குழந்தைகளை தாக்கும் டவுண்சிண்ட்ரோம் என்றால் என்ன

0
813
டவுண் சிண்ட்ரோம் குறைபாடு

டவுண்சிண்ட்ரோம் என்றால் என்ன?

மரபணு குறைபாடு காரணமாக குழந்தைகளுக்கு உண்டாகும் அரிதான பாதிப்பு டவுண்சிண்ட்ரோம் என்றழைக்கப்படுகிறது. 

மனித உடலில் இயல்பான செல்களாக மொத்தம் 23 ஜோடி குரோமோசோம்கள் அதாவது 46 குரோமோசோம்கள் உண்டு.  இது இயல்பானது. சிலருக்கு 21 ஆம் ஜோடி குரோமோசோம்களில் ஒரு குரோமோசோம்கள் மட்டும் கூடுதலக இருக்கும். அவர்களுக்கு 47 குரோமோசோம்கள் இருக்கும். குழந்தை கருவில் வளரும் போதே இந்த குறைபாடு உண்டாகும் போது அந்த குழந்தை டவுண்ட் சிண்ட்ரோம் குழந்தையாக பிறக்கும். 

கர்ப்பகாலத்தில் டவுண் சிண்ட்ரோம்  பாதிப்பு இருப்பதை எப்படி எப்போது கண்டறிவது என்பதை தெரிந்துகொள்வோம். கர்ப்பத்தின் மூன்றாவது மாதத்தில் அதாவது 11 வது வாரத்துக்கு பிறகு கர்ப்பிணிக்கு ரத்த பரிசோதனை (என் டி ஸ்கேன்) செய்வதன் மூலம் இதை கண்டறியலாம். 

அதன் பிறகு கர்ப்பிணிக்கு அம்னியோசெண்டசிஸ் எனப்படும் பனிக்குட திரவ பரிசோதனை செய்யப்படும். இந்த பரிசோதனையின் போது  கருவானது கர்ப்பப்பையில் மிதக்கும்.  அந்த திரவத்தை ஊசி மூலம் உறிஞ்சு எடுத்து  ஆய்வுக்கு அனுப்பப்பட்டு டவுண் சிண்ட்ரோம் உள்ளிட்ட பிறவிக்குறைபாடுகளுக்கு வாய்ப்புண்டா என்பதை கண்டறிவார்கள்.இது தவிர பிறவிகுறைபாடு வேறு  ஏதேனும் உண்டா என்பதையும் கண்டறிவார்கள். நஞ்சுகொடி பரிசோதனையிலும் இதை கண்டறிய முடியும். 

இந்த டவுண் சிண்ட்ரோம் மூன்று வகைகள் உண்டு. ட்ரைசோமி 21  என்பது முதல் வகை ஆகும். இது பொதுவாக அனைவரையும் பாதிக்க கூடியது. குரோமோசோம்களின் எண்ணிக்கையில் 21ல் கூடுதல் அனைத்திலும் இருப்பது. 

இரண்டாவது டவுண் சிண்ட்ரோம் என்பது மொசைசிம்  அதாவது சிலவற்றில் கூடுதல் குரோமோசோமுடன் குழந்தை பிறக்கும் போது உண்டாவது.  இது எல்லா உயிரணுக்களுக்கும் இல்லை.  இந்த இரண்டாம் நிலை டவுண் சிண்ட்ரோம் கொண்டவர்களுக்கு 21 ஐ காட்டிலும் குறைவான அறிகுறிகள் உள்ளது. 

மூன்றாவது வகையான டவுண் சிண்ட்ரோம் ஆனது குழந்தைகளுக்கு  21 ஆம் குரோமோசோம்களில் மட்டும் இருக்கும் கூடுதல். இவர்கள் 46 குரோமோசோம்களை மட்டுமே கொண்டிருப்பார்கள். 

டவுண் சிண்ட்ரோம் குறைபாடு கொண்ட குழந்தையை கர்ப்பிணிகள் சுமந்தால் அவர்களுக்கு எந்தவிதமான அறிகுறியும் இருக்காது. பரிசோதனையின் மூலம் மட்டுமே கண்டறிய முடியும். இல்லையெனில்  குழந்தை பிறந்த பிறகு தான் அறிகுறிகளை வைத்து கண்டறிய முடியும்.

டவுண் சிண்ட்ரோம் குறைபாடோடு பிறக்கும் குழந்தைகள்  இதற்கான அறிகுறிகளையும் கொண்டிருக்கலாம். இந்த குழந்தைகள்  கண்கள் பெரிதாக இருக்கும்.  மாறுக்கண்களாக இருக்கும், கண்களின் இமைகள் மிக சிறியதாக இருக்கும். தலை தட்டையாக இருக்கும். மூக்கும் தட்டையாக இருக்கும். குழந்தையின் காதுமடல்கள் மிகச்சிறியதாக இருக்கும். 

பாதங்கள் கைகள் சிறியதாகவும் உள்ளங்கையில்  ஒரு ரேகையும் இருக்கும். கழுத்து குறுகி இருக்கும். நாக்கு நீட்டியபடி இருக்கும்.இவர்களது வளர்ச்சி மெதுவாக இருக்கும். இவர்கள்  உயரம் குறைவாகவே வளர்வார்கள். 

இந்த டவுண் சிண்ட்ரோம் குறைபாடு கொண்ட குழந்தைகளுக்கு தைராய்டு சுரப்பு சரியாக வேலை செய்யாது. 

பிறவியிலேயே இதய குறைபாடுகள் கொண்டிருப்பார்கள். காது கேளாமை,மோசமான பார்வை, இடுப்பு பிரச்சனைகள், மலச்சிக்கல், தூக்கத்தில் மூச்சுத்திணறல உண்டாகும். தைராய்டு சுரப்பு குறைபாட்டால் மூளை, நரம்பு சார்ந்த கோளாறுகள் உண்டாக வாய்ப்புண்டு.  இவர்களுக்கு இதயச்சுவரில் துளை, நுரையீரல் பாதிப்பு போன்ற பிறவிக்குறைபாடுகளும் உண்டாக வாய்ப்புண்டு சில குழந்தைகள் வளர்ந்த பிறகு  அல்சைமர் நோய்க்கு ஆளாக கூடும். டவுன் சிண்ட்ரோம் குறைபாடு இருப்பவர்களுக்கு சிறுநீர் பாதை நோய்த்தொற்றுகள் மற்றும் தோல் நோய்த்தொற்றுகள் உண்டாகலாம். 

டவுன் சிண்ட்ரோம்  குறைபாடோடு பிறக்கும் குழந்தைக்கு எந்தவிதமான சிகிச்சையும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.   டவுன் சிண்ட்ரோம் குறைபாட்டால் இதயம், நுரையீரல் போன்றவற்றில் பிறவிக் குறைபாடு இருந்தால் அவர்களுக்கு  தொடர் கவனிப்பும், உடல் பரிசோதனையும் தேவைப்படும். தைராய்டு  குறைபாடுகளுக்கு  குறிப்பிட்ட இடைவெளியில் ரத்தபரிசோதனை செய்ய வேண்டும். இந்த குழந்தை நன்றாக வளரும் காலக்கட்டம் வரை மருத்துவரின் ஆலோசனையோடு அவரது வழிகாட்டுதலில் தொடர வேண்டும். இவர்களுக்கு எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும் என்பதால் இவர்கள் தொற்றுநோய்கள், சாதாரண சளி  போன்றவை தொற்றாமல் இருக்க கவனமாக இருக்க வேண்டும். 

முந்தைய காலத்தை காட்டிலும் இபோது டவுன் சிண்ட்ரோம் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் ஆயுள் அதிகரித்துள்ளது. 

டவுன் சிண்ட்ரோம் குறைபாடு கொண்ட குழந்தைகள் வளர்ச்சியில் கூடுதலாக  பங்கெடுக்க வேண்டும். இவர்கள் கல்வி பயில முன்பு சிறப்பு பள்ளி இருந்தது. தற்போது அவர்களும் சமமாக மற்ற குழந்தைகளோடு இணைந்து பழகும் போதும், கல்வி பயிலும் போதும் அவர்களது மூளை வளர்ச்சி பாதிப்படையாமல் இருக்கும் என்பதால் அவர்களையும் மற்ற குழந்தைகளோடு இணைத்தே  வளர்ப்பது அதிகரித்துவருகிறது. அதனால் அவர்களுக்கு உடல் சார்ந்த பயிற்சிகள், பேச்சு பயிற்சிகள், கற்றலில் சற்று கூடுதல் கவனத்துடன் செயல்பட பயிற்சிகள், கற்றல், கேட்டல்  என அனைத்துமே  கூடுதலாக கிடைக்க வேண்டும்.   டவுன் சிண்ட்ரோம் பாதிப்பு கொண்ட குழந்தைகள் அந்த பாதிப்பு கொண்டவர்களை திருமணம் செய்யும் போது  எந்த விதமான பாதிப்பும் உண்டாகாது. ஆனால் இந்த நோய்க்குறி கொண்ட குழந்தைகளை வளர்க்கும் போது கூடுதல்  கவனம் தேவை.

பொதுத்துறப்பு

சென்னை மகளிர் மருத்துவமனை மற்றும் ஸ்கேன் மையம் ( Chennai Women’s Clinic and Scan Centre (CWC) ) வழங்கும் கட்டுரைகள், தகவல்கள், வீடியோக்கள் போன்றவை தகவல் தொடர்பு நோக்கங்களுக்காக மட்டுமே.

இவை எல்லாமே மகப்பேறு மருத்துவர்கள், ஸ்கேன் பரிசோதனை நிபுணர்கள், அதற்கான நடைமுறைகள் போன்றவை நிபுணர்களால் வழங்கப்படும் பொதுவான கட்டுரைகள் மட்டுமே.

எங்கள் இணையதளத்தில் இருக்கும் கட்டுரைகள் மற்றும் வீடியோக்கள் பொதுவான விஷயங்கள் குறித்து மட்டுமே வழங்கப்படுகின்றன. வீடியோக்களில் இருக்கும் தகவல்களும் , கட்டுரைகளும் தனிப்பட்ட நபர்களுக்கான நோயறிதல் குறித்தவை என்று கருதக்கூடாது. அதனால் இதன் வாயிலாக வெளியிடப்படும் சிகிச்சை முறைகளை சுயமாக செய்து கொள்ள கூடாது.

சென்னை மகளிர் மருத்துவமனை மற்றும் ஸ்கேன் பரிசோதனை தளத்தில் வெளியான கட்டுரைகள் மற்றும் வீடியோக்களின் மூலம் நோயறிதலையும், சிகிச்சையையும் சுயமாக செய்து கொள்ள கூடாது. மாறாக உங்கள் உடல் ஆரோக்கியம் குறித்து உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது சுகாதார நிபுணரின் ஆலோசனை செய்த பிறகு உரிய சிகிச்சை பெறுவது நல்லது.

சென்னை மகளிர் மருத்துவமனை மற்றும் ஸ்கேன் மையம் உருவாக்கும் ( இணையதளம் மற்றும் அச்சு) தகவல்கள் மருத்துவ ரீதியிலான பொதுவான கட்டுரைகள் மட்டுமே. எந்தவொரு தனி நபருக்கும் சிகிச்சையளிக்கும் வகையில் கட்டுரைகள் வெளியிடப்படவில்லை என்பதை உறுதி கூறுகிறோம். அதனால் தனிப்பட்ட முறையில் சுயமாக ஒருவர் சிகிச்சை கொள்வதற்கு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ நாங்கள் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது என்பதையும் இத்தருணத்தில் உறுதி அளிக்கிறோம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here