அம்னோசென்டெசிஸ் என்றால் என்ன?

அம்னோசென்டெசிஸ் என்னும் சோதனை குழந்தை பிறப்பிற்கு முன்னர் செய்யப்படும் சோதனை. இந்த சோதனையின் போது கரு மருத்துவ நிபுணர் கருவில் குழந்தையைச் சுற்றியுள்ள திரவத்தின் மாதிரியைப் பரிசோதிப்பதன் மூலம் குழந்தையின் உடல்நலம் குறித்த தகவல்களை அறிந்து கொள்ள முடியும். இந்த திரவம் அம்னோடிக் திரவம் என்று அழைக்கப்படுகிறது. இந்த அம்னோடிக் திரவத்தில் வளரும் குழந்தையின் உடலிலிருந்து உத்திரக்கூடிய தோல் செல்கள் காணப்படுகின்றன.

அம்னோடிக் திரவம் பரிசோதிக்கப்படும்போது கருவில் வளர்ந்து கொண்டிருக்கும் குழந்தைக்கு டவுன் நோய்க்குறி போன்ற குரோமோசோம் அசாதாரணங்கள் ஏதேனும் உள்ளனவா என்பதையும் உறுதியாகத் தீர்மானிக்க முடியும். முக்கியமாக அம்னோசென்டெஸிஸ் சோதனையின் மூலம் ஒரு காரியோடைப் உருவாக்கப் படுகிறது. இந்த குரோமோசோம்கள் படம்தான் நாம் குழந்தைக்கு ஏதேனும் குரோமோசோம் சம்பந்தமான அசாதாரணங்கள் உள்ளனவா என்று தீர்மானிக்க உதவுகிறது.

சுமார் ஒரு சதவிகிதம் அம்னோசென்டெசிஸ் சோதனைகள் நாம் எதிர்பார்க்கும் பலன்களைத் தருவதில்லை.

அம்னோசென்டெசிஸ் சோதனை ஒரு கருவுற்ற பெண்ணின் கர்ப்ப காலத்தில் 16 முதல் 20 வாரங்களுக்கு இடையே செய்யப்படுகிறது. எல்லா கருவுற்ற பெண்களுக்கும் அம்னோசென்டெசிஸ் சோதனை செய்வதற்கான தேவை உள்ளது, ஆயினும் பெரும்பாலும் மரபணு மற்றும் குரோமோசோம் தொடர்பான பிரச்சினைகளுக்கு அதிக ஆபத்து உள்ள பெண்களுக்கு இந்த பரிசோதனை செய்து கொள்ள மருத்துவரால் பரிந்துரை செய்யப்படுகிறது. இந்த சோதனையை ஆக்கிரமிப்பு வகையிலான செயல்பாடு இல்லாமல் செய்ய இயலாது. எனவே இந்த சோதனையினால் கருச்சிதைவிற்கான ஆபத்து உள்ளது என்றாலும் அது மிக சிறிதளவு (0.01%) மட்டுமே உள்ளது.

கர்ப்பக்காலத்தில் அம்னோசென்டெசிஸ் பரிசோதனை ஏன் பரிந்துரைக்கப்படுகிறது?

பின்வரும் காரணங்களுக்காக அம்னோசென்டெசிஸ் சோதனை பரிந்துரைக்கப்படலாம்:

குரோமோசோம் அசாதாரணங்களுடன் ஒரு குழந்தை பிறக்கும் ஆபத்து எல்லாத் தாய்மார்களுக்கும் உள்ளது என்ற போதிலும் குழந்தை பெறும் தாய் 37 வயது அல்லது அதற்கு மேற்பட்ட வயதை சார்ந்தவராக இருக்கும்போது இந்த ஆபத்திற்கான வாய்ப்புகள் அதிகம் காணப்படுகின்றன. சொல்லப்போனால் குரோமோசோம் அசாதாரணத்துடன் குழந்தையைப் பெற்றெடுப்பதற்கான ஆபத்து தாயின் வயதைக் கொண்டு அதிகரிக்கிறது. உதாரணத்திற்கு டவுன் நோய்க்குறியுடன் ஒரு குழந்தையை சுமக்கும் வாய்ப்பு 25 வயதில் 1,200 இல் 1 ஆக இருக்கிறது. இது 40 வயதில் 100 இல் 1 ஆக அதிகரிக்கிறது.

ஒரு கர்ப்ப பரிசோதனையின்போது டவுன்ஸ் நோய்க்குறி, எட்வர்ட்ஸ் நோய்க்குறி அல்லது படாவின் நோய்க்குறி போன்ற குறைபாடுகள் இருக்கலாம் என்று சந்தேகிக்கப்பட்டால் அம்னோசென்டெசிஸ் சோதனைக்குப் பரிந்துரைக்கப்படுகிறது.

தாயின் முந்தைய கர்ப்பத்தில் டிரிசோமி 21, 13 அல்லது 18 இல் ஏதேனும் பிரச்சனைகள் இருந்த வரலாறு அறிந்தால் இந்த பரிசோதனைக்கு அறிவுறுத்தப்படுகிறது.

வழக்கமான அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் வழிமுறையின் போது குழந்தைக்கு ஏதேனும் அசாதாரண தன்மை இருப்பது கண்டறியப்பட்டாலும் இந்த பரிசோதனைக்கு மருத்துவர் அறிவுறுத்துவர்.

கருப்பையில் நோய்த்தொற்றை உறுதி செய்யவோ அல்லது நிராகரிக்கவோ கருப்பையில் அதிகப்படியான அம்னோடிக் திரவம் சேர்ந்து விட்ட – பாலிஹைட்ராம்னியோஸ் – என்ற சூழ்நிலையில் அதிகப்படியான அம்னோடிக் திரவத்தை கருப்பையிலிருந்து வெளியேற்ற அம்னியோ குறைப்பு செய்யப்படலாம்.

கர்ப்பிணிகளுக்கு அம்னோசென்டெசிஸ் சோதனையின் மூலம் எந்தெந்த வகையிலான குறைபாடுகளைக் கண்டறிய முடியும்?

அம்னோசென்டெசிஸ் சோதனையின் வாயிலாக டவுன் நோய்க்குறி, ட்ரைசோமி 13, ட்ரைசோமி 18, மற்றும் பாலியல் குரோமோசோம் அசாதாரணங்கள் (டர்னர் நோய்க்குறி ஆகியவை) உட்பட பெரும்பாலும் அனைத்து வகையான குரோமோசோம் கோளாறுகளையும் கண்டறிய முடியும். மேற்கூறிய நிலைமைகளை இந்த சோதனையின் மூலம் கண்டறிய முடியும் என்றாலும் அவற்றின் தீவிரத்தை அளவிட இந்த பரிசோதனை உதவி செய்யாது.

இந்த சோதனையின் மூலம் சிஸ்டிக் ஃபைப்ரோஸிஸ் ( cystic fibrosis), சிகிள் செல் நோய் (sickle cell disease) மற்றும் டே-சாக்ஸ் நோய் (sickle cell disease) போன்ற பல நூறு வகையான மரபணு கோளாறுகளையும் கண்டறிய வழியுள்ளது. ஆன போதிலும் இந்த எல்லாவிதமான மரபணு கோளாறுகளைக் கண்டறியவும் இந்த சோதனையை மருத்துவர்கள் பரிந்துரை செய்வதில்லை. மேற்கூறியவற்றில் குழந்தைக்கு ஒன்று அல்லது அதற்கு மேலான கோளாறுகளுக்கான ஆபத்து இருப்பதாக சந்தேகிக்கப்படும் பட்சத்தில் மட்டுமே இந்த அம்னோசென்டெசிஸ் சோதனையை செய்வதன் மூலம் குழந்தைக்கு இந்த நோய்களில் ஏதேனும் இருக்கிறதா என்று கண்டறிய முடியும்.

கர்ப்பிணிகளுக்கு அம்னோசென்டெசிஸ் சோதனையினால் கருச்சிதைவு ஏற்படும் ஆபத்து உள்ளதா?

அம்னோசென்டெசிஸ் சோதனை செய்வதன் மூலம் கருச்சிதைவு ஏற்படும் அபாயம் குறைவுதான். ஒரு குறிப்பிட்ட சதவிகித கருவுற்ற பெண்களில் சாதாரணமாகவே இரண்டாவது மூன்று மாதங்களில் கருச்சிதைவு நிகழ வாய்ப்புள்ளது. எனவே ஏதேனும் கருச்சிதைவு நிகழும் பட்சத்தில் இந்த அம்னோசென்டெசிஸ் சோதனையினால்தான் அந்த கருச்சிதைவு நிகழ்ந்ததா என்பதை உறுதியாக குறை முடியாது.

இந்த செயல்முறையின் தோல்வி விகிதம் 100 முதல் 200 சோதனைகளுக்கு ஒன்றுதான் என்று ஆராய்ச்சிகள் கூறுகின்றன.

கருவுற்ற தாய்க்கு அம்னோசென்டெசிஸ் சோதனை பரிந்துரை செய்யப்படுவதற்கு முன்பு இதிலுள்ள ஆபத்துகள் மற்றும் சாத்தியமான சிக்கல்களை பற்றி மருத்துவர் விவரிப்பார்.

இந்த சோதனைக்காக சேகரிக்கப்பட்ட முதல் மாதிரியை துல்லியமாக சோதிக்க முடியாமல் போகலாம். நோய் தொற்று அல்லது இந்த சோதனையை மீதும் சில முறைகள் திரும்பவும் செய்ய வேண்டிய தேவை போன்ற வேறு சில நிகழ்வுகளுக்கான வாய்ப்புகள் உள்ளன.

கர்ப்பத்தின் 15 வது வாரத்திற்கு முன்னர் கருவுற்ற தாயிடம் இந்த சோதனை நடத்தப பட்டால் அம்னோசென்டெசிஸ் சிக்கல்கள் ஏற்படுவதற்கான ஆபத்து அதிகமாக உள்ளது. எனவே இந்த கால கட்டத்திற்குப் பிறகே இந்த சோதனை மேற்கொள்ளப்படுகிறது.

இந்த சோதனையினால் ஏற்பாடாகி கூடிய பிற அபாயங்கள்:

இந்த பரிசோதனை செய்து கொண்ட கர்ப்பிணிகள் அதற்கு பிறகு தசைப் பிடிப்புகள் சந்திக்க நேரிடலாம்.

சிலருக்கு இந்த பரிசோதனைக்கு பிறகு நிகழக் கூடிய சிறிய அளவு யோனி இரத்தப்போக்கு.

அரிதான சந்தர்ப்பங்களில் அம்னோசென்டெசிஸ் சோதனை அம்னோடிக் திரவம் கருப்பையிலிருந்து வெளியே கசிய காரணமாக இருக்கலாம்.

மற்றொரு அரியவகையிலான சிக்கல் கருப்பையில் ஏற்படும் நோய்த் தொற்று ஆகும். 1000 பெண்களில் 1 பேருக்கு (0.1%) ஒரு தீவிர கருப்பை நோய்த்தொற்று ஏற்படுகிறது.

தாய்க்கு ஹெபடைடிஸ்-சி அல்லது எச்.ஐ.வி போன்ற நோய்தொற்று இருந்தால், அம்னோசென்டெசிஸ் சோதனை செய்யும்போது இந்த நோய்த் தொற்று கருவில் வளர்ந்து கொண்டிருக்கும் குழந்தைக்கு பரவ வாய்ப்புள்ளது.

அம்னோசென்டெசிஸின் சோதனைக்கு மாதிரி சேகரிக்கும்போது குழந்தை ஒரு கை அல்லது காலை ஊசி செல்லும் பாதையில் நகர்த்தக்கூடும். ஆயினும் இந்த சோதனையின்போது தீவிர ஊசி காயங்கள் அரிதானவைதான். பொதுவாக அல்ட்ராசவுண்ட் வழிகாட்டுதலில் இந்த சோதனை நிகழ்வதால் இதுபோன்ற ஆபத்துக்கள் பொதுவாக நிகழாமல் கவனித்துக் கொள்ளப்படுகின்றன.

அரிதாக, அம்னோசென்டெசிஸ் சோதனைக்காக மாதிரி சேகரிப்பின்போது குழந்தையின் இரத்த அணுக்கள் தாயின் இரத்த ஓட்டத்தில் நுழையக்கூடும். தாய்க்கு Rh எதிர்மறை இரத்தம் இருந்து அதுவரை Rh நேர்மறை இரத்தத்திற்கான ஆன்டிபாடிகள் தாயின் இரத்தத்தில் உருவாகாத சூழ்நிலையில் அம்னோசென்டெசிஸ் சோதனைக்குப் பிறகு Rh நோயெதிர்ப்பு குளோபுலின்
என்ற இரத்த உற்பத்தி தாய்க்கு வழங்கப்படும். இது நஞ்சுக்கொடியைக் கடந்து சென்று குழந்தையின் சிவப்பு இரத்த அணுக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய Rh ஆன்டிபாடிகளை தாயின் உடல் உற்பத்தி செய்வதைத் தடுக்கும். தாய் ஏற்கெனவே இந்த ஆன்டிபாடிகளை உருவாக்கத் தொடங்கியிருந்தால் இரத்தப் பரிசோதனையின் மூலம் அதைக் கண்டறிய முடியும்.

தனக்கு எது சரியானது என்பதை கருவுற்ற தாய் தீர்மானிக்க வழி என்ன?

முதல் மற்றும் இரண்டாவது மூன்று மாத ஸ்கிரீனிங் மற்றும் கண்டறியும் சோதனை செய்வதற்கான பரிந்துரையை மருத்துவர்தான் செய்வார். அதே நேரம் இந்த பரிசோதனையின் முக்கியத்துவம் குறித்து அறிவுறுத்தினாலும் இந்த பரிசோதனையை மேற்கொள்ளலாமா வேண்டாமா என்பதைத் தாய் மற்றும் அவரது குடும்பத்தினரின் தனிப்பட்ட முடிவிற்கு மருத்துவர் விட்டு விடுவார்.

இந்த சோதனையைப் பற்றி எடுக்கக்கூடிய சாத்தியமான சில நிலைப்பாடுகள்:

அல்ட்ராசவுண்ட் அடிப்படையிலான ஸ்கிரீனிங்கை முதலில் தேர்வுசெய்து அதன் ஆரம்ப முடிவுகளின் அடிப்படையில் இந்த சோதனையை செய்யலாமா என்று முடிவெடுங்கள்.

சில சந்தர்ப்பங்களில் கருவுற்ற தாய் ஸ்கிரீனிங்கைத் தவிர்த்து இந்த சோதனையை உடனடியாக செய்துகொள்ள முன்வரலாம்.

கருவுற்ற தாய் முதலில் இந்தப் பரிசோதனையை செய்துகொள்ள முடிவு செய்தால் மருத்துவர் ஒரு சி.வி.எஸ் அல்லது அம்னோசென்டெசிஸ் சோதனையின் மூலம் கண்டறிய வேண்டிய சிக்கல் நிலை ஏதேனும் சந்தேகிக்கப்படுகிறதா என்பதை முதலில் உறுதி செய்த பின்னர் இந்த சோதனை தேவையா இல்லையா என்பதைத் தீர்மானிக்கலாம்.

இந்த சோதனையின்போது கருச்சிதைவு ஏற்படுவதற்கான வாய்ப்பு சிறிதளவு உள்ளது. எனவே கருச்சிதைவிற்கான ஆபத்தை தவிர்க்க வேண்டிய அவசியம் பெரியதா அல்லது குழந்தையின் நிலையைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் பெரியதா என்பதை நோயாளி முடிவெடுத்த பின்னர் இந்த சோதனையை மேற்கொள்வதா என்று தீர்மானம் செய்யப்படலாம்.

குழந்தை கருப்பையில் வளரும்போது சில சிக்கல்கள் சந்தேகிக்கப்படலாம். ஆகவே, குழந்தைக்கு இந்த அரிய சிக்கல்களில் ஏதேனும் இருக்கக்கூடும் என்ற வலுவான சந்தேகம் இருந்தால், அம்னோசென்டெசிஸ் சோதனைக்குப் பரிந்துரை செய்யப்படலாம்.

கர்ப்பக்காலத்தில் அம்னோசென்டெசிஸ் சோதனை எவ்வாறு செய்யப்படுகிறது?

அம்னோசென்டெசிஸ் சோதனை தொடர்பான செயல்முறைக்கான மொத்த நேரம் பொதுவாக 15 நிமிடங்கள் ஆகும். செயல்முறைக்கு முன், குழந்தையை அளவிடுவதற்கும் அடிப்படை உடற்கூறியல் பரிசோதனை செய்வதற்கும் அல்ட்ராசவுண்ட் பரிசோதனை செய்யப்படுகிறது.

செயல்முறை தொடங்கும்போது, எந்தவகையிலான நோய்தொற்றும் ஏற்படும் அபாயத்தை தவிர்ப்பதற்காக தாயின் அடிவயிறு ஸ்டிரைல் கரைசலால் முதலில் சுத்தம் செய்யப்படுகிறது. குழந்தை மற்றும் நஞ்சுக்கொடி இந்த இரண்டிலிருந்தும் முற்றிலும் பாதுகாப்பான தூரத்தில் அமைந்த ஒரு அம்னோடிக் திரவத்தின் பையை முதலில் கண்டறிந்து அதனைக் குறியீடு செய்வதற்கு அல்ட்ராசவுண்ட் சோதனை பயன்படுத்தப்படுகிறது. இந்த செயல்முறைக்கு 10 நிமிடங்கள் வரை ஆகலாம்.

பின்னர், தொடர்ச்சியான அல்ட்ராசவுண்டின் வழிகாட்டுதலுடன் மருத்துவர் வயிற்று சுவர் வழியாகவும், குழந்தையைச் சுற்றியுள்ள திரவத்தின் சாக்கிலும் நீண்ட, மெல்லிய, வெற்று ஊசி ஒன்றை செருகுவார். மருத்துவர் ஒரு சிறிய அளவு அம்னோடிக் திரவத்தை எடுத்துக் கொண்ட பின்னர் செலுத்திய ஊசியை அகற்றுவார். சில நேரங்களில், ஊசி செருகப்படும் போது போதுமான திரவம் சேகரிக்கப்படுவதில்லை. இந்த சூழ்நிலையில் ஊசி மீண்டும் செருகப்படும். திரவத்தை சேகரிப்பதற்கு சில நிமிடங்கள் ஆகலாம், ஆனால் இதற்கு பொதுவாக 30 வினாடிகளுக்கும் குறைவான காலமே தேவைப்படும். வெளியே எடுக்கப்பட்டதால் கருப்பையினுள் குறைந்துவிட்ட திரவத்தின் அளவினை மீண்டும் சரி செய்ய குழந்தை தானாகவே அதிக திரவத்தை உருவாக்கும்.

ஆய்வுக்காக சேகரிக்கப்படும் அம்னோடிக் திரவத்தில் குழந்தையின் உடலிலிருந்து உதிர்ந்த செல்கள் காணப்படுகின்றன. இந்த திரவம் ஆய்வுக்காக ஆய்வகத்திற்கு அனுப்பப்படுகிறது. இந்த சோதனையின் முதல் நிலை அறிக்கை 10 முதல் 15 நாட்களில் கிடைக்கும். தொடர்ந்து இறுதி அறிக்கை 4 வார காலத்திற்குள் கிடைக்க வாய்ப்புள்ளது.

இந்த சோதனையின் பின்னர் குழந்தையின் இதயத் துடிப்பைக் கேட்டு உறுதிப் படுத்திக் கொள்வதற்காக மருத்துவர் வெளிப்புற கரு மானிட்டரை உபயோகிக்கலாம்

அம்னோசென்டெசிஸ் சோதனையின்போது கர்ப்பிணிகள் வலியை உணர்வார்க்ளா?

அம்னோசென்டெசிஸ் பொதுவாக வலி ஏற்படுத்தும் வகையிலான சோதனை இல்லை. ஆயினும் இந்த செயல்பாடு நிகழும்போது கருவுற்ற தாய் சங்கடமாகவும் ஒரு வித அசெளகரியத்தையும் உணரலாம்.

ஊசியை வெளியே எடுக்கும் சமயத்தில் சில பெண்கள் மாதவிடாய்க் நேரத்தில் உணரும் வலிக்கு ஒத்த வலியையோ அல்லது ஒரு வகையிலான அழுத்தத்தையோ உணருவதாகக் கூறுகிறார்கள்.

நோயாளி சில சமயங்களில் சில தசைப்பிடிப்பு, கிள்ளுதல் அல்லது அழுத்தம் போன்ற நிகழ்வுகளை உணரலாம். அசெளகரியம் அல்லது வலியின் அளவு பரிசோதனைக்கு உட்படும் பெண்டிருக்கிடையே வேறுபடுகிறது மற்றும் ஒரே பெண்ணிலேயே ஒரு கர்ப்பத்திலிருந்து அடுத்த கர்ப்பத்திற்கு இடையேயும் இந்த வலி உணர்வு மாறுபட வாய்ப்புள்ளது.

இந்த செயல்பாடு எவ்வளவு நேரம் எடுக்கிறது?

இந்த செயல்முறை செய்ய அதிகபட்சம் 15 நிமிடங்கள்தான் ஆகும்.

ஒரு வேளை சோதனையின்போது அதிக இரத்தப்போக்கு போன்ற பக்க விளைவுகள் ஏற்பட்டால் நோயாளி ஒரு மணி நேரம் வரை கண்காணிக்கப்படுவார், .

கர்ப்பிணி அம்னோசென்டெசிஸ் பரிசோதனைக்கு பிறகு இயல்பு நிலைக்குத் திரும்புவது:

இயல்பாக ஒன்றிரண்டு நாட்களுக்கு பிறகு கர்ப்பிணிகள் இயல்பு நிலைக்கு திரும்பிவிடுவார்கள்.

“ஸ்பாட்டிங்” என்று கூறப்படும் மாதவிடாய்க் கால வலி மற்றும் லேசான யோனி இரத்தப்போக்கு போன்ற பிடிப்புகள் இருக்க வாய்ப்புள்ளது.

இந்த நடைமுறையைத் தொடர்ந்து சில நாட்களுக்கு எந்தவொரு கடுமையான செயலையும் தவிர்க்க பரிசோதனையை மேற்கொண்ட தாய்மார்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

அம்னோசென்டெசிஸ் பரிசோதனைக்குப் பிறகு பின்வரும் அறிகுறிகள் இருந்தால் நோயாளி மகப்பேறியல் நிபுணரை கலந்து ஆலோசிக்க வேண்டும்:

கடுமையான வலி அல்லது தொடர்ச்சியான வலி

அதிக வெப்பநிலை 380 C (100.40 F) அல்லது அதற்கு மேற்பட்ட குளிர் அல்லது நடுக்கம்

யோனியில் வெளியேற்றம் அல்லது தெளிவான திரவப்போக்கு காணப்படுகிறது.

சுருக்கங்கள் (வயிறு இறுக்கமடைந்து ஓய்வெடுக்கும்போது)

யோனி திரவப்போக்கு அல்லது யோனி இரத்தப்போக்கு ஏற்பட்டால்

கருப்பையில் நிகழும் தசைப்பிடிப்பு சில மணி நேரங்களுக்குமேல் நீடித்தால்.

ஊசி செருகப்பட்ட இடத்தில் சிவத்தல் மற்றும் வீக்கம் உண்டாவது போன்றவை இருந்தால் தாமதிக்காமல் மருத்துவரை ஆலோசிக்க வேண்டும்.

கருவில் அசாதாரண செயல்பாடு அல்லது கருவில் போதுமான அளவு இயக்கம் உணராமல் இருந்தாலும் உடனடியாக மருத்துவரை கலந்து ஆலோசிப்பது நல்லது.

அம்னோசென்டெசிஸ் பரிசோதனை குறித்து உங்கள் கேள்விகள்

 

அம்னோசென்டெசிஸ் செய்வதால் கருச்சிதைவு ஏற்படுமா?

அம்னோசென்டெசிஸ் பரிசோதனை செய்வதன் மூலம் கருச்சிதைவு ஏற்படும் அபாயம் இல்லை.

அம்னோசென்டெசிஸ் செயல்முறை எவ்வாறு செய்வது?

அம்னோசென்டெசிஸ் செய்வதற்கு அம்னோடிக் திரவத்தின் மாதிரியை எடுத்து பரிசோதனை செய்யப்படும்.

அம்னோசென்டெசிஸ் பரிசோதனை வலிமிகுந்ததா?

அம்னோசென்டெசிஸ் பொதுவாக வலிமிகுந்ததல்ல.

அம்னோசென்டெசிஸ் பரிசோதனை குழந்தைக்கு பாதுகாப்பானதா?

அம்னோசென்டெசிஸ் பரிசோதனை தாய் மற்றும் குழந்தை இருவருக்கும் பாதுகாப்பானதாக இருக்கும் .

ஏன் அம்னோசென்டெசிஸ் செய்ய வேண்டும்?

அம்னோசென்டெசிஸ் செய்ய மிகவும் பொதுவான காரணம், கருவில் சில மரபணு கோளாறுகள் உள்ளதா அல்லது டவுன் நோய்க்குறி போன்ற குரோமோசோமால் அசாதாரணம் உள்ளதா என்பதைத் தீர்மானிப்பதாகும்.

அம்னோசென்டெசிஸ் பரிசோதனை  எந்த மாதம் செய்யவேண்டும்?

பொதுவாக கர்ப்பத்தின் 15 முதல் 20 வாரங்களுக்கு இடையில் செய்யப்படுகிறது.