கர்ப்ப காலத்தில் இடுப்பு வலி

0
996
கர்ப்பகாலத்தில் இடுப்புவலி ஏன் வருகிறது

கர்ப்பகாலத்தில் இடுப்புவலி ஏன் வருகிறது?

கர்ப்பகாலத்தில்  இடுப்புவலி என்பது  கர்ப்பத்தில் பொதுவானது. பெண்கள் கர்ப்பகாலத்தில் இடுப்பு வலியை  ஆரம்ப கட்டத்தில் உணர்வதில்லை. கர்ப்பத்தின் இரண்டாவது அல்லது மூன்றாவது ட்ரைமெஸ்டர் காலங்களில் உண்டாகிறது. 

கர்ப்பகாலத்தில் இடுப்பு வலி உண்டாக ஒரு காரணம் மட்டுமே என்று சொல்ல முடியாது. கர்ப்பகாலத்தில் பல்வேறு வலிகளோடு இடுப்பு வலிகளும் உண்டாகிறது. இது பொதுவான நிகழ்வு என்றாலும் இது கர்ப்பகாலம் முழுக்க  தொடரும் போது வலி உணர்வு அதிகரிக்கும். அதனால் இயன்றவரை இந்த வலியை குறைக்க முயற்சி செய்வது நல்லது. 

கர்ப்பகாலத்தில் இடுப்பு வலிக்கு ஆளாகும் பெண்கள் குறித்த ஆய்வு ஒன்று மேற்கொள்ளப்பட்டது. 2018 ஆம் ஆண்டின் முடிவில் கர்ப்பிணி பெண்களில் 32% பேர் கர்ப்பகாலத்தில் இடுப்புவலியை எதிர்கொண்டதாக கூறினார்கள். அமெரிக்கன் மகப்பேறு மற்றும் மகப்பேறு மருத்துவ கல்லூரி இது குறித்து ஆய்வு மேற்கொண்டது. 

உடல் உற்பத்தி செய்யும் ஹார்மோன்கள் மூட்டுகளை தளர்த்துவதால் இடுப்பு வலி அதிகரிப்பதாக கூறியுள்ளது. 

கர்ப்பகாலத்தில் பெண்கள்  அன்றாடம் செய்யும் சில தவறுகளாலும் இடுப்பு வலி உண்டாகிறது. இவை தவிர நீண்ட நேரம் நின்றுகொண்டே இருப்பது, உடற்பயிற்சிகள் செய்வது, குறிப்பிட்ட நிலையில் உட்கார்ந்துகொண்டே இருப்பது, எப்போதும் சரியான போஸில் இல்லாமல் படுத்துகொண்டே இருப்பது போன்றவையும் இடுப்பு வலியை அதிகரித்துவிடுகிறது. கர்ப்பகாலத்தில் இடுப்பு வலியை உண்டாக்கும் காரணங்கள் என்ன என்று பார்க்கலாம்.

ரிலாக்ஸின் என்னும் ஹார்மோன்

ரிலாக்ஸின் என்னும் ஹார்மோன் கர்ப்பகாலத்தில் அதிகமாக சுரக்கிறது. இது தசைகூட்டின் அமைப்பில் மாற்றங்களை உண்டாக்குகிறது. இதன் பெயருக்கேற்றபடி உடலில் இருக்கும் எலும்புகளை இணைக்கும் திசுவை இவை தளர்த்தி வைக்கும்.  இவை தசைக்கூட்டு எலும்புகள் தசைநார்கள் மற்றும் பிற இணைப்பு திசுக்களை உள்ளடக்கியது. 

ரிலாக்ஸின் குருத்தெலும்பு தசைநாண்களி மாற்றி பிரசவக்காலத்தில் இடுப்பு பகுதி விரிவடைய உதவும். கர்ப்பினி பெண்கள் எடை அதிகரிக்கும் போது இது கூடுதல் அழுத்தத்தை உண்டாக்கும். இந்த மாற்றம் இடுப்பு வலிக்கு காரணமாக சொல்லலாம். கர்ப்பகாலத்தில் வரும் முதுகுவலிக்கும் இடுப்புவலிக்கும் இவைதான் பொதுவான காரணங்களாகிறது. 

கர்ப்பகாலத்தில் உடல் எடை

கர்ப்பகாலத்தில் குழந்தை வளர வளர கர்ப்பகாலத்தில் கர்ப்பிணியின் உடல் எடை அதிகரிக்கும். இது இயல்பானது. இதிலும் அந்த பெண்ணின் உயரம் எடையை கணக்கில் கொண்டு மருத்துவர் குறிப்பிடும் அளவு மட்டுமே  அதிகரிக்க வேண்டும்.கர்ப்பகாலத்தில் ஒவ்வொரு ட்ரைமெஸ்டர் காலங்களிலும் குறிப்பிட்ட எடை அதிகரிக்க வேண்டும். கர்ப்பத்தின் இறுதி மாதங்களில் கர்ப்பிணியின் எடையை பொறுத்து  எடை அதிகரிக்க வேண்டும். 

கர்ப்பகாலத்தில் 8 முதல் 10 கிலோ வரை அதிகரிக்கலாம். 

ஏற்கனவே உடல் எடையை கொண்டிருக்கும் பெண் கர்ப்பகாலத்தில் மேலும் அதிக எடையை பெறும் போது உடலில் இருக்கும் எலும்புகள், மூட்டுகள் அதிக அழுத்தத்துக்கு உள்ளாகும். இதனால் இடுப்பு வலி மேலும் பல அசெளகரியங்களை உண்டாக்கிவிடும். அதனால் அவசியமின்றி உடல் எடையை அதிகரித்துகொள்ளாதீர்கள். 

கர்ப்பகாலத்தில் தோரணை மாற்றம் (வயிறு பகுதி)

வயிறு சுற்றி உண்டாகும் மாற்றம் தோரணை என்று சொல்லப்படுகிறது. கர்ப்பகாலத்தில் எடை அதிகரிக்கும் பொது வயிற்றை சுற்றி எடையும் மாறக்கூடும்.  குழந்தை வளர்ச்சியடைய தொடங்கும் போது குழந்தை அசைவு ஒரு பக்கத்திலிருந்து மறு பக்கத்துக்கு மேல் எழும்பி செல்வது, இன்னொரு பக்கத்துக்கு போவது, போன்ற காரணங்களால் வலி உணர்வு உண்டாகும். 

இவை தவிர அம்மா கனமான பொருள்களை தூக்கி வைத்திருப்பது, சரியான நிலையில் வைக்காமல் குழந்தையை இடுப்பில் ஏற்றிகொள்வது போன்றவையும் பிரச்சனையை உண்டாக்கும். நடக்கும்  நிலை கூட சமயங்களில் தோரணையை மாற்றிவிடும். கர்ப்பகாலம் முழுவதும் காலணிகள் அணிவதில் கூட கவனம் செலுத்த வேண்டும். இயன்றவரை கனமான பொருள்களை எடுத்துசெல்வதை தவிர்க்க வேண்டும். தொடர்ந்து நடந்துகொண்டே இல்லாமல் சிறிது ஓய்வு எடுத்து நடப்பது வலியை குறைக்க கூடும்,  சில நேரங்களில் வெகு நேரம் உட்கார்ந்து கொண்டே இருப்பதும் கூட இடுப்புவலிக்கு வழிவகுக்கும். ஒரே இடத்தில் உட்கார்ந்துகொண்டே இருப்பதும் மூட்டுகளில் தசைகளில் பிடிப்பை வலியை உண்டாக்கிவிடும். 

ஆஸ்டியோபோரோசிஸ்

இடுப்பு எலும்புகளில் உண்டாகும் மாற்றத்தால் வரக்கூடிய் நிலை. இது நிலையற்றதுதான். இரண்டாம் ட்ரைமெஸ்டர்  அல்லது மூன்றாம் ட்ரைமெஸ்டர் காலங்களில் இவை உண்டாகிறது. இது கால்சியம் அல்லது  பொட்டாசியம்  தொடர்பானதாக இருக்கலாம். இவை தற்காலிகமானது பிரசவக்காலத்துக்கு பிறகு சரியாகிவிடக்கூடும். ஆனால் வெகு அரிதாக  சமயங்களில் இடுப்பு எலும்பு முறிவை சந்திக்க நேரிடலாம். இந்நிலை ஏற்பட்டால்  அவை குணமடைய அதிக காலம் பிடிக்கும். 

கர்ப்பகாலத்தில் தூங்கும் நிலை

இடுப்புவலிக்கு மிக முக்கிய காரணமாக தூங்கும் நிலையை சொல்லலாம். தூங்கும் போது மூட்டுகளில் அழுத்தம் கொடுப்பதன் மூலம் இடுப்பு வலி உண்டாக வாய்ப்புண்டு. கர்ப்பகாலத்தில் தூங்கும் நிலைகள் குறித்தும் அறிய வேண்டியது அவசியம். பக்கவாட்டில் தூங்க வேண்டும் என்று  பொதுவாக அறிவுறுத்துவதுண்டு. இது வசதியான நிலையும் கூட. 

இப்படி பக்கவாட்டில் தூங்கும் போது வயிறு எடை முன்பக்கமாக வரும் போது இடுப்பும், முதுகும் வளைந்த நிலையில் இருக்கும். இவையும் இடுப்புவலிக்கு காரணங்களாகிறது. அதனால் தான் கர்ப்பிணி பெண்கள் தூங்கும் போது கால்களுக்கு இடையில்  தலையணை வைத்து தூங்க வேண்டும் என்று சொல்வது. இதற்கென்று பிரத்யேகமான தலையணைகளும் கடைகளில் கிடைக்கிறது என்பதால் அதை வாங்கி பயன்படுத்த வேண்டும். 

கர்ப்பகாலத்தில் இடுப்பு வலி என்பது சாதாரணமானது என்பதால் இதை கவனமாக கையாண்டு வலி உணர்வை குறைக்கலாம். ஆனால் அசாதாரணமான வலியை கொண்டிருந்தால் நீங்கள் தாமதிக்காமல் மருத்துவரை அணுக வேண்டும். சிலருக்கு அதிக இடுப்புவலி உண்டாகும் போது நடக்கவே சிரமமாக இருக்கும். மூன்றாம் ட்ரைமெஸ்டர் காலங்களில் அதிக இடுப்பு வலி  இருந்தால் அவை குறைபிரசவத்தின் அறிகுறிகளாக இருக்கலாம். அதனால் இடுப்புவலி குறித்த எச்சரிக்கையை எப்போதும் கொண்டிருங்கள்.

பொதுத்துறப்பு

சென்னை மகளிர் மருத்துவமனை மற்றும் ஸ்கேன் மையம் ( Chennai Women’s Clinic and Scan Centre (CWC) ) வழங்கும் கட்டுரைகள், தகவல்கள், வீடியோக்கள் போன்றவை தகவல் தொடர்பு நோக்கங்களுக்காக மட்டுமே.

இவை எல்லாமே மகப்பேறு மருத்துவர்கள், ஸ்கேன் பரிசோதனை நிபுணர்கள், அதற்கான நடைமுறைகள் போன்றவை நிபுணர்களால் வழங்கப்படும் பொதுவான கட்டுரைகள் மட்டுமே.

எங்கள் இணையதளத்தில் இருக்கும் கட்டுரைகள் மற்றும் வீடியோக்கள் பொதுவான விஷயங்கள் குறித்து மட்டுமே வழங்கப்படுகின்றன. வீடியோக்களில் இருக்கும் தகவல்களும் , கட்டுரைகளும் தனிப்பட்ட நபர்களுக்கான நோயறிதல் குறித்தவை என்று கருதக்கூடாது. அதனால் இதன் வாயிலாக வெளியிடப்படும் சிகிச்சை முறைகளை சுயமாக செய்து கொள்ள கூடாது.

சென்னை மகளிர் மருத்துவமனை மற்றும் ஸ்கேன் பரிசோதனை தளத்தில் வெளியான கட்டுரைகள் மற்றும் வீடியோக்களின் மூலம் நோயறிதலையும், சிகிச்சையையும் சுயமாக செய்து கொள்ள கூடாது. மாறாக உங்கள் உடல் ஆரோக்கியம் குறித்து உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது சுகாதார நிபுணரின் ஆலோசனை செய்த பிறகு உரிய சிகிச்சை பெறுவது நல்லது.

சென்னை மகளிர் மருத்துவமனை மற்றும் ஸ்கேன் மையம் உருவாக்கும் ( இணையதளம் மற்றும் அச்சு) தகவல்கள் மருத்துவ ரீதியிலான பொதுவான கட்டுரைகள் மட்டுமே. எந்தவொரு தனி நபருக்கும் சிகிச்சையளிக்கும் வகையில் கட்டுரைகள் வெளியிடப்படவில்லை என்பதை உறுதி கூறுகிறோம். அதனால் தனிப்பட்ட முறையில் சுயமாக ஒருவர் சிகிச்சை கொள்வதற்கு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ நாங்கள் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது என்பதையும் இத்தருணத்தில் உறுதி அளிக்கிறோம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here