50 நாள் கர்ப்பம் அறிகுறிகள் எப்படி இருக்கும்?

777
50 Days Pregnancy Symptoms

கர்ப்பத்தின் 7 வது வாரத்தில், குழந்தை வேகமாக வளரும். 50 நாள் கர்ப்பம் அறிகுறிகள் (50 Days Pregnancy Symptoms) முக்கிய உறுப்பு அமைப்புகள் தொடர்ந்து வளர்ந்து வருகின்றன. பெரும்பாலான வளர்ச்சி தலை மற்றும் முகப் பகுதிகளில் தான் நிகழ்கிறது.

50 நாள் கர்ப்பம் அறிகுறிகள் (50 Days Pregnancy Symptoms) எப்படி இருக்கும், கர்ப்பத்தின் ஒவ்வொரு கட்டத்திலும், என்ன எதிர்பார்க்க வேண்டும் மற்றும் உங்கள் குழந்தையின் வளர்ச்சியைப் பற்றிய நுண்ணறிவை இந்த பதிவு உங்களுக்கு வழங்குகிறது.

50 நாள் கர்ப்பம் எத்தனை மாதம்?

50 days pregnancy

50 நாள் கர்ப்பம் என்பது இரண்டாவது மாதம், வாரக் கணக்கில் 7வது வாரமாகும்.

50 நாள் கர்ப்பத்தில் கரு எவ்வாறு இருக்கும்?

பொதுவாக கருத்தரித்த நேரத்தில் இருந்ததை விட 50 நாள் கர்ப்பத்தில் கருவானது 10,000 மடங்கு பெரியதாக இருக்கும்.

50 days fetus development

உங்கள் குழந்தை இப்போது ஒரு அங்குலம் அதாவது 2.54 சென்டிமீட்டர் நீளத்தில் ஒரு திராட்சையின் அளவைக் கொண்டிருக்கும்.

கருவானது சற்று வலைந்த விரல்கள் மற்றும் கால்விரல்களைக் கொண்டிருக்கும்.

50 வது நாட்களில் குழந்தை எப்படி இருக்கும்?

கர்ப்பத்தின் 7வது வாரத்தில் குழந்தையின் வளர்ச்சியில் பல மாற்றங்கள் ஏற்படும்.

50 days fetus growth

 • நாசி, வாய், நாக்கு மற்றும் லென்ஸ் உள்ளிட்ட முக அம்சங்களை தொடர்ந்து உருவாக்கும்.
 • கைகள் மற்றும் தோல்கள் போன்றவை உருவாகியிருக்கும்.
 • முதுகுத் தண்டின் வளர்ச்சி தொடரும்.
 • இதயம், நுரையீரல் மற்றும் குடல்கள் தொடர்ந்து உருவாகின்றன
 • முழங்கால்கள் மற்றும் கணுக்கால் உருவாகின்றன.

குழந்தை ஏற்கனவே தனது 7 வது வாரத்தில் கழிவுகளை அகற்றுவதற்கான இறுதித் தொகுப்பை உருவாக்கத் தொடங்கியிருக்கும்.
அடுத்த சில வாரங்களில், உங்கள் குழந்தை சிறுநீரை உற்பத்தி செய்யத் தொடங்கும். இது அம்னோடிக் திரவத்தின் ஒரு பகுதியாக மாறும்.

 • குழந்தையின் கண்கள்

கருவிழி, விழித்திரை உங்கள் குழந்தையை பார்க்க அனுமதிக்கும் மிக முக்கியமான பகுதிகளாகும். அவைகள் இந்த வாரத்தில் வளரத் தொடங்கி சில வாரங்களுக்குப் பிறகு கிட்டத்தட்ட முழுமையாக உருவாகின்றன.

 • குழந்தையின் செரிமான அமைப்பு

உங்கள் குழந்தையின் வயிறு மற்றும் உணவுக்குழாய் உருவாகத் தொடங்குகிறது. உணவுக்குழாய் என்பது குழந்தையின் வாயிலிருந்து வயிற்றுக்கு உணவை எடுத்துச் செல்லும் குழாய். குழந்தையின் கல்லீரல் மற்றும் கணையம் கூட இந்த வாரத்தில் வளர ஆரம்பிக்கும்.

 • மூளை வளர்ச்சி

குழந்தையின் முதுகெலும்பு மற்றும் மூளையாக மாறும் நரம்பு குழாய் உருவாகிறது, மூளை மூன்று பகுதிகளைக் கொண்டுள்ளது (முன்மூளை, நடுமூளை மற்றும் பின்மூளை). ஆச்சரியப்படும் விதமாக, கர்ப்ப காலத்தில் ஒரு குழந்தையின் மூளை ஒவ்வொரு நிமிடமும் சராசரியாக 2,50,000 செல்களைப் பெறுகிறது.

50 நாள் கர்ப்பத்தில் என்ன அறிகுறிகளை (50 Days Pregnancy Symptoms) ஏற்படும்?

கர்ப்பத்தின் இந்த கட்டத்தில், உடலில் சில மாற்றங்கள் காணப்படுகின்றன. அதில் நீங்கள் அதிகம் கவனித்திருக்காத மாற்றங்களும் அடங்கும்.

50 நாள் கர்ப்பம் அறிகுறிகள் பின்வருபவன:

50 days pregnancy symptoms in tamil

 • காலை சுகவீனம்

இந்த நேரத்தில் காலை சுகவீனம் குறிப்பாக தொந்தரவாக இருக்கலாம். ஆனால் இது வழக்கமாக 12 வாரத்தில் நின்றுவிடும். சில கர்ப்ப கால உணவுகளை சாப்பிடுவது மற்றும் சில கர்ப்ப கால உணவுகளைத் தவிர்ப்பது உதவக்கூடும். நீங்கள் சாப்பிட அல்லது குடிக்க மிகவும் சிரமப்பட்டால் நீங்கள் மருத்துவரை அணுக வேண்டும்.

 • மார்பக மாற்றங்கள்

மார்பகம் விரிவடைதல், மென்மையாகுதல், கூச்ச உணர்வு ஏற்படுதல், முலைக்காம்புகள் கருமையாகுதல் போன்ற பொதுவான மார்பக மாற்றங்கள் ஏற்படும்.

இந்த அசௌகரியம் முதல் மூன்று மாதங்களில் அதிகமாய் இருப்பதால் ஆதரவான உள்ளாடை அணிவது உங்களுக்கு உதவலாம்.

கர்ப்பத்துடன் தொடர்புடையதாகத் தோன்றாத அறிகுறிகளை நீங்கள் அனுபவித்தால், அல்லது பிறப்புறுப்பு இரத்தப்போக்கு, இடுப்பு வலி அல்லது கடுமையான பிடிப்புகள் ஆகியவற்றை நீங்கள் அனுபவித்தால் மருத்துவர் உதவியை நாடுங்கள்.

 • ஹார்மோன் மாற்றங்கள்

இந்த கட்டத்தில், மனித கோரியானிக் கோனாடோட்ரோபின் (HCG) அளவுகள் விரைவாக உயருவதால் உடலில் பிற மாற்றங்கள் ஏற்படுகின்றன.

 • மனநிலை மாற்றம்

கர்ப்ப காலத்தில் மனநிலை மாற்றங்கள் மற்றும் உணர்ச்சி மாற்றங்கள் பொதுவானவை. அவை தற்போதைய வாழ்கை மற்றும் எதிர்கால வாழ்கை ஆகிய இரண்டிலிருந்தும் மாற்றங்கள் எழுகின்றன. தனக்குள் என்ன நடக்கிறது என்று தெரியாததால் வருத்தம் ஏற்படும். ஒருபுறம் சந்தோசமும் வரும்.

சரியாக சாப்பிட முடியவில்லை என்றால் குழந்தையின் உடல்நிலை குறித்து கவலை ஏற்படும். உங்கள் கணவர் அல்லது நெருங்கிய நண்பர்களிடம், குறிப்பாக கர்ப்பமாக இருந்தவர்களிடம் பேசுங்கள். முடிந்தால் வேலையில் இருந்து ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள்.

 • மிதமான உடற்பயிற்சியைப் செய்யுங்கள்
 • எடை அதிகரிப்பு அல்லது இழப்பு
 • அதிகப்படியான உமிழ்நீர் சுரப்பு
 • உணவு வெறுப்பு மற்றும் பசி
 • நெஞ்செரிச்சல் மற்றும் அஜீரணம்
 • சிறுநீர் அவசரம்
 • சோர்வு
 • லேசான இடுப்பு பிடிப்புகள்

50 நாள் கர்ப்பிணியின் வயிறு எப்படி இருக்கும்?

50 days pregnant women belly

50 நாள் கர்ப்பம் அறிகுறிகள் (50 Days Pregnancy Symptoms) அனுபவித்தால் வயிறு எப்படி இருக்கும்? அது ஒவ்வொருவரின் உடல்நிலை மற்றும் உயரம் பொறுத்தது.

உயரம் குறைந்த பெண்கள் மற்றும் சிறிய உடற்பகுதி உள்ளவர்களாக இருந்தால் அவர்களுக்கு வயிறு நன்றாக தெரிய வாய்ப்புள்ளது. ஏனெனில் அவர்களின் குழந்தையை சுமப்பதற்கு குறைந்த செங்குத்து அறை மட்டுமே அவர்கள் வயிற்றில் உள்ளதால் அவர்களுக்கு வயிறு அப்படி இருக்கும்.

இதற்கு முன்பு கர்ப்பமாக இருந்த பெண்கள் முதல் முறையாக குழந்தை பெற்றெடுப்பவர்களை விட முன்னதாகவே தங்கள் வயிற்றினை காட்டத் தொடங்குகிறார்கள், ஏனெனில் அவர்களின் முதல் கர்ப்பத்தின் போது வயிற்று தசைகள் நீட்டப்பட்டிருக்கும் என்பது தான் இதன் காரணம்.

கர்ப்பம் என்றாலே பொதுவான ஒன்று வயிறு பெரிதாவது தான். தொப்பை அடிப்படையில் ஒரே மாதிரியாக இருக்கும். தளர்வான ஆடைகள் போடுவது உங்களுக்கு இன்னும் சுலபமாக இருக்கும்.

நீங்கள் குழந்தை சுமக்கும் போது வயிறு தெரிவதில் இருக்கும் ஆலாதி ஆசை உங்களுக்குள் சந்தோசத்தை தரும்.

50 நாள் கர்ப்ப காலத்தில் பொதுவான பரிசோதனைகள்

50 days common pregnancy test

இரத்த வகை, Rh காரணி, இரும்பு அளவு, ரூபெல்லா நோய் எதிர்ப்பு சக்தி போன்றவற்றை சரிபார்க்க இரத்த பரிசோதனைகள் செய்வார்கள்.

சில சந்தர்ப்பங்களில், மரபணு மற்றும் இன மரபணு நோய் சோதனைகள், பாலியல் ரீதியாக பரவும் நோய்களுக்கான சோதனைகள் (STDs)

குளுக்கோஸ் (சர்க்கரை), புரதம், பாக்டீரியா, சிவப்பு இரத்த அணுக்கள் மற்றும் வெள்ளை இரத்த அணுக்கள் ஆகியவற்றை மதிப்பிடுவதற்கான சிறுநீர் சோதனைகள்.

Follow @ Google News : கூகுள் செய்திகள் பக்கத்தில் ஜம்மி ஸ்கேன்ஸ் வலைப்பதிவுகள்!

50 நாள் கர்ப்பம் அறிகுறிகள் (50 Days Pregnancy Symptoms) என்ன என்று தெரிந்து உங்கள் கர்ப்பம் உறுதி செய்தவுடன் அதற்கான உணவுமுறைகளை மாற்றி வரப்போகும் குழந்தைக்கான ஆரோக்கியமான வாழ்க்கையினை ஏற்படுத்த வேண்டியது உங்கள் கடமையாகும்.

ஒவ்வொரு மாதமும் தவறாமல் மருத்துவரை அணுகி பரிசோதித்துக்கொள்ள வேண்டும். மேலும் ஏதேனும் உடற் ரீதியான தொந்தரவுகள் இருந்தாலும் உடனே மருத்துவருக்கு தெரிவித்து ஆலோசனை பெறுங்கள்.

5/5 - (206 votes)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here