கர்ப்பத்தின் ஆரம்ப காலத்தில் பெண்கள் தவிர்க்க வேண்டிய 5 வகை உணவுகள்!

675
5 Foods to Avoid During Pregnancy

Contents | உள்ளடக்கம்

கர்ப்ப காலத்தில் கர்ப்பிணிகள் சாப்பிடும் உணவில் உடலுக்கு நன்மைகள் எது, தீமைகள் எது என்பதை அறிவது அனைத்து கர்ப்பிணிப் பெண்களின் முக்கியமான கடமை. கர்ப்ப காலத்தில் நீங்கள் எதை சாப்பிடுவதற்கு எடுத்துக் கொள்கிறீர்களோ அதில் உள்ள ஊட்டச்சத்து தான் உங்கள் குழந்தையும் பகிர்ந்து கொள்கிறீர்கள். கர்ப்பத்தின் ஆரம்ப காலத்தில் தவிர்க்க வேண்டிய வகை உணவுகள் (5 Foods to Avoid During Pregnancy) என்ன என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.

கர்ப்ப காலத்தில் சில உணவுகளை ஏன் தவிர்க்க வேண்டும்?

சில உணவுகளில் உள்ள நச்சுத்தன்மை உங்களுக்கு எந்த ஒரு தீங்கு விளைவிப்பதில்லை, ஆனால் அவை உங்கள் குழந்தைக்கு தீங்கு விளைவிக்கக் கூடியதாக அமையலாம். உங்கள் குழந்தையின் நலத்தை கருத்தில் கொண்டே சரியான உணவுகளை எடுக்க பரிந்துரைக்கிறார்கள். அப்படி கர்ப்பிணிகள் தவிர்க்க வேண்டிய உணவுகள் (5 Foods to Avoid During Pregnancy) என்ன என்பதை தெரிந்து கொள்ளுவோம்.

pregnant woman avoid food

சீஸ், பால் மற்றும் பிற பால் பொருட்கள்

சீஸ், பால் மற்றும் பிற பால் பொருட்களில் நீங்கள் என்ன சாப்பிடலாம்?

பால், சீஸ் போன்ற பல பால் பொருள்கள் பேஸ்டுரைஸ் (உணவு பதப்படுத்தல்) செய்யப்படுகின்றன. அதாவது அந்த பொருட்களிலுருக்கும் கெட்ட கிருமிகளை கொல்ல அவை நன்கு சூடேற்றப்படுகின்றன. அதனால் நீங்கள் எடுத்துகொள்ளும் பால், சீஸ் போன்ற உணவு பொருட்கள் பேஸ்டுரைஸ் (உணவு பதப்படுத்தல்) செய்ப்பட்டதா என்பதை கவனியுங்கள்.

பாலாடைக்கட்டி, மொஸரெல்லா, கிரீம் சீஸ், பன்னீர், ஆடுகளின் சீஸ் போன்ற பேஸ்டுரைஸ் செய்யப்பட்ட மென்மையான பாலாடைக்கட்டிகள், வெளியில் வெள்ளை பூச்சு இல்லாமல் (தோல்) மற்றும் பதப்படுத்தப்பட்ட சீஸ் பரவல்கள் இல்லாமல் சாப்பிடலாம். நன்றாக கொதிக்க வைத்த பால் எடுத்துகொள்ளலாம்.

சீஸ், பால் மற்றும் பிற பால் பொருட்களில் எதை தவிர்க்க வேண்டும்?

ஆடுகளின் மென்மையான அல்லது பழுத்த சீஸ் போன்ற கொதிக்க வைக்காத பாலில் இருந்து தயாரிக்கப்படும் பிற உணவுகள் தவிர்க்க வேண்டும். அதாவது வெளியில் வெள்ளை பூச்சுடன் கூடிய சமைக்கப்படாத மென்மையான பாலாடைக்கட்டிகள் எடுத்துக் கொள்ளக் கூடாது. பதப்படுத்தப்படாத பசுவின் பால், ஆடு பால், செம்மறி பால் அல்லது கிரீம் ஆகியவற்றை எடுத்துக் கொள்ளக் கூடாது.

why pregnant woman avoid cheese

சீஸ், பால் மற்றும் பிற பால் பொருட்கள் ஏன் தவிர்க்க வேண்டும்?

நன்றாக சூடாக்கப்படாத பால் மற்றும் பிற பால் பொருட்களில் லிஸ்டீரியா பாக்டீரியா இருக்க வாய்ப்புகள் உள்ளது. இது லிஸ்டீரியோசிஸ் எனப்படும் ஒரு வகை தொற்றுநோயை ஏற்படுத்தும். லிஸ்டீரியோசிஸ் கருச்சிதைவுக்கு வழிவகுக்கலாம் அல்லது உங்களின் வருங்கால சந்ததியான உங்களுள் வளரும் குழந்தையின் உடல்நிலையை மிகவும் மோசமாக்கலாம்.

வெளியில் வெள்ளை பூச்சு கொண்ட மென்மையான பாலாடைக்கட்டிகள் அதிக ஈரப்பதம் கொண்டவை. இது பாக்டீரியாக்களின் வளர்ச்சியை எளிதாக்கும். பாலாடைக்கட்டியை நீராவியில் சூடாக்குவதால் பாக்டீரியாவைக் கொன்று லிஸ்டீரியோசிஸிலிருந்து வரும் அபாயத்தைக் குறைக்கிறது.

இறைச்சி மற்றும் கோழி

இறைச்சி மற்றும் கோழியை நீங்கள் எப்படி சாப்பிடலாம்?

கோழி, பன்றி இறைச்சி அல்லது மாட்டிறைச்சி போன்ற இறைச்சி, அது நன்கு சமைக்கப்பட்டிருந்தால் சாப்பிடலாம்.
மேலும் இறைச்சி இளஞ்சிவப்பு நிறமோ அல்லது இரத்தத்தின் தடயங்களோ இல்லாத வரை எந்த ஒரு அபாயமும் இல்லாமல் சாப்பிடலாம்.

குறிப்பாக சிக்கன், பன்றி இறைச்சி, சில சாஸ் வகைகள் மற்றும் பர்கர்களை உட்கொள்ளும் போது அவை நன்றாக வேகவைத்த உணவு தானா என்பதில் அதிகம் கவனமாக இருக்கவும்.

why pregnant woman avoid meat

இறைச்சி மற்றும் கோழியில் எதை தவிர்க்க வேண்டும்?

பச்சை அல்லது சமைக்கப்படாத இறைச்சி சாப்பிடக்கூடாது. ரெடிமேட் உணவுகள் அல்லது துரித உணவுகளை தவிர்க்க வேண்டும்.

இறைச்சி மற்றும் கோழியை ஏன் தவிர்க்க வேண்டும்?

பச்சையாக அல்லது சரியாக வேகவைக்கப்படாத இறைச்சியை உண்பதால், டோக்ஸோபிளாஸ்மோசிஸ் நோய் வருவதற்கான ஆபத்து உள்ளது. இது கருச்சிதைவுக்கு வழிவகுக்கும்.

இறைச்சி நன்றாக சமைக்கப்படாத நிலையில் அதில் டோக்ஸோபிளாஸ்மாசிஸை ஏற்படுத்தும் ஒட்டுண்ணிகள் இருக்கலாம். இது உங்கள் குழந்தையினை உள்ளிருந்து காயப்படுத்தும்.

முட்டைகள்

முட்டையை எப்படி நீங்கள் சாப்பிடலாம்?

முழுதாக வேகவைத்த கோழி முட்டை சாப்பிடலாம்.

முட்டையில் எதை தவிர்க்க வேண்டும்?

ஊசிபோட்டு வளர்க்கப்படும் பன்னைக் கோழிகளின் முட்டை தவிர்ப்பது நல்லது. பச்சை அல்லது மிதமாக வேகவைத்த முட்டைகளைத் தவிர்ப்பது புத்திசாலித்தனமான செயல். மேலும் அப்படி பச்சையாகவோ அல்லது மிதமாக வேகவைத்த முட்டைகளில் செய்யப்பட்ட திண்பண்டங்களை தவிர்ப்பது நல்லது.

பஞ்சுபோன்ற துருவல் முட்டைகள், வீட்டில் தயாரிக்கப்பட்ட ஐஸ்கிரீம் , பச்சை மாவு அல்லது குக்கீ மாவு, வீட்டில் தயாரிக்கப்பட்ட மயோனஸ், மற்றும் வீட்டில் தயாரிக்கப்பட்ட பாதியாக வேகவைத்த முட்டை போன்ற பச்சை சுவைகள் நிறைந்த உணவுகளை சாப்பிடுவதைத் தவிர்க்கவும்.

why pregnant woman avoid eggs

முட்டைகள் ஏன் தவிர்க்க வேண்டும்?

பச்சை முட்டைகள் கொண்டு செய்யப்படும் சாஸ்களைத் தவிர்க்க வேண்டும். காலை உணவு ஆம்லெட்டுகள் மற்றும் துருவல் முட்டைகள் எடுத்துக் கொள்வதால் சில அஜீரணக் கோளாறுகள் வரலாம். அது நன்றாக சமைத்துள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

பச்சை இறைச்சி மற்றும் கோழி இறைச்சியைப் போலவே, நீங்கள் சாப்பிடும் முட்டையிலும் கவனம் கொள்வது அவசியமாகிறது. முற்றிலும் உடல் உறுதியாக இருக்க, நீங்கள் வாங்கும் முட்டைகள் குளிரூட்டப்பட்டவையா என்பதையும் மேலும் நீங்கள் வாங்கும் ஒவ்வொரு முட்டையின் காலாவதி தேதியைக் கருத்தில் கொள்ள வேண்டியதும் முக்கியம்.

மீன்

மீனில் மூளையை மற்றும் மனநிலை அதிகரிக்கும் ஒமேகா-3கள் அதிகம் இருக்கிறது. இது தாய் சேய் என இருவருக்கும் நன்மையை குடுக்கக் கூடியது. இருப்பினும், கர்ப்ப காலத்தில் மீன் சாப்பிடும் போது, ​​​​எந்த வகைகள் மோசமானவை என்பதையும் நாம் நினைவுகூற வேண்டும்.

பாதரசம் அதிகம் உள்ள மீன்கள் குழந்தையின் மூளை வளர்ச்சியை பாதிக்கக் கூடியது. மேலும் இவ்வகை மீன்கள் பிறக்கப் போகும் குழந்தையின் கேட்கும் திறன் மற்றும் பார்க்கும் திறனைப் பாதிக்கிறது. மற்றும் எந்த வகையான மீன் சாப்பிடுவது பாதுகாப்பானது என்பதை தெரிந்து உட்கொள்ளுங்கள், அளவில் பெரிய மீன்களை தவிர்ப்பது நல்லது.

கீழ்காணும் மீன்கள் மிக உயர்ந்த பாதரச அளவைக் கொண்டுள்ளன. அதனால் வாரத்திற்கு 180 கிராமிற்கு குறைவாக எடுத்து கொள்ளலாம். இல்லையென்றால் தவிர்த்துவிடலாம்.

  • சூரை மீன்
  • சுறா மீன்
  • புள்ளி களவா மீன்
  • சங்கரா மீன்

மீனில் நீங்கள் என்ன சாப்பிடலாம்?

நன்றாக வேகவைத்த கடல் உணவு, மீன், நண்டு, இறால் போன்ற உணவுகள் எடுத்துக்கொள்ளலாம்.

மீனில் எதை கவனிக்க வேண்டும்?

புகையூட்டப்பட்ட சால்மன் மீன்(smoked fish) தவிர்க்க வேண்டும். சால்மன், கானாங்கெளுத்தி, போன்ற எண்ணெய் மீன், கர்ப்பிணிகள் வாரத்திற்கு இரண்டு மீன்களுக்கு மேல் சாப்பிடக்கூடாது.

why pregnant woman avoid fish

மீனில் எதை தவிர்க்க வேண்டும்?

  • வாள்மீன்
  • மார்லின்
  • சுறா
  • மூல மட்டி
  • கிங் கானாங்கெளுத்தி

ஏன் தவிர்க்க வேண்டும், மற்ற மீன்களை விட சுறா மீனில் அதிக பாதரசம் உள்ளது, எனவே நீங்கள் இந்த வகை மீன்களை குறைக்க வேண்டும். அதிகப்படியான பாதரசம் உட்கொள்ளல் உங்களுள் வளரும் குழந்தைக்கு தீங்கு விளைவிக்கும்.

எண்ணெய் மீன்களில் டையாக்ஸின்கள் மற்றும் பாலிகுளோரினேட்டட் பைபினைல்கள் போன்ற அசுத்தங்கள் இருக்கலாம். அவற்றினை அதிகமாக சாப்பிடுவது உங்கள் குழந்தைக்கு பாதிப்பு உண்டாக்கும்.

மட்டி மீன்களை தவிர்க்கவும், ஏனெனில் அவைகளில் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்கள், வைரஸ்கள் அல்லது நச்சுகள் இருக்கலாம். இது அசௌகரியம் அல்லது உணவு விஷத்தை ஏற்படுத்தலாம்.

பிற உணவுகள் மற்றும் பானங்கள்

பிற உணவுகள்களில் நீங்கள் என்ன சாப்பிடலாம்?

பழங்கள், காய்கறிகள் மற்றும் சாலட்களில் கவனமாக இருங்கள், ஏனெனில் அவை தீங்கு விளைவிக்கும் அழுக்குகளைக் கொண்டிருக்கலாம். அனைத்து பழங்கள், காய்கறிகள் மற்றும் சாலட் பொருட்களை நன்கு கழுவவும்.

கர்ப்ப காலத்தில் வேர்க்கடலை சாப்பிடுவதை நீங்கள் கைவிட வேண்டியதில்லை. ஒரு சுகாதார நிபுணரின் வழிகாட்டுதலின்றி அல்லது உங்களுக்கு ஒவ்வாமை இருந்தால் மட்டும் வேர்க்கடலை சாப்பிட வேண்டாம்.

பிற உணவுகள்களில் எதை தவிர்க்க வேண்டும்?

கர்ப்ப காலத்தில் மது அருந்துவதால் நீண்ட காலத்திற்கு உங்கள் குழந்தைக்கு தீங்கு விளைவிக்கக் கூடியதாய் இருக்கும்.
மது அருந்துவதால் குழந்தையின் மூளை வளர்ச்சி குறைபாடாகிறது. நீங்கள் கர்ப்பமாக இருந்தால் அல்லது கர்ப்பமாக இருக்க திட்டமிட்டிருந்தால், மது அருந்தாமல் இருப்பது பாதுகாப்பானது.

why pregnant women avoid soft drinks

பிற உணவுகள் ஏன் தவிர்க்க வேண்டும்?

கழுவப்படாத பழங்கள் மற்றும் காய்கறிகள், சாப்பிடுவதற்கு முன் கை கழுவுவது எப்போதும் மதிப்புக்குரியது, ஆனால் பச்சை பழங்கள் மற்றும் காய்கறிகளை சுத்தம் செய்வது இந்த நாட்களில் மிகவும் முக்கியமானது. பழங்கள் மற்றும் காய்கறிகளை வெட்டுவது, ஜூஸ் செய்வது அல்லது தோலுரிப்பது ஆகியவை இறைச்சியின் உட்புறத்தில் இருக்கும் நுண்ணுயிரிகளை போல இதிலிலும் இருந்து எளிதில் பரவலாம்.

இதற்காக நீங்கள் எந்த ஒரு பூச்சிக் கொள்ளி மருந்தையும் தெளிக்க வேண்டியதில்லை. சாப்பிடுவதற்கு அல்லது சமைப்பதற்கு முன் நீரில் நன்கு கழுவவும். ஏதேனும் அழுக்கு இருந்தால், அந்த காய்கறியை சுத்தமான வெள்ளைத் துணி கொண்டு துடைக்கவும். இறுதியாக, கீறல்கள் அல்லது சேதங்கள் இருந்தால் அதனை நறுக்கிவிடவும், ஏனெனில் இது சிதைந்த அல்லது வெட்டப்பட்ட பழங்களிலோ அல்லது காய்கறிகளிலோ அதிகப்படியான ஈக்கள் மற்றும் கொசுக்கள் மொய்க்கக் கூடும். இது பாக்டீரியாவை சுலபமாக உருவாக்கும்.

Follow @ Google News : கூகுள் செய்திகள் பக்கத்தில் ஜம்மி ஸ்கேன்ஸ் வலைப்பதிவுகள்!

நல்ல உணவுகளை நன்கு சமைத்து சாப்டிடுவதே உங்கள் உடலுக்கும், உங்களுள் வளரும் குழந்தைக்கும் நல்லது. மேற்கொண்டு என்ன சாப்பிடலாம் என்பதை வீட்டிலுள்ள பெரியவர்களிடமோ அல்லது உங்களின் மருத்துவரிடமும் கேட்டு சாப்பிடிலாம்.

5/5 - (195 votes)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here