25 நாளில் கர்ப்பம் தெரியுமா?

5723
25 Days Pregnancy Signs and Symptoms

25 நாளில் கர்ப்பம் தெரியுமா? (25 Days Pregnancy Signs and Symptoms) என்று கேட்டால் இல்லை அறிகுறிகளை மட்டும் உணர முடியும். பெண் தன் கர்ப்பத்தை அறிந்து கொள்ள மாதவிடாய் சுழற்சிக்கு பிறகு 2 முதல் மூன்று வாரங்கள் வரை ஆகும். அதன் பிறகே கர்ப்பத்திற்கான அறிகுறிகளை உணர முடியும்.

25 நாட்கள் என்றால் 4 வாரங்கள் மற்றும் 1 மாதம் கர்ப்பத்தில் இருப்பீர்கள். மேலும் இந்த கர்ப்ப அறிகுறிகளை வைத்து உடனே பரிசோதனை செய்தால் அவ்வளவு தெளிவான முடிவுகள் வராது. மேலும் ஒரு வார காலம் ஆன பின்பே நம்மால் பரிசோதித்து சரியான முடிவுகளை அடைய முடியும்.

25 Days Pregnant

25 நாளில் கர்ப்ப அறிகுறிகளை (25 Days Pregnancy Signs and Symptoms) உணர முடியுமா?

மாதவிடாய் காலம் முடிந்து மேலும் ஒரு வாரம் அல்லது இரண்டு வாரம் கழிந்த பிறகு அதாவது 40 முதல் 50 நாட்களுக்கு பிறகு பார்த்தால் தான் பரிசோதனை முடிவுகள் சரியானதாக இருக்கும். கர்ப்பம் எத்தனை நாளில் உறுதி செய்யலாம் என்பதை தெரிந்து வைத்து கொண்டு பரிசோதனை செய்வது அவசியம், அப்போது தான் நீங்கள் சரியான முடிவை பெற முடியும்.

When Should You Take A Pregnancy Test

இப்போது தான் முட்டையுடன் இணைந்த விந்தணு கர்ப்பப்பையினை நோக்கி ஃபலோபியன் குழாயில் மிதந்து கொண்டிருக்கும். இந்த கரு கருப்பையில் இணைய இன்னும் காலம் எடுக்கும் என்பதால் ஒரு மாதத்திற்குள் கர்ப்பம் துல்லியமாக தெரியாது. உங்களால் 25 நாட்களில் கர்ப்ப அறிகுறிகளை லேசாக உணர முடியும்.

25வது நாட்களில் வரும் 12 கர்ப்ப அறிகுறிகள்

25 days pregnancy symptoms

 • மார்பக மென்மை
 • வாசனை மீது விருப்பம் மற்றும் வெறுப்புகளை அடையக்கூடும்.
 • காலை நோய்
 • அடிக்கடி சிறுநீர் கழித்தல்
 • சோர்வாக / மந்தமாக உணருதல்
 • தவறிய மாதவிடாய் காலம்
 • குமட்டல் மற்றும் வாந்தி
 • தலைச்சுற்றல் மற்றும் மயக்கம்
 • மலச்சிக்கல்
 • நெஞ்செரிச்சல்
 • அதிகரிக்கும் உடலின் வெப்பநிலை
 • அதிகப்படியான பசி அல்லது பசியின்மை

எல்லோருக்கும் பொதுவானது இல்லை சிலருக்கு ஏற்படும்

ஆரம்பகால கர்ப்ப பரிசோதனையின் நன்மைகள் என்ன?

வீட்டிலேயே கர்ப்பத்தை கண்டறிய முடியும் என்பதால் நீங்கள் இன்னும் எச்சரிக்கையாக இருக்க முடியும்.
மகப்பேறுக்கு தேவையான முறையில் உங்கள் உணவுகளிலும், வாழ்க்கை முறையிலும் ஆரோக்கியமான மாற்றங்களைச் செய்ய முடியும்.

கர்ப்பம் அறிந்த பின்பு அதற்கு தேவயான மருந்துகளை எப்போது எடுக்க வேண்டும் பிற உடல் உபாதைகளுக்கு எடுத்துக்கொள்ளப்படும் மருந்துகளை எப்போதிலிருந்து விட வேண்டும் என்ற விழிப்புணர்வு அடைய முடியும்.

ஆரம்பகால கர்ப்ப பரிசோதனையின் தீமைகள்

கர்ப்பத்தை பரிசோதிக்க வேண்டிய காலத்தை விட்டு நீங்கள் மிக முன்னதாக சோதித்தால் எதிர்மறை முடிவுகளுக்கு வாய்ப்புள்ளது.

முன்கூட்டியே பார்க்கப்படுவதால் எச்.சி.ஜி யின் அளவு குறைவாக இருக்கும். இதனால் நீங்கள் கர்ப்பமாக இருந்தாலும் உங்களால் கண்டறியப்படா நிலையில் இருக்கும்.

அடிக்கடி இரத்த பரிசோதனை செய்யும் போது உங்கள் உடலும் சோர்வடையக்கூடும்.

இதனால் தேவையில்லாத மன உளைச்சலுக்கு ஆளாக நேரிடலாம்.

கர்ப்பம் எத்தனை நாட்களில் தெரியும்?

ஒரு பெண் கர்ப்பமாக இருக்கிறார இல்லையா என்பதை அறிந்துகொள்ள மாதவிடாய் சுழற்சிக்கு பின்னர் குறைந்தது 10 நாட்கள் முதல் 15 நாட்கள் வரை காலம் எடுக்கும். கருவுற்றதற்கான அடிப்படை மாற்றங்கள் அதன் பிறகு தான் தெரியும்.

கடைசி மாதவிடாய் சுழற்சிக்குப் பிறகு அடுத்த மாத மாதவிடாய் சுழற்சியை எதிர்பார்க்கும் பெண்கள் அந்த மாதவிடாய் காலம் வருவதற்கு முன்னதாகவே தான் கருவுற்றதற்கான அறிகுறிகளை உணரப்படுவார்.

கர்ப்ப பரிசோதனை செய்த பிறகு மருத்துவரை எப்போது பார்க்க வேண்டும்?

When should I visit a doctor

நீங்கள் கர்ப்ப பரிசோதனையில் நேர்மறையான முடிவுகள் வந்த உடனே மருத்துவரை சந்தித்து தேவையான ஆலோசனைகளை பெறுவது நல்லது.

கர்ப்ப பரிசோதனை முடிவு எதிர்மறையாக வந்த பின்பும் மாதவிடாய் இன்னும் வர வில்லை என்றாலும் நீங்கள் உடனே மருத்துவரை அணுகுவது அவசியம்.

சில நேரங்களில் உங்களுக்கு அதிக மன அழுத்தம் இருந்தாலும் மாதவிடாய் சீரான சுழற்சியில் இருக்காது.
உங்களுக்கு தைராய்டு பிரச்சனை இருந்தாலும் மாதவிடாய் வராது. மேலும் இது நீங்கள் கர்ப்பமாவதை தடுக்கிறது. இது போன்ற தொந்தரவுகள் இருந்தாலும் நீங்கள் உடனே மருத்துவரை அணுக வேண்டும்.

25 வது நாளில் கர்ப்பிணிகள் சாப்பிட வேண்டிய உணவுகள்:

25 days pregnancy foods

 • புரத உணவுகள், நார்ச்சத்துக்கள், புரோபயாடிக்குகள், கார்போஹைட்ரேட்டுகள், நல்ல கொழுப்பு எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியம்.
 • பருப்பு மற்றும் பயறு வகைகள் , இறைச்சி, மீன் ஆகியவற்றில் புரத சத்துக்கள் உள்ளது.
 • பழங்கள், காய்கறிகள் மற்றும் சாலட்டுகளில் நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளது
 • நெய்யில் நல்ல கொழுப்புகள் இருப்பதால் வாரம் ஒரு முறை சேர்த்து கொள்ளலாம்.
Follow @ Google News : கூகுள் செய்திகள் பக்கத்தில் ஜம்மி ஸ்கேன்ஸ் வலைப்பதிவுகள்!

கர்ப்பமாக இருக்கும் பெண்கள் கண்டிப்பாக தங்கள் வாழ்க்கை முறையினை ஆரோக்கியமானதாக மாற்றிக்கொள்வது அவசியம். எந்த ஒரு சந்தேகமாக இருந்தாலும் உடனே தன் மருத்துவரை அணுகி சரியான ஆலோசனைகளை எடுத்துகொள்ள வேண்டும். மாதம் தவறாமல் மருத்துவமணை சென்று தேவையான இரத்தம் மற்றும் சிறுநீர் பரிசோதனைகளை செய்து கொள்ள வேண்டும்.

5/5 - (33 votes)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here