அனோமலி ஸ்கேன் என்றால் என்ன?

ஒரு பெண் கர்ப்பமடைந்த பிறகு நான்காம் மாத இறுதி அல்லது ஐந்தாம் மாதங்களில் செய்யகூடிய அல்ட்ராசவுண்டு தான் அனோமலி ஸ்கேன் ஆகும். கருவில் வளரும் குழந்தையின் வளர்ச்சி, உறுப்புகளின் வளர்ச்சி சரியாக நடக்கிறதா என்பதை கண்டறியவே இந்த ஸ்கேன் செய்யப்படுகிறது.

கர்ப்பகாலம் தொடங்கி 18 வாரங்கள் முதல் 20 வாரங்களுக்கு இடையில் செய்யப்படும் விரிவாக ஸ்கேன் ஆகும். இதன்மூலம் கருவின் உடற்கூறியல் பகுதிகள் சரியான வளர்ச்சி அடைகிறதா என்பது ஆராயப்படுகிறது. இந்த ஸ்கேன் மூலம் குழந்தையின் மூளை, முகம், முதுகெலும்பு, இதயம், வயிறு, குடல், சிறுநீரகம் மற்றும் கைகால்களுக்கு சிறப்பு கவனம் செலுத்தப்படுகிறது. மேலும், அம்னோடிக் திரவத்தில் அளவு போதுமானதாக உள்ளதா என்பதும் கண்டறியப்படுகிறது.

பொதுவாக 20-வது வாரத்தில் செய்யப்படும் அல்ட்ராசவுண்டு மூலம் கருவில் இருக்கும் குழந்தைக்கு ஏதேனும் முதுகெலும்பு குறைபாடுகள், மண்டை ஓட்டின் முறையற்ற உருவாக்கம், மூளையில் திரவம் குவிதல், இருதய குறைபாடுகள், உதரவிதானத்தில் (diaphragm) துளை அல்லது பிளவு, அடிவயிற்றுப் பகுதியில் ஏற்படும் துளை அல்லது பிளவு, சிறுநீரக குறைபாடுகள், எலும்பு வளர்ச்சி குறைபாடு, கை மற்றும் கால் வளர்ச்சியில் குறைபாடுகள் போன்ற பிரச்னைகள் இருக்குமானால் அவற்றை கண்டறியலாம்.

எப்போது இந்த அனோமலி ஸ்கேன் செய்யப்படும்?

கர்ப்பத்தின் இரண்டாம் ட்ரைமெஸ்டர் காலமான இரண்டாம் மூன்று மாத காலத்தில் 18 முதல் 20 வாரங்களுக்கு இடையில் இந்த அனோமலி ஸ்கேன் செய்யப்படுகிறது. இந்த ஸ்கேன் மட்டும் அல்லாமல் கர்ப்பிணியின் உடல் வரலாறை மேலும் அறிந்து தேவைப்பட்ட்டால் வேறு சில காரணங்கள் குறித்து அறியவும் கூடுதல் ஸ்கேன்களை மருத்துவர் பரிந்துரைக்க வாய்ப்புள்ளது. அவை:
> கருப்பையில் இரட்டைக் குழந்தைகள் உருவாவது.
> அனோமலி ஸ்கேன் மூலம் நஞ்சுக்கொடி தாழ்வாக இருப்பது தெரியவருவது
> கருத்தறித்த பெண்ணின் பிறப்புறுப்பில் ரத்தக் கசிவு ஏற்படுவது.
> அனோமலி ஸ்கேன் மூலம் கண்காணிக்க வேண்டிய சிக்கல்கள் இருப்பது தெரிய வருவது.
> கருத்தறித்த பெண்ணுக்கு நீரிழிவு நோய் அல்லது உயர் இரத்த அழுத்தம் இருப்பது.
>குறித்த தேதிக்கு முன்னர் முன்கூட்டிய பிரசவம் ஆகியிருப்பது அல்லது தாமதமாக கருச்சிதைவு ஏற்பட்ட வரலாறு இருப்பது.

இதற்கு மகப்பேறியல் நிபுணர்கள் செய்யும் பரிசோதனை என்ன?

மருத்துவ நிபுணர், கருவில் வளரும் குழந்தையின் அனைத்து உறுப்புகளையும் பரிசோதித்து அளவீடுகள் எடுப்பார். இதன் விவரம் பின்வருமாறு:

குழந்தையின் தலை மற்றும் அதனுடைய அளவை பரிசோதிக்கும் போது, மூளை வளர்ச்சியில் ஏதேனும் குறைபாடு இருப்பது தெரிய வரும்.

பிளவுப்பட்ட உதடு இருக்கிறதா என்பதை சரிபார்க்க குழந்தையின் முகம் பரிசோதிக்கப்படும். ஆனால் வாயினுள் மேல் அன்னம் பிளவுப்பட்டதாக இருந்தால், அதை பரிசோதனையில் கண்டறிவது மிகவும் கடினம்.

குழந்தையின் முதுகெலும்பு, அதன் நீளம், அதனுடைய குறுக்குவெட்டு உள்ளிட்ட அனைத்து எலும்புகளும் சீராக உள்ளதா என பார்க்கப்படும். மேலும் முதுகுப் பகுதியை தோல் மூடிகிறதா என்பதும் உறுதிசெய்யப்படும்.

குழந்தையின் அடிவயிறு சரிபார்க்கப்பட்டு, அனைத்து உள்ளிறுப்புகளும் சரியாக உள்ளதா என்று பரிசோதிக்கப்படும். இதனுடன் நஞ்சுக்கொடி, தொப்புக்குள் கொடி மற்றும் அம்னோடிக் திரவும் குறித்தும் சரிபார்க்கப்படும்.

குழந்தையின் இருதயத்தை பரிசோதப்பத்தின் மூலம், மேல் இருக்கும் இரண்டு அறைகளான அட்ரியா, கீழே இருக்கும் இரண்டு அறைகளான வென்ட்ரிகள்ஸ் ஆகியவை சம அளவில் இருக்கிறதா என்பது தெரிய வரும். ஒவ்வொரு இருதய துடிப்பின் போதும் வால்வுகள் சரியாக திறந்து மூடப்பட வேண்டும். இந்த பரிசோதனையின் போது குழந்தையின் இருதயத்திற்கு ரத்தத்தை எடுத்துச் செல்லும் முக்கிய நரம்புகள் மற்றும் தமனிகளையும் நிபுணர் ஆய்வு செய்வார்.

வயிறுப் பகுதிக்கான பரிசோதனையில், அல்ட்ராசவுண்டு மூலம் குழந்தையால் விழுங்கப்பட்ட அம்னோடிக் திரவத்தின் அளவு தெரியும்.

சிறுநீரகங்களுக்கான பரிசோதனையில், இரண்டு சிறுநீரகங்களும் உள்ளனவா, சிறுநீர்ப்பையில் இருந்து சிறுநீர் தடையில்லாமல் செல்கிறதா என்று ஆராயப்படும். ஒருவேளை குழந்தையின் சீறுநீர்ப்பை காலியாக இருந்தால், அதை ஸ்கேன் செய்யப்படும் காலத்திலேயே நிரப்பிட வேண்டும்.

பரிசோதனையின் போது மருத்துவர் வயிற்றில் கருவின் குழந்தையின் கை மற்றும் கால் விரல்களையும் ஆய்வு செய்வார். ஆனால் அவற்றை எண்ணிகைக்கு உட்படுத்தமாட்டார்.

கரு உருவானதும் நஞ்சுக்கொடி அடியில் சென்றுவிட்டால், அது கீழே என்று குறிப்பிடப்படும். இது கர்பப்பையின் வாயை மூடிவிடும். கர்ப்பப்பையின் கீழ் நஞ்சுக்கொடி அமைந்திருந்தால், கர்ப்பிணி பெண்ணுக்கு மூன்றாவது ட்ரிம்ஸ்டர் காலத்தில் மீண்டும் ஒரு ஸ்கேன் செய்யப்படும். அதற்குள், நஞ்சுக்கொடி கருப்பை வாயை விட்டு அகன்றுவிடுவதும் நடக்கும்.

தொப்புள் கொடியிலுள்ள மூன்று ரத்த நாளங்களை (இரண்டு தமனிகள் மற்றும் ஒரு நரம்பு) எண்ணும் வழக்கமும் உண்டு. ஆனால் அது வழக்கமான நடைமுறை இல்லை.

குழந்தை சுதந்தரமாக நகர்வதற்கான சாத்தியக்கூறுகள் அமினாடிக் திரவத்தின் வழியாக பரிசோதிக்கப்படும்.
மேலும், குழந்தையின் வளர்ச்சியை கண்டறிய ரத்தம் அளவீடு செய்யப்படும். அந்த செய்முறையில்
>தலை சுற்றளவு (Head circumference HC)
>வயிற்றின் சுற்றளவு (Abdominal circumference AC)
>தொடை எலும்பு (femur FL)

ஆகியவையும் அளவீடு செய்யப்படும்.

பிரசவத்திற்காக குறிக்கப்பட்ட தேதியை பொறுத்து எதிர்பார்க்கப்பட்ட அளவீட்டுடன், இந்த முடிவுகள் பொருத்திப்பார்க்கப்படும். இதை செய்வதற்கு மகப்பேறியல் நிபுணர்களுக்கு என்று குறிப்பிட்ட செயல்முறைகள் உள்ளன. ISUOG வழிகாட்டுதலின் படி 18 முதல் 22 வாரங்களுக்கு இடையில் எடுக்கப்பட்ட ட்ரிம்ஸ்டர் ஸ்கேனை வைத்து, இதற்கான கணக்கீடுகள் மேற்கொள்ளப்படும். ரிபோர்ட்டில் குறிப்பிடப்படாத சிசுவின் பகுதிகள் வழக்கமான ஸ்கேன் நடைமுறையில் மதிப்பீடு செய்யப்படுவது இல்லை. எடுத்துக்காட்டாக, கை மற்றும் கால் விரல்களின் எண்ணிக்கை, வெளிப்புற காதுகள், அன்னம் போன்றவை மதிப்பிடப்படுவது கிடையாது.

அசாதாரணமான சூழலுக்குரிய தன்மை தீவிரமானவை. அதுபோன்ற சூழலை கடந்து பிறக்கும் குழந்தைகள் உயிர்வாழ்வது சவாலானது அல்லது பிறக்கும் குழந்தைக்கும் சில குறைபாடுகள் இருந்தாலும், அது சிகிச்சையின் மூலம் நிவர்த்தி செய்யக்கூடியதாக இருக்கும்.

கருவுக்கு உண்டாகும் உடல்நலன் குறைபாடு அல்லது குரோமோசாமல் அசாதாரணங்களை ஸ்கேனில் காண முடியுமா?

இந்த ஸ்கேன் செய்வதன் வழியாக கருவில் குழந்தைக்கு 50% முதல் 60% வரை உடல்நலன் குறைபாட்டை கண்டறிய முடியும். அதற்கு முதல் ட்ரைமெஸ்டர் காலத்தில் முறையான பரிசோதனைகளை மேற்கொண்டிருப்பது அவசியம்.

உடல்நலன் குறைபாட்டின் ஒரு பகுதி அல்ட்ராசவுண்டு ஸ்கேனில் சாதாரணமாகவே தெரியும். அம்னோடிக் திரவத்தின் மாதிரியை எடுத்து பரிசோதித்தால் மட்டுமே நிச்சயமாக தெரிய வரும். சில சமயங்களில் குரோமோசோமல் அசாதாரணங்களை கொண்ட குழந்தைகளுக்கு அல்ட்ராசவுண்டு ஸ்கேன் மூலம் தென்படக்கூடிய அறிகுறிகள் இடம்பெறுவது உண்டு.

அதன்படி, கழுத்தின் பின்புறத்தில் அடர்த்தியான தோல் (நுச்சல் மடிப்பு), நாசி எலும்பு இல்லாமல் இருப்பது, மூளையின் வென்ட்ரிக்கிள்களுக்குள் லேசான திரவம் இருப்பது, கழுத்தில் மாறுபட்ட சப்ளாவியன் தமனி, சிறியளவிலான கைகள் போன்ற குறைபாடுகள் இருந்தால், அவை ஸ்கேன் மூலம் பார்க்க முடியும்.

குரோமோசோமல் அசாதாரணங்களால் ஏற்படக்கூடிய இதுபோன்ற பிரச்னைகள் உடல்நலன் குறைபாடு கொண்ட குழந்தைக்கு மட்டுமல்லாது, சாதாரணமாக தெரியும் குழந்தைகளுக்கும் ஏற்பட வாய்ப்புண்டு என்பதை மறக்க வேண்டாம். இதுபோன்ற குரோமோசோமல் சிக்கல்களை கண்டறிவதற்கு இருக்கும் ஒரே வழி அம்னோடிக் திரவம் பரிசோதனை மட்டுமே.

ஸ்கேன் வரம்புகள்

> கரு உருவான இரண்டாம் மூன்று மாத காலங்களில் அதாவது 18 முதல்-20 வாரங்களில் எடுக்கப்பட்ட ஸ்கேன் மூலமாக குழந்தையின் வளர்ச்சியில் இருக்கும் குறைபாடுகள் தெரியவந்தாலும், அவை ஏற்பட்டதற்கான காரணத்தை மருத்துவர்களால் துல்லியமாக அடையாளம் காண முடியவதில்லை. அப்படியே குறைகளை கண்டறிந்தாலும் ஸ்கேன் அடிப்படையில் உறுதியான சிகிச்சைகளையும் வழங்க முடியாது.

சிலநேரங்களில் குழந்தை முழுமையான வளர்ச்சி அடைய மருத்துவர்கள் நேரம் ஒதுக்குவார்கள். அதை தொடர்ந்து எடுக்கப்படும் ஸ்கேன் மூலமாக மருத்துவர்கள் குழந்தையின் வளர்ச்சியையும் கண்காணிப்பார்கள். எனினும் அல்ட்ராசவுண்டு ஸ்கேன் முடிவுகள் சரியாக இருந்துவிட்டால் குழந்தை ஆரோக்கியமாக பிறந்துவிடும் என்று உறுதி செய்ய முடியாது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

இதற்கு முன்னதாக, குழந்தை பிறப்பில் இருக்கும் பிரச்னைகளை கண்டறிய 18 முதல் 20 வாரங்களுக்கு இடையில் எடுக்கப்பட்டு வந்த ஸ்கேன் முடிவுகள் பயனுள்ளதாக போதுமானதாக இருந்தன. சில நேரங்களில் பிரசவம் நிகழும் வரை குழந்தை பிறப்பில் இருக்கும் பிரச்னைகள் தெரிவதில்லை. குழந்தை உடலில் இருதயம், முகம், கைகள் ஆகிய உடல் பாகங்களின் ஆரோக்கியத்தை கண்டறிவது மிகவும் கடினம். அதேபோல, அனைத்து குறைபாடுகளையும் ஸ்கேன் மூலம் கண்டறிந்துவிட முடியாது.

கருத்தறித்த பெண்ணின் உடல் ஆரோக்கியம், முந்தைய அறுவை சிகிச்சையால் ஏற்பட்ட வடு, குழந்தை வயிற்றுக்குள் இருக்கும் அமைப்பு ஆகிய காரணங்களால் இந்த சோதனையை மேலும் மேற்கொள்ள முடியாத நிலை ஏற்படும்.

கருவிற்கு இருதய பிரச்னைகள் இருந்தாலோ, குடலில் அடைப்பு ஏற்பட்டிருந்தாலோ அவை கர்ப்பத்தின் பிற்பகுதி வரை கண்டறியாமல் போகலாம்.அனோமலி ஸ்கேன் செய்வதன் மூலம் குறைகளை முடிந்தவரையில் கண்டறிந்துவிடலாம்.

> ஒருவேளை பரிசோதனையில் குழந்தையின் மூளை செயல்பாட்டில் ஏதேனும் குறைபாடு இருந்தால், அதற்கு கரு உருவாகி 24 முதல் 25 வாரங்களில் சிகிச்சை வழங்கலாம். குறிப்பிட்ட சில காரணத்தால் மீண்டும் மீண்டும் அனோமலி ஸ்கேன் செய்யப்படலாம்.

இரண்டாம் ட்ரைம்ஸ்டர் காலத்தில் எடுக்கப்படும் ஸ்கேனில் மார்புக்கும் நெஞ்சுக்கும் இடையில் ஏற்படும் பிறவிக் குடலிறக்கப் பிரச்னை/ நீரிழிவு பிரச்னை/ ஹைட்ரோசெப்லாஸ்/மைக்ரோசெஃபால்ஸி/ வளைந்த கால்கள்/ குறிப்பிட்ட இருதயப் பிரச்னைகள்/ சிறுநீரகம் மற்றும் குடல் பிரச்னைகள் போன்றவை கண்டறியப்படாமல் போகலாம்.

குழந்தையின் பிறப்புறுப்பை சோதனைக்கு உட்படுத்துவது சட்டத்திற்கு எதிரான செயலாகும். அதனால் பிறப்புறுப்பில் ஏற்பட்டுள்ள கோளாறுகளை கண்டறிவது சாத்தியமில்லாத ஒன்றாகும்.

நெறிமுறைகள் இருந்தாலும், விரிவாக ஆய்வுகள் இருந்தபோதிலும் குறிப்பிட்ட சில அம்சங்களை ப்ரீநேட்டல் அல்ட்ராசவுண்டு ஸ்கேனில் கண்டறிய முடியாது. அப்படிப்பட்ட சூழ்நிலையில், சாதாரணமாக செய்யப்படும் அல்ட்ராசவுண்டு ஸ்கேன்மூலம், குறைபாடுகள் குறித்து தெரிய வரலாம். கருவின் அமைப்புக்கு உட்பட்டு இதற்கான வரம்புகள் உள்ளன.

வெகு சில சமயங்களில் ஸ்கேன் முடிவுகள் முரண்பாடாக தெரியலாம். ஆனால் தொடர்ந்து எடுக்கப்பட்ட ஸ்கேன், உயிர்வேதியியல் சோதனை உள்ளிட்ட பலகட்ட பரிசோதனை முடிவுகள் சில தரவுகளை நமக்கு வழங்கலாம். சில தகவல்கள் நிலையற்றதாக தெரிந்தாலும், காலப்போக்கில் அவை மாறக்கூடும்.

குறிப்பிட்ட சில மருத்துவர்கள் மேற்கண்ட சிகிச்சை முறைகளையும் கையாளலாம். அதன்படி கரு எக்கோ (இருதய ஆய்வு) அல்லது நீட்டிக்கப்பட்ட நியூரோசோனோகிராபி (மூளை ஆய்வு) செய்யப்படும். அல்ட்ராசவுண்டு பரிசோதனை இயல்பாக இருந்தாலும், அதனுடைய செயல்பாட்டை மதிப்பீடு செய்ய முடியாது.

மேலும், குறிப்பிட்ட கரு எக்கோ கார்டியோகிராஃபி (இருதய ஆய்வு) மூலம், செகண்டம் ஏ.எஸ்.டி, சின்ன வி.எஸ்.டி, பி.டி.ஏ மற்றும் பிற நுட்பமான இருதய கோளாறு பிரச்னைகளை கண்டறிய முடியாது.

கரு உருவான காலத்தில் எந்த ஸ்கேன் எடுக்கப்பட்டது, அப்போது கருவின் நிலைத்தன்மை எவ்வாறு இருந்தது, தாயின் பழக்க வழக்கங்கள், திரவத்தின் அளவு மற்றும் பார்வைக்கு புலப்படுத்த கருவின் பாகங்கள் ஆகியவற்றில் பிரச்சனை இருக்கும் பட்சத்தில் மீண்டும் ஸ்கேன் செய்வது கட்டாயமாகும்.

அல்ட்ராசோனாகிராஃபிக்கான மற்றொரு சவால் உடல் பருமன் ஆகும். தாயின் அடிவயிற்றில் இருக்கும் கொழுப்பு அல்ட்ராசவுண்டு ஆற்றலை உறிஞ்சிவிடும். இதனால் பிரச்னைகளை கண்டறிவது மிகவும் கடினமாகிவிடும்.

குரோமோசோமல் பிரச்னைகளை அல்ட்ராசவுண்டு ஸ்கேன் வாயிலாக மட்டும் கண்டறிய முடியாது. குரோமோசோமால் அசாதாரணங்களைக் கொண்ட கருவுக்கு இருக்கும் ஆபத்தை மட்டுமே அல்ட்ராசவுண்டு குறிப்பான்கள் உணர்த்தும். இதற்குரிய மேற்கண்ட பரிசோதனைகளை நடத்த வழிவகுக்கும். காரியோடைப்பிங் (ஊசி மூலம் செய்யப்படும் கருவைப் பற்றிய குரோமோசோமல் ஆய்வு) என்பது உறுதிப்படுத்தும் சோதனை. இந்த சோதனை மூலம் கருச்சிதைவு ஏற்படவும் வாய்ப்புள்ளது. எனினும், தேவைப்படும் நேரத்தில் உரிய மருத்துவரால் இந்த சோதனை நடத்தப்படும்.

3டி/4டி அல்ட்ராசவுண்டு ஸ்கேன்கள் சில அசாதாரணங்களை மதிப்பிடுவதற்கு மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. எனினும் இது வழக்கமானது அல்ல என்பதையும் கர்ப்பிணிகள் புரிந்துகொள்ள வேண்டும்.

ஒரே கருப்பையில் உருவாகும் பல்வேறு கருக்களால் ( இரட்டைக் குழந்தைகள்/ மூன்று குழந்தைகள்) சில பிரச்னைகள் உள்ளன. அதன்படி கருவின் நிலை, ஒன்றோடு மற்றொரு கரு சேருவது போன்ற காரணங்களால் அல்ட்ராசவுண்டு பரிசோதனை செய்வது சவாலாக இருக்கும்.

சில கர்ப்பிணிகளுக்கு இருக்கும் பொதுவான சந்தேகம் இது. மருத்துவரின் அறிவுரைப்படி ஸ்கேன் செய்யும் போது பிரச்சனை இருப்பது கண்டறியப்பட்டால் என்ன செய்ய வேண்டும் என்பது இதையும் அறிவது அவசியம்!

ஒருவேளை 20 வாரத்தில் எடுக்கப்படும் அல்ட்ராசவுண்டு ஸ்கேனில் ஏதேனும் பிரச்னை இருப்பதாக் தெரிந்தால், அதனால் குழந்தைக்கு ஏற்படும் விளைவுகள் குறித்து தெரியாமல் போகலாம். எனினும் கருத்தறித்த பெண் தொடர்ந்து சிகிச்சை வரச்சொல்லி அறிவுறுத்தப்படுவார்கள். முன்னதாக எடுக்கப்பட்ட பரிசோதனையின் மூலம் கருவின் வளர்ச்சியில் ஏதேனும் குறைபாடு(கள்) இருப்பது தெரியவந்தால், அது பரிசீலனைக்கு உட்படுத்தப்படும். மேலும், குறிப்பிட்ட கர்ப்பிணி பெண்ணுக்கு அம்னோசெண்டெசிஸ் செயல்முறை செய்யப்படும்.

அனோமலி ஸ்கேன் செய்வதற்கு ஒரு கர்ப்பிணி பெண் எவ்வாறு தயாராக வேண்டும்?

முதல் ட்ரைமெஸ்டர் காலத்தில் எடுக்கப்படும் ஸ்கேன் போல இல்லாமல், கருத்தரித்த பெண் தனது சிறுநீரகப்பை நிரம்ப தண்ணீர் குடிக்க வேண்டும் என்கிற அவசியம் இல்லை. அடிவயிறு வரை குழந்தை நன்றாக வளர்ந்திருக்கும். அதனால் ஸ்கேன் செய்யப்படும் போதும் எந்தவித இடையூறும் இருக்காது.

இன்னும் சில கர்ப்பிணிபெண்களுக்கு கர்ப்பக்காலத்தில் ஸ்கேன் எடுப்பதன் மூலம் குழந்தையின் வளர்ச்சி பாதிக்கப்படுமோ என்னும் அச்சமும் உண்டு. ஆனால் மருத்துவரின் பரிந்துரையின் படி கர்ப்பக்காலத்தில் ஸ்கேன் செய்வதன் மூலம் குழந்தையின் ஆரோக்கியம் உறுதிசெய்யப்படுகிறது என்பதே உண்மை.

 

அனோமலி ஸ்கேன் குறித்து உங்கள் கேள்விகள்

 

ஏன் அனோமலி ஸ்கேன் செய்ய வேண்டும்?

அனோமலி ஸ்கேன் நோக்கம் குழந்தையில் சில உடல்ரீதியான அசாதாரணங்கள் மற்றும் குழந்தையின் கட்டமைப்புகள் சரிபார்க்க செய்யப்படுகிறது.

குரோமோசோம் குறைபாடுகளை அனோமலி ஸ்கேனில் காண முடியுமா?

ஆம் அனோமலி ஸ்கேன் பரிசோதனை செய்வதின் மூலம் கருவின் குரோமோசோம் குறைபாடுகளை கண்டறிய முடியும்.

அனோமலி ஸ்கேன் செய்வதற்கு முன்பு சாப்பிடலாமா?

ஸ்கேன் பரிசோதனை செய்வதற்கு அரை மணி நேரத்திற்கு முன் நன்றாக சாப்பிட வேண்டும்.

அனோமலி ஸ்கேன் செய்வதற்கு எவ்வளவு நேரம் எடுக்கும்?

அனோமலி அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் பரிசோதனை செய்வதற்கு  30 நிமிடங்கள் ஆகும்.

எந்த மாதத்தில் அனோமலி ஸ்கேன் செய்யவேணும்?

கர்ப்பத்தின் 18 வது மற்றும் 21 வது வாரத்திற்கு இடையில் அனோமலி அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் செய்யப்படுகிறது.

அனோமலி ஸ்கேன் செய்வதற்கு முன்பு தண்ணீர் குடிக்க வேண்டுமா?

சிறுநீர்ப்பை நிரம்பும் அளவிற்கு தண்ணீர் குடிக்க வேண்டும்.

Translate »
error: Content is protected !!