கர்ப்ப காலத்தில் உடலுறவு மேற்கொள்ளலாமா?

ஒரு பெண் கருவுற்றதும் கர்ப்பகாலத்தில் தாம்பத்தியம் மேற்கொள்ளலாமா என்னும் சந்தேகம் உண்டாகிறது. ஏனெனில் கருவுறுதலுக்கு பிறகு உடலுறவு கொள்ளும் போது கருச்சிதைவு உண்டாகிவிடுமோ என்று அச்சம் கொள்கிறார்கள். ஆனால் கர்ப்பகாலத்தில் உடலுறவு கொள்வது பாதுகாப்பானது என்கிறார்கள்.

அப்படியெனில் கருச்சிதைவு உண்டாக்காதா? கருவின் வளர்ச்சிக்கு இடையூறு உண்டாக்காதா? பாலியல் தொற்று ஏதேனும் உண்டாக்குமா என்றெல்லாம் அடுக்கடுக்காய் கேள்விகள் எழக்கூடும். இது குறித்து இன்னும் சற்று விளக்கமாக பார்க்கலாமா

கருவுற்ற காலத்தில் வயிற்றில் இருக்கும் குழந்தையை பாதிக்காத விஷயங்களை மட்டுமே செய்ய வேண்டும் என்று பெண்கள் விரும்புகிறார்கள். உடலுக்கோ மனதுக்கோ அதிர்ச்சி தரும் எந்த விஷயத்தையும் அவர்கள் எதிர்கொள்ள தயாராவதில்லை. ஆனால் இயல்பாக கருவுறும் போது உடலுறவும் பாதுகாப்பானதுதான்.

இயற்கையாக கருத்தரிக்கும் போது கரு வயிற்றில் பாதுகாப்பாக இருக்கும். கர்ப்பபை தசைகள் சுவர்களால் பாதுகாக்கப்படும். குழந்தைக்கு தீங்கு நேராமல் குழந்தையை சுற்றி அம்னோடிக் சாக் திரவத்தால் நிரப்பப்பட்டிருக்கும். குறைப்பிரசவம் நஞ்சுக்கொடி பிரச்சினைகள் போன்ற சிக்கல்கள் இல்லாத வரை பாலியல் செயல்பாடு உங்கள் குழந்தையை பாதிக்காது.

கர்ப்பக்காலத்தில் உடலுறவு கொள்வதால் கருச்சிதைவு உண்டாகுமா என்று கேட்பவர்கள் முதலில் உடலுறவு கருச்சிதைவை தூண்டாது என்பதை தெரிந்துகொள்ள வேண்டும். கருவளராததால், உடல் பலவீனம் அதிகமாக இருப்பதால் , கர்ப்பபையில் குறைபாடு இருந்தால் கருச்சிதைவுகள் உண்டாகலாம். அதனால் உடலுறவு கொள்வதன் மூலம் கருச்சிதைவு உண்டாகாது என்பதை முதலில் தெரிந்துகொள்ளுங்கள்.

கர்ப்பகாலத்தில் உடலுறவு கொள்ளும் போது பாலியல் ரீதியாக நோய்த்தொற்று உண்டானால் அது கர்ப்பிணிக்கும் வயிற்றீல் வளரும் குழந்தைக்கும் உடல்நல பிரச்சனைகளை அதிகரிக்க செய்யும். மாறாக பாலியல் தொற்று பரவாமல் இருக்க வாய் வழி உறவை தவிர்க்க வேண்டும். ஆண்கள் ஆணுறை அணிவதன் மூலம் தொற்று நேராமல் தவிர்க்கலாம்.

இது ஆச்சரியமானது என்றாலும் உண்மையும் கூட. கர்ப்பகாலத்தில் ஹார்மோன்கள் உச்சநிலையில் இருக்கும். இடுப்பு, மார்பு பகுதியில் ரத்த ஓட்டம் அதிகமாக இருக்கும். இந்த நேரத்தில் உடலுறவு கொள்ளும் போது வழக்கத்தை காட்டிலும் உச்சநிலை அதிகமானதாக இருக்கும்.

கர்ப்பகாலத்தில் உடலுறவு கொள்வதன் மூலம் உடலில் இரூக்கும் சோர்வு நீங்கி புத்துணர்ச்சியாக வைத்திருக்கிறது. கர்ப்பகாலத்தில் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும். உடலுறவு மேற்கொள்வதன் மூலம் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க கூடும்.

கர்ப்பிணிகள் உடற்பயிற்சி செய்வதன் மூலம் கர்ப்பகால அறிகுறிகளை குறைக்க முடியும் என்று சொல்கிறார்கள். உடல்பயிற்சி செய்ய முடியாத நிலையிலும் உறவு கொள்வதன் மூலம் உடல் 50 முதல் 150 கலோரிகள் வரை குறைக்கலாம். இது அப்பெண் உறவு கொள்ளும் நேரத்தை பொறுத்து மாறுபடும்.

கர்ப்பகாலத்தில் வரக்கூடிய இரத்த அழுத்தம் என்னும் நோயை தடுப்பதில் உடலுறவுக்கு முக்கியபங்குண்டு. உடலுறவின் போது ரத்த அழுத்தம் சமநிலையை அடைவதால் ரத்த அழூத்தம் அதிகரிப்பது குறைகிறது. மேலும் உடலுறவு கொள்ளும் போது பிரசவக்காலத்தில் இடுப்பு எலும்புகள் வலிமையடைவதோடு பிரசவத்தை சுகப்பிரசவமாக செய்கிறது.

கர்ப்பிணி பெண் உடலுறவில் ஈடுபடும் போது அப்பெண்ணின் உடலில் ஹார்மோன் சுரப்பு அதிகரிக்க செய்கிறது. இது கர்ப்பிணியின் மனதில் உண்டாகும் எதிர்மறை எண்ணங்களை போக்கி மன அழுத்தத்தை குறைக்கிறது. மேலும் ஆணிடம் இருந்து வெளியாகும் ஹார்மோன் பெண் உறுப்பை மென்மையாக்க செய்கிறது. இது பிரசவத்தை எளிதாக்குகிறது.

கருவுற்ற முதல் ட்ரைமெஸ்டர் காலங்களின் இறுதிவாரம் முன்பு வரை உடலுறவை தவிர்க்கலாம். கருவளர்ச்சியான இக்காலங்களில் உறவு கொள்ள விரும்பினால் பாதுகாப்பாக உடலுறவு கொள்ள வேண்டும். உடல் பலவீனமான பெண்கள் ஊட்டச்சத்து குறைபாடு கொண்டிருக்கும் பெண்கள் உடலுறவில் ஈடுபடும் போது முரட்டுத்தனமாகவோ உடலுக்கு அதிர்ச்சி கொடுக்கும்படியோ இருந்தால் அது கருவுக்கு பாதிப்பை உண்டாக்க வாய்ப்புண்டு. எனினும் இது அரிதாக ஏற்படும் நிகழ்வும் கூட. மேலும் கருவுற்ற பெண்களுக்கு உடலுறவில் ஈடுபடுவதற்கு விருப்பம் இருக்காது. இதுவும் ஒவ்வொரு பெண்ணின் மனம் உடல்நிலையை பொறுத்து மாறுபடும்.

இரண்டாம் ட்ரைமெஸ்டர் காலங்களுக்கு பிறகு கர்ப்பிணி பெண் மனதளவில் தயாராகும் போது உடலுறவு மேற்கொள்வதில் தவறில்லை. அப்போதும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஆணின் உடல் பெண்ணின் உடலை அழுத்தக்கூடாது. அதிகமாக உணர்ச்சிவசப்படுதலோ அதிக நேரம் உடலுறவில் ஈடுபடுவதோ கூடாது. அப்படி செய்வதால் கர்ப்பிணி பெண்சீக்கிரமே களைப்படைந்துவிடுவாள். இதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

மூன்றாம் ட்ரைமெஸ்டர் காலங்களில் பிரசவத்துக்கு முந்தைய மாதங்களில் அதாவது 9 ஆம் மாதங்களில் உடலுறவு கொள்ளும் போது மிக எச்சரிகையாக இருக்க வேண்டும். அப்போது கருப்பை வாய் திறந்திருக்கலாம். அந்த நேரத்தில் கருவுக்கு தொற்றுக்கிருமிகள் போகாமல் அதிக கவனத்துடன் இருக்க வேண்டும். மருத்துவரின் அறிவுரையோடு இந்த காலத்தில் நீங்கள் உறவுகொள்ளலாம்.

குறிப்பு

கர்ப்பகாலத்தில் உடலுறவில் ஈடுபடும் போது உறவுக்கு முன்பும் பின்பும் இருவருமே அந்தரங்க உறுப்பை சுத்தம் செய்ய வேண்டும்.

யாரெல்லாம் உடலுறவில் ஈடுபடக்கூடாது என்பது தெரியுமா?

கருச்சிதைவு உண்டாகியிருப்பவர்கள், முதல் பிரசவம் குறைப்பிரசவமாக ஆகியிருந்தால், கருத்தரிப்பு இயற்கையாக இல்லாமல் செயற்கையாக இருந்தால், அதிக இரத்த போக்கு இருந்தால், நஞ்சுக்கொடி பிரச்சனை இருந்தால், அம்னொடிக் சாக்கில் திரவம் கசிந்துகொண்டிருந்தால், சவ்வு சிதைந்திருந்தால் உடலுறவை தவிர்க்க மருத்துவர் வலியுறுத்துவார். அதே போன்று ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தைகளை சுமக்கும் கர்ப்பிணிகளுக்கும் உடலுறவு தவிர்க்க மருத்துவர் அறிவுறுத்துவார்.

கருவுற்றதை உறுதி செய்து மருத்துவரை அணுகிய உடனே கர்ப்பிணி உடல் நலனை பொறுத்து மருத்துவரின் ஆலோசனையோடு பாதுகாப்பாக உடலுறவு மேற்கொள்வது நல்லது

பொதுத்துறப்பு

சென்னை மகளிர் மருத்துவமனை மற்றும் ஸ்கேன் மையம் ( Chennai Women’s Clinic and Scan Centre (CWC) ) வழங்கும் கட்டுரைகள், தகவல்கள், வீடியோக்கள் போன்றவை தகவல் தொடர்பு நோக்கங்களுக்காக மட்டுமே.

இவை எல்லாமே மகப்பேறு மருத்துவர்கள், ஸ்கேன் பரிசோதனை நிபுணர்கள், அதற்கான நடைமுறைகள் போன்றவை நிபுணர்களால் வழங்கப்படும் பொதுவான கட்டுரைகள் மட்டுமே.

எங்கள் இணையதளத்தில் இருக்கும் கட்டுரைகள் மற்றும் வீடியோக்கள் பொதுவான விஷயங்கள் குறித்து மட்டுமே வழங்கப்படுகின்றன. வீடியோக்களில் இருக்கும் தகவல்களும் , கட்டுரைகளும் தனிப்பட்ட நபர்களுக்கான நோயறிதல் குறித்தவை என்று கருதக்கூடாது. அதனால் இதன் வாயிலாக வெளியிடப்படும் சிகிச்சை முறைகளை சுயமாக செய்து கொள்ள கூடாது.

சென்னை மகளிர் மருத்துவமனை மற்றும் ஸ்கேன் பரிசோதனை தளத்தில் வெளியான கட்டுரைகள் மற்றும் வீடியோக்களின் மூலம் நோயறிதலையும், சிகிச்சையையும் சுயமாக செய்து கொள்ள கூடாது. மாறாக உங்கள் உடல் ஆரோக்கியம் குறித்து உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது சுகாதார நிபுணரின் ஆலோசனை செய்த பிறகு உரிய சிகிச்சை பெறுவது நல்லது.

சென்னை மகளிர் மருத்துவமனை மற்றும் ஸ்கேன் மையம் உருவாக்கும் ( இணையதளம் மற்றும் அச்சு) தகவல்கள் மருத்துவ ரீதியிலான பொதுவான கட்டுரைகள் மட்டுமே. எந்தவொரு தனி நபருக்கும் சிகிச்சையளிக்கும் வகையில் கட்டுரைகள் வெளியிடப்படவில்லை என்பதை உறுதி கூறுகிறோம். அதனால் தனிப்பட்ட முறையில் சுயமாக ஒருவர் சிகிச்சை கொள்வதற்கு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ நாங்கள் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது என்பதையும் இத்தருணத்தில் உறுதி அளிக்கிறோம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here