Contents | உள்ளடக்கம்
பிரசவத்துக்கு பிறகு உடல் எடை குறைய என்ன செய்யலாம்?
பிரசவத்துக்கு பிறகு இளந்தாய்மார்களின் உடல் எடை அதிகரிக்க கூடும். கொஞ்சம் கவனமெடுத்தால் பிரசவத்திற்குப் பிறகு உடல் எடை எடையை எளிதாக கட்டுக்குள் கொண்டுவந்துவிட முடியும்.
வயிற்று பகுதியில் சருமத்தில் கோடுகள் உண்டாவதோடு தொப்பையும் ஏற்படும். சில பெண்களுக்கு உடல் எடை அதிகரிக்கும் போது முகம், கழுத்து, வயிற்றுப்பகுதியில் கரும்புள்ளிகள் உருவாகும்.
பிரசவம் முடிந்த பிறகும் ஆறு மாதங்களுக்கு பிறகே உடல் உறுப்புகளிலும் அதனுடைய செயல்பாடுகளிலும் சீரான மாற்றங்கள் உண்டாக கூடும்.
கர்ப்பகாலத்தில் கர்ப்பிணி சராசரியாக 10 முதல் 12 கிலோ வரை உடல் எடையை அதிகம் கொள்கிறார்கள். எனினும் ஒரு பெண் கருவுறுவதற்கு முன்பு இருந்த உடல் எடையை கணக்கில் கொண்டு ஒவ்வொரு பெண்ணின் உடல் எடையில் மாற்றம் இருக்கும்.
கர்ப்பகாலத்தில் குழந்தைக்கு போஷாக்கான உணவு தேவை என்பதால் எடுத்துகொள்ளும் அதிகப்படியான உணவுகள் கர்ப்பகாலத்தில் அதிக எடையை உண்டாக்குகிறது. ஆனால் பிரசவத்துக்கு பிறகும் எடை கூட வாய்ப்புண்டு என்பதை கண்டறிந்திருக்கிறார்கள். அதற்கு காரணமாக உடல் சோர்வு, மனசோர்வு குழந்தையை கவனித்துக்கொள்ளும் கூடுதல் பொறுப்பு போன்றவையே காரணமாக சொல்லப்படுகிறது. இவை தவிர பிரசவக்காலத்துக்கு பிறகு முழு நேரமும் ஓய்வில் இருப்பதாலும் கூட சமயத்தில் எடை அதிகரித்துவிடுகிறது.
பிரசவகாலத்துக்கு பிறகு உடல் எடையை எப்படி கட்டுக்குள் கொண்டுவருவது தெரிந்துகொள்வோம்.
1. உடற்பயிற்சி செய்யுங்கள்
பிரசவம் சுகப்பிரசவமாக இருந்தாலும், அறுவை சிகிச்சை முறை பிரசவமாக இருந்தாலும் மருத்துவரின் அறிவுரையோடு உடற்பயிற்சி செய்யலாம். சுகப்பிரசம் ஆன பெண்கள் 7 நாட்களுக்கு பிறகு மிதமான உடற்பயிற்சி செய்யலாம். நடைபயிற்சி, வயிறு, இடுப்பு பகுதியில் இருக்கும் தசைப்பகுதியை இறுக செய்யும் பயிற்சிகள் செய்யலாம். அறுவை சிகிச்சை செய்தவர்கள் மருத்துவர் மற்றும் உடற்பயிற்சி நிபுணரிடம் ஆலோசனை செய்து இரண்டு மாதங்களில் உடல்நிலையை பொறுத்து பயிற்சி செய்யலாம். படிப்படியாக சில மாதங்களுக்கு பிறகு ஏரோபிக் பயிற்சியான ஜாகிங், ரன்னிங், வாக்கிங், ஸ்விம்மிங் போன்றவற்றை செய்யலாம். இவை பின்னாளில் கர்ப்பப்பை இறக்கம், சிறுநீர் தானாக வெளியேறும் பிரச்சனை போன்றவற்றை உண்டாக்காது.
2. தாய்ப்பால் கொடுக்க தவிர்க்க வேண்டாம்
பிரசவத்துக்கு பிறகு உடல் எடை கட்டுக்குள் கொண்டு வர வேண்டுமெனில் அவசியம் தாய்ப்பால் கொடுக்க வேண்டும். குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கும் போது நாள் ஒன்றுக்கு 2000 முதல் 2500 கலோரிகள் வரை உட்கொள்ள வேண்டும். அப்பொதுதான் தாய்ப்பால் குறையில்லாமல் கிடைக்கும் அதே போன்று தாய்ப்பால் கொடுப்பதன் மூலம் கலோரிகள் எரிக்க முடியும். அதனால் குழந்தைக்கு தாய்ப்பால் நிறைவாக தந்தாலே உடல் எடை கட்டுக்குள் இருக்கும்.
3. உணவில் கவனம்
குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க வேண்டும் என்று அதிகமாக உணவின் மீது கவனம் செலுத்த வேண்டும். பிரசவம் முடிந்த கையோடு ஒரு டயட்டீஷியனை தொடர்பு கொண்டு ஆலோசித்து குழந்தைக்கு வேண்டிய சத்தான உணவு வகைகளை பட்டியலிடுங்கள். இளந்தாய்மார்கள் சத்தான உணவை எடுத்துகொள்வதன் மூலம் அந்த சத்து தாய்ப்பால் வழியாக குழந்தைக்கும் செல்லும். நார்ச்சத்து நிறைந்த உணவுகள், காய்கறிகள், பழங்கள், உலர் பருப்புகள், கீரைகள் நிச்சயம் ஆரோக்கியம் காக்கும். உடல் எடை குறைப்பிலும் உதவக்கூடும்.
ஏனெனில் உடல் எடையை குறைக்கும் போது உணவுகள் மீது அதிக கவனம் இருக்க வேண்டும்.
4. திரவ ஆகாரங்கள் அவசியம்
திரவ ஆகாரங்கள் உடலுக்கு நீர்ச்சத்து தரக்கூடியவை மட்டுமே அல்ல. இவை உடலுக்கு வேண்டிய சத்துகளையும் கொடுக்க கூடியவை. குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கும் எதிர்ப்பு சக்தியும் கிடைக்கும் உணவை தாய்மார்கள் எடுத்துகொள்ள வேண்டும். அதே நேரம் அந்த உணவுகள் எடை அதிகரிக்காமல் இருக்க வேண்டும் என்றால் அதற்கு சரியான சாய்ஸ் திரவ ஆகாரங்கள் தான்.
இளந்தாய்மார்கள் தாய்ப்பால் கொடுக்கும் போது கூட முதலில் ஒரு டளர் நீர் குடித்தபிறகு தாய்ப்பால் கொடுக்க வேண்டும். இதனால் தாய்ப்பால் சுரப்பு வேகம் கூடும் என்கிறார்கள் மருத்துவர்கள்.
பிரசவத்துக்கு பிறகு உடல் எடை குறையவும், கட்டுக்குள் வைக்கவும், எதிர்ப்பு சக்தி அதிகரிக்கவும் என பலவிதமான திரவ ஆகாரங்கள் உண்டு. இவை எல்லாமே பக்கவிளைவுகளையும் உண்டாக்காது என்பதால் இதை முயற்சி செய்யலாம். உதாரணத்துக்கு வைட்டமின் சி நிறைந்த எலுமிச்சை, தேன், சீரகம், மிளகுத்தூள், புதினா, கறிவேப்பிலை சேர்த்த பானம் உடலுக்கு ஆரோக்கியம் தரும் என்பதோடு இவை உடலில் இருக்கும் கொழுப்பை கரைத்தும் வெளியேற்றும். கர்ப்ப காலத்தில் மலச்சிக்கலைத் தவிர்க்க சிறந்த வழிகள் மற்றும் பிரச்சனையும் அதிகரிக்காது.
5. தவிர்க்க வேண்டியது
கர்ப்பகாலத்தில் அதிக எண்ணெய் பொருள்கள், கொழுப்பு பொருள்கள், துரித உணவுகள், பேக்கரி உணவுகள், நொறுக்கு தீனிகள், பாக்கெட் உணவுகள், உடனடி தயாரிப்பு உணவுகள், உப்பு நிறைந்த உணவுகள், செயற்கை குளிர்பானங்கள் என எதையெல்லாம் தவிர்த்தொமோ அதை இப்போது முன்னிலும் கவனத்துடன் தவிர்க்க வேண்டும். இவை எல்லாமே கொழுப்பு நிறைந்தவை உடலில் கொழுப்பை அதிகரிக்க கூடியவை. மேலும் உடல் எடை குறைப்பில் ஈடுபட்டாலும் இவை அதையெல்லாம் அலட்சியம் செய்து அதிகரிக்க கூடியவை.
Follow @ Google News : கூகுள் செய்திகள் பக்கத்தில் சென்னை மகளிர் மருத்துவமனை வலைப்பதிவுகள்!
மன அழுத்தம் பிரசவக்காலத்துக்கு பிறகு எல்லா பெண்களுக்கும் இந்த அழுத்தம் இருக்க கூடும் என்றாலும் இயன்றவளவு தாய்மார்கள் தங்களை பிஸியாக வைத்துகொள்வது நல்லது. குழந்தையோடு சில மணி நேரம், தங்களுக்கான நேரம், ஓய்வெடுக்கும் நேரம் என்று திட்டமிட்டு குழந்தைக்கான பொறுப்புகளை பகிர்ந்துகொண்டால் மன அழுத்தம் குறையும். இந்த தருணத்தில் குடும்பத்தினரும் அவர்களுக்கு ஒத்துழைப்பு தர வேண்டும்.
குறிப்பு
உடற்பயிற்சியை தாமாக பழகாமல் மருத்துவரின் அறிவுரையோடு மிதமான பயிற்சிகளை மட்டுமே பெற வேண்டும். சிலருக்கு உடல் பலவீனமான நிலையில் உடற்பயிற்சி தவிர்க்க வேண்டும் என்பதால் கண்டிப்பாக மருத்துவரின் ஆலோசனை அவசியம்..
உடல் எடையை குறைக்க சுயமாக மருந்துகள், மாத்திரைகள் எடுத்துகொள்வதும் கண்டிப்பாக பாதிப்பை உண்டாக்கும். ஆரோக்கியமான உணவு முறை, தாய்ப்பால் புகட்டுதல், ஆரோக்கியமான மனநிலை இதையெல்லாம் கவனித்து செய்தாலே உடல் எடை விரைவாக இழக்க செய்யலாம்.