பெண் கருவை உறுதி செய்தவுடன், கரு தங்க என்ன செய்ய வேண்டும்? என்ன செய்ய கூடாது? என்பதை கர்ப்பத்தின் ஆரம்ப கட்டத்தில் தெரிந்து கொள்ளவது மிகவும் அவசியம். ஏனெனில் சிறிய விஷயமும் கருச்சிதைவை ஊக்குவிக்கலாம். குறிப்பாக கருவுற்ற 10 முதல் 16 வாரங்களில் கூடுதல் கவனத்தோடு இருக்க வேண்டும். அப்படி கவனிக்க வேண்டிய குறிப்புகளை பார்க்கலாம்.

1. மனதை அமைதியாக வைத்துகொள்ளுங்கள்

கருவுற்ற காலத்தில் தாயின் மனநிலை எப்படி இருக்கிறதோ அதை பொறுத்து தான் குழந்தையின் மனநிலையும் பிரதிபலிக்கும் என்கிறது ஆராய்ச்சிகள். கருவுற்ற நாள் முதல் பிரசவக்காலம் வரை அதிகமான நேரம் மகிழ்ச்சியிலும் உற்சாகத்திலும் திளைத்த பெண்கள் அறிவாற்றலான குழந்தைகளை பெறுகிறார்கள்.

கர்ப்ப காலத்தில் மனதை அமைதி படுத்துவது எப்படி

அதோடு கருவின் தொடக்கத்தில் பயம், கவலை, கோபம், வன்மம், பதற்றம் போன்ற எதிர்மறையான உணவுகள் கருச்சிதைவை உண்டாக்கலாம். அதனால் மனதை அமைதியாக வைத்துகொள்ள உங்களுக்கு பிடித்த விஷயங்களில் ஈடுபடுங்கள்.

2. பயத்தை உண்டாக்கும் காட்சிகள்

இன்று பொழுது போகவில்லை என்றால் கையில் ஒரு ஃபோனோ அல்லது டீவியில் ஒரு சீரியலோ என்று உட்கார்ந்துவிடுகிறார்கள். கர்ப்பகாலத்தில் கரு வெளியில் நடப்பதையும் அறியும். திகில் ஊட்டும் படங்கள், வன்முறை தூண்டும் காட்சிகள், அழுகாச்சி நாடகங்கள், அச்சுற்றுத்தும் செய்திகளை பார்க்க கூடாது. இது சமயங்களில் கருச்சிதைவு கூட உண்டாக்கிவிடும்.

கர்ப்ப காலத்தில் ஏற்படும் பயத்தை எப்படி போக்குவது

மனதை மயக்கும் இசையை கேட்கலாம். குழந்தைகளுக்கான செய்திகளை பார்க்கலாம். சிரிப்பூட்டும் காட்சிகள், நகைச்சுவை திரைப்படங்கள் போன்றவை உங்கள் பொழுதை போக்குவதோடு மனதினுள் ஒரு அமைதியை உண்டாக்கும்.

3. உறுப்புகளை சுத்தம் செய்கிறேன்

பொதுவாக வாரம் ஒரு முறை எண்ணெய் குளியலும் அதை தொடர்ந்து காதை சுத்தம் செய்கிறேன், மூக்கை சுத்தம் செய்கிறேன், கண்ணை சுத்தம் செய்கிறேன் என்று அந்நியபொருள்களை உள்ளே நுழைப்பது கூடாது.

கர்ப்ப காலத்தில் உறுப்புகளை சுத்தம் செய்வது

ஹார்மோன் மாற்றம், உடலில் எதிர்ப்பு சக்தி குறைந்திருக்கும் நேரம். என எல்லாமாய் சேர்ந்து சிறு தொற்றும் மோசமான பாதிப்பை உண்டாக்கிவிடும். இது வயிற்றில் வளரும் கருவையும் பாதிக்கும். குறிப்பாக வேக்சிங் செய்ய கூடாது.

4. கர்ப்ப காலத்தில் இருவேளை குளியல்

கர்ப்பிணிகள் தினசரி இரண்டு வேளை குளிக்க வேண்டும். உடல் சுத்தம் சற்று சுறுசுறுப்பாக உணர வைக்கும். மந்தத்தனை போக்கும். அதிக வாசனை கொண்ட சோப்புகட்டிகளை தவிர்த்து குளியல் சூரணம், பொடி பயன்படுத்தலாம்.

கர்ப்ப காலத்தில் குளியல்

கர்ப்பகாலத்திலேயே தாய்ப்பாலுக்கு தயாராகும் மார்பகங்கள், பெண் உறுப்புகளை சுத்தமாக வைத்துகொள்ள வேண்டும் இதனால் தொற்றுப்பரவாமல் தடுக்கலாம். மாலை குளியல் தூக்கத்துக்கு உதவும். இளஞ்சூடான வெதுவெதுப்பான நீரில் குளியுங்கள்.

5. கர்ப்ப காலத்தில் தூக்கம்

கர்ப்பிணிகள் உடல் சோர்வாக இருக்கும், ஊட்டச்சத்து குறைபாடு, பலவீனமான பெண்கள் மேலும் பலவீனமான நிலையி எதிர்கொள்வார்கள். காலை நோய் அவதிக்குள்ளாக்கும். அதனால் போதுமான ஓய்வு , தூக்கம் போன்றவை கருவின் ஆரோக்கியத்தை உறுதி செய்யும். தூக்கம் சிரமமானதாக இருக்கும் என்றாலும் குறைந்தது 8 முதல் 10 மணி நேர தூக்கம் அவசியம் ஆகும்.

கர்ப்ப காலத்தில் தூக்கம்

கோடைக்காலமாக இருந்தால் பகலில் இரண்டு மணி நேரம் வரை ஓய்வெடுக்கலாம். மற்ற நேரங்களில் பகலில் தூங்கினால் இரவு தூக்கம் வராது. இது மன உளைச்சலை உண்டாக்கும். அதிகமான மன அழுத்தம், மன உளைச்சல் கருக்கலையும் அபாயம் உண்டாக்கலாம்.

6. கர்ப்ப காலத்தில் வாந்திக்கு மாத்திரை கூடாது

கர்ப்பத்தை உணர்த்துவதே வாந்தி போன்ற அறிகுறி தான். அதனால் வாந்தியை தடுக்கவோ தவிர்க்கவோ கூடாது. கர்ப்பத்தின் ஆரம்பத்தில் தொடங்கும் வாந்தி சில மாதங்களில் கட்டுக்குள் வந்துவிடும். சில கர்ப்பிணிகளுக்கு தண்ணீர் குடித்தால் கூட வாந்தியாக வெளியேறிவிடும். அவர்கள் மருத்துவரை அணுகினால் தேவையெனில் மருத்துவரே பரிந்துரைப்பார்.

கர்ப்ப காலத்தில் வாந்தி

ஒவ்வொரு முறை மாத்திரை எடுக்கும் போதும் மருத்துவரின் அறிவுரையோடு எடுக்க வேண்டும். இல்லையெனில் அவை கருவுக்கு பாதிப்பை உண்டாக்க வாய்ப்புண்டு.

7. இயற்கை உபாதை அடக்க கூடாது

கர்ப்பிணிக்கு இந்த காலம் முழுமையும் எளிதாக தொற்று பரவக்கூடும். அதில் ஒன்று சிறுநீர்ப்பாதை தொற்று. கர்ப்பத்தின் துவக்கம் முதலே அடிக்கடி சிறுநீர் கழிக்க நேரிடலாம். இதை தவிர்க்கவோ அல்லது அடக்கி வைக்கவோ கூடாது. சிலர் சிறுநீர் வருகிறது என்பதற்காகவே போதுமான நீரை குடிப்பதில்லை இதுவும் தவறானது.

கர்ப்ப காலத்தில் இயற்கை உபாதை அடக்க கூடாது

சிறுநீர் கழிக்காத நிலையில் தொற்று உண்டாகி அதிக பாதிப்பை உண்டாக்க செய்யலாம். மோசமான சிறுநீர்ப்பாதை தொற்று தீவிரமாகும் போது அது கருவின் ஆரோக்கியத்தையும் பாதிக்க செய்யலாம்.

8. கர்ப்ப காலத்தில் தாம்பத்தியம்

கர்ப்ப காலத்தில் தாம்பத்தியம்

கருவுற்றதை உறுதி செய்த பிறகு கரு பலமாகும் வரை தாம்பத்தியம் கூடாது. குறிப்பாக அதிக வேகமாகவோ, அதிக எடை தாங்கும்படியோ உறவுகொள்ள கூடாது வேகமான அதிர்ச்சியால் கருச்சிதைவு அபாயம் உண்டாகலாம். அதே போன்று அடிக்கடி கர்ப்ப காலத்தில் தாம்பத்திய உறவு மேற்கொள்ள கூடாது. மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகு இரண்டாம் ட்ரைமெஸ்டர் காலங்களில் தாம்பத்தியம் மேற்கொள்ளலாம்.

9. கர்ப்ப காலத்தில் அதிக பணி

கர்ப்பிணி அதிக எடை தூக்கும் பணியில் இருந்தால் முதல் மூன்று மாதங்கள் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். அடிக்கடி படி ஏறி இறங்குவது, எடையை தூக்கி மேல் ஏறுவது, கடினமான மலைப்பாதையில் ஏறுவது, பரண் மேல் ஏறுவது போன்றவற்றை சில மாதங்கள் தள்ளிவைக்க வேண்டும்.

கர்ப்ப காலத்தில் அதிக பணி

அதிக எடை தூக்கும் போது பலவீனமான பெண்கள் கருச்சிதைவை எதிர்கொள்ள நேரிடலாம். எளிமையான சிறிய வேலைகளை செய்யலாம். வீட்டுக்குள்ளேயே சாதாரணமாக நடக்கலாம். சமையல், வீடு கூட்டுதல், துணிகளை அலசி காய போடுதல் போன்ற வேலைகளை செய்யலாம்.

10. கர்ப்ப காலத்தில் உணவை தவிர்க்க கூடாது

கர்ப்பகாலத்தில் முதல் மூன்று மாதங்களில் வாந்தி, சோர்வு மயக்கம் இருக்கவே செய்யும். ஆனால் எதை சாப்பிட்டாலும் வாந்தி வருகிறது என்று உணவை தவிர்ப்பது சத்து குறைபாட்டை உண்டாக்கிவிடும். மசக்கையை தவிர்க்க நெல்லி, ஆலுபக்கோடா, நெல்லி வற்றல் நாரத்தை, எலுமிச்சை போன்றவற்றை சேர்க்கலாம்.

கர்ப்ப காலத்தில் உணவை தவிர்க்க கூடாது

மருத்துவர் மற்றும் ஊட்டச்சத்து நிபுணரின் வழிகாட்டுதலில் கர்ப்ப காலத்தில் உணவு வகைகள் எடுத்துகொள்ள திட்டமிட வேண்டும் மோசமான உணவு பழக்கம் கருவின் ஆரொக்கியத்தை சீர்குலைக்கும். கருவளர்ச்சிக்கு போதுமான சத்து இல்லாத நிலையை உண்டாக்கும்.

இவை எல்லாமே மிகச்சிறிய விஷயங்கள் தான். ஆனால் கருச்சிதைவு எளிய விஷயங்களிலும் நடந்துவிட வாய்ப்புண்டு. அதனால் உண்ணும் உணவு முதல் உறக்கம் வரை அனைத்திலும் எச்சரிக்கையாக இருந்தால் கருவின் வளர்ச்சியும் ஆரோக்கியமாக இருக்கும்.

மேலும் கர்ப்பிணிகளுக்கான டிப்ஸ்

சீக்கிரம் கர்ப்பம் ஆக செய்யவேண்டியவை

கர்ப்பிணி பெண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள்

கர்ப்ப காலத்தில் தூங்கும் முறைகள்

பொதுத்துறப்பு

சென்னை மகளிர் மருத்துவமனை மற்றும் ஸ்கேன் மையம் ( Chennai Women’s Clinic and Scan Centre (CWC) ) வழங்கும் கட்டுரைகள், தகவல்கள், வீடியோக்கள் போன்றவை தகவல் தொடர்பு நோக்கங்களுக்காக மட்டுமே.

இவை எல்லாமே மகப்பேறு மருத்துவர்கள், ஸ்கேன் பரிசோதனை நிபுணர்கள், அதற்கான நடைமுறைகள் போன்றவை நிபுணர்களால் வழங்கப்படும் பொதுவான கட்டுரைகள் மட்டுமே.

எங்கள் இணையதளத்தில் இருக்கும் கட்டுரைகள் மற்றும் வீடியோக்கள் பொதுவான விஷயங்கள் குறித்து மட்டுமே வழங்கப்படுகின்றன. வீடியோக்களில் இருக்கும் தகவல்களும் , கட்டுரைகளும் தனிப்பட்ட நபர்களுக்கான நோயறிதல் குறித்தவை என்று கருதக்கூடாது. அதனால் இதன் வாயிலாக வெளியிடப்படும் சிகிச்சை முறைகளை சுயமாக செய்து கொள்ள கூடாது.

சென்னை மகளிர் மருத்துவமனை மற்றும் ஸ்கேன் பரிசோதனை தளத்தில் வெளியான கட்டுரைகள் மற்றும் வீடியோக்களின் மூலம் நோயறிதலையும், சிகிச்சையையும் சுயமாக செய்து கொள்ள கூடாது. மாறாக உங்கள் உடல் ஆரோக்கியம் குறித்து உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது சுகாதார நிபுணரின் ஆலோசனை செய்த பிறகு உரிய சிகிச்சை பெறுவது நல்லது.

சென்னை மகளிர் மருத்துவமனை மற்றும் ஸ்கேன் மையம் உருவாக்கும் ( இணையதளம் மற்றும் அச்சு) தகவல்கள் மருத்துவ ரீதியிலான பொதுவான கட்டுரைகள் மட்டுமே. எந்தவொரு தனி நபருக்கும் சிகிச்சையளிக்கும் வகையில் கட்டுரைகள் வெளியிடப்படவில்லை என்பதை உறுதி கூறுகிறோம். அதனால் தனிப்பட்ட முறையில் சுயமாக ஒருவர் சிகிச்சை கொள்வதற்கு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ நாங்கள் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது என்பதையும் இத்தருணத்தில் உறுதி அளிக்கிறோம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here