என் டி ஸ்கேன் என்றால் என்ன?

மகப்பேறுக்கு முற்பட்ட பரிசோதனையின் அவசியம் மற்றும் பாதுகாப்பான பேறுகாலத்தை உறுதிசெய்யும் அதன் பங்கு குறித்து அறியலாம்: 

கர்ப்பக்காலத்தின் 9 மாதங்களை மூன்று காலங்களாக பிரித்து வகைப்படுத்தியிருக்கிறார்கள். கருவை உறுதி செய்த நாள் முதல் அடுத்து வரும் 3 மாதங்கள் வரையான காலம் “ட்ரைமெஸ்டர்” என்று அழைக்கப்படுகிறது.

இந்த காலத்தில் அதாவது கருவுற்ற 11 வாரங்கள் மற்றும் 13 வாரங்களில் இரத்தப் பரிசோதனை மற்றும் என்.டி ஸ்கேன் பரிசோதனை மேற்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.

கர்ப்பக்காலத்தில் இரத்தப் பரிசோதனை செய்வதன் மூலம் கரியோடைப் எனப்படும் சிசுவின் குரோமோசோமல் கட்டமைப்பு தெரிய வருகிறது.

என்.டி அளவீடுடன், கருவுற்ற பெண்ணின் வயது மற்றும் கர்ப்பம் ஏற்பட்ட தேதியை சேர்த்து சிசுவின் குரோமோசோமால் கோளாறுக்கான ஆபத்து கணக்கிடப்படுகிறது.

கரு உருவாகிய நான்காம் மாதமான 16 முதல் 24 வாரங்களுக்குட்பட்ட காலக்கட்டம் இரண்டாம் ட்ரைமெஸ்டர் எனப்படுகிறது. சுருக்கமாக இதை இரண்டாவது மூன்று மாதங்கள் என்றும் சொல்லலாம்.

இந்த கட்டத்தில் கரு கட்டமைப்பில் குறை ஏதேனும் இருந்தால், அதை நீக்க அனோமலி ஸ்கேனுடன் சேர்த்து ட்ரிபிள்/குவாட்ராபிள் ஸ்கிரீனிங் எனப்படும் இரத்தப் பரிசோதனையும் செய்யப்படும்.

ஒருவேளை பரிசோதனையின் முடிவுகள் டவுண்சிண்ட்ரோம் குறைபாடுடைய குழந்தை பிறப்பதற்கான வாய்ப்பு குறைவு என்பதை குறித்தாலும், அதை உறுதியாக கூற முடியாது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

கர்ப்பமான பெண்கள் உடல் மற்றும் ஹார்மோன் மாற்றங்களுக்கு உள்ளாகின்றனர். கருவுற்ற பிறகு கர்ப்பிணி பெண் தொடர்ந்து மருத்துவர்களை அணுகி, உரிய இடைவேளையில் பரிசோதனை செய்து கொள்வதும், மருத்துவர் பரிந்துரைக்கும் மருந்துகளை தவறாமல் எடுத்துகொள்வதும் பாதுகாப்பானது. தொடர் சிகிச்சையின் வழியாக கருவின் வளர்ச்சியும் சீராக கண்காணிக்கப்படுகிறது. அப்படிப்பட்ட ஒன்று தான் மகப்பேறுக்கு முற்பட்ட பரிசோதனை. இதன்மூலம், வளர்ச்சி அடைந்து வரும் கருவில் இருக்கும் பல்வேறு சவாலான விஷயங்களை அறிந்து கொள்ள முடிகிறது.

குரோமோசோமல் அசாதாரணத்திற்குரிய மகப்பேறுக்கு முற்பட்ட பரிசோதனை எது?

முதல் ட்ரைமெஸ்டர் பரிசோதனை (11 முதல் 14 வாரங்கள்)

கரு உருவான முதல் 3 மாதங்கள் ட்ரைமெஸ்டர் என்றழைக்கப்படுகிறது. ஒவ்வொரு பெண்ணும் கர்ப்பக்காலத்தில் சந்திக்கும் முக்கியமான காலகட்டம் இது என்று சொல்லலாம். இந்த கட்டத்தில் கரு உருவான 11 வாரங்களில் ஒரு இரத்தப் பரிசோதனை மற்றும் அல்ட்ராசவுண்டு பரிசோதனை செய்யப்படும். கருத்தரித்த முதல் நாள் முதல் 13 வாரங்கள் 6 நாட்களில் சிசுவின் குரோமோசோம் தன்மை மதிப்பீடு செய்யப்படும். குறிப்பாக டவுன் சிண்ட்ரோம் குறைபாடு, ட்ரைசோமி 18 அல்லது ட்ரைசோமி 13 ஆகியவை மதிப்பீடு செய்யப்படுகிறது.

கூடுதலாக ஒரு குரோமோசோம் இருந்தால், டவுன் சிண்ட்ரோம் குறைபாடு (ட்ரைசோமி 21), எட்வர்டு குறைபாடு (ட்ரையோச்மி 18) மற்றும் பட்டேயூ குறைபாடு (ட்ரைசோமி 13) போன்றவை ஏற்பட்டு குழந்தை பிறப்பை பாதிக்கச் செய்யும். இந்த குறைபாடுகளால் குழந்தையின் மூளைச் செயல்பாடும் பாதிக்கும். டவுன் சிண்ட்ரோம் குறைபாடுடன் பிறக்கும் குழந்தைகள் மாற்றுத்திறனாளிகளாகவும் மற்றும் சிறியளவு மூளை வளர்ச்சி குறைபாடு கொண்டும் இருப்பார்கள். மேலும், அவர்களுக்கு இதயநோய் தொடர்பான பிரச்னையும் ஏற்படக்கூடும்.

டவுன் சிண்ட்ரோம் குறைபாட்டை கண்டறிவது எப்படி?

சராசரியாக குழந்தைக்கு மூன்று வகையான குரோமோசோம் 21 இடம்பெற்றிருக்கும். ஒருவேளை கருவில் வளரும் குழந்தைக்கு உடல்திறன் குறைபாடு இருக்குமானால் சராசரியான குழந்தைக்கு இருக்கும் 46 (23 இணை) அளவை விட, டவுன் சிண்ட்ரோம் குறைபாடு கொண்ட குழந்தைக்கு 47 குரோமோசோம்கள் இருக்கும். கூடுதலான குரோமோசோம்கள் 21வது இணையில் இடம்பெற்றிருக்கும். 40 சதவீதம் உடல்குறைபாடு கொண்ட குழந்தைகளின் பிரச்னைகள் ஸ்கேன் மூலம் தெரிவதில்லை. டவுன் சிண்ட்ரோம் குறைபாட்டை விட ட்ரைசோமி 18 மற்றும் ட்ரைசோமி 13 போன்றவை பெரிய ஆபதில்லை. ஆனால், அதை மகப்பேறு காலத்துக்கு முற்பட்ட பரிசோதனையின் மூலம் கண்டறியாமல் விட்டுவிட்டால் குழந்தை பிறப்பின் போது பாதிக்கும். மேலும் பார்வை குறைபாடு, ஆயுள் காலம் குறைவது போன்ற பிரச்னைகள் ஏற்படும்.

இந்த குறைபாட்டை ஆராய்வதற்கு மகப்பேறியல் நிபுணர்கள் சிசுவின் கழுத்து தடிமன் திசுக்களை ஆய்வு செய்கின்றனர். குழந்தைக்கு டவுன் சிண்ட்ரோம் குறைபாடு ஏற்பட்டுள்ளதாக என்பதை கண்டறிவதற்கு சிசுவின் நாசி எலும்பும் சரிபார்க்கப்படுகிறது.

அதற்காக குறிப்பிட்ட அளவீட்டில், குழந்தையின் பின் கழுத்திற்கு அடியிலுள்ள திரவம் எடுக்கப்படும். இதுதான் நுச்சல் டிரான்ஸ்குலென்ஷி அளவீடு என்று குறிப்பிடப்படுகிறது. கருவில் இருக்கும் அனைத்து குழந்தைகளுக்கும் இந்த திரவம் உருவாகும்.

குரோமோசோம் குறைபாடு அல்லது வேறு ஏதேனும் உடல்நலன் சார்ந்த பிரச்னைகளுடன் உருவான சிசு என்றால், சராசரியை விட இந்த திரவத்தின் அளவு அதிகப்படியாக இருக்கும் அல்லது இப்பிரச்னை உள்ள குழந்தைகளுக்கு நாசி எலும்பு உருவாவது இல்லை.

இந்த நுச்சல் அளவீட்டுக்காக கருவுற்ற பெண்ணின் வயது மற்றும் கரு உருவான நாளும் கணக்கில் கொள்ளப்படும். அதன்மூலம், கருவில் இருக்கும் குழந்தைக்கான டவுன் சிண்ட்ரோம் குறைபாடு, ட்ரைசோமி 13 மற்றும் ட்ரைசோமி 18 கண்டறிவது குறித்த பரிசோதனை செய்யப்படும். ஒருவேளை கிடைக்கும் முடிவுகள் 250 அல்லது அதற்கு மேற்பட்டதாக இருந்தால், கோரியோனிக் வில்லஸ் மாதிரி (CVS)அல்லது அம்னோசென்டெசிஸ் போன்ற குறைப்பாட்டை கண்டறியும் சிகிச்சை முறைகள் பரிந்துரைக்கப்படுகின்றன.

இந்த சிகிச்சைக்கான செயல்முறை ஸ்கேன் மூலம் நடத்தப்படுகிறது. அப்போது பெரிய ஊசி ஒன்று கருவுற்ற பெண்ணின் கர்ப்பப் பையில் செலுத்தப்படும். அதன்மூலம் கருப்பையில் இருக்கும் அம்னோடிக் திரவம் (அம்னோசென்டெசிஸ்) அல்லது நஞ்சுக்கொடி திசுவின் ஒரு பகுதி எடுக்கப்படும். கருப்பையில் இருக்கும் திரவத்தில் குழந்தையின் செல்கள் உள்ளன. இதை ஆய்வுக்குட்படுத்துவதன் மூலம் குரோமோசோமில் இருக்கும் பிரச்னையை கண்டறியலாம்.

இதற்கான மற்றொரு சிகிச்சையானது இரத்தப் பரிசோதனை மூலம் நடத்தப்படுகிறது. கரு செல்களை சோதிக்க தாயில் இரத்தத்தில் இருந்து 20 மில்லி இரத்தம் உறிஞ்சப்படுகிறது. இந்த முறை 99.99 சதவீதம் உணர்திறன் கொண்டது மற்றும் டவுன் சிண்ட்ரோம் குறைப்பாட்டை கண்டறிய சரியான சிகிச்சை முறையாகும்.

இரண்டாவது ட்ரைமெஸ்டர் (16 முதல் 24 வாரங்கள்) பரிசோதனை

முதல் ட்ரைமெஸ்டருக்கான காலகட்டத்தில் கருவுற்ற பெண்கள் பரிசோதனைகளை மேற்கொள்ள தவறினால், அவர்களுக்கான இரண்டாவது வாய்ப்பு தான் இந்த இரண்டாவது ட்ரைமெஸ்டர். எனினும், கருவில் வளரும் குழந்தையின் உடல்திறனை கண்டறியும் பரிசோதனையில் இரண்டாவது ட்ரைமெஸ்டரை விட முதல் ட்ரைமெஸ்டர் காலக்கட்டம் தான் முக்கியத்துவம் வாய்ந்தது. இரண்டாவது ட்ரைமெஸ்டரில், சிசுவின் வளர்ச்சியை கண்டறிவதற்கு அனமலி ஸ்கேனை தொடர்ந்து குவாட்ராபிள் ஸ்கிரீனிங் செய்யப்படுகிறது.

டவுன் சிண்ட்ரோம் குறைபாடு ஏற்படுவதற்கு வாய்ப்பு குறைவு தான் என்ற போதிலும், இந்த நிலையுடன் குழந்தை பிறக்கும் என்பதை உறுதியாக கூற முடியாது. அதேபோல, டவுன் சிண்ட்ரோம் குறைபாடு ஏற்படுவதற்கு வாய்ப்பு அதிகமாக இருந்தாலும் குழந்தைக்கு இந்த பாதிப்பு ஏற்படும் என்பதையும் உறுதியாக கூற முடியாது. இது வெறும் முதற்கட்ட பரிசோதனை தான், குறைபாடு குறித்து தீர்மானமாக தெரிய வேண்டும் என்றால், மகப்பேறியல் நிபுணருடன் ஆலோசனை பெறுவது அவசியம்.

 

என்.டி ஸ்கேன் குறித்து உங்கள் கேள்விகள்

என் டி ஸ்கேன் எப்போது செய்யவேணும்?

கருவுற்ற 11 வாரங்கள் மற்றும் 13 வாரங்களில் இரத்தப் பரிசோதனை மற்றும் என்.டி ஸ்கேன் பரிசோதனை மேற்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.

என் டி ஸ்கேன் செய்வதற்கு முன்பு சாப்பிடலாமா?

என் டி ஸ்கேன் செய்வதற்கு முன்பு நாம் சாப்பிடலாம்.

என் டி ஸ்கேன் செய்வதற்கு எவ்வளவு நேரம் எடுக்கும்?

குழந்தையின் நிலையின் (baby’s position) அடிப்படையில் நேரம் குறிப்பிட முடியும்.

என்.டி ஸ்கேன் செய்ய சிறுநீர்ப்பை நிரம்பியிருக்க வேண்டுமா?

என்.டி ஸ்கேன் செய்ய சிறுநீர்ப்பை நிரம்பியிருக்க வேண்டும் என்பது தேவையில்லை.