கர்ப்ப காலத்தில் இரத்த சோகை (Anemia in Pregnancy) பிரச்சனையை எதிர்கொள்ளும் கர்ப்பிணிகள் அதிகமாக உண்டு. இரத்த சோகை என்றால் என்ன என்பதை பார்க்கலாம். இரத்தத்தில் மிகக் குறைவான சிவப்பு ரத்த அணுக்கள் இருக்கும் போது இரத்த சோகை உண்டாகிறது.

சிவப்பு இரத்த அணுக்கள் குறைவாக இருப்பதால் உங்கள் இரத்தத்தில் ஆக்ஸிஜன் அல்லது இரும்பு சுமந்து செல்வது கடினமாக இருக்கும். மேலும் உடலில் நரம்புகள் மற்றும் தசைகளில் செல்கள் செயல்படுவதையும் பாதிக்கும். கர்ப்பகாலத்தில் வயிற்றில் வளரும் குழந்தைக்கு இரத்தமும் தாயிடம் தேவை.

கர்ப்ப காலத்தில் இரத்த சோகைக்கு (Anemia in Pregnancy) காரணங்கள்

கர்ப்ப காலத்தில் இரத்த சோகை (Anemia During Pregnancy) வருவதற்கு பல காரணங்கள் உண்டு, காரணங்களின் அடிப்படையில் சிகிச்சைகள் மாறுபடலாம்.

கர்ப்பகாலத்தில் இரத்த சோகை என்பது பெரும்பாலான பெண்களுக்கு வரக்கூடியது தான். கர்ப்பிணிகள் கர்ப்பகாலத்தில் இரத்தத்தின் அளவை அதிகம் கொண்டிருக்க வேண்டும். அதிக இரத்த சிவப்பணுக்களை உருவாக்க அதிக இரும்பு மற்றும் வைட்டமின்கள் தேவைப்படுகின்றன.

இதையும் தெரிந்து கொள்ள: கர்ப்ப காலத்தில் தடுப்பூசி போடுவது ஏன்?

போதுமான இரும்பு மற்றும் வைட்டமின்கள் இல்லாத போது அது இரத்த சோகையை உண்டாக்குகின்றன. கர்ப்பிணி இரத்த சிவப்பு அணுக்களின் எண்ணிக்கை மிகக் குறைவாக இல்லாத பட்சத்தில் அது அசாதாரணமானதாக கருதப்படுவதில்லை.

இரும்புச்சத்து குறைபாடு இரத்தசோகை

கர்ப்ப காலத்தில் குழந்தை சிவப்பு இரத்த அணுக்களை வளர்ச்சிக்கு பயன்படுத்துகிறது. குறிப்பாக கர்ப்பத்தின் இறுதி மாதங்களில் அதாவது மூன்றாவது ட்ரைமெஸ்டர் காலங்களில். கர்ப்பம் தரிப்பதற்கு முன்பு எலும்பு மஜ்ஜையில் கூடுதல் சிவப்பு ரத்த அணுக்கள் சேமித்திருந்தால் உடல் கர்ப்ப காலத்தில் அதை பயன்படுத்தி கொள்ளலாம்.

போதுமான இரும்புச்சத்து இல்லாத பெண்கள் இரும்புச்சத்து குறைபாடுள்ள இரத்த சோகைக்கு ஆளாகலாம். இது பொதுவான வகை இரத்த சோகை. கர்ப்பம் தரிப்பதற்கு முன்பு ஊட்டச்சத்து சேமிக்கவும் இவை உதவக்கூடும்.

வைட்டமின் பி 12 குறைபாடு

சிவப்பு இரத்த அணுக்கள் மற்றும் புரதங்களை உருவாக்குவதில் வைட்டமின் பி 12 முக்கியமானது. பால். முட்டை. இறைச்சி மற்றும் கோழி போன்ற விலங்குகளிடமிருந்து வரும் உணவை எடுத்துகொள்வது வைட்டமின் பி 12 குறைபாட்டை தடுக்கலாம். சைவ உணவு உண்பவர்களுக்கு வைட்டமின் பி 12 குறைபாடு ஏற்பட வாய்ப்புள்ளது. சைவ உணவு உண்பவர்கள் பெரும்பாலும் கர்ப்ப காலத்தில் வைட்டமின் பி 12 குறைபாட்டை எதிர்கொள்கிறார்கள்.

ஃபோலேட் குறைபாடு

ஃபோலிக் அமிலம் என்று சொல்லும் இது வைட்டமின் பி ஆகும். உயிரணு வளர்ச்சிக்கு உதவும் இரும்புடன் இது செயல்படுகிறது. கர்ப்பகாலத்தில் போதுமான ஃபோலேட் கிடைக்கவில்லை எனில் நீங்கள் இரும்புச்சத்து குறைபாட்டை பெறலாம். ஃபோலிக் அமிலம் கர்ப்பம் தரிப்பதற்கு முன்பும் கர்ப்பத்தின் ஆரம்ப நிலையிலும் அவசியம் தேவை. ஏனெனில் இது மூளை மற்றும் முதுகெலும்பின் சில பிறப்பு குறைபாடுகளுடன் குழந்தை பிறக்கும் அபாயத்தை குறைக்க உதவுகிறது.

கர்ப்பகாலத்தில் இரத்த சோகை இருந்தால் என்ன மாதிரியான அறிகுறிகள் இருக்கும்?

கர்ப்ப காலத்தில் உயிரணுக்களின் எண்ணிக்கை மிகக் குறைவாக இல்லாவிட்டால் கர்ப்ப காலத்தில் இரத்த சோகை உண்டாகும் போது தெளிவான அறிகுறிகள் இருக்காது. பொதுவான அறிகுறிகளாக சொல்லப்படுவது என்ன என்பதை தெரிந்துகொள்வோம்.

கர்ப்பிணியின் தோல் வெளிறி இருப்பது, உதடுகள், நகங்கள், கைகளின் உள்ளங்கைகள் எல்லாமே சோர்வாக இருப்பது போன்ற உணர்வு தலைச்சுற்றல் உணர்வு, சுவாசத்தில் சிரமம், விரைவான இதயத்துடிப்பு போன்றவை இரத்த சோகையின் அறிகுறிகள் என்றாலும் இது மற்ற அறிகுறிகளுடன் ஒத்திருக்கும் என்பதால் இரத்த சோகையை உறுதி செய்ய சுகாதார வல்லுநரை அணுகுவது அவசியம்.

இதையும் தெரிந்து கொள்ள: சி-பிரிவுக்குப் பிறகு சுக பிரசவம் சாத்தியமா?

கர்ப்பகாலத்தில் இரத்த சோகையை எதிர்கொள்பவர்கள்

கர்ப்பகாலத்தில் பெண்களுக்கு இரத்த சோகை வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்றாலும் இவை யாரை அதிகம் பாதிக்கும் என்பதையும் அறியலாம். கடுமையான சைவ உணவு வழக்கத்தை பின்பற்றுபவர்கள், சைவ உணவு உண்பவர்களுக்கு இரத்த சோகை வரலாம். ஏனெனில் இவர்கள் கடுமையான வைட்டமின் பி 12 குறைபாட்டை கொண்டிருக்கும் ஆபத்தை உடையவர்களாக இருக்கலாம்.

செலியாக் நோய், க்ரோன் நோய் வயிற்றின் ஏதேனும் ஒரு காரணத்துக்காக அறுவை சிகிச்சை செய்திருந்தால் அவர்களுக்கு கர்ப்பகாலத்தில் இரத்த சோகை வரலாம். இரும்புச்சத்து குறைபாடுள்ள கொண்டுள்ள பெண்களுக்கு இரத்த சோகை வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

பெண் ஒன்றுக்கு மேற்பட்ட கருவை சுமந்தால் அவர்களும் ரத்த சோகையை எதிர்கொள்வார்கள். மேலும் சில கர்ப்பிணிகள் காலைவியாதி காரணமாக அதிகமாக சோர்வு கொண்டிருப்பார்கள். மேலும் உணவு மற்றும் முக்கிய வைட்டமின்களிலிருந்து போதுமான இரும்புச்சத்து கிடைக்காத நிலையில் இரத்த சோகையை எதிர்கொள்கிறார்கள்.

சில பெண்கள் கர்ப்பக்காலத்திலிருந்தே இரும்புச்சத்தை குறைவாக கொண்டிருப்பதால் கர்ப்ப காலத்தில் தீவிர இரும்புச்சத்தை கொண்டுவிடுகிறார்கள்.

கர்ப்பகாலத்தில் இரும்புச்சத்து குறைபாடு இருந்தால் குழந்தைக்கு என்னமாதிரி பாதிப்பை உண்டாக்கும்?

கர்ப்பகாலத்தில் கடுமையான இரத்த சோகை முன்கூட்டிய பிறப்பு ஆபத்தை அதிகரிக்க செய்யும். அதோடு எடை குறைந்த குழந்தை மற்றும் பிரசவத்துக்கு பிறகு மனச்சோர்வு அதிகரிக்க செய்யும். சில ஆய்வுகள் தீவிரமான இரத்த சோகை கொண்டிருக்கும் பெண்கள் பிறப்பதற்கு முன்போ அல்லது அதற்கு பின்போ குழந்தை இறக்கும் அபாயத்தை அதிகரிக்க செய்யலாம் என்கிறது.

கர்ப்ப காலத்தில் இரத்த சோகை எப்படி கண்டறியப்படுகிறது?

மகப்பேறுக்கு முற்பட்ட பரிசோதனைகளின் போது வழக்கமான பரிசோதனையில் இரத்த சோகையும் பரிசோதிக்கப்படுகிறது. ஹீமோகுளோபின் இரத்தத்தின் ஒரு பகுதியாகும். இது நுரையீரலில் இருந்து உடலில் உள்ள திசுக்களுக்கு ஆக்ஸிஜனை கொண்டு செல்கிறது. ஹீமாடாக்ரிட் இது குறிப்பிட்ட அளவு இரத்தத்தில் காணப்படும் சிவப்பு இரத்த அணுக்களின் பகுதியை அளவிடும்.

இதையும் தெரிந்து கொள்ள: கரு எவ்வாறு உருவாகிறது – முதல் மூன்று மாதங்கள்

இரத்த சோகைக்கான சிகிச்சை முறைகள் என்னென்ன?

கர்ப்பிணிக்கு இரத்த சோகை உறுதியானால் என்ன காரணத்தினால் இது உண்டாகிறது என்பதை கண்டறிய வேண்டும். பிறகு அறிகுறிகள், வயது, ஆரோக்கியம் பொறுத்தும் இரத்த சோகை தீவிரம் பொறுத்தும் சிகிச்சை அளிக்கப்படும்.

இரும்புச்சத்து குறைபாடு இரத்த சோகை என்றால் இரும்புச்சத்து உணவுகள் மற்றும் மாத்திரைகளை மருத்துவர் பரிந்துரைப்பார். உணவு முறையில் சிட்ரஸ் பழங்களுடன் இரும்புச்சத்து எடுத்துகொண்டால் உடல் உறிஞ்சுவதற்கு உதவும்.

சில இரும்புச்சத்து மாத்திரைகள் மலத்தை அடர் பச்சை அல்லது கருப்பு நிறத்தில் மாற்றும். மேலும் மலச்சிக்கலையும் ஏற்படுத்தக்கூடும். அப்படி இருந்தால் தயக்கமில்லாமல் மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெறலாம்.

கர்ப்பகாலத்தில் இரத்த சோகை தடுக்க முடியுமா?

கர்ப்பத்துக்கு முன்பு இருந்து நல்ல ஊட்டச்சத்து நிறைந்த உணவுகள் எடுத்துகொள்வது இரத்த சோகையை தடுக்க உதவும். மேலும் உடலில் ஊட்டச்சத்து சேமித்து வைக்கவும் உதவும்.

கருவுக்கு முன்பும் கருவுக்கு பின்பும் ஆரோக்கியமான சீரான உணவை உட்கொள்வது வயிற்றில் வளரும் கருவுக்கு தேவையான இரும்புச்சத்து மற்றும் பிற முக்கிய ஊட்டச்சத்துக்களை வைத்திருக்க உதவுகிறது.

இரும்புச்சத்து நிறைந்த உணவுகள் என்று சொல்லப்படும் கீழ்க்கண்ட உணவை எடுத்துகொள்ளுங்கள்.

இறைச்சிகள், (ஆட்டு இறைச்சி, பன்றி இறைச்சிகள்) விலங்குகளின் கல்லீரல் மற்றும் கோழி, வான் கோழி, கல்லீரல், சமைத்த மீன், கடல் சிப்பி, மத்தி மீன் போன்றவை எடுத்துகொள்ளலாம். மீனில் பாதரசம் குறைந்த மீன்களை எடுக்க வேண்டும். வாரத்தில் 8 முதல் 12 அவுன்ஸ் வரை சாப்பிட வேண்டும்.

Follow @ Google News : கூகுள் செய்திகள் பக்கத்தில் சென்னை மகளிர் மருத்துவமனை வலைப்பதிவுகள்!

கீரைகள், ப்ரக்கோலி, கீரைகள், பருப்பு வகைகள், பீன்ஸ், பச்சை பட்டாணி, உலர்ந்த பீன்ஸ், பட்டாணி வகைகள், கருப்பு பட்டாணி போன்றவற்றை எடுக்கலாம்.

இரும்பு செறிவூட்டப்பட்ட வெள்ளை ரொட்டி, பாஸ்தா, அரிசி மற்றும் தானியங்கள் நிறைவாக எடுத்துகொள்ள மருத்துவ நிபுணர்கள் பரிந்துரைக்கிறார்கள். கர்ப்பிணி பெண்கள் குறைந்தது 400 மைக்ரோகிராம் ஃபோலிக் அமிலத்துடன் வைட்டமின் சப்ளிமெண்ட் எடுக்கலாம். இது உனவு முறையில் அடர் பச்சை நிற காய்கறிகள், உலர்ந்த பீன்ஸ், பட்டாணிம் சிட்ரஸ் பழங்கள் மற்றும் பழச்சாறுகள் போன்றவற்றில் உள்ளது.

5/5 - (132 votes)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here