கர்ப்ப காலத்தில் மயக்கம் வருவதை தடுக்க முடியுமா? என்ன செய்ய வேண்டும்?
கர்ப்பக் காலத்தில் உண்டாகும் மயக்க உணர்வை தவிர்க்க என்ன செய்ய வேண்டும்?
கர்ப்பிணிகளுக்கு மயக்கம் என்பது வரக்கூடியது தான். இது அதிக நேரம் நீடிக்காது 20 நிமிடங்கள் முதல் ஒரு நிமிடம் வரை இருக்க கூடும். இதை மருத்துவர்கள் சின்கோப் என்று அழைக்கிறார்கள்.
கர்ப்பிணிகளுக்கு மயக்கம் என்பது வராமல் தடுக்க என்ன செய்யலாம் என்பதை இப்போது பார்க்கலாம். கர்ப்பிணிகளுக்கு மயக்கம் வர காரணம் ஹார்மோன்கள் சுரப்பில் உண்டாகும் மாற்றத்தால் ரத்த சர்க்கரை அளவு குறைவதாலும் இந்த மயக்கம் உண்டாகலாம்.
கர்ப்பிணிகளின் மூளைக்கு ரத்த ஓட்டத்தின் அளவு திடீரென குறையும் போது மயக்கம் உண்டாகலாம். இப்படி பல காரணங்களால் கர்ப்பிணிகளுக்கு மயக்கம் உண்டாக கூடும். அவற்றில் சில தவிர்க்ககூடியவை.
கர்ப்பிணிகளுக்கு மயக்கம் வருவதற்கு முன்பு வரக்கூடிய அறிகுறிகள் குறித்து தெரிந்துகொள்வோம். இவை திடீரென்று வரக்கூடும். குளிர் அதிகமாக உணரும் போது, உடலில் அதிகம் வியர்வை உண்டாகும் போது, குமட்டல் நேரிடும் போது, கண் பார்வை திடீரென்று மங்கலாக மாறும் போது அல்லது பார்வைத்திறன் புள்ளிகள் போன்று தெரிவது எல்லாமே கர்ப்பிணிகளுக்கு மயக்கம் வருவதற்கான அறிகுறிகள்.
கர்ப்பிணிகளுக்கு மயக்கம் வருவதை தடுக்க முடியுமா? என்ன செய்ய வேண்டும்?
கர்ப்பிணிகளுக்கு மயக்கம் வருவதற்கான அறிகுறிகளை கொடுத்துள்ளோம். இந்நிலையில் மயக்கம் வருவதற்கான காரணங்கள் அதை தடுக்க கூடிய வழிமுறைகள் என்ன என்பதை பார்க்கலாம்.
கர்ப்பிணிகளுக்கு மயக்கம் என்பது சாதாரணமானது என்றாலும் இதய பிரச்சனைகளுக்கு மாத்திரைகள், நீரிழிவு பிரச்சனை இருந்தால் மயக்கமும், அதனோடு தலைவலியும் இருந்தால் உங்கள் மருத்துவருடன் ஆலோசிப்பது நல்லது.
கர்ப்பிணிக்கு ரத்த அழுத்தம் ஏற்ற இறக்கமாக இருக்கும். அப்போது மயக்க உணர்வு உண்டாகலாம் .ஏனெனில் உடலில் புரோஜெஸ்டிரான் என்னும் ஹார்மோன் நரம்புகளை நீர்த்து போக செய்யும். இதனால் ரத்த அழுத்தம் குறையகூடும். அப்போது கர்ப்பிணிகள் வேகமாக நின்றாலும், உட்கார்ந்தாலும் இது மோசமாக இருக்கலாம். மேலும் கர்ப்பகாலத்தில் குழந்தை வளரும் போது குழந்தைக்கு இடம் தேவைப்படும். அப்போது உடலில் ரத்தமும், திரவமும் இருக்கும். இதுவும் ரத்த அழுத்தத்தை அதிகரிக்கும். மயக்கம், தலைவலி, தலைச்சுற்றல் போன்றவற்றை உண்டாக்க கூடும்.
இதையும் தெரிந்து கொள்ள: கர்ப்ப காலத்தில் மலச்சிக்கலைத் தவிர்க்க சிறந்த வழிகள்!
குழந்தை வளர வளர குழந்தை கர்ப்பிணியின் முதுகில் அழுத்தம் கொடுக்கும். அப்போது கால்கள், இடுப்பு மற்றும் கீழ் இருக்கும் ரத்த நாளங்களை கசக்கிவிடும். இதனாலும் ரத்த அழுத்தம் குறைந்து மயக்கம் உண்டாக கூடும்.
உங்களுக்கு ரத்த பரிசோதனை செய்யும் போது மயக்க உணர்வை உணர்ந்தால் நீங்கள் பரிசோதனைக்கு முன்பு அதிக திரவ உணவை எடுத்துகொள்ள வேண்டும். அதிலிருந்து சில மணி நேரங்களுக்கு முன்பு உணவை உண்பது அவசியம். உங்கள் உடலில் இரும்புச்சத்து குறைபாடு ஏதேனும் உள்ளதா என்பதையும் அறிந்துகொள்வது அவசியம்.
உணவை தவிர்க்க வேண்டாம்
கர்ப்பிணிகளுக்கு மயக்கம் வருவதை தவிர்க்க வேண்டுமெனில் சரியான நேரத்தில் கர்ப்பிணி பெண்கள் சாப்பிட வேண்டிய உணவுகள் எடுத்துகொள்ள வேண்டும். உணவை தவிர்க்க கூடாது. அடுத்த வேளை உணவுக்கு முன்பு பசிக்கும் போது தவிர்க்காமல் ஆரோக்கியமான சிற்றுண்டி இருந்தால் அதை எடுத்துகொள்வது அவசியம்.
தண்ணீர் அவசியம்
இயல்பாகவே உடலுக்கு நீர்ச்சத்து அவசியம். கர்ப்பகாலத்தில் பெண்கள் போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். தாகம் எடுக்கும் வரை காத்திருந்து குடிப்பது அல்லது சிறுநீர் கழிக்க நேருமோ என்று பயந்து தவிர்க்காமல் போதுமான நீர் குடிப்பது அவசியம். கர்ப்ப காலத்தில் பெண்கள் தண்ணீர் அதிகமாக குடிக்க வேண்டுமா, என்பதை பற்றி தெரிந்து கொள்ளவது அவசியம்.
கால்களை அசையுங்கள்
கர்ப்பகாலத்தில் ஒரே இடத்தில் நிற்பதோ அல்லது கால்களை அசைக்காமல் உட்கார்வதோ கூடாது. தவிர்க்க முடியாமல் நீங்கள் வெகுநேரம் நிற்க வேண்டியோ உட்கார வேண்டியோ இருந்தால் அவ்வபோது எழுந்து நடந்து கை கால்களை அசையுங்கள். உட்கார்ந்த நிலையில் இருந்தாலும் கால்களை அசையுங்கள்.
இதையும் தெரிந்து கொள்ள: பிரசவத்திற்குப் பிறகு உடல் எடையைக் குறைக்க டிப்ஸ்!
உடற்பயிற்சி செய்யுங்கள்
கர்ப்ப காலத்தில் செய்ய வேண்டிய உடற்பயிற்சிகள் செய்யலாம். கர்ப்பிணிகளுக்கு மயக்கம் ஏற்படுத்தும் பிரச்சனைகளில் கவலைகளும் உண்டு. அதிக சோர்வு அல்லது கவலை இருப்பதை உணர்ந்தால் மூச்சை ஆழமாக மெதுவாக சுவாசித்து இழுத்துவிடுவது நல்லது.
மயக்கம் வரும் போது நீங்கள் முன்கூட்டியே உணர்ந்தால் சட்டென்று நீங்கள் செய்ய வேண்டியது படுக்க வேண்டியதுதான். ஒருவேளை உங்களுக்கு படுக்கையறை செல்லும் வரை தாங்க முடியாது என்று நினைத்தால் தரையில் உட்கார்ந்து தலையை முழங்கால்களுக்கு இடையில் வைத்தபடி அமருங்கள். நீங்கள் உட்கார்ந்தாலும் படுத்தாலும் மீண்டும் சரியாகும் வரை காத்திருந்து பிறகு மெதுவாக எழுந்து நில்லுங்கள். கைகளை இறுக்க மூடி பிறகு பொறுமையாக அமைதிப்படுத்துங்கள். கால்களையும் கைகளையும் அசைத்தபடி நடமாடுங்கள்.
Follow @ Google News : கூகுள் செய்திகள் பக்கத்தில் சென்னை மகளிர் மருத்துவமனை வலைப்பதிவுகள்!
அப்போது பசி உணர்வு இருந்தால் தயங்காமல் ஆரோக்கியமான உணவை எடுத்துகொள்ளுங்கள். உடலுக்கு நீர்ச்சத்து தேவை என்பதை உணர்ந்தால் தண்ணீர் குடியுங்கள்.
மருத்துவரை அணுகுங்கள்
கர்ப்பிணிகளுக்கு மயக்கம் என்பது சாதாரணமானதுதான். ஆனால் கர்ப்பகாலத்தில் ஒரு நாளில் ஒன்றுக்கு மேற்பட்ட முறை மயக்கம் அடைந்தால் அந்த அறிகுறியை உணர்ந்தால் அது அசாதாரண மயக்கம் ஆகும்.
மயக்கத்தின் போது வேகமான இதயதுடிப்பு, நெஞ்சு வலி, மூச்சுத்திணறல், மார்பு இறுக்கமாக இருப்பது, பேசுவது சிரமமாக உணர்வது, எல்லாமே அசாதாரணமானது. இந்த நிலையில் உண்டாகும் மயக்கம் சில நிமிடங்கள் வரை நீடிக்க கூடும்.