormone in pregnancy

உங்கள் கர்ப்பம் முழுவதும், ரிலாக்சின் எனப்படும் ஹார்மோன் வெளியிடப்படுகிறது, இதனால் உங்கள் இடுப்பில் உள்ள நிலையான மூட்டுகளின் தசைநார்கள் தளர்ந்து பிரசவத்தின் போது உங்கள் குழந்தையை எளிதாக கடந்து செல்ல அனுமதிக்கிறது.

அதனுடன் உங்கள் வளரும் கருப்பையின் எடையைச் சேர்ப்பதனாலும், உங்கள் ஈர்ப்பு மையம் முன்னோக்கி நகரும்போது உங்கள் உடல் சமநிலை இழக்ககூடும். இதையொட்டி, கருவிற்கு இடமளிக்கும் வகையில் உங்கள் கீழ் முதுகு வளைவுகள் வழக்கத்தை விட அதிகமாக இருக்கும் – இதன் விளைவாக தசைகளில் அழுத்தம் உண்டாவதால் வலி ஏற்படுகிறது.

ஆரம்ப கால கர்ப்பத்தில் முதுகுவலியின் காரணங்கள்

கர்ப்பத்தின் 12 வாரங்களில் அடிமுதுகில் வலி இருக்ககூடும். இதனை ஆரம்பகால முதுகுவலி (Back Pain During Early Pregnancy) என்று கூறுவர். கரு வளர வளர அடி முதுகு தசைகளில் அழுத்தம் அதிகரிக்கும் என்பதால் அந்த அழுத்தத்தை தாங்கமுடியாமலேயே அடிமுதுகு வலியும் ஏற்படுகிறது.

கர்ப்ப காலத்தில் எலும்புகளிலும், தசைகளிலும் மாற்றம் ஏற்படுவதே இதற்கு காரணமாக இருக்கிறது. கர்ப்ப காலத்தில் வயிறு பெரிதாகி உடலில் எடை கூடும் அப்படி கூடப்படும் எடைகள் எல்லாம் முதுகு மற்றும் முதுகெலும்பு பகுதிகளில் அதிகமான அழுத்ததை சேர்க்கும் என்பதால் இந்த வலி வருகிறது.

உங்கள் கருப்பை மற்றும் குழந்தை வளரும் போது உங்கள் ஈர்ப்பு மையம் படிப்படியாக முன்னேறும், இது உங்கள் தோரணையை மாற்றுவதற்கு காரணமாகிறது.

மோசமான தோரணை, அதிகமாக நிற்பது மற்றும் குனிவது உங்கள் முதுகில் நீங்கள் அனுபவிக்கும் வலியைத் தூண்டலாம் அல்லது அதிகரிக்கலாம்.

கர்ப்பிணிகளுக்கு முதுகுவலி பொதுவானதா?

கர்ப்ப காலத்தில் மிகவும் பொதுவான புகார்களில் ஒன்று முதுகு வலி. உண்மையில், அனைத்து பெண்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் ஓரளவு முதுகுவலியை அனுபவிப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

பெரும்பாலும் முதுகுவலி கர்ப்ப காலத்தில் ஏற்படும் ஹார்மோன்கள் அதிகரிப்பாலும், ஈர்ப்பு மையத்தில் ஏற்படும் மாற்றங்களாலும் மற்றும் தோரணை போன்ற உடல் மாற்றங்களாலும் வருகிறது. மேலும் கர்ப்பம் முன்னேறும்போது இதன் வலி கொஞ்சம் மோசமாகிறது.

கர்ப்ப கால முதுகுவலி யாருக்கு அதிகம் வரும்?

pregnancy back pain

 • பொதுவாக இந்த வலி அதிக எடை கொண்டவர்களுக்கு
 • சரியான முறையில் படுக்காமல் இருப்பவர்களுக்கு
 • கனமான பொருட்களை தூக்குபவர்களுக்கு
 • இருக்கமான ஆடை போடுபவர்களுக்கு
 • அதிக நேரம் உட்கர்ந்து அல்லது நிற்பவர்களுக்கு
 • கர்ப்பத்திற்கு முன்பு முதுகுவலி உள்ளவர்களாக இருந்தால் கர்ப்பத்திற்கு பின்னர் வலியின் அளவு கூடும் வாய்ப்புள்ளது

கர்ப்ப காலம் முழுவதும் முதுகுவலி இருக்குமா?

முதுகுவலி உங்களுக்கு கர்ப்பத்தின் ஆரம்பத்திலேயே ஆரம்பிக்கலாம். சில பெண்கள் முதல் மூன்று மாதங்களில் இதனை அனுபவிக்கிறார்கள், ஆனால் பல பெண்களுக்கு, முதுகுவலி 18 வது வாரத்தில் தான் துவங்குகிறது.

First Trimester Pregnancy Back Pain

இரண்டாவது டிரைமெஸ்டர் தொடக்கத்தில்(4-6 மாதம்) மற்றும், ​​குறிப்பாக மூன்றாவது ட்ரைமெஸ்டர் (7 – 9 மாதம்), நீங்கள் பிரசவிக்கும் வரை இது தொடரலாம் அல்லது சில சமயங்களில் இந்த வலி மோசமாகலாம்.

கர்ப்பிணியின் முதுகுவலியை குறைக்க சிகிசைகள்

pregnancy back pain treatment

அமரும் முறையிலும், நிற்கும் நிலையிலும் நாம் கவனமாக இருக்க வேண்டும்.

அமரும் போது அடிமுதுகினை நாற்காலியில் நன்கு அணைத்தபடி உட்கார வேண்டும். மற்றும் கூன் போட்ட மாதிரி உட்காராமல் சற்று நிமிர்ந்து முதுகினை நேராக வைத்து அமர்ந்தால் இந்த அடிமுதுகு வலியினை ஆரம்பத்திலேயே தடுக்கலாம்.

நாற்காலியில் அமர்ந்து முழங்கால்களை உயர்த்தி இறக்குவது தசைகளுக்கு வலு கொடுக்கும். கை கால்களை தூக்கி மிதமான வேகத்தில் உடற்பயிற்சி செய்வது அவசியம். எல்லாம் சரியான வலிகாட்டுதலோடு செய்தல் வேண்டும்.

சிறிது நேரம் நீச்சல் அடிப்பதன் மூலமும் கால் தசைகள் இறுகி நல்ல பலத்தை கொடுக்கும்.

தூங்கும் போது ஏதாவது ஒரு புறமாக படுக்க வேண்டும். மற்றும் முழங்கால்களை கொஞ்சமாக முன்னோக்கி மடக்கி படுக்கும் போது முதுகு வலைந்து சிறுது வலியிருந்து ஆறுதல் அடையும். கால்களுக்கு இடையில் கனமான தலையனை வைத்து படுப்பதன் மூலம் வலியைக் குறைக்கலாம்

மருத்துவரிடம் ப்ரக்னன்ஸி பெல்ட் அணிவதை பற்றி ஆலோசனை கேட்டு தெரிந்து கொள்ளலாம்.

கர்ப்பகால தலையனைகளை உபயோகித்து உறங்குவதன் மூலம் வயிற்றுக்கும் முதுகிற்கும் நல்ல அணைப்பாக இருக்கும்.

உயரமான காலணிகள் மற்றும் அதிக எடையுள்ள காலணிகளை அணிவதன் மூலம் உங்கள் முதுகெலும்பிற்கு இன்னும் அதிகப்படியான பலு தாங்கும் பொறுப்பை கொடுக்கும் படி இருப்பதால் கால்கலுக்கு சவுகரியமான காலணிகளை அணிவது என்றுமே நல்லது.

வலியுள்ள பகுதிகளில் ஐஸ்கட்டி கொண்டும் மூன்று நாட்கள் கழித்து சூடான தண்ணீர் கொண்டும் மசாஜ் செய்யலாம்.

மருத்துவரின் பரிந்துரைப்பின் படி கர்ப்ப கால எளிய உடற்பயிற்சிகள் மற்றும் யோகா போன்றவைகளில் உதவியால் நாம் இந்த வலியினை குறைக்கலாம். நடைப்பயிற்சி மிகவும் முக்கியமான ஒன்றாக இருக்கிறது.

pregnancy exercise

ஒரு நாளைக்கு கர்ப்பிணிகள் 20 –30 நிமிடங்கள் நடைப்பயிற்சியில் ஈடுபட வேண்டும். மேலும் நடப்பதால் உடலில் தேவையற்ற கொழுப்புகள் நீங்கி உடலும் புத்துணர்வு அடையும்.

யோகா செய்வதன் மூலம் தேவையற்ற மன உளைச்சலிலிருந்து விடுபடலாம். மேலும் இது உங்களில் வளரும் ஒரு உயிருக்கு மிகவும் தேவையான ஒன்றாக இருக்கிறது. கண்களை மூடி மூச்சினை சீராக உள்ளிழுத்து வெளியிடுவதன் மூலம் கர்ப்ப கால வலிகளை கட்டுப்படுத்தலாம்.

நான் எப்போது கவலைப்பட வேண்டும்?

கர்ப்ப காலத்தில் முதுகுவலி சாதாரணமானது என்றாலும், சில அறிகுறிகள் வரும் போது நீங்கள் கவனிக்கப்பட வேண்டும்.
முதுகுவலி மோசமாகிக்கொண்டே போனால் என்ன ஆகும் என்பதை பார்க்கலாம்.

when you worried pregnancy back pain
 • திடீரென்று அதிகமான வலி
 • காய்ச்சல்
 • உங்கள் யோனியில் இருந்து இரத்தப்போக்கு வருவது
 • சிறுநீர் கழிக்கும் போது வலி
 • தசைப்பிடிப்பு
 • உங்கள் கால்கள், பின்புறம் அல்லது பிறப்புறுப்புகளில் கூச்ச உணர்வு அல்லது உணர்வு இழப்பு போன்றவைகள் இருந்தால் உடனடியாக மருத்துவரை நீங்கள் தொடர்பு கொள்ள வேண்டும்.
Follow @ Google News : கூகுள் செய்திகள் பக்கத்தில் ஜம்மி ஸ்கேன்ஸ் வலைப்பதிவுகள்!

வலியின் அளவு பொறுத்து நாம் நம் கவனத்தை அதிகப்படுத்த வேண்டும். உடலினை என்றும் சரியாக பராமரித்து வந்தால் பின்னால் வரக்கூடிய பிரச்சனைகளை நாம் முன்னதாகவே கட்டுப்படுத்தலாம். மேலும் விவரங்களுக்கு உங்கள் மருத்துவரை அணுகி ஆலோசனை பெற்றுக்கொள்ளுங்கள்.

5/5 - (65 votes)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here