கருவளர்ச்சி குறைபாடு அறிகுறிகள்
கருவளர்ச்சி குறைபாடு காரணங்கள்
கருவளர்ச்சி குறைபாடு சிகிச்சை

கரு வளர்ச்சி குறைபாடு, ஒரு பெண் கருவுற்ற பிறகு கர்ப்பகாலம் என்பது மூன்று ட்ரைமெஸ்டர்களாக பிரிக்கப்படுகிறது. ஒவ்வொரு ட்ரைமெஸ்டரும் மூன்று மாதங்கள் என மூன்று ட்ரைமெஸ்டர்கள் வீதம் ஒன்பது மாதங்கள் பிரிக்கப்படுகிறது. இந்த மூன்று ட்ரைமெஸ்டர் காலங்களிலும் கருவளர்ச்சி சீராக இருக்க வேண்டும்.

கரு வளர்ச்சி நிலைகள்

விந்தணுக்கள் முட்டையை சந்திக்கும் போது இரண்டும் ஆரோக்கியமாக இருக்கும் பட்சத்தில் கருத்தரித்தல் நிகழ்கிறது. இந்த நேரத்தில் குழந்தையின் பாலினம் உட்பட மரபணுவும் முடிந்திருக்கும். கருத்தரித்த மூன்று நாட்களுக்குள் கருவுற்ற முட்டை பல கலங்கலாக வேகமாக பிரிந்து ஃபெலோபியன் வழியாக கருப்பைக்குள் செல்கிறது. அங்கு கருப்பை சுவருடன் இணைந்து குழந்தை வளர்க்கும் நஞ்சுக்கொடி உருவாக செய்கிறது.

கருவளர்ச்சி ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு உறுப்புகளை கொண்டு வளர்ச்சி அடைகிறது. முதல் நான்கு வாரங்களில்  குழந்தையின் முகம், கழுத்து உருவாக்கும் கட்டமைப்புகள், இதயம் மற்றும் இரத்த நாளங்கள் தொடர்ந்து உருவாகின்றன மேலும் நுரையீரல், வயிறு மற்றும் கல்லீரல் உருவாக தொடங்குகிறது.

அடுத்த நான்கு வாரம் அதாவது இரண்டாவது மாதத்தில் கருவின் வளர்ச்சி இன்னும் அதிகமாக இருக்கும். இப்போது கருவுக்கு கண் இமைகள் மற்றும் காதுகள் உருவாகின்றன. இப்போது குழந்தையின் மூக்கின் நுனியை பார்க்கலாம். கைகள் மற்றும் கால்கள் நன்றாக வளர்ந்திருக்கும். விரல்கள், கால் விரல்கள் நீளமாக இருக்கும்.

குழந்தை அடுத்த ஒரு மாதத்தில் 2 அங்குலங்கள் வரை இருக்கலாம். குழந்தை அதன் இயக்கத்தை உருவாக்க தொடங்கி இருக்கும். இப்போது கரு வளர்ச்சியை நீங்கள் உணர தொடங்கலாம். குழந்தையின் இதயத்துடிப்பை கேட்கலாம். இப்போது குழந்தையின் பாலியல் உறுப்புகள் தெரியக்கூடும்.

குழந்தைக்கு இப்போது நான்கு மாதங்கள் ஆகும். குழந்தை 4.3 முதல் 4. 6 அங்குலங்கள் வரை இருக்கும். எடை 3. 5 அவுன்ஸ் எடை கொண்டது. இப்போது வயிற்றை உணர முடியும். குழந்தையின் கண்கள் கண் சிமிட்டும். இதயம் மற்றும் இரத்த நாளங்கள் முழுமையாக உருவாகின்றன. குழந்தையின் விரல்கள் கால் விரல்களில் கைரேகைகள் இருக்கும்.

கர்ப்பிணிக்கு 5 மாதம் இருக்கும் போது எடை சுமார் 10 அவுன்ஸ் வரை இருக்கும். குழந்தை 6 அங்குல நீளத்துக்கு அதிகமாக இருக்கும். சில குழந்தைகள் கட்டை விரலை வாயில் வைத்திருக்கும். கைகளை நீட்டலாம். முகங்கள் உருவாகியிருக்கலாம். இப்போது குழந்தையின் அசைவை உணரக்கூடும்.

கர்ப்பிணிக்கு ஆறு மாதங்கள். இப்போது குழந்தை 1. 4 பவுண்டுகள் எடை இருக்கலாம். இது கருவின் துடிப்பை நகர்த்துவதன் மூலமோ அல்லது அதிகரிப்பதன் மூலம் வெளியிலிருக்கும் சத்தத்தை கேட்க செய்கிறது. விக்கல் எடுக்கலாம். குழந்தையின் காது உட்புறமாக வளர்ந்தால் குழந்தை கருப்பையில் தலைகீழாக இருப்பதை உணர முடியும்.

கர்ப்பிணிக்கு ஏழாவது மாதம். கர்ப்பிணிக்கு 28 வாரம். குழந்தையின் எடை 2 பவுண்டுகள் வரை இருக்கலாம். 6 அவுன்ஸ் வரை இருக்கலாம். கர்ப்பத்தின் இந்த கட்டத்தில் முன்கூட்டியே பிரசவிக்க வாய்ப்புகள் உண்டு. குழந்தை இந்த மாதத்தில் பிறந்தால் உயிர்வாழ வாய்ப்புண்டு. குறைப்பிரசவம் எச்சரிக்கை குறித்து உங்கள் மருத்துவரிடம் கலந்து ஆலோசியுங்கள். இந்த மாதத்தில் பிரசவம் குறித்து தெரிய வேண்டிய நேரம்.

கர்ப்பிணிக்கு எட்டாவது மாதம், 32 வாரம். கருவின் எடை 4 பவுண்டுகள் குழந்தை அசைவு நன்றாக இருக்கும். குழந்தையின் சருமத்தில் குறைவான சுருக்கங்கள் இருப்பதால், கொழுப்பின் ஒரு அடுக்கு தோலின் கீழ் உருவாக தொடங்குகிறது. தாயின் மார்பகங்களிலிருந்து மஞ்சள் நிற திரவம் வெளியேறுவதை கவனிக்கலாம். இது கொலஸ்ட்ரம் என்று அழைக்கப்படுகிறது.

மார்பகங்களில் பால் தயாரிக்கும் பணி தொடங்கப்படுகிறது. இந்த கட்டத்தில் பெரும்பாலான பென்கள் இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை மருத்துவரிடம் செல்ல வேண்டும்.

கர்ப்பிணிக்கு ஒன்பதாவது மாதம். 36 வாரம். குழந்தையின் எண்ணிக்கை மற்றும் பெற்றோரின் அளவு போன்ற பல காரணிகளை பொறுத்து குழந்தைகளின் அளவு வேறுபடுகிறது. உங்கள் குழந்தையின் ஒட்டுமொத்த வளர்ச்சி விகிதம் உண்மையான அளவை போலவே முக்கியமானது.

இந்த காலத்தில் சராசரியாக குழந்தை சுமார் 18. 5 அங்குலங்கள் மற்றும் 6 பவுண்டுகள் எடையுள்ளதாக இருக்கும். மூளை வேகமாக வளர்ந்து வரும். நுரையீரல் கிட்டத்தட்ட முழுமையாக வளர்ந்திருக்கும். தலை இடுப்புக்குள் நிலை நிறுத்தப்படுகிறது. உங்கள் குழந்தை 37 முதல் 39 வாரங்கள் மற்றும் தாமதமாக எனில் 41 முதல் 42 வாரங்களில் குழந்தை பிறக்கும்.

தாயின் பிரசவத்தேதி அவர்களது 40 வது வாரத்தின் முடிவில் தீர்மானிக்கப்படுகிறது. மாதவிடாய் சுழற்சியின் முதல் நாளை கொண்டு தான் பிரசவத்தேதி கணக்கிடப்படுகிறது. இதன் அடிப்படையில் கர்ப்பகாலம் 38 முதல் 42 வாரங்கள் வரை இருக்கும். கரு வளர்ச்சி நிலைகள் மேற்கண்டவாறு தான் ஒவ்வொரு மாதமும் அமையும்.

முழு நேர பிரசவம் என்பது 36 முதல் 40 வாரங்களுக்குள் பிரசவங்களுக்குள் நிகழ்கிறது. சில நேரங்களில் கர்ப்பிணிக்கு 42 வாரங்களுக்கு மேல் பிரசவ வலி வரலாம். இது தாமதமான பிரசவம் இல்லை. பிரசவ தேதி கண்டறிவதில் துல்லியமாக இருக்காது. சில நேரங்களில் கருவளர்ச்சி ஆரோக்கியமாக இருக்கும் போது மருத்துவர் பிரசவ வலியை தூண்ட செய்யலாம். கரு வளர்ச்சி நிலைகள் ஒவ்வொரு மாதத்திலும் இருக்கும் முறை குறித்து பார்த்தோம். இனி கருவளர்ச்சி குறைபாடு என்றால் என்ன என்பதையும் அறிவோம்.

கரு வளர்ச்சி குறைவு

மிக குறைந்த அளவிலான ஊட்டச்சத்துக்களை பெறும் கருவில் உள்ள குழந்தை வழக்கத்தை விட மிகவும் மெதுவாக வளர செய்யும். கரு சாதாரண விகிதத்தில் உருவாகாத போது வளர்ச்சி குறைவு உண்டாகிறது. இது கருப்பையக வளர்ச்சி குறைபாடு என பரவலாக சொல்லப்படுகிறது.

சமச்சீரற்ற இந்த கரு வளர்ச்சி குறைபாடு கொண்ட குழந்தைகளுக்கு சாதாரண அளவில் தலை உள்ளது. அவர்களது உடல் இருக்க வேண்டியதை விட மிகச் சிறியதாக உள்ளது. அல்ட்ராசவுண்டில் அவர்களது தலை அவர்களின் உடலை விட பெரிதாக தோன்றும்.

கருவளர்ச்சி குறைபாடு அறிகுறிகள்

கரு வளர்ச்சி குறைபாடுகளுக்கான அறிகுறியை உணரமுடியாது. அல்ட்ராசவுண்ட் போது அது குறித்து அறியும் வரை பெரும்பாலான பெண்களுக்கு இந்த நிலை குறித்து தெரியாது. இந்த குழந்தை பிறந்த பிறகு குறைவான ஆக்ஸிஜன் நிலையை கொண்டிருக்கும்.

இரத்த சர்க்கரை அளவு குறைவாக இருக்கும். சிவப்பு இரத்த அணுக்கள், சாதாரண உடல் வெப்ப நிலையை பராமரிக்க தவறுதல், அவர்கள் பிறக்கும் போது ஆரோக்கியத்தின் அளவீட்டை குறிக்கும் எப்கார் மதிப்பெண், உணவளிப்பதில் சிக்கல்கள், நரம்பியல் பிரச்சனைகள் போன்றவற்றை கொண்டிருப்பார்கள்.

கருவளர்ச்சி குறைபாடு காரணங்கள்

இது பல காரணங்களால் உண்டாகிறது. உங்கள் குழந்தைக்கு அவர்களது செல்கள் அல்லது திசுக்களில் அசாதாரண இயல்பு இருக்கலாம். அதோடு ஊட்டச்சத்து குறைபாடு அல்லது குறைவான ஆக்ஸிஜன் எடுத்துகொள்ளலாம். கருவை சுமக்கும் தாய்க்கும் உடல்நல பிரச்சனைகள் இருக்கலாம்.

இந்த கருவளர்ச்சி குறைபாடு என்பது கர்ப்பத்தில் எந்த கட்டத்தில் வேண்டுமானாலும் தொடங்கலாம். பல காரணங்கள் குழந்தையின் கரு வளர்ச்சி குறைபாடு ஆபத்தை அதிகரிக்க செய்கின்றன.. இந்த காரணங்கள் மூன்று வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒன்று தாய்வழி காரணங்கள், கரு காரணிகள் மற்றும் கருப்பை/ நஞ்சுக்கொடி காரணிகள் ஆகும்.

கரு வளர்ச்சி குறைபாட்டுக்கு தாய்வழி காரணங்கள்

தாய்க்கு நாள்பட்ட சிறுநீரக நோய், நீரிழிவு நோய், இதய நோய் மற்றும் சுவாச நோய் போன்றவை இருக்கலாம். உயர் இரத்த அழுத்தம், ஊட்டச்சத்து குறைபாடு, இரத்த சோகை, உடலில் சில நோய்த்தொற்றுகள், கெட்ட பழக்கங்கள் போன்றவை காரணமாக இருக்கலாம்.

கரு காரணிகள் என்று சொல்லப்படுவது தொற்று, பிறப்பு குறைபாடுகள், குரோமோசோம்கள் அசாதாரணங்கள், பல கர்ப்பம் போன்றவை இருக்கலாம்.

கருப்பையக காரணிகள் கருப்பையில் கரு வளர்ச்சி குறைபாடு அபாயத்தை உயர்த்த கூடிய நிலைமைகள் கருப்பையக காரணிகள் என்று சொல்லப்படுகிறது. கருப்பையில் இரத்த ஓட்டம் குறைந்தது, நஞ்சுக்கொடியில் இரத்த ஓட்டம் குறைவாக இருப்பது கருவை சுற்றியுள்ள திசுக்களில் தொற்று உண்டாவதும் கருவளர்ச்சியில் குறைபாட்டை உண்டாக்கும். நஞ்சுக்கொடி ப்ரிவியா எனப்படும் ஒரு நிலை உண்டாக்கும். கருப்பை குறைபாடு இருக்கும் போது நஞ்சுக்கொடி பிரிவீயா உண்டாகிறது. இதில் மற்றொன்று குரோமோசோம் அல்லது மரபணு குறைபாடு.

குரோமோசோம் அல்லது மரபணு குறைபாடு

கர்ப்பிணியின் இரண்டாம் ட்ரைமெஸ்டர் நான்காம் மாதத்தின் தொடக்கத்தில் கண்டறிய முடியும். கருவில் மூளையின் வளர்ச்சி, இதய வளர்ச்சி போன்றவற்றை கவனிப்பதோடு டவுன் சிண்ட்ரோம் என்னும் கருவளர்ச்சி குறைபாடு உள்ளதா என்பதையும் கண்டறிய முடியும்.

கருவின் வளர்ச்சியில் ஏதேனும் சிக்கல்கள் இருந்தால் மீண்டும் இருமுறை ஸ்கேன் எடுக்க வேண்டியது அவசியம். அதே நேரம் இதனால் கருவிற்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்பதும் கவனிக்கத்தக்கது.

கரு வளர்ச்சி குறைபாட்டை கண்டறிதல்

வழக்கமான ஸ்க்ரீனிங் அல்ட்ராசவுண்ட் போது இந்த கருவளர்ச்சி குறைபாடு கண்டறியப்படுகிறது. அல்ட்ரா சவுண்ட் கரு மற்றும் கருப்பையின் வளர்ச்சியை சரிபார்க்க ஒலி அலைகளை பயன்படுத்துகின்றன. கரு வழக்கத்தை விட சிறியதாக இருந்தால் மருத்துவர் கரு வளர்ச்சி குறித்து சந்தேகிக்கப் படுவார்கள்.

ஆரம்ப கட்டத்தில் கரு சாதாரண அளவை விட சிறியது. பல பெண்கள் தங்கள் கடைசி மாதவிடாய் சுழற்சி குறித்து உறுதியாக அறியாத போது கருவின் வயது துல்லியமாக அறிவதில் சிரமம் இருக்கும். அப்போது கரு சரியான அளவு இருக்கும் போதும் அது சிறியதாகவே தோன்றலாம்.

கர்ப்பத்தின் ஆரம்பத்தில் கரு வளர்ச்சி குறித்த சந்தேகம் இருந்தால் அல்ட்ராசவுண்ட் மூலம் கண்காணிக்கப்பட்டு குழந்தை வளர்ச்சி குறைவாக இருந்தால் மருத்துவர் இதற்கான காரணத்தை கண்டறிவார். பிறகு மருத்துவர் அம்னோசென்டெசிஸ் பரிசோதனை பரிந்துரைக்கப்படலாம். அதாவது கர்ப்பிணியின் வயிற்று வழியாக ஊசியை செலுத்தி அம்னோடிக் சாக்கில் செருகுவார். பிறகு திரவத்தின் மாதிரி சேகரிக்கப்பட்டு அசாதாரண அறிகுறிகள் சோதிக்கப்படும்.

கருவளர்ச்சி குறைபாடு சிகிச்சை

கருவளர்ச்சி குறைபாடு காரணங்களை பொறுத்து அதை சரிசெய்ய முடியும். மருத்துவர் கருவளர்ச்சி குறைபாடு காரணம் அறிந்து அதை சரிசெய்ய முயற்சி செய்வார். அதற்கான சிகிச்சைகளும் அளிக்கப்படும்.

தொடர்ந்து அல்ட்ராசவுண்ட் வழியாக உறுப்புகள் உருவாவதையும் கருவின் இயக்கங்களை பார்க்கவும் பரிசோதிக்கப்படும். குறிப்பாக குழந்தையின் இதயத்துடிப்பு கண்காணிக்கப்படும். கருவின் இரத்த ஓட்டம் குறித்து டாப்ளர் ஆய்வுகள் செய்யப்படும்.

கருவளர்ச்சி குறைபாடு ஊட்டச்சத்து குறைபாட்டால் ஏற்பட்டிருந்தால் அதை சரி செய்ய ஆரோக்கியமான திட்டமிட்ட உணவுகள் பரிந்துரை செய்யப்படும். வெகு அரிதாக சில கர்ப்பிணிகளுக்கு பிரசவ காலம் வரை ஓய்வை வலியுறுத்தலாம்.

வெகு சில நேரங்களில் கருவளர்ச்சி மோசமாக இருப்பதற்கு முன்பு மருத்துவர் தலையிட வேண்டியதிருக்கும். கடுமையான மருத்துவ பிரச்சனை இருந்தால் பிரசவம் தூண்டப்படும்.

பொதுத்துறப்பு

சென்னை மகளிர் மருத்துவமனை மற்றும் ஸ்கேன் மையம் ( Chennai Women’s Clinic and Scan Centre (CWC) ) வழங்கும் கட்டுரைகள், தகவல்கள், வீடியோக்கள் போன்றவை தகவல் தொடர்பு நோக்கங்களுக்காக மட்டுமே.

இவை எல்லாமே மகப்பேறு மருத்துவர்கள், ஸ்கேன் பரிசோதனை நிபுணர்கள், அதற்கான நடைமுறைகள் போன்றவை நிபுணர்களால் வழங்கப்படும் பொதுவான கட்டுரைகள் மட்டுமே.

எங்கள் இணையதளத்தில் இருக்கும் கட்டுரைகள் மற்றும் வீடியோக்கள் பொதுவான விஷயங்கள் குறித்து மட்டுமே வழங்கப்படுகின்றன. வீடியோக்களில் இருக்கும் தகவல்களும் , கட்டுரைகளும் தனிப்பட்ட நபர்களுக்கான நோயறிதல் குறித்தவை என்று கருதக்கூடாது. அதனால் இதன் வாயிலாக வெளியிடப்படும் சிகிச்சை முறைகளை சுயமாக செய்து கொள்ள கூடாது.

சென்னை மகளிர் மருத்துவமனை மற்றும் ஸ்கேன் பரிசோதனை தளத்தில் வெளியான கட்டுரைகள் மற்றும் வீடியோக்களின் மூலம் நோயறிதலையும், சிகிச்சையையும் சுயமாக செய்து கொள்ள கூடாது. மாறாக உங்கள் உடல் ஆரோக்கியம் குறித்து உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது சுகாதார நிபுணரின் ஆலோசனை செய்த பிறகு உரிய சிகிச்சை பெறுவது நல்லது.

சென்னை மகளிர் மருத்துவமனை மற்றும் ஸ்கேன் மையம் உருவாக்கும் ( இணையதளம் மற்றும் அச்சு) தகவல்கள் மருத்துவ ரீதியிலான பொதுவான கட்டுரைகள் மட்டுமே. எந்தவொரு தனி நபருக்கும் சிகிச்சையளிக்கும் வகையில் கட்டுரைகள் வெளியிடப்படவில்லை என்பதை உறுதி கூறுகிறோம். அதனால் தனிப்பட்ட முறையில் சுயமாக ஒருவர் சிகிச்சை கொள்வதற்கு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ நாங்கள் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது என்பதையும் இத்தருணத்தில் உறுதி அளிக்கிறோம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here