கரு குறைப்பு செயல்முறை ஏன் செய்யப்படுகிறது?

கரு குறைப்பு என்ற செயல்முறையில் கர்ப்பத்தில் வளரும் பல கருக்கள் பொதுவாக இரண்டாகக் குறைக்கப்படும். பல கருவுறுதல் என்ற நிகழ்வின்முலம் ஒரு கர்ப்பத்தில் மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட கருக்கள் வளரும்போது ஒவ்வொரு கூடுதல் கருவுடன் கருச்சிதைவு, பிரசவம் மற்றும் குழந்தையின் கட்டமைப்பு பாதிப்பு ஆகியவற்றிற்கான அபாயங்களும் அதிகரிக்கின்றன.

கரு குறைப்பு செயல்முறையின் மூலம் பல கர்ப்பத்தில் வளரும் இந்தக் கருவினை முடிப்பது என தேர்வு செய்யப்படுகிறது. பல கருக்களை தாய் சுமந்து அவை வளரும்போது தாய்க்கு பலவிதமான உடல் உபாதைகள் ஏற்பட வழியுண்டு. மேலும் அதிகப்பைடியான கருக்களினால் வளரும் குருக்களுக்கும் சிக்கல்கள் ஏற்பட வழியுள்ளது. இத்தகைய அபாயங்களைத் தவிர்க்கவே கருகுறைப்பு என்ற செயல்முறை செய்யப்படுகிறது.

செயற்கை இனப்பெருக்க முறைகளை பயன்படுத்திக் கருத்தரிக்க வைக்கும்போது பல கர்ப்பம் என்ற நிலை ஏற்பட வாய்ப்புகள் அதிகம். ஒரு ஐ.வி.எஃப் இன் முதன்மையான நோக்கம் குழந்தை மற்றும் பிரசவத்தின் நலனுக்கு வழி செய்வதுதான். இந்த செயல்முறையின் மூலம் ஆரோக்கியமான குழந்தை பிறக்க ஏதுவாகிறது.

கருக்களின் எண்ணிக்கை பலவாக அதிகரிக்கும்போது, குறைப்பிரசவத்திற்கான அபாயங்களும் அதிகரிக்கின்றன: கருக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்போது கர்ப்ப காலத்தின் சராசரி காலம் குறைகிறது. ஒரு குழந்தைக்கு 40 வாரங்கள், இரட்டையர்களுக்கு 36 வாரங்கள், மூன்று
குழந்தைகளுக்கு 32 முதல் 33 வாரங்கள் மற்றும் நான்கு குழந்தைகளுக்கு 28 முதல் 29 வாரங்கள் என்ற வகையில் பிரசவத்திற்காக காலம் ஆச்சரியப்படத்தக்க வகையில் குறைந்துகொண்டே வருகிறது. வெற்றிகரமான மற்றும் ஆரோக்கியமான குழந்தை பிறப்பிக்கான வாய்ப்பை அதிகரிப்பதே கருக் குறைப்பிற்கான முதன்மையான குறிக்கோள் ஆகும். கரு குறைப்பு:

வழக்கமாக 11 முதல் 14 வாரங்களுக்கு இடையில் கருவுற்ற காலத்தின் ஆரம்பத்திலேயே இந்த கருக்குறைப்பு செய்யப்படுகிறது.

கர்ப்பத்தில் மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட கருக்கள் இருக்கும்போது பெரும்பாலும் இந்த செயல்முறை செய்யப்படுகிறது.

மும்மூர்த்திகளை இரட்டையர்களாகக் குறைக்க இந்த முறை பயன்படுத்தப் படலாம்.

இந்த செயல்முறையின்போது அதிகமான குறைபாடுகள் கொண்ட கருவோ அல்லது பிற கருக்களின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கக் கூடிய நிலையில் உள்ள கருவோ தேர்வு செய்யப்பட்டு அது முடிக்கப்படுகிறது. இதனால் தான் இந்த செயல்முறைக்கு “தேர்ந்தெடுக்கப்பட்ட கருவை முடித்தல்” என்று பெயர்.

இந்த செயல்முறை பொதுவாக எப்போது செய்யப்படுகிறது?

கருக் குறைப்பு செயல்முறை பொதுவாக கர்ப்பத்தின் 11 முதல் 14 வாரங்களுக்கு இடையில் செய்யப்படுகிறது. இந்த செயல்முறையை முதல் மூன்று மாத பரிசோதனையுடன் இணைந்து செய்துகொள்ளலாம். இந்த செயல்முறை பொதுவாக மீதமிருக்கும் கருவிலோ கருக்களிலோ எந்தவிதமான பாதிப்பையும் பக்கவிளைவையும் உண்டாக்காது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த செயல்முறை எவ்வாறு செய்யப்படுகிறது?

கருவைக் குறைப்பதற்கான மிகவும் பொதுவான முறை டிரான்ஸ்அப்டோமினல் (அடிவயிற்று வழியாக) என்று அழைக்கப்படுகிறது. இந்த செயல்முறையின்போது மருத்துவர் அல்ட்ராசவுண்டை பயன்படுத்துகிறார். செயல்முறையின்போது தாயின் வயிறு வழியாக கருப்பைக்குள் ஊசி செலுத்தப்பட்டதும் தேர்ந்தெடுக்கப்பட்ட கருவுக்கு மருத்துவர் பொட்டாசியம் குளோரைடு அல்லது லிக்னோகைன் கரைசலை செலுத்துகிறார். இந்தக் கரைசல் தேர்ந்தெடுக்கப்பட்ட கருவின் இதய செயல்பாட்டினை நிறுத்துகிறது.

முதல் மூன்று மாதங்களில் கரு மிகவும் சிறியதாக இருப்பதால், முடிக்கப்பட்ட கருவைப் பொதுவாக தாயின் உடலே உறிஞ்சிக்கொள்ளும். ஆயினும் சிலருக்கு இந்த செயல்முறையின் விளைவாக யோனி இரத்தப்போக்கு ஏற்பட வாய்ப்புள்ளது.

குறைக்கப்படவேண்டிய கரு எவ்வாறு தேர்ந்தெடுக்கப்படுகிறது?

கர்ப காலத்தில் வழக்கமான ஸ்கிரீனிங்கின்போது 12 முதல் 13 வாரங்களில் அல்ட்ராசவுண்ட் செய்யப்படுகிது. இந்த செயல்முறையின் மூலமாக அசாதாரணத்தின் அறிகுறிகளைக் கொண்டுள்ள கரு குறைப்பதற்காகத் தேர்ந்தெடுக்கப்படுகிறது. அல்ட்ராசவுண்ட் ஸ்கேனின் போது அனைத்து கருக்களும் சிக்கல்கள் ஏதுமின்றி இயல்பானவைகளாகவே தோன்றினால் எந்தக் கருவினை எளிதில் அணுக முடியுமோ அந்தக் கரு குறைப்பதற்காக தேர்வு செய்யப்படுகிறது.

அதே நேரம் பாலினத்தின் அடிப்படையில்
குறைக்கப்படவேண்டிய கருக்கள் தேர்ந்தெடுக்கப்படவில்லை என்பதும் மிக முக்கியம். இவ்வாறு செய்வது பி.சி.பி.என்.டி.டி சட்டத்தின் கீழ் கண்டிப்பாக தடைசெய்யப்பட்டுள்ளது மற்றும் இந்த செயல்முறையின்போது கருவின் பாலினம் பெற்றோருக்கு குறைப்படுவதில்லை. சொல்லப்போனால் இந்த நிலையில் கருக்களின் பாலினம் ஆய்வு செய்யப்படுவதே இல்லை.

கருக் குறைப்பு செயல்முறையில் உள்ள ஆபத்துக்கள் என்னென்ன?

உயர்-வரிசை பல கர்ப்பத்தில் (மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட கருக்கள் வளரும் நிலை), ஒவ்வொரு கூடுதல் கருவுடனும் கருச்சிதைவு அல்லது உள்-கருப்பை இறப்பு நிகழ்வதற்கான அபாயங்கள் அதிகரிக்கின்றன. கருவின் குறைப்பு மீதமுள்ள கருக்களுக்கு ஆரோக்கியமாகப் பிறந்து உயிர்வாழ்வதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கும். அதே சமயத்தில் இந்த செயல்முறை செய்யப்படுவதால் சில நேரங்களில் மீதமுள்ள கருக்களுக்கு முன்கூட்டிய பிரசவம் அல்லது தொற்றுநோய்கள் அல்லது கருச்சிதைவு ஆகிய அபாயங்களை ஏற்படுத்திவிடவும் வாய்ப்புண்டு.

கருவைக் குறைக்கும் பெண்களில் சுமார் 75% நபர்களுக்கு முன்கூட்டிய பிரசவம் ஏற்படுகிறது. கரு குறைப்புக்கு உள்ளாகும் தாய்மார்களில் சுமார் 4-5% நபர்களில் மீதமுள்ள கருக்களில் ஒன்றோ அல்லது பலவோ கருச்சிதைவுக்கு உள்ளாகலாம். மேலும், காய்ச்சல், யோனி இரத்தப்போக்கு, கசிவு அல்லது சுருக்கங்கள் ஆகிய பிற பக்க விளைவுகள் ஏற்பட வாய்ப்புண்டு.

கவனிக்க வேண்டியது:

மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட கருக்களின் பல கரு கர்ப்பம் இரண்டு கருக்களாகக் குறைக்கப்படும் சந்தர்ப்பங்களில், மீதமுள்ள கருக்கள் இரட்டையர்களாக கருத்தரித்திருந்தால் எப்படி வளருமா அப்படி வளரத் தொடங்குகின்றன.

கருவின் குறைப்பு ஒரு அதிர்ச்சிகரமான நிகழ்வு என்பதால், செயல்முறைக்குப் பிறகு ஆலோசனை பரிந்துரைக்கப்படுகிறது. நோயாளி மற்றும் அவரது குடும்பத்தினர் இந்த நடைமுறைக்கு உட்படுத்தப்படுவது குறித்து மனதளவில் குற்ற உணர்ச்சிக்கான பாதிப்பை பெறுவார்கள். குறிப்பாக கர்ப்பிணி பெண் என்பதால் அவருக்கு ஆலோசனையும் ஆறுதலும் இத்தருணத்தில் அதிகம் தேவைப்படுகிறது.

கரு குறைப்பு செய்முறை குறித்து உங்கள் கேள்விகள்

கரு குறைப்பு எவ்வாறு செய்யப்படுகிறது?

தாயின் வயிற்றின் ஊசியை செலுத்தி கரு குறைப்பு செய்யப்படுகிறது. இது தொடர்ச்சியான அல்ட்ராசவுண்ட் வழிகாட்டுதலின் கீழ் செய்யப்படுகிறது.

கரு குறைப்பு செய்முறை சட்டபூர்வமானதா?

பல கருக்கள் தாய் சுமந்து அவை வளரும் போது தாய்க்கு பலவிதமான பிரச்சனைகள் ஏற்பட வழியுண்டு, அவ்வாறு பிரச்சனை ஏற்படும் போது கரு குறைப்பு செய்வது சட்டபூர்வமானது.

கரு குறைப்பு ஏன் செய்யப்படுகிறது?

ஒன்றுக்கு மேற்பட்ட கருவை, ஒரு தாய் பாதுகாப்பற்ற அல்லது விரும்பத்தகாத எண்ணிக்கையிலான கருக்கள் சுமக்கும்போது தேர்ந்தெடுக்கப்பட்ட கரு குறைப்பு செய்யப்படுகிறது. மீதமுள்ள கரு பாதுகாக்க படுகிறது.

கரு குறைப்பு எந்த மாதத்தில் செய்யப்படுகிறது?

கரு குறைப்பு செயல்முறை பொதுவாக கர்ப்பத்தின் 11 முதல் 14 வாரங்களுக்கு இடையில் செய்யப்படுகிறது. 

கரு குறைப்பு செய்முறையில் வலி இருக்குமா?

கரு குறைப்பு செய்யும் போது மயக்க மருந்து கொடுப்பதால், நீங்கள் தூங்குவீர்கள் மற்றும் வலியை உணர மாட்டீர்கள்.