பி.சி.ஓ.எஸ் அறிகுறிகள்
பி.சி.ஓ.எஸ் நோயால் பாதிக்கப்படும் போது கருத்தரிக்க முடியுமா?
பி.சி.ஓ.எஸ் பாதிப்பில் கருமுட்டையின் தலையீடு
கர்ப்பப்பை நீர்க்கட்டி பிரச்சனைக்கு என்ன மாதிரியான உணவுகள் எடுத்துகொள்ளலாம்?

பி.சி.ஓ.எஸ் (பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம்) என்கிற சினைப்பை நீர்க்கட்டியில் உண்டாகும் பிரச்சனையை இன்று அதிக பெண்கள் எதிர்கொள்கிறார்கள். பெண்களுக்கு ஹார்மோன் சுரப்பில் உண்டாகும் கோளாறுகளால் இந்த குறைபாடு நிகழ்கிறது. இது டெஸ்டோஸ்டிரான் அதிகமாக சுரத்தல், கருப்பை விரிவாதல் மற்றும் சீரற்ற மாதவிடாய் போன்ற காரணங்களால் உண்டாகிறது. இந்த பி.சி.ஓ.எஸ். பிரச்சனைகளை கொண்டிருந்தால் என்ன மாதிரியான அறிகுறிகள் இருக்கும் என்பதை பார்க்கலாம்.

பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம் (பி.சி.ஓ.எஸ்) அறிகுறிகள்

பி.சி.ஓ.எஸ் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஒழுங்கற்ற மாதவிடாய், முகப்பரு, அசாதாரண முடி வளர்ச்சி (முகத்தில், கன்னத்தில்,மீசை முடி) கூந்தல் உதிர்வு, தோல் நிறம் மாறுதல், உடல் எடை அதிகரிப்பு என பல அறிகுறிகள் உண்டு.

பி.சி.ஓ.எஸ் அறிகுறிகள் இருந்து உடல் பருமனை கொண்டிருந்தால் எடையை குறைப்பது கடினமாக இருக்கும். அதே நேரம் உணவு மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையால் உடல் எடையை குறைக்க முடியும். அப்படியெனில் உடல் பருமனாக இருப்பவர்களுக்கு தான் பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம் வரக்கூடும். உடல் மெலிவாக இருப்பவர்களுக்கு வராது என்று அர்த்தமல்ல.

பி.சி.ஓ.எஸ் (PCOS) அறிகுறிகளை அலட்சியம் செய்தால் நீண்ட கால பி.சி.ஓ.எஸ் ஆனது நீரிழிவு, இன்சுலின் எதிர்ப்பு, அதிக கொழுப்பு மற்றும் உடல் பருமனால் நீண்டகாலம் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம் தொடர்ந்து நீடிக்கும் போது எதிர்காலத்தில் அவர்களுக்கு மார்பக புற்றுநோய் மற்றும் எண்டோமெட்ரியோசிஸ் புற்றுநோய்க்கான ஆபத்து அதிகரிக்க செய்யலாம் என்கிறது ஆய்வு.

பி.சி.ஓ.எஸ் பிரச்சனை கொண்டிருப்பவர்கள் குழந்தை பேறை எதிர்நோக்கும் போது முதலில் பி.சி.ஓ.எஸ் -ஐ கட்டுக்குள் கொண்டு வர வேண்டும். இல்லையெனில் அது கருவுறுதலில் பிரச்சனையை உண்டாக்கலாம். உண்மையில் பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம் கருவுறுவாவதில் பிரச்சனையை உண்டு செய்யுமா என்பதை பார்க்கலாம்.

பி.சி.ஓ.எஸ் (PCOS) நோயால் பாதிக்கப்படும் போது கருத்தரிக்க முடியுமா?

இந்த பிரச்சனையை எதிர்கொள்ளும் பெண்கள் அனைவருமே மருத்துவரிடம் வரும் போது ஒருவித படபடப்போடுதான் வருவார்கள். டாக்டர் எனக்கு குழந்தை பிறக்குமா, அப்படியே கருவுற்றால் ஏதாவது பிரச்சனை வருமா என்று கேட்கிறார்கள். முதலில் இவர்கள் பி.சி.ஓ.எஸ் குறித்து தெரிந்துகொள்ள வேண்டும்.

பி.சி.ஓ.எஸ் (PCOS) என்பது குணப்படுத்த கூடிய பிரச்சனை தான். சரியான முறையில் அதற்கான காரணத்தையும் அறிந்து அணுகும் போது கருவுறுதல் என்பதும் சாத்தியமானதுதான். பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம் கொண்டிருப்பவர்கள் என்ன செய்தால் கருவுறுதலை எளிமையாக்கலாம் என்பது குறித்து பார்க்கலாம்.

பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம் பிரச்சனை கொண்டிருப்பவர்கள் முதலில் செய்ய வேண்டியது மாதவிடாய் ஒழுங்கற்று இருந்தால் அதை சீர் செய்ய வேண்டியதுதான். கருவுறுதலுக்கு முதல் தேவை மாதவிடாய் சுழற்சி சீராவதுதான்.

பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம் கொண்டிருப்பவர்கள் தங்களது உயரத்துக்கேற்ற எடையை அதாவது பி.எம்.ஐ கொண்டிருக்க வேண்டும். உடல் பருமனாக இருந்தாலும் உடல் எடையை குறைக்க முயற்சிக்க வேண்டும். அதனோடு உணவு முறையை சரியாக எடுத்துகொண்டால் கருவுறுதல் சிகிச்சை செய்வது எளிதாக இருக்கும்.

பி.சி.ஒ.எஸ் (PCOS) பெண்களின் மாதவிடாய் சுழற்சி சீராக இருந்தால் கருமுட்டை வெளிவரும் சமயம், அவை வெளிவரும் நேரம், எந்த நேரத்தில் உடலுறவு கொண்டால் கருவுறுதல் சாத்தியமாகலாம் என்பதை அறிய எளிதாக இருக்கும். அதனால் பி.சி.ஓ. எஸ் இருப்பவர்களுக்கு குழந்தைப்பேறு என்பதும் எளிதில் கிட்டகூடும்.

பி.சி.ஓ.எஸ் பாதிப்பில் கருமுட்டையின் தலையீடு

பி.சி.ஓ.எஸ் பிரச்சனையை எதிர்கொள்ளும் பெண்கள் மாதவிடாய் சுழற்சி பிரச்சனையை எதிர்கொள்ள காரணமே கருமுட்டை தான். கருமுட்டை வளர்ச்சி சீரற்று இருப்பதால் தான் ஒழுங்கற்ற மாதவிடாய் அல்லது மாதவிடாய் வராமல் இருப்பதே என்று சொல்லலாம்.

கருமுட்டை வளர்ச்சி என்பது மாதவிடாய் சுழற்சி வந்த முதல் நாளிலிருந்து 13 முதல் 15 நாட்களிலிருந்து கருமுட்டை பெரியதாக வளர வேண்டும். கருமுட்டை பெரியதாக இருந்தால் தான் உறவின் போது அவை விந்தணுக்களோடு சேர்ந்து கருத்தரித்தலை உருவாக்கும். ஆனால் பாலிசிஸ்டிக் ஓவரியன் சிண்ட்ரோம் பிரச்சனை இருக்கும் போது அதிகமான கருமுட்டை இருக்கும் இடத்தில் ஒரு கருமுட்டை பெரியதாக வளராது. எல்லா கருமுட்டையும் சிறியதாகவே இருக்கும். இவை எல்லாம் ஒன்றாக இருக்கும் போது கருமுட்டை ஒன்றுமே பெரியதாக இல்லாத போது கருத்தரித்தல் கேள்விக்குரியதாகி விடுகிறது.

இதனால் கருமுட்டை வளர்வதில்லை. முட்டை வெடிக்கவும் செய்வதில்லை. அதனால் தான் கருவுறுதலும் நடப்பதில்லை. மாதவிடாய் சீராக வருவதில்லை. கருமுட்டையும் விந்தணுவும் சேராமல் இருப்பதால் கருவுறுதல் பிரச்சனை சந்திக்கிறது. அதனால் நீர்க்கட்டி பிரச்சனை இருக்கும் போது மருத்துவர்கள் முதலில் கருமுட்டை வளர்ச்சிக்கு சிகிச்சை அளிப்பார்கள்.

கருமுட்டை வளர்ச்சியை பிரத்யேகமாக கண்காணிக்க பி.சி.ஓ.எஸ் கொண்டிருக்கும் பெண்களுக்கு ஃபோலிகுலர் ஆய்வு செய்வார்கள். இந்த பரிசோதனையின் மூலம் கருமுட்டை வளர்ச்சியை கண்டறிந்து அந்த நாட்களில் உறவு கொள்ள வலியுறுத்துவார்கள்.

பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம் பெண்ணுக்கு மாதவிடாய் சுழற்சிக்கு பிந்தைய இரண்டு வாரங்களில் கருமுட்டை வளர்ச்சி சீராக இருந்தால் கர்ப்பப்பையும் இயல்பானதாக இருக்கும். அதனால் பி.சி.ஓ.எஸ் பெண்கள் முதலில் தங்கள் உடல் எடையை கட்டுக்குள் வைக்க முயற்சிக்க வேண்டும். அடுத்ததாக மென்சுரல் டைரி. அதாவது ஒவ்வொரு மாதமும் மாதவிடாய் வரும் நாளை குறித்து வர வேண்டும்.

மாதவிடாய் சீரற்று வந்தாலும் அவை எத்தனை நாட்கள் வரை இருந்தது உதிரபோக்கு எப்படி இருந்தது போன்றவற்றை அறிந்து கொள்ள வேண்டும். இதன் மூலம் மருத்துவர் உங்கள் மாதவிடாய் சுழற்சியை அறிந்துகொள்ள இயலும். அதனோடு சிகிச்சை அளிப்பதும் மருத்துவர்களுக்கு எளிமையாக இருக்கும். சிகிச்சையோடு நீங்கள் கண்டிப்பாக செய்ய வேண்டியது உணவு முறையில் கவனம் செலுத்துவது தான்.

குறிப்பிட்ட சில உணவு பொருள்கள் ஜங்க் ஃபுட் என்னும் குப்பை உணவுகள், அதிகம் பதப்படுத்தப்பட்ட உணவுகள், செயற்கை இனிப்பு சேர்த்த பொருள்கள், இனிப்பு சோடா பானங்கள் போன்றவற்றை அவசியம் தவிர்க்க வேண்டும் இவை உடல் எடையை அதிகரிக்க செய்யும். உடலில் கொழுப்பை அதிகரிக்க செய்யும்.

கூடவே இன்சுலின் எதிர்ப்புத்திறன் பாதிக்க செய்யும். இவையெல்லாம் சேர்ந்து மாதவிடாய் சுழற்சியை பாதிக்கும். பிறகு கருமுட்டை வளர்ச்சியில் பாதிப்பை உண்டாக்கும். இது கர்ப்பத்தை பாதிக்க செய்யும். அதனால் மருத்துவர்கள் சிகிச்சையோடு ஆலோசனையும் கவனமாக பின்பற்றுவது அவசியம்.

பி.சி.ஓ.எஸ் பிரச்சனை கொண்டிருப்பவர்கள் உடல் பருமனாக இருந்தால் அவர்களுக்கு சிகிச்சை அளிப்பது எளிதாக இருக்கும். அதுவே உடல் மெலிந்தவர்கள் பி.சி.ஓ.எஸ் பிரச்சனை எதிர்கொண்டால் அவர்களுக்கு சிகிச்சை அளிப்பது கடினமானது. 40 அல்லது 45 கிலோ எடை கொண்டவர்களுக்கு கூட பாலிசிஸ்டிக் சிண்ட்ரோம் இருப்பதை பார்க்கும் போது அவர்களுக்கு சிகிச்சை முறை கூடுதலாக தேவைப்படும்.

கர்ப்பப்பை நீர்க்கட்டி பிரச்சனை அதாவது பி.சி.ஓ.எஸ் பிரச்சனைக்கு என்ன மாதிரியான உணவுகள் (PCOS Diet) எடுத்துகொள்ளலாம்?

நீர்க்கட்டி பிரச்சனை என்னும் பாலி சிஸ்டிக் ஓவரியன் இருக்கும் பெண்களுக்கு இது குறிப்பிடத்தக்க தாக்கத்தை உண்டு செய்கிறது என்கிறது ஆய்வுகள். பி.சி.ஒ.எஸ் பிரச்சனை கொண்டு இருப்பவர்கள் குறைந்த கிளைசெமிக் உணவுகளை எடுத்துகொள்ள வேண்டும். ஏனெனில் சில கார்போஹைட்ரேட்டுகள் போன்ற உணவுகளை விட இன்சுலின் அளவு அதிகமாகவோ அல்லது விரைவாகவோ இவை உண்டாக்காது.

குறைந்த கிளைசெமிக் உணவுகளில் உள்ள முழு தானியங்கள், பருப்பு வகைகள், கொட்டைகள், விதைகள், பழங்கள், மாவுச்சத்துள்ள காய்கறிகள் மற்றும் பதப்படுத்தப்படாத குறைந்த கார்போஹைட்ரேட் உணவுகள் அடங்கும்.

அழற்சி எதிர்ப்பு உணவு பெர்ரி, கொழுப்பு நிறைந்த மீன், இலைகள் கொண்ட காய்கறிகள், கீரைகள் மற்றும் ஆலிவ் எண்ணெய் போன்ற அழற்சி எதிர்ப்பு உணவுகள் எடுத்துகொள்ளலாம்.

இதய நோய்களின் ஆபத்து அல்லது தாக்கத்தை குறைக்க உயர் இரத்த அழுத்த உணவை தவிர்த்து உணவு முறைகளை மாற்ற மருத்துவர்கள் பரிந்துரை செய்வார்கள். இவையும் பி.சி.ஓ.எஸ் அறிகுறிகளை நிர்வகிக்க உதவுதாக ஆய்வுகள் தெரிவிக்கிறது.

மீன், கோழி, பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள் மற்றூம் குறைந்த கொழுப்புள்ள பால் பொருள்கள் கொண்ட டயட்டை 8 வாரங்கள் தொடர்ந்து பின்பற்றியவர்கள் மற்றவர்களை காட்டிலும் இன்சுலின் எதிர்ப்பு மற்றும் தொப்பை கொழுப்பு குறைவதை கண்டதாக 2015 ஆம் ஆண்டு ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

ஆரோக்கியமான பி.சி.ஓ.எஸ் உணவில் இயற்கை உணவுகள், பதப்படுத்தப்படாத உணவுகள், உயர் நார்ச்சத்து கொண்ட உணவுகள், சால்மன், டுனா, மத்தி மற்றும் கானாங்கெளுத்தி உள்ளிட்ட கொழுப்பு மீன்கள், காலே, கீரைகள், அடர்ந்த பச்சை நிற காய்கறிகள், சிவப்பு திராட்சை, பெர்ரி பழங்கள், கருப்பட்டை, அடர் சிவப்பு பழங்கள், காய்களில் ப்ரக்கோலி, காலிஃப்ளவர், உலர்ந்த பீன்ஸ் வகைகள், பயறு வகைகள், ஆலிவ் எண்ணெய், அவகேடோ மற்றும் தேங்காயெண்ணெய் போன்ற ஆரோக்கியமான கொழுப்புகள், பைன் கொட்டைகள், அக்ரூட் பருப்புகள், பாதாம் மற்றும் பிஸ்தா உள்ளிட்ட கொட்டைகள், கருப்பு சாக்லேட், மசாலாவில் இலவங்கப்பட்டை போன்றவை ஆரோக்கியமான உணவு முறையில் பின்பற்ற வேண்டியவை.

ஆய்வு ஒன்றில் நிறைவுற்ற கொழுப்புகளை விட மோனோ நிறைவுறா கொழுப்புகளை வலியுறுத்தும் உணவை மேற்கொண்ட நபர்கள் அதிக எடையை இழந்தது கண்டறியப்பட்டது. தாவர அடிப்படையிலான கொழுப்புகளை சாப்பிட மக்களை ஊக்குவிக்கிறது இந்த ஆய்வு முடிகள் என்று சொல்லலாம். அதே போன்று குறைந்த கார்போஹைட்ரேட் அல்லது குறைந்த கிளைசெமிக் உணவுகளை பின்பற்றியவர்கள் மேம்பட்ட இன்சுலின் வளர்சிதை மாற்றம் மற்றும் குறைந்த கொழுப்பின் அளவை கண்டனர்.

பி.சி.ஓ.எஸ் (PCOS) பிரச்சனை கொண்டிருப்பவர்கள் வாழ்க்கை தரம் மேம்பட்டிருப்பதையும். வழக்கமான மாதவிடாய் காலங்கள் பின் தொடர்வதையும் கண்டறிந்தனர். ஆய்வுகளின் படி பி.சி.ஓ.எஸ் பெண்கள் எடையை குறைக்க இவை உதவுவதாக கண்டறியப்பட்டுள்ளது.

கர்ப்பப்பை நீர்க்கட்டி பிரச்சனை உள்ள பெண்கள் ஆரோக்கியமற்ற உணவுகளை தவிர்க்க வேண்டும். குறிப்பாக ரீபைண்ட் செய்யப்பட்ட கார்போஹைட்ரேட் உணவுகள், வெள்ளை ரொட்டி, சுத்திகரிக்கப்பட்ட உணவுகள், துரித உணவுகள், வறுத்த உணவுகள், சோடாக்கள் மற்றும் எனர்ஜி பானங்கள் போன்ற சர்க்கரை பானங்கள், பதப்படுத்தப்பட்ட இறைச்சிகள், திடமான கொழுப்புகள், அதிகப்படியான சிவப்பு இறைச்சி போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.

பாலிசிஸ்டிக் ஓவரியன் இருப்பவர்கள் கருத்தரிக்கலாம் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள். அதற்கு மருத்துவ சிகிச்சையும் மருத்துவரின் ஆலோசனையும் கூடவே உங்களது முயற்சியும் இருந்தால் போதும். நிச்சயம் கருவுறுதல் சாத்தியமே. அதனால் பாலிசிஸ்டிக் ஓவரியன் என்னும் கர்ப்பப்பை நீர்க்கட்டி பிரச்சனை கொண்டிருப்பவர்கள் குழந்தைப்பேறு பிரச்சனை தான் என்று நினைக்காமல் அனுபவமிக்க மருத்துவரை அணுகினால் குழந்தைப்பேறு நிச்சயம் சாத்தியம் தான்.

பொதுத்துறப்பு

சென்னை மகளிர் மருத்துவமனை மற்றும் ஸ்கேன் மையம் ( Chennai Women’s Clinic and Scan Centre (CWC) ) வழங்கும் கட்டுரைகள், தகவல்கள், வீடியோக்கள் போன்றவை தகவல் தொடர்பு நோக்கங்களுக்காக மட்டுமே.

இவை எல்லாமே மகப்பேறு மருத்துவர்கள், ஸ்கேன் பரிசோதனை நிபுணர்கள், அதற்கான நடைமுறைகள் போன்றவை நிபுணர்களால் வழங்கப்படும் பொதுவான கட்டுரைகள் மட்டுமே.

எங்கள் இணையதளத்தில் இருக்கும் கட்டுரைகள் மற்றும் வீடியோக்கள் பொதுவான விஷயங்கள் குறித்து மட்டுமே வழங்கப்படுகின்றன. வீடியோக்களில் இருக்கும் தகவல்களும் , கட்டுரைகளும் தனிப்பட்ட நபர்களுக்கான நோயறிதல் குறித்தவை என்று கருதக்கூடாது. அதனால் இதன் வாயிலாக வெளியிடப்படும் சிகிச்சை முறைகளை சுயமாக செய்து கொள்ள கூடாது.

சென்னை மகளிர் மருத்துவமனை மற்றும் ஸ்கேன் பரிசோதனை தளத்தில் வெளியான கட்டுரைகள் மற்றும் வீடியோக்களின் மூலம் நோயறிதலையும், சிகிச்சையையும் சுயமாக செய்து கொள்ள கூடாது. மாறாக உங்கள் உடல் ஆரோக்கியம் குறித்து உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது சுகாதார நிபுணரின் ஆலோசனை செய்த பிறகு உரிய சிகிச்சை பெறுவது நல்லது.

சென்னை மகளிர் மருத்துவமனை மற்றும் ஸ்கேன் மையம் உருவாக்கும் ( இணையதளம் மற்றும் அச்சு) தகவல்கள் மருத்துவ ரீதியிலான பொதுவான கட்டுரைகள் மட்டுமே. எந்தவொரு தனி நபருக்கும் சிகிச்சையளிக்கும் வகையில் கட்டுரைகள் வெளியிடப்படவில்லை என்பதை உறுதி கூறுகிறோம். அதனால் தனிப்பட்ட முறையில் சுயமாக ஒருவர் சிகிச்சை கொள்வதற்கு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ நாங்கள் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது என்பதையும் இத்தருணத்தில் உறுதி அளிக்கிறோம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here