வெள்ளைப்படுதல் என்றால் என்ன?

யோனி ஈஸ்ட் தொற்று

பெண் உறுப்பில் உண்டாகும் பிரச்சனைகள் என்னென்ன?

பெண்களின் இனப்பெருக்க மண்டலமான பெண் உறுப்பில் உண்டாகும் பிரச்சனைகள் பட்டியலிட்டு கொண்டே போகலாம். இந்த பிரச்சனைகளும் பெண்களின் வயதுக்கேற்ப மாற்றங்களை சந்திக்கும். சுத்தமாக பராமரிக்க வேண்டிய உறுப்பு என்று அறிவுறுத்தினாலும் இதில் ஏன் தொற்றுகள் வருகிறது, என்ன மாதிரியான பிரச்சனைகளை பெண்கள் சந்திக்கிறார்கள் என்று தெரிந்துகொள்வோம். 

வெள்ளைப்படுதல் என்றால் என்ன?

பெண் பிள்ளைகள் பூப்படைவதற்கு முன்பு பெண்கள் உடலில் உண்டாகும் ஹார்மோன்களின் ஏற்ற இறக்கத்தால் பெண் உறுப்பில் உண்டாகும் அடர்ந்த திரவமே வெள்ளைப்படுதல் என்று அழைக்கப்படுகிறது. 

பெண் உறுப்பு ஈரப்பதத்தோடு வழவழப்பாக இருக்க வேண்டும் என்று சுரக்கும் பிசுபிசுப்பான வெள்ளை திரவம் அளவாக, அரிப்பு இல்லாமல் இயல்பாக சுரக்கும் வரை அது இயல்பானது. இது பெண்களின் கர்ப்பப்பை வாய் உட்சுவர்களில் இருந்து சுரக்ககூடியது. இது மாதவிடாய்க்கு முன்பு பெண் உறுப்பில் தென்படும். 

அசாதாரணமனது

வெள்ளைப்படுதல் நிறம் மாறி பழுப்பு, மஞ்சள், வெளிர் பச்சை நிறங்களில் வருவது சளி போன்று அடர்த்தியாக இருப்பது,நாப்கின் வைக்கும் அளவு அதிகமாக வருவது எல்லாமே தொற்று இருப்பதற்கான அறிகுறிகள். 

அரிப்பு

எல்லா பெண்களும் சந்திக்கும் பிரச்சனைகளில் பொதுவானது இது.  மாதவிடாய்க்கு முன்பு சில பெண்களுக்கு அரிப்பு உண்டாக கூடும். ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் தான் பெண்களுக்கு இந்த உணர்வை உண்டாக்குகிறது.இது  எப்போதாவது இருந்தால் அது பிரச்சனையல்ல. சமயங்களில் இறுக்கமான ஆடை அணிவது கூட அங்கு அரிப்பை உண்டாக்கும். அதிகம் சோப்பு பயன்படுத்தும் போதும் இந்த அரிப்பு உண்டாகும். 

அசாதாரணமானது

எப்போதும் எல்லா காலங்களிலும் அரிப்பு இருந்தால் அது பெண் உறுப்பில் ஈஸ்ட் தொற்று,  திருமணத்துக்கு பிறகான பெண்களுக்கு பாலியல் தொற்று எஸ் டி ஐ போன்றவற்றால் இருக்கலாம். 

ஒருவித வாசனை

வியர்வை அதிகரிக்கும் போது அக்குள் பகுதிகளில் ஒருவித வாசனை உணர்வு இருக்கும். அது போன்றே  பெண் உறுப்பிலும் வாடை உண்டாகும். சமயங்களில் அதிகம் மசாலா சேர்த்த உணவுகள் இந்த வாடையை உண்டாக்கும். இது எப்போதாவது இலேசாகவோ, சமயங்களில் கடுமையாகவோ இருக்கலாம். 

அசாதாரணமானது

அதிக மோசமான நாற்றம் வருவது அலட்சியப்படுத்த கூடியதல்ல. குறிப்பாக மாதவிடாய் நாட்களில் பயன்படுத்தும் டேம்பன்  நாப்கின் நீண்ட நேரம் மாற்றாமல் பயன்படுத்தும் போது  இந்த விரும்பத்தகாத வாசனை உருவாகலாம். தவிர்க்காமல் மருத்துவரை அணுகுவது நல்லது. 

பெண் உறுப்புக்குள் பருக்கள்

பெண் உறுப்பில் சிறு பருக்கள் என்பது தவிர்க்கமுடியாதது. எப்போதாவது ஒரு முறையாவது இவை உருவாக கூடும். குறிப்பாக பருவம் அடைந்த பிறகு பெண்கள் பெண் உறுப்பில் இருக்கும் முடிகளை அகற்றும் போது இலேசாக  அந்த இடத்தில் தொற்று உருவாகலாம். இது அந்த இடத்தில் இலேசான புடைப்பை பருவை உண்டாக்கும். இது சில நாட்களில் சரியாகிவிடும். 

அசாதாரணமானது

சிறு பருக்கள் கட்டிகள் தானாகவே சரி ஆக கூடியது.  இவை குறையாமல் அதிகரிக்கும் போது அது கவனிக்க வேண்டியது. இது மயிர்க்கால்களை அடைத்து  அந்த இடத்தில் மேலும் தொற்றை அதிகரிக்க வாய்ப்புண்டு.இதே போன்று இங்கு புண்கள், கட்டிகள் வருவதும் கருப்பையின்  குறைபாட்டுக்கான அறிகுறியாக இருக்கலாம்.  

அதிக வறட்சி

பெண் உறுப்பு ஈரத்தன்மையாக வைக்கவே வெள்ளைப்படுதல் உண்டாகிறது. ஆனால்  வெகு அரிதாக பிறப்புறுப்பு வறட்சியை சந்திக்க நேரிடுகிறது. இதற்கு காரணம் யோனி பகுதியின் ஆரோக்கிய குறைபாடாக இருக்கலாம். ஏனெனில் பெண் உறுப்பு வறட்சி என்பது  வயதான காலத்திலும் மெனோபாஸ் காலத்திலும் வரக்கூடியது. ஆனால் அடிக்கடி பெண் உறுப்பில் வறட்சி தொற்று ஏற்படும் போது அது  உறுப்பில் அதிக நமைச்சல், அரிப்பு, எரிச்சலை உண்டாக்கிவிடும். 

மாதவிடாய் காலங்களில் பயன்படுத்தும் நாப்கின் பயன்பாடும்  சீரான முறையில் பயன்படுத்தாவிட்டால் அது பெண் உறுப்பில் தொற்றை ஏற்படுத்திவிடக்கூடும். 

யோனி ஈஸ்ட் தொற்று

மேற்கண்டவற்றை காட்டிலும் தொற்று என்றால் அது யோனி ஈஸ்ட் தொற்று தான். தொற்றின் பரவலை பொறுத்து இந்நோயின் கடுமையை உணரலாம்.  இதன் அறிகுறிகள் மிதமானதாகவோ அல்லது கடுமையாகவோ இருக்க கூடும். இதனால் சிறுநீர் கழிக்கும் பொது வலி, பெண் உறுப்பு வீக்கம், திரவ வெளியேற்றம்,  சிவந்து இருத்தல், யோனி திசுக்களில் அரிப்பு, வலி போன்றவை உருவாகலாம். இது சிக்கலான அல்லது சிக்கலில்லாத தொற்றாகவும் இருக்கலாம். 

பெண் உறுப்பு என்பது  எப்போதும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். இதில் உண்டாகும் அறிகுறிகள், மாற்றங்கள் தீவிரமாவதற்குள் மருத்துவரை அணுகுவதன் மூலம் பாதுகாப்பாக இருக்கலாம்.

பொதுத்துறப்பு

சென்னை மகளிர் மருத்துவமனை மற்றும் ஸ்கேன் மையம் ( Chennai Women’s Clinic and Scan Centre (CWC) ) வழங்கும் கட்டுரைகள், தகவல்கள், வீடியோக்கள் போன்றவை தகவல் தொடர்பு நோக்கங்களுக்காக மட்டுமே.

இவை எல்லாமே மகப்பேறு மருத்துவர்கள், ஸ்கேன் பரிசோதனை நிபுணர்கள், அதற்கான நடைமுறைகள் போன்றவை நிபுணர்களால் வழங்கப்படும் பொதுவான கட்டுரைகள் மட்டுமே.

எங்கள் இணையதளத்தில் இருக்கும் கட்டுரைகள் மற்றும் வீடியோக்கள் பொதுவான விஷயங்கள் குறித்து மட்டுமே வழங்கப்படுகின்றன. வீடியோக்களில் இருக்கும் தகவல்களும் , கட்டுரைகளும் தனிப்பட்ட நபர்களுக்கான நோயறிதல் குறித்தவை என்று கருதக்கூடாது. அதனால் இதன் வாயிலாக வெளியிடப்படும் சிகிச்சை முறைகளை சுயமாக செய்து கொள்ள கூடாது.

சென்னை மகளிர் மருத்துவமனை மற்றும் ஸ்கேன் பரிசோதனை தளத்தில் வெளியான கட்டுரைகள் மற்றும் வீடியோக்களின் மூலம் நோயறிதலையும், சிகிச்சையையும் சுயமாக செய்து கொள்ள கூடாது. மாறாக உங்கள் உடல் ஆரோக்கியம் குறித்து உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது சுகாதார நிபுணரின் ஆலோசனை செய்த பிறகு உரிய சிகிச்சை பெறுவது நல்லது.

சென்னை மகளிர் மருத்துவமனை மற்றும் ஸ்கேன் மையம் உருவாக்கும் ( இணையதளம் மற்றும் அச்சு) தகவல்கள் மருத்துவ ரீதியிலான பொதுவான கட்டுரைகள் மட்டுமே. எந்தவொரு தனி நபருக்கும் சிகிச்சையளிக்கும் வகையில் கட்டுரைகள் வெளியிடப்படவில்லை என்பதை உறுதி கூறுகிறோம். அதனால் தனிப்பட்ட முறையில் சுயமாக ஒருவர் சிகிச்சை கொள்வதற்கு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ நாங்கள் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது என்பதையும் இத்தருணத்தில் உறுதி அளிக்கிறோம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here