நீங்கள் குழந்தைப்பேறை தள்ளி போட்டிருக்கிறீர்களா?
எப்போது மருத்துவரை அணுக வேண்டும்?
கருமுட்டை வெளிவரும் நாள் எப்போது?
கருமுட்டை அறிகுறி கவனம் கொள்ள வேண்டும்
உணவில் கவனம் செலுத்துங்கள்

சீக்கிரம் கர்ப்பம் ஆகணும்னா என்ன செய்யணும் தெரியுமா?

குழந்தையின்மை பிரச்சனை அதிகரித்துவருகிறது என்பதால் பல தம்பதியருக்கும் கருவுறுதல் குறித்து பல சந்தேகங்கள் உண்டு. திருமணத்துக்கு பிறகு கருவுறுதலை எதிர்நோக்கும் போது மூன்று மாதங்கள், ஆறுமாதங்கள், ஒருவருடம் வரை கூட ஆகலாம். அதனால் உடனே கருத்தரிக்கவில்லை என்ற மன அழுத்தத்தை முதலில் கைவிடுங்கள். இயல்பாக கருத்தரிப்பு  செய்யவேண்டிய விஷயங்கள் என்னென்ன என்பதை தம்பதியர் அறிந்துகொள்வது அவசியம். 

கருவுறுதலுக்கு தயாராகும் போது பெண்கள் மட்டுமே தயாராக வேண்டும் என்றில்லை.  இருவருமே அதற்கு தயாராக வேண்டும். குழந்தையின்மை பிரச்சனை ஏற்படுவதை சரி செய்ய, குறைந்தது சில விஷயங்களை கடைப்பிடிக்க வேண்டும் என்கிறார்கள் மருத்துவர்கள். என்னென்ன விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும் என்றுதான் இந்த பதிவில் பார்க்கபோகிறோம். 

நீங்கள் குழந்தைப்பேறை தள்ளி போட்டிருக்கிறீர்களா?

தம்பதியர் சில நேரங்கள் குழந்தைபேறை தள்ளிபோட கருத்தடை சாதனங்களை பயன்படுத்தியிருக்கலாம். நீங்கள் மருத்துவரின் ஆலோசனையோடு அதை பயன்படுத்தியிருந்தால் அது பிரச்சனையில்லை. ஆனால் சுயமாக  எடுத்துகொள்பவர்கள் முன்கூட்டியே அதை தவிர்க்க வேண்டும். 

கருத்தடை மாத்திரைகளாக இருந்தால் மாத்திரையின் சுழற்சி முடியும் வரை காத்திருந்து பிறகு நிறுத்த வேண்டும். அப்போதுதான்  சுழற்சி பூர்த்தியாகும். உங்கள் மாதவிடாய் காலம் வரும் வரை மாத்திரைகளை எடுத்து அதன் பிறகு  மாத்திரையை நிறுத்த வேண்டும். மாத்திரை எடுப்பவர்கள் எப்போதும் சுயமாக செய்யாமல் மருத்துவரின் அறிவுரையோடு எடுத்துகொள்வது தான் பாதுகாப்பானது. ஏனெனில் மாத்திரைகள் ஹார்மோன் சுழற்சியை கட்டுப்படுத்தகூடியவை என்பதால் தம்பதியர் குழந்தைப்பேறை தள்ளிபோட விரும்பினால் மருத்துவரின் அறிவுரையோடு அதை பின்பற்ற வேண்டும். 

எப்போது மருத்துவரை அணுக வேண்டும்

கருவுறுதலுக்கு திட்டமிடும் போதும் மருத்துவரை அணுகி ஆலோசனை பெறலாம். ஏனெனில்  தம்பதியர் இருவருக்குமே  உடல் ரீதியிலான மன ரீதியிலான கோளாறுகள் ஏதேனும் இருந்தால்  அது குறித்து மருத்துவரை ஆலோசிப்பது நல்லது. குறிப்பாக  தைராய்டு பிரச்சனைகள், மாதவிடாய் கோளாறுகள் போன்றவற்றை முன்னரே கொண்டிருக்கும் பெண் அவசியம் மருத்துவரின் ஆலோசனை பெறுவது நல்லது. 

ஆண்களும் அவர்களுக்கே உரிய விந்தணுக்களின் எண்ணிக்கை, விறைப்புத்தன்மை, விந்தணுக்கள் விரியம் குறித்தும் தெரிந்துகொண்டு தேவையெனில் இதற்கான பரிசோதனையும் மேற்கொள்வது நல்லது. அப்படியெனில் இருவருக்கும் குறைபாடு இருக்குமா என்று கேட்க வேண்டாம். ஒருவேளை குறைபாடு இருந்தால்  முன்கூட்டியே திட்டமிட முடியும். ஆரோக்கியமாக இருந்தால் மகிழ்ச்சியோடு குழந்தைப்பேறுக்கு தயாராகலாம். 

கருமுட்டை வெளிவரும் நாள்

ஒவ்வொரு பெண்ணுக்கும் மாதவிடாய் நாள் சுழற்சி வேறுபடும். சீரான சுழற்சி 21 முதல் 35 நாட்கள் வரை, 35 நாட்களுக்கு பிறகு வருவது ஒழுங்கற்ற மாதவிடாய் என்று கூறப்படுகிறது.. இந்த குறிப்பிட்ட நாட்களுக்கு இடைவெளியில்  மாதவிடாய் சுழற்சி சரியாக வருகிறதா என்பதை கவனியுங்கள். மாதவிடாய் முடிந்த பிறகு 14 நாட்களுக்கு பிறகு பெண்களுக்கு கருமுட்டை உண்டாக கூடும்.  இந்த கருமுட்டை வந்த முதல் 30 மணி நேரத்துக்குள் ஆணின் விந்தணுக்கள் இந்த கருமுட்டையோடு இணைந்தால் கருவுறுதல் உண்டாகும். பெண்ணின் கருமுட்டையை  காட்டிலும் ஆண்களின் விந்தணுக்கள் கருப்பைக்குழாய்க்குள் வீரியமாக இருக்கும். குறைந்தது 3 நாட்கள் முதல் அதிகபட்சமாக 5 நாட்கள் வரையிலும் இருக்க கூடும் என்பதால் இந்த காலத்தில் உறவு  கொள்வதன் மூலம் கருவுறுதல் எளிதாகும். 

கருமுட்டையும் விந்தணுக்களும் இணையும் போது அவை கர்ப்பப்பையில் நகர்ந்து  உயிரணுக்களாக பிரிந்து கருப்பையினுள் சென்று தங்க வேண்டும். இதுதான் கருவுறுதல் என்று அழைக்கப்படுகிறது. சில நேரங்களில்  இவை கருப்பையை தாண்டி வெளிப்புற சுவரில் தங்கி பொய் கர்ப்பமாகிவிடவும் வாய்ப்புண்டு. 

கருமுட்டை அறிகுறி

சிலருக்கு மாதவிடாய் நாட்கள் சீரான இடைவெளியில் இல்லாமல் மாறிவரக்கூடும். மாதவிடாய் காலத்துக்கு   பின் கருமுட்டை வெளியாவதை  அறியமுடியவில்லை என்பவர்கள் அதற்கான அறிகுறிகள் குறித்து தெரிந்துவைத்து கொள்ளலாம். 

கருமுட்டை வெளிவரும் போது பெண்களின் உடலில் வெப்பம் அதிகரிக்க கூடும்.  உறவு கொள்ளும் நேரத்தில் பெண்களின் உடலில் வெள்ளை திரவம்  அடர்த்தியாக வெளிவரக்கூடும். இந்த நாட்களில் ஒரு முறை மட்டுமே உடலுறவு கொள்ளாமல்  தொடர்ந்து இரண்டு அல்லது முன்று நாட்கள் வரை  உறவு கொள்வதன் மூலம் கருவுறுதலுக்கான வாய்ப்பு அதிகம் உண்டு. உறவுக்கு பின்பு பெண்கள் தங்கள் பெண் உறுப்பை உடனே சுத்தம் செய்ய வேண்டாம். சிறிது நேரம் படுக்கையிலெயே இருந்தால் தான் விந்தணுக்கள் கீழே இறங்காமல் மேல் நோக்கி செல்ல இயலும். 

உணவில் கவனம் செலுத்துங்கள்

தம்பதியர் இருவருமே உணவில் கவனம் செலுத்துவது அவசியம். குழந்தைப்பேறுக்கு திட்டமிடும் போதே ஃபோலிக் அமிலம் அவசியமாகிறது.  வைட்டமின் சி நிறைந்த உணவுகள் உடலில்  புரொஜெஸ்டிரான் என்னும் ஹார்மோன் அளவை சீராக்க உதவுகிறது. தம்பதியர் இருவருக்கும் வைட்டமின் டி சத்து அவசியம். துத்தநாகம் குறிப்பாக ஆண்களுக்கு விந்தணுக்களை பலபடுத்த, வீரியம் கொள்ள வைக்க உதவுகிறது. உலர் பருப்புகள் ஒமேகா3 கொழுப்பு அமிலங்கள் கொண்டவை. கொட்டைகள், விதைகள் போன்றவை ஆண்களுக்கு டெஸ்டோஸ்டிரான் , விந்து அளவை அதிகரிக்க உதவுகிறது. இவை தவிர ஆரோக்கியமான பழங்கள், காய்கறிகள், கீரைகள், உலர் பருப்புகள், கொட்டைகள் விதைகள் அசைவம் சாப்பிடுபவர்கள் முட்டை,  ஷெல் பிஷ், சிப்பி உணவு, சால்மன் போன்றவையும் அவசியம் தேவை. இவை எல்லாமே கருவுறுதலை தூண்டுவதிலும் ஆரோக்கியமாக வைக்கவும் தேவையான உணவுகள். ஆண்கள் கருவுறுதலை எதிர்நோக்கும் போது இயன்ற அளவு புகைபழக்கம், மதுப்பழக்கத்தை தவிர்க்க வேண்டும். 

மிக முக்கியமாக ஒவ்வொரு மாதமும் கருவுறுதலை எதிர்பார்த்து அதனால் மன அழுத்தம் உண்டாகாமல் இருப்பது தான அவசியம். கருவுறுதலை பாதிக்க செய்வதில் மன அழுத்தத்துக்கு மிக முக்கிய பங்குண்டு அதனால் மனதையும் உடலையும் ஆரோக்கியமாக வைத்துகொண்டு குழந்தைபேறை திட்டமிட்டால் விரைவாக கருத்தரிப்பு உண்டாகும்.

குழந்தையின்மை பற்றிய தகவல்கள்:

குழந்தையின்மைக்கான காரணங்கள் என்ன?

மலட்டுத்தன்மை என்றால் என்ன? ஆண் பெண் மலட்டுத்தன்மை காரணங்கள் என்ன?

கர்ப்பத்தைத் திட்டமிடுவதற்கு முன்பு நீங்கள் பரிசோதனை செய்வது அவசியமா?

பொதுத்துறப்பு

சென்னை மகளிர் மருத்துவமனை மற்றும் ஸ்கேன் மையம் ( Chennai Women’s Clinic and Scan Centre (CWC) ) வழங்கும் கட்டுரைகள், தகவல்கள், வீடியோக்கள் போன்றவை தகவல் தொடர்பு நோக்கங்களுக்காக மட்டுமே.

இவை எல்லாமே மகப்பேறு மருத்துவர்கள், ஸ்கேன் பரிசோதனை நிபுணர்கள், அதற்கான நடைமுறைகள் போன்றவை நிபுணர்களால் வழங்கப்படும் பொதுவான கட்டுரைகள் மட்டுமே.

எங்கள் இணையதளத்தில் இருக்கும் கட்டுரைகள் மற்றும் வீடியோக்கள் பொதுவான விஷயங்கள் குறித்து மட்டுமே வழங்கப்படுகின்றன. வீடியோக்களில் இருக்கும் தகவல்களும் , கட்டுரைகளும் தனிப்பட்ட நபர்களுக்கான நோயறிதல் குறித்தவை என்று கருதக்கூடாது. அதனால் இதன் வாயிலாக வெளியிடப்படும் சிகிச்சை முறைகளை சுயமாக செய்து கொள்ள கூடாது.

சென்னை மகளிர் மருத்துவமனை மற்றும் ஸ்கேன் பரிசோதனை தளத்தில் வெளியான கட்டுரைகள் மற்றும் வீடியோக்களின் மூலம் நோயறிதலையும், சிகிச்சையையும் சுயமாக செய்து கொள்ள கூடாது. மாறாக உங்கள் உடல் ஆரோக்கியம் குறித்து உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது சுகாதார நிபுணரின் ஆலோசனை செய்த பிறகு உரிய சிகிச்சை பெறுவது நல்லது.

சென்னை மகளிர் மருத்துவமனை மற்றும் ஸ்கேன் மையம் உருவாக்கும் ( இணையதளம் மற்றும் அச்சு) தகவல்கள் மருத்துவ ரீதியிலான பொதுவான கட்டுரைகள் மட்டுமே. எந்தவொரு தனி நபருக்கும் சிகிச்சையளிக்கும் வகையில் கட்டுரைகள் வெளியிடப்படவில்லை என்பதை உறுதி கூறுகிறோம். அதனால் தனிப்பட்ட முறையில் சுயமாக ஒருவர் சிகிச்சை கொள்வதற்கு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ நாங்கள் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது என்பதையும் இத்தருணத்தில் உறுதி அளிக்கிறோம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here