கர்ப்பிணிக்கு இரட்டை குழந்தை இருந்தால் என்ன மாதிரியான அறிகுறிகள் இருக்கும்!

0
62
இரட்டை குழந்தை அறிகுறிகள்

கர்ப்பிணிகள் வயிற்றில் இரண்டு குழந்தை அதாவது ட்வின்ஸ் ஆக இருக்கும் போது அறிகுறிகள் தனியாக தெரியும். கருவுற்ற போதே ஸ்கேன் பரிசோதனையில் வயிற்றில் இரண்டு குழந்தை என்பதை அறிய முடியும்.

இரட்டை குழந்தை அதிக மகிழ்ச்சி தரக்கூடிய விஷயம். எனினும் அம்மா மற்றும் வயிற்றீல் வளரும் குழந்தைகள் இருவரையும் கூடுதல் கவனத்தோடு பார்த்துகொள்ள வேண்டும். கர்ப்பிணிக்கு இரட்டை குழந்தை இருந்தால் என்ன மாதிரியான அறிகுறிகள் தோன்றும் என்று தெரிந்துகொள்வோம்.

அதிகமான HCG அளவு

கருவுற்ற பிறகு பெண்ணின் உடலில் HCG என்னும் ஹார்மோன் உருவாக தொடங்கும். கருவுற்ற சில வாரங்களில் இந்த ஹார்மோன் உருவாக தொடங்கும். இதை கொண்டு தான் பெண் கருவுறுதல் உறுதிபடுத்தபடுகிறது. கருவுற்ற முதல் சில வாரங்களில் இது அதிகரிக்க கூடும். சிறுநீர் பரிசோதனை மூலம் இதை கண்டறிவார்கள். அப்பெண் இரட்டை குழந்தையை சுமப்பதாக இருந்தால் சிறுநீரில் HCG அளவு அதிகமாக இருக்கும்.இது ஒரு யூகம் தான் இதை உறுதி செய்ய அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் பரிசோதனை வரை காத்திருக்க வேண்டும்.

காலை நோய் தீவிரம்

மார்னிங் சிக்னஸ் என்று சொல்லகூடிய கடுமையான காலை நோய் கர்ப்பிணிகளுக்கு இயல்பாகவே இருக்கும். hCG என்னும் ஹார்மோன் சுரப்பு அதிகமாக இருப்பதால் இரட்டை குழந்தை சுமக்கும் பெண்களுக்கு இந்த காலைநோய் அதிகமாக இருக்கும். கர்ப்பிணி காலையில் எழும்போதே குமட்டல் மற்றும் வாந்திஉணர்வோடு தான் எழுவார்கள். நாள் முழுக்க இந்த காலை நோய் தீவிரம் இருக்கவே செய்யும்.
ஒரு குழந்தை சுமக்கும் கர்ப்பிணியை காட்டிலும் இரட்டை குழந்தை சுமக்கும் கர்ப்பிணிகளுக்கு இதன் தீவிரம் மிக அதிகமாக இருக்கும். மேலும் முதல் ட்ரைமெஸ்டர் காலத்துக்கு பிறகு குறையக்கூடிய இந்த காலை நோய் இரண்டாம் ட்ரைமெஸ்டர் காலத்துக்கு பிறகும் தொடரும்.

உடல் சோர்வு

கர்ப்பிணிக்கு உடல் சோர்வு இருக்கதான் செய்யும். ஆனால் இரட்டை குழந்தையை சுமக்கும் கர்ப்பிணீகளுக்கு அதிகப்படியான சோர்வு இருக்கும். இது கருவுற்ற முதல் 4 வாரங்களிலேயே தெரியும். ஹார்மோன் அளவு, தூக்க குறுக்கீடு, அடிக்கடி சிறுநீர் கழிப்பது போன்ற சிக்கலோடு இந்த உடல் சோர்வும் அதிகமாக இருக்கலாம்.

இதயத்துடிப்பு

கர்ப்பகாலத்தில் இதயதுடிப்பு சாதாரணமாக 70 முதல் 80 வரை இருக்கும். ஆனால் ஒன்றுக்கு மேற்பட்ட கருவை சுமக்கும் போது இதயத்துடிப்பு 95 முதல் 105 வரை இருக்கலாம்.மேலும் கர்ப்பிணிக்கு மன அழுத்தமும் அதிகமாக இருக்கும். காரணமே இல்லாமல் திடீரென்று அழுகை வரக்கூடும். மனநிலை தடுமாற்றம் இருக்கும். இந்த உணர்வுகள் வழக்கத்தை விட இரட்டை குழந்தை சுமக்கும் கர்ப்பிணிக்கு அதிகமாக இருக்கும்.

எடை அதிகரிக்கும்

கர்ப்பகாலத்தில் கர்ப்பிணியின் எடை அதிகரிப்பது இயல்பானது. ஆனால் இரட்டை குழந்தையை சுமக்கும் கர்ப்பிணிகள் வழக்கத்தை விட அதிகமான எடையை கொண்டிருப்பார்கள். இரட்டை குழந்தைகளை சுமக்கும் போது எடையின் அளவு வேகமாக அதிகரிக்க கூடும். தாய் மற்றும் குழந்தையின் எடையோடு உடலில் சேரும் திசுக்கள், ரத்த திரவ அளவும் அதிகரிக்க கூடும்.

முன்கூட்டியே வயிறு

எடை கூடும் என்பதற்கேற்ப வயிற்றின் மேடும் முன்கூட்டியே தெரிய ஆரம்பிக்கும். வழக்காமாக 5 முதல் 6 ஆம் மாதங்களில் தெரியக்கூடிய வயிறின் மேடுபகுதி 4 ஆம் மாதமே தெரிய ஆரம்பிக்கும்.

குழந்தையின் அசைவு

கர்ப்பிணி பெண்ணின் வயிற்றில் குழந்தையின் அசைவு 5 ஆம் மாதங்களின் இறுதியில் தெரிய ஆரம்பிக்கும். பெரும்பாலும் கர்ப்பிணிகள் 6 ஆம் மாதங்களில் தான் குழந்தையின் அசைவை உணர்வார்கள். ஆனால் இரட்டை குழந்தை சுமக்கும் போது முன்னதாகவே குழந்தையின் அசைவை உணர்வார்கள். அதற்காக இரண்டாவது மூன்றாவது மாதங்களிலேயே இவை நடக்காது. நான்காவது மாதங்களின் முடிவில் இதை உணரலாம்.

முன்கூட்டியே பிரசவம்

இயல்பாக 36 வாரங்களுக்கு பிறகு பிரசவ வலி உண்டாக கூடும். ஆனால் இரட்டை குழந்தை சுமக்கும் போது 28 வாரங்களுக்கு முன்பே பிரசவ வலி உண்டாகும். மேலும் பிரசவம் நடந்தாலும் ஒரு குழந்தையின் எடை அதிகமாகவும், இன்னொரு குழந்தையின் எடை குறைவாகவும் இருக்கும்.

கருவுற்ற உடன் அல்ட்ராசவுண்ட் ஸ்கேனில் இரட்டை கரு என்பது உறுதியாகிவிட்டால் மருத்துவரின் ஆலோசனையை கவனமாக கேட்டு அதன்படி நடப்பது நன்மை தரும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here